Skip to content

23 மூன்றாம் புலிகேசி – விமர்சனம்

July 20, 2006

23 மூன்றாம் புலிகேசி – விமர்சனம்

ஒரு கலக்கல் நகைச்சுவை படத்தின் நடுவே ஏராளமான சிந்திக்கும் விடயங்கள். நீண்ட நாள் கழித்து நல்ல தமிழில் ஒரு படம். சரித்திர கால படம் எடுத்தால் மட்டுமே சுத்த தமிழ் என்ற நிலை வந்துவிட்டது தமிழ் சினிமாவிற்கு.

புலிகேசி ஆட்சிசெய்யும் போதும் சரி, பின்னர் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டு தங்க கிணற்றில் இருக்கும் சமயத்திலும் சரி நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லை.

படம் முழுக்க இன்றைய நடைமுறை வாழ்கையை கிண்டலடித்தும் நையாண்டி செய்தபடியும். வித்தியாசமான வரவேற்க தக்க முயற்சி.

1. அரசு ஊழியர்களை பார்த்து கேள்வி கேட்கும் தோரணைகள் சவுக்கடி.

2. குழந்தை தொழிலாளர்கள் பற்றி பேசும் இடம் நிச்சயம் கைத்தட்டல் பெறவேண்டும்.

3. பானங்களை விற்கும் வியாபாரிகளிடம் கேட்கும் கேள்விகள் அசத்தல். மறைமுகமாக கோக் பெப்ஸியை போட்டு தாக்குகின்றது. விளையாட்டு வீரர்களையும் விட்டுவைக்கவில்லை.

படத்தின் கடைசியில் புலிகேசி போடும் பத்துகட்டளைகளை இன்றைய அரசியல்வாதிகள் காதில் கேட்டுக்கொள்க.

இந்த புதிய இயக்குனர் தமிழ் சினிமா உலகிற்கு மேலும் மேலும் நல்ல, வித்தியாசமான படங்கள் தர வாழ்த்துக்கள். ஒரு கனமாக கதைக்கருவை மிக எளிய முறையில் கையாண்டு உள்ளார். இடையே சங்கர் பாணியில் திடீர் மாற்றங்கள் வருகின்றன. அது சங்கர் படங்களையே நினைவு கூர்கின்றன (ஜெண்டில்மேன்,இந்தியன்,முதல்வன்,அந்நியன்).

வடிவேலுக்கு ஒரு பெரிய சபாஷ்.எல்லா துறையிலும் அசத்துகிறார். காதலாகட்டும்,நடனமாகட்டும், நகைச்சுவையாகட்டும், அவருக்கே உரிய பாணியில் கலக்குகிறார். அவர் சினிமா உலகில் இது ஒரு மைல்கல்.வடிவேலு ஒரு நகைச்சுவை நடிகன் என்கின்ற கண்ணோட்டம் இல்லாமல் படம் பார்த்தல் அவசியம்.

இரண்டு மூன்று இடங்களில் சிரிக்க வைக்கிறேன் என வயிற்றை பிரட்டி எடுக்கிறார்கள். சிரித்து அல்ல. குறிப்பாக அந்த வாந்தி காட்சிகள். முகத்தில் காரி உமிழும் காட்சிகள் சிரிப்பை வரவைப்பதிற்கு பதிலாக சுளிப்பை வரவைக்கின்றன.

சமீப காலமாக தமிழ் சினிமா பார்முலாக்களை படத்திலேயே கிண்டல் செய்வதே வழக்கமாகிவிட்டது. “அழகாய் இருக்கிறாய்..பயமாய் இருக்கிறது” படத்தில் ஏகப்பட்ட இடத்தில் இந்த நக்கல் இருக்கும். அதே போல ராகவன் (பழம் பெரும் நடிகர் மீண்டும் திரையில்) “இரட்டையர்கள் மீண்டும் சேர்வார்கள் எனக்கு தெரியும்” என்பார். எப்படி என கேள்வி எழும். “திரைக்கதையில் வேற என்ன செய்ய முடியும்” என திரையினை பார்த்து கேட்பார். பஞ்ச் மா..
–>

கடைசி காட்சியில் “இனி என் ஆட்சி சீரிய ஆட்சியாக இருக்கும். நான் வீரனாக இருப்பேன். மாவீரன் அலெக்ஸாண்டரைப்போல, சிவாஜி போல, brave heart mel gibson போல” என கூறும் இடத்தில் வழுக்கிவிட்டார் இயக்குனர். Brave Heart திரைப்படம் வந்தது சமீபத்தில் தானே..? (நன்றி வித்தகர் சித்தார்த்).

முற்றுலும் வித்தியாசமான முயற்சி.இதே போன்ற படைப்புகள் தமிழ் சினிமாவிற்கு நிச்சயம் வேண்டும். இடையில் ஏற்பட்ட தடங்கலுங்கு வருந்த வேண்டாம். தற்போது பெங்களூரிலும் இந்த படத்திற்கு தடையாம். கேட்டால் மன்னர் புலிகேசியை அசிங்கப்படுத்துவதாக கூறுகின்றனர். என்ன செய்தாலும் குற்றம் சொல்ல ஒரு கூட்டம் இருக்கும்.

-விழியன்

———————————————————

Advertisements
No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: