Skip to content

Pooda..Po..Po..

June 15, 2006

போடா போ..போ..
 
அன்பு கார்த்திக்,
 

இன்று தான் நாம் இருவரும் இந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் கடைசி நாள். நீ உன் மேற்படிப்பிற்கு செல்வதால் மட்டுமே நான் உனனை என்னை விட்டு பிரிந்து செல்ல அனுமதிக்கிறேன். நீ இல்லாத இந்த அலுவலகத்தை நினைத்தாலே மனதிற்குள் தானாக சோகம் கவ்விக் கொள்கின்றது. இனி எப்படி இந்த அலுவலகத்தில் என்னால் உன்னை பிரிந்து இருக்க முடியும்  என்று தெரியவில்லை.
 
இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு மழைநாள் இரவில் உனது முதல் வருகைக்காக காத்திருந்தது முதல், நாம் ஆனந்தமாய் கழித்த தருணங்கள், உல்லாசப் பயணங்கள், ஒன்றாக சென்ற உணவகங்கள், களித்துத் திரிந்த பல இடங்கள், அந்த இனிமையான நாட்கள், பகிர்ந்துக் கொண்ட துயரங்கள்.. ..கண் முன்னே வந்து வந்து போகின்றது. தினமும் நீ வந்து விட்டாயா என உன் இருக்கையை எட்டிப்பார்ப்பேன், இனி அந்த இடத்தில் உன் இருக்கையும் நினனவுகளும் மட்டும்தான் இருக்கும். நீ இல்லாத நம் நண்பர்கள் கூட்டத்தில் ஒரு வெற்றிடம் தவிர்க்க முடியாமல். காலம் தான் அனைத்தையும் ஆற்றும் மருந்து என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு  அந்த நம்பிக்கையும் இல்லை.

 
கவிதைகள் அழுகின்றன:

அதோ அங்கே உணவகத்தின் ஓரத்தில் மிக மெல்லிய விசும்பல் ஒலி கேட்கின்றதா? அது வேறொன்றும் இல்லை. இதே இடத்தில் முதல்முதலாய் உதயமான எனது எழுத்துக்களும், கவிதைகளும் தான் அவை. போ போய் அருகே சென்று கேட்டுப்பார். அந்த அழுகையின் அர்த்தம் புரியும். எனது கவிதைகளில் நீ திருத்தும் பிழைகளும்,  விடுபட்டு விடும் 'த்' 'ப்' 'க்' எழுத்துக்கள் தரையில் புரண்டுப் புரண்டு அழுவதை பார். அவற்றிற்கு உற்ற தோழனான நீ பிரிந்து போவதால், அவற்றின் சோகம் என்னை தாக்குகின்றது. நான் எழுதிய எனது முதல் கவிதை முதல், சமீபத்திய கதை வரை திருத்தம் பார்த்து, என்னை செதுக்கி, என் வளர்ச்சியில் நீ ஆனந்தம் கொண்டாயே, இனி அதை நான் என்று மீண்டும் பெறுவேன்? 

 

அது எப்படி என்னை கேட்காமல், என் அனுமதி இல்லாமல், நட்பென்னும் சபையில் உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டாய்?
 

அன்றொரு நாள் நம் அறையில், வாடிய உன் முகம் கண்டு, வாடியது என் மனம். உன்னை தேற்ற ஏதேதோ பேசி கடைசியில் தோற்று போனது நான் தான். உனக்கு மேற்படிப்பிற்கு இடம் கிடைத்தவுடன் உன்னை விட ஆனந்தம் கொண்டவன் நான். நீ பிரிந்து செல்கின்றாய் என்றவுடன் உன்னைவிட கலக்கம் அடைந்தவன் நான்.உன்னை கேட்டால் என்னை விடநீ கலங்குகின்றாய் என்பாய். அதுதான் நட்பின் பலம். இது காலத்தின் கட்டாயம். இன்னும் நிறைய அனுபவங்கள் நமக்கு காத்திருக்கின்றது நம் இருவருக்கும் தர காலம் இன்னும் ஏராளமான இரகசியங்களை மறைத்து வைத்துள்ளது. சின்ன கூட்டுக்குள் அடைந்து கிடப்பது முறையல்ல. பறந்து போ..
 
உணர்ச்சிவசப்படுகின்றேன் என்று நினைக்கின்றாயோ? உணர்ச்சிகளும் உணர்வுகளும் இல்லாமல் போனால் அவன் மனிதனே அல்ல, ஜடம்.
 
நண்பா, மாலை, எல்லாம் முடிந்து வீட்டிற்கு செல்லும் சமயம் என்னிடம் சொல்லாமல் சென்றுவிடு, உன்னுடைய விடைபெறுதலை தாங்கமாட்டாமல் உடைந்து போவேன் நான். கண்ணீரை கட்டுப்படுத்தும் திறமையை இழந்துவிடுவேன் நான். சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிடு.

அதெப்படி என்னிடம் கூட சொல்லாமல் சென்றுவிடுவாய் நீ? 

இதே போன்ற நட்பு எனக்கும் உனக்கும்,ஏன் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
 

நீ போகும் பாதையில் உனக்கு என்றென்றும் வெற்றி தான் கலங்காதே. என் போன்ற நண்பர்கள் அன்பும்,ஆசியும் என்றும் இருக்கும்.என் அத்தனை முயற்சிக்கும், போராட்டங்களுக்கும் உன் அறிவும், அரவணைப்பும், நட்பும் தேவைப்படும். மீண்டும் வா. சீக்கிரம் வா.வென்று வா என் தோழனே. உலகிற்கு அடையாளம் காட்டு நீ யார் என்பதை.
 
போடா..போ..
 
கண்ணீருடன்
உமாநாத்..& விழியன் & பாப்பா..

(கார்திக், என் கல்லூரியில் இரண்டு ஆண்டு இளையவன். முதுகலை பட்டம் MBA , திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் பெற இன்றுடன் விடைபெறுகின்றான். என்னுடன் என் நண்பர்களாகிய நீங்களும் அவனுக்கு வாழ்த்து தெரிவித்தால் மகிழ்வேன்)

 

நன்றி


விழியன்
https://vizhiyan.wordpress.com

Advertisements
One Comment leave one →
  1. Parameswary permalink
    June 15, 2006 12:05 pm

    ப‌டிக்கும் பொழுது என்னை அறியாம‌ல் என் க‌ண்க‌ள் குள‌மாகிய‌து. என் ந‌ண்ப‌ர்க‌ள் என்னை பிரியும் பொழுது அடையும் சோக‌மும் என்னைக் க‌வ்விக் கொண்ட‌து…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: