Skip to content

Meeting with Vaasanthi – 1

August 24, 2006

வாஸந்தியுடன் ஒரு சந்திப்பு..

மாலை ஆறுமணிக்கு டான் என்று வாஸந்தி அவர்களின் வீட்டு அழைப்பு மணியை அடித்தேன். (வாஸ்ந்தி யார் என்று தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன குறிப்பு – இந்தியா டுடே இதழின் ஆசிரியராக 9 வருடம் பணியாற்றியவர். புகழ்பெற்ற மூத்த பத்திரிக்கையளர்.பல்வேறு தளங்களில் புத்தங்களை எழுதியுள்ளார்.சில நாவல்கள் திரைப்படமாக வந்துள்ளது. சிறுகதை எழுதியுள்ளார். அறுபது வயதை தொட்டுவிட்டார் என்று நினைக்கிறேன்.)

“வாங்க உமாநாத்”..

“இந்தாங்க …”

“அட எதுக்கு Formalities.தமிழர் பண்பாடா? ” கொடுத்த பழங்களை வாங்கி வைத்தார். முதல் மாடியில் வீடு.கீழே ஏதோ அலுவலகம் இருந்தது. தொலைப்பேசியில் வீட்டின் முகவரி சொன்னபோதே எனக்கு அவர்கள் வீடு நினைவிற்கு வந்து விட்டது. வீட்டின் பெயர் “சம்பங்கே” -சம்பங்கி மரத்தின் கன்னட பெயர். தினமும் இதே சாலையில் போகும் போது வித்தியாசமான பெயர் என்பதால் நினைவில் பதிந்து இருந்தது. (டேய் ரோட்டை பார்த்து வண்டி ஓட்ட மாட்டாயா என்ற கேள்வி எழுவது நியாயம் தான்)

திரும்பவும் வீட்டிற்கே வருகின்றேன். நீண்ட ஹால். அதன் முடிவில் சமையல் அறை.  அப்படியே ஹாலின் முதல் மாடியில் புத்தகாலயம் (Duplex Style). ஆங்கங்கு நல்ல வரைபடங்கள்.சித்திரங்கள். கலை ரசனையுடனான வீடு. நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள். தலைப்புகள் கூட பார்க்க முடியவில்லை. அதற்குள் நான் கேட்டபடி காபி வந்தது. சூடான பில்டர் காபி. கூடவே அரேபியன் இனிப்பு. பேச ஆரம்பித்தோம்.

என் படிப்பில் ஆரம்பித்து, பெங்களூர் வந்தது, அப்பாவுடன் அறிவியல் அறிவொளி இயக்கத்தில் சின்ன வயதில் பணியாற்றியது, அறியாத வயதில் வீதி நாடகங்கள், கிராம மக்கள்,அதன் அனுபவங்களுடன் ஆரம்பமானது. அவர்களுடைய வாழ்கை வரலாற்றையும் மகன்கள் பற்றி பகிர்ந்து கொண்டார். இடையே சுந்தரம் அவர்கள் (வாஸந்தியின் கணவர்) வந்தார். இரண்டே வரிகள் பேசி போனாலும் அவர் பேசியது காதில் ஒலித்தபடி இருந்தது. டைனிங் டேபிளில் இருந்து மாடிக்கு சென்றோம்.

‘The Book Review” என்ற இதழின் சார்பாக தமிழ் புத்தங்களுக்கு சிறப்பிதழ் வெளியிடுவதாகவும் அதற்கு தான் சில விமர்சனங்கள் எழுதுவதாக தெரிவித்தார். தருமனின் “கூகை” என்ற புத்தகத்தை பற்றி விமர்சித்தார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக இதை செய்வதாக கூறினார். “நீங்கள் விமர்சனம் எழுதுவீங்களா?”. “அல்வா சாப்பிட கூலி வேணுமா?”. என்னிடம் கண்மனி குணசேகரன் எழுதிய “அஞ்சலை” என்ற நாவலை கொடுத்தார். படிக்க ஆரம்பித்துவிட்டேன். (ஆங்கிலத்தில் தான் விமர்சனம் :-))

பேச்சு ஊடகங்களின் பக்கம் சென்றது, அவர்களுடைய களப்பணிகள், வேறு வேறு ஊர்களில் எடுத்த ஆய்வுகள், அனுபவங்கள் நெகிழ்ச்சியுடன் விவரித்தார். சுந்தரும் சித்தார்த்தும் கேள்வி கேடக் நீண்ட பட்டியலே அனுப்பிவைத்து இருந்தனர். அவ்வப்போது அந்த கேள்விகளை உரையாடல் இடையே கேட்டேன்( நான் இது வரை பேட்டி எல்லாம் எடுத்ததில்லை)..

தொடரும்…

(முடியும் வரை காத்திருக்கவும்…)விழியன்

Advertisements
No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: