Skip to content

குரங்கு வியாபாரம்

June 16, 2006

குரங்கு வியாபாரம்

ஒரே ஒரு கிரமத்திலே ஒரே ஒரு வியாபாரி இருந்தானாம். அந்த வியாபாரி வெளி ஊரில் இருந்து வந்தவன்.ஒரு வித்தியாசமான வியாபாரம் செய்தான். ஒரு குரங்கு பிடித்து தந்தால் 10 ரூபாய் தருகின்றேன் என்றானாம். மக்கள் அனைவரும் அருகே இருந்த அடர்ந்த காட்டிற்குள் சென்று குரங்கு பிடித்து வந்தார்களாம்.

சில காலம் கழித்து ஒரு குரங்கிற்கு இருபது ரூபாய் என்றானாம். முன்பை விட குரங்கு கிடைப்பது சற்றே சிரமமாகிவிட்டது. இருந்தும் காடு முழுதும் தேடி எங்கும் குரங்கு கிடைக்காத அளவிற்கு குரங்குகள் பிடித்து வந்தனர் மக்கள். அடுத்து 25 ரூபாய் என்றான். ஏதோ ஒன்று இரண்டு கிடைத்தது.

இப்போது ஒரு குரங்கிற்கு 50 ரூபாய் என்றான். மக்கள் தங்கள் வேலையை பார்க்க ஆரம்பித்தனர். குரங்கிற்கு எங்கே போவது? வியாபாரி நகரத்திற்கு செல்ல வேண்டியதால், தன் உதவியாளனிடம் மொத்த குரங்கையும் ஒப்படைத்துவிட்டு சென்றான்.

உதவியாளன் வியாபாரி ஊருக்கு போன மறுநாளே மக்களை அழைத்து "இதோ இந்த வியாபாரிக்கு அறிவே இல்லை. கணக்கு தெரியாது. கூண்டில் இருக்கும் குரங்குகளை உங்களுக்கு 35 ரூபாய் விலையில் தருகின்றேன். நாளை இன்னும் விலை அதிகமாக தருவார் இலாபம் சம்பாரியுங்கள்" என்றான். மக்களும் பேராசையில் தங்கள் சேமிப்பு அனைத்தையும் செலவழித்து குரங்குகள் வாங்கினர்.

மறுநாளில் இருந்து வியாபாரியும் வரவில்லை, உதவியாளனும் காணவில்லை. அடுத்த ஊரில் வியாபாரம் துவங்கிவிட்டனர்.

இதில் இருக்கும் உண்மை (Share and Equity Market)

2 Comments leave one →
  1. பரமேஸ்வரி permalink
    June 16, 2006 1:23 pm

    🙂
    ஹா ஹா, சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது இந்த கதை….

  2. மாணிக்கம் permalink
    November 23, 2006 9:26 am

    ஹ… மிக நன்று…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: