Skip to content

Letter To Manmohan Singh

June 23, 2006

அன்பும் அறிவும் நிறைந்த இந்திய முதல் மந்திரி மன்மோகன் சிங் அவர்களுக்கு,

உங்கள் திருமுகத்தை இன்று காண நேரிட்டது. இன்று காலை தாங்கள் பெங்களூருக்கு வந்து பத்து வரிசை  சாலையை திறந்துவைத்தீர்கள். வாழ்த்துக்கள். இந்த சாலையாவது திட்டமிட்ட நேரத்தில் நிறைவு அடையட்டும்.

இன்று தங்கள் வரவால் எனக்கு என் சக ஊர்க்காரகளுக்கும் சுமார் ஒரு மணி நேரம் விரையம். சாதாரண நாளிலேயே பெங்களூரு நாயகம், அப்போதே சுமார் அரை மணி எடுக்கும் வீட்டில் இருந்து அலுவலகம் வர. இன்று ஒன்றரை மணி நேரம் எடுத்தது. அட ஒரு பெரிய மனிதர் வந்தால் அப்படி தான் இருக்கும் என சால்ஜாப்பு எல்லாம் வேண்டாம் ஐய்யா.

விமான நிலையத்தில் அருகே தங்குவதால் அடிக்கடி உங்களை போன்றோர்களால் தொல்லை. காலை அலுவலகம், பள்ளி,கல்லூரி, பணிக்கு செல்பவர்களை பற்றி சிறித்தேனும் நினைத்து பார்க்கின்றீர்களா?

என்னருகே அடுத்த வண்டியில் இருந்த சிறுவன் ஓ..வென்று அழுதுகொண்டே இருந்தான். பள்ளியில் ஆசிரியை திட்டுவார்களாம்.அவனிடம் என்ன சொல்லி சமாளித்து வைக்க? ஆட்டோ ஒன்றில் சோக்காக உடையணிந்து ஒரு இளைஞன் பரபரப்பாக இருந்தான். கடிகாரம் பார்க்கிறான் சாலை பார்க்கிறான். பாவம் ஏதோ நேர்காணலுக்கு செல்கிறான் போலும்.

சாலையின் முன்புறமும் பின்புறமும் நின்றிருந்த வண்டிகளும் அதன் சத்தமும் காதை துளைத்து எடுத்தது. வானத்தையாவது பார்த்து ரசிக்கலாம் என்று வானத்தை நோக்கி நின்றேன். மேகங்கள் இன்று வேகமாய் நகர்ந்தன. கருமேகங்கள் வெண்மேகங்களுடன் ஓட்ட பந்தயம் வைத்து கொண்டிருந்தனவோ? இல்லை இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் விமானத்தில் பறக்கும் போது வானத்தில் இருக்கும் மேக நடமாட்டத்தை நிறுத்தினாலும் நிறுத்துவீர்கள் என்று வேகமாகாக போகின்றது போல எனக்கு காட்சியளித்தது.

என்னடா ரொம்ப பேசுகின்றாய் என நினைக்க வேண்டாம். இன்று இந்த ஒரு மணி நேரத்தால் நகருக்கும் நாட்டுக்கும் இழந்த இழப்பை சொல்லவா?

        1. சுமார் 1000 முதல் 2000 பேர் சாலையில் முடங்கி இருந்தோம். 1500 என்று வைத்துக்கொள்வோம். மொத்தம் 1500 மணி நேர உழைப்பு வீண். சாலையில் நின்றபடி என்ன உபயோகமாக செய்வது. காரில் இருந்தவர்கள் எத்தனை முறை தான் தினசரியை படிப்பார்கள்..?

        2. ஆயிரம் வாகனம் இருந்தது என் வைத்துக்கொள்வோம்.(இந்த கணக்கும் மிக கம்மி தான்) ஏர்போர்ட் ரோட் முழுதும் வண்டிகள் நின்றன. இந்த சாலை குறைந்தது 5 கிமீட்டர் இருக்கும்). ஆயிரம் வாகனமும் ஒரு மணி நேரம் ஒரே இடத்தில் நிற்காமல் நீந்தி நீந்தி சென்றது. எவ்வளவு எரிபொருள் வீணாகி இருக்கும் என கணக்கு போட்டுக்கொள்ளவும்.

        3. இந்த புகை மண்டலத்தில் தினமும் பயணிப்பதே உடலுக்கு கேடு. அதில் மேலும் ஒரு மணி நேரம் பயணம் செல்ல நேரிட்டும் அனைவரின் சுவசமும் சிறிதளவு மாசுபட்டு போனது.

        4. காலையில் ஏற்படும் எரிச்சலால் அன்றைய நாள் முழுதும் வேலை சுமூகமாக செல்லாது. இன்றைய நாளில் எந்த வேலையும் நிறைவாக நடைபெறாது.

ஆகவே, உங்கள் விஜயங்களையும் பயணங்களையும் மக்கள் எந்தவிதத்திலும் பாதிக்கத வகையில் அமைத்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கும் உங்களை போன்ற அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்..

உங்களால் ஒரு மணி நேரம் வீணானது தான் மிச்சம், 

இப்படிக்கு

உண்மையுள்ள இந்திய குடிமகன்.  


விழியன்

Advertisements
3 Comments leave one →
 1. June 23, 2006 7:42 pm

  வணக்கம் விழியன்.

  சாலை நெருக்கடியில் மிகவும் வேதனைப் பட்டுள்ளீர்கள். அனுதாபங்கள்.
  நமது பிரதமர் எப்படியாவது இதை மொழிப் பெயர்த்து படிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
  மக்கள் பாதிக்கப் படாத நாள் மற்றும் நேரம் என்றால் அது விடுமுறை நாளாக மற்றும் அதிகாலையும் தான். இந்த மாதிரி நாட்களில் திறப்பு விழா நடத்தினால் யாருக்கும் சிரமம் இருக்காது என நினைக்கிறேன்.

  நன்றி!!
  நரியா

 2. July 21, 2006 7:52 pm

  Nalla Sinthanai Vizhiyan !!

 3. vishal permalink
  January 30, 2008 7:13 am

  really its very good…. i love the people who r fight against wrong thing…i am also in airport road i know the pain…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: