Skip to content

Getting Married ..3.57 Minutes Please

May 18, 2006

விரைவில் திருமணமா….3.57 நிமிடங்கள்..

                                              இன்று ஒரு நண்பனின் திருமணம்.அதற்கு என்னால் செல்லமுடியவில்லை. இன்னும் இரண்டு திருமணங்கள் (அட எனக்கில்லை) இந்த மாதத்தில் இருக்கின்றது. அதற்கும் செல்ல முடியுமா என்று தெரியவில்லை. காரணம் திருமணங்கள் வார நாட்களில் இருந்துவிடுகின்றது.

                      திருமணங்கள் நமது கலாச்சாரத்தில் முக்கியமான ஒன்று. இன்றும் மேலை நாட்டவர் நம்மை பார்த்து வியப்பதின் காரணத்தில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு மதத்திற்கும், இனத்திற்கும் தனித்தனியே விசேஷமான முறைகளும் சடங்குகளும் இருக்கின்றது. இந்த ஒரு சந்தர்பத்தில் அன்பிற்கு இனியவர்களையும், நல விரும்பிகளையும், குடும்பத்தினரையும், நண்பர்களையும் ஒரு சேர காணக்கிடைக்கும். இங்கு காயப்பட்ட பழைய உறவுகளுக்கு மருந்தளிக்கபடும்,  புதிய நட்பு பூக்கும்,ஏன் சில பல திருமணங்கள் கூட நிச்சயிக்கப்படும்.இதை பற்றி பேசிக்கொண்டே போகலாம்பா, தற்போது திருமண நாள் என்று வரவேண்டும் என்று மட்டும் பேசலாம்.

                      சில வருடங்கள் முன்னர் வரை அனேகமாக அனைத்து உறவினர்களும், நண்பர்களும் ஒரே ஊரிலேயே வசித்து வந்தனர்.திருமணம் எந்த நாளில் வைத்தாலும் பிரச்சனையில்லை. எல்லோரும் வந்து விடலாம். ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. நண்பர்கள், உறவினர்கள், நலம்விரும்பிகள், ஏன் ரத்த உறவுகளும் வேறு வேறு திசைகளில் உலக பாகங்களில் இருக்கின்றனர். இந்த காலத்தில் பெற்றோர் உலகின் ஒரு மூலையில் இருந்துகொண்டும், மணமக்கள் வேறு மூலையில் இருந்தபடியே திருமணத்தை காணும் தொழில்நட்பம் வளர்ந்துவிட்டது, ஆயினும் திருமணத்தை நேரில் காண்பதை போல வருமா? அந்த ஒரு நிமிட பெற்றோர் கண்ணீர் பிரிகையில், அந்த ஆனந்தம் நெஞ்சை நிறைக்கும்.( சொல்ல வந்ததில் இருந்து எங்கேயோ போகுது – எங்கோ தொடங்கி, எங்கோ சென்றுகொண்டிருக்கிறேன்….  )

                   சொல்லவருவது யாதெனில் உற்றார் உறவினர் வேறு வேறு இடத்தில் இருக்கின்றனர்.வார நாட்களில் திருமணத்தை வைத்தால் எப்படி வருவது? என்ன தான் நண்பர் மீதும், உறவினர் மீதும் நமக்கு பாசம் இருந்தாலும், விடுமுறை அளிக்கும் மேனேஜருக்கும் நமக்கும் பாசம் சரியா இருக்கனும் இல்லை. உங்க திருமணத்தை காண (கடைசியா சந்தோசமா இருப்பதை பார்க்கனும்னு ஆவல் இருக்காதா நண்பர்களுக்கு? ) அனைவருக்கும் எத்தனை ஆவல் இருக்கும். நேரில் மணமக்களை வாழ்த்துவது போல வருமா? தினப்படி வேலையில் இருந்து சில நேரம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள வரலாம் என்றால் இப்படி வார நாட்களில் வைத்தால் எப்படி?

                        ஏதோ , தற்போது தனியாக (பார்க்க இருவர் மாதிரி இருப்பதெல்லாம் வேற கதைங்கோ) திருமணமாகாமல் எந்த நாளும் எங்கே கிளம்பவேண்டுமோ கிளம்பிவிடலாம். சில காலம் கழித்து குடும்பஸ்தராகிவிட்டால்?? இருவருக்கும் தேதி சரிபட்டு வரவேண்டும். அவங்க சம்மதிக்கனும் (!!!). அப்படியே காலப்போக்கில் குழந்தை குட்டி,அவங்களுக்கு பள்ளி. (இந்த சிரமம் எல்லாம் தவிர்க்க நீங்க சீக்கிரமா திருமணம் செய்துகொள்ளுங்கள்).

                         வார இறுதியெனில் எந்த தொல்லையும் இராது.விடுமுறை எடுக்கவேண்டிய அவசியம் இருக்காது. அழகா வந்து வாழ்த்து விட்டு, சாப்பிட்டுவிட்டு (அதுக்கு தான வருகிறோம்), உங்க தயவில் நண்பர்களை பார்த்துவிட்டு வரலாம்.

                        என்ன சொன்னாலும் நம் திருமண தேதியை தீர்மானிப்பது ஜோதிடர்கள் தான். அவர்களிடம் சொல்லுங்கள் வார இறுதி சனி, ஞாயிறில் நல்ல நாள் பார்க்க சொல்லி. முன்னரே முயர்ச்சித்தால் திருமணக்கூடமும் கிடைக்கும். அ

                     உங்களை வாழ்த்த அனைவரும் உண்டு.இதில் ஐய்யமில்லை.  நண்பர்கள் அனைவரும், உறவினர் அனைவரும் உங்கள் திருமணத்திற்கு நேரில் நிம்மதியாக வந்து, ஆசிர்வதித்து, உளமாற வாழ்த்த வழி செய்யுங்கள். இது சரியென பட்டால் அதன்படி நடக்கலாம். சற்று முன்னரே திட்டமிட்டால் நினைத்தது எதுவாகினும் நடத்தலாம்.

கல்யாணமாகாத வாலிபர் சங்கத்து கடைசி உறுப்பினர்.

விழியன்.

Advertisements
One Comment leave one →
  1. Premkumar Shanmugamani permalink
    May 24, 2006 5:28 am

    Miga sariya sonneergal umanath.. Enakullum romba naalave intha ennam odikitu iruku

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: