Skip to content

“சப்புன்னு ஒரு காதல்”

September 11, 2006

“சப்புன்னு ஒரு காதல்”

14287285_joweds5.jpg

மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னரே படத்தின் புகைப்படங்கள் வெளிவந்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தின. ஒளிப்பதிவில் எந்த குறைபாடும் இல்லாமல் படம் வெளிவந்துள்ளது. படத்தின் ஆரம்பக்காட்சிகளில் விறுவிறுப்பு.ஆகா இயக்குனர் கலக்க போகிறார் என்று நினைத்தால் கலங்க வைத்துவிட்டார்.

பாடல்கள் எப்படி?

ஒளிப்பதிவாளர்தான் இந்தப் படத்தில் முக்கிய கதாநாயகன். ஆரம்ப காட்சிகள் முதல் இறுதிக் காட்சி வரை கலக்குகிறார். பாடல்கள் சுமார் ரகம் தான். ஆனால் படப்பிடிப்பு அருமை. பூமிகா -சூர்யா காதல் பாடலில் ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் விளையாடுகின்றது. காட்சிகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. இதே அளவு கவனத்தை “நியூயார்க்” பாடலிலும் படத்தொகுப்பாளர் கவனம் செலுத்தி இருக்கலாம். கண்களில் எந்த காட்சியும் பிடிபடவில்லை. சற்று நிதானமாக இருந்திருந்தால் மிக நல்ல முயற்சியாக இருந்து இருக்கும். முதல் பாடலின் வரிகள் காதை வந்தடையவில்லை.இரைச்சல் மட்டுமே மிஞ்சுகின்றது.

வீணடிக்கப்பட்ட வடிவேலு

படத்தின் முதல் பாடலில் அறிமுகமாகி வெகுவிரைவில் காணாமல் போய், மொத்தம் மூன்று காட்சிகளில் வருகிறார். வந்தாலும் முகத்தை சுளிக்க வைக்கிறார். புலிகேசியில் தன் திறமையை உலக ரசிகர்களுக்கு காட்டிவிட்டு இப்படி சப்பென்ற கதா பாத்திரத்தில் நடிக்க ஏன் சம்மதித்தார் என்றுத் தெரியவில்லை. படத்தில் வடிவேலு வீணடிக்கப்பட்டுவிட்டார் என்பது வருத்தமான செய்தி.

சொதப்பல்ஸ்…

திருமணமாகி 6 வருடம் 6 வருடம் என்று படத்தில் அடிக்கடி வருகின்றது. சூர்யா-ஜோ குழந்தை மட்டும் கிட்டத்தட்ட பத்து வயது பெண்போல காட்டியிருப்பது ஏனோ? ஐந்து வயது பெண்ணிற்கு இத்தனை முதிர்ச்சி இருக்காது.

சூர்யா-பூம்ஸ் காதலுக்கு வலுவான காரணங்கள் ஏதும் இல்லை.சும்மா இரண்டு முறை பார்ப்பாங்களாம், காதல் பிறந்துவிடுமாம் (இந்தியப் படங்களின் சாபக்கேடு)  என்னங்கப்பா? ஒரு வலுவான காட்சியாவது இருந்து இருக்கலாம்.

பூம்ஸ் இயற்கையாகவே ரொம்ப அழகு, அவங்களுக்கு போய் அனாவசியத்திற்கு ஒப்பனைப்போட்டு கெடுத்துவிட்டார்கள். சில காட்சிகளில் அதிக செயற்கைத் தனம் நன்றாக தெரிகிறது. ஜோவுக்கும் சில காட்சிகளில் அதிக ஒப்பனை.

இரண்டாம் பாதியில் என்ன செய்வது என்றுத் தெரியாமல் இயக்குனர் தவித்த தவிப்பு நம்மையும் வாட்டுகின்றது. ஜோ,சூர்யா, பூமிகா சந்திப்பு ஒரு சாதாரண காட்சியல்ல. முன்னாள் காதலி, மனைவி, கணவன் – எப்படி ஒரு வலுவான உணர்ச்சிபூர்வமான சந்திப்பு, இதில் கோட்டைவிட்டுவிட்டார் தலைவர்.இன்னும் அழகாக காட்சியமைத்து இருக்கலாம்.

நச்சுன்னு

ஜோவின் நடிப்பு மெருகேறி இருக்கின்றது.

சூர்யா தன் இன்னொரு முகத்தை திரையில் பதித்துள்ளார்.

கல்லூரி காட்சிகளிலும் சரி, தந்தையாக நடிக்கும் போதும் சரி தூள் (தூசி) கிளப்புகிறார்.

பூம்ஸ் அழகு.
ஒளிப்பதிவாளர்.

சந்தானத்தின் கல்லூரி காட்சிகள் கலக்கல்.

இடையிடையே வரும் நறுக்கென்ற் வசனங்கள்.

குறிப்பாக இரவில் சூர்யா-பூம்ஸ் காதல் காட்சி.

“போனிலேயே குடும்பம் நடத்துங்கடா..”

கதைக்கு வருவோம்:

குந்தவியை திருமணம் புரிகிறார் கெளதம். மும்பைக்கு வருகிறார்கள்.குழந்தை பிறக்கின்றது.சந்தோஷமான குடும்பம்.சின்ன சின்ன சண்டைகள். இடையே கெளதமின் கல்லூரிக்காதல் குந்தவிக்கு தெரியவருகின்றது.கெளதம் தன் நாட்குறிப்பில் தன் முன்னாள் காதலியுடன் (தாலி கட்டிவிடுகிறார் ஆனாலும் காதலி தான்) ஒரு நாள் வாழ்ந்தால் ஒரு யுகம் வாழ்ந்த திருப்தி கிடைக்கும் என்று எழுதியிருப்பதைப் பார்த்து, அதன்படி ஏற்பாடு செய்கிறார் குந்தவி. கடைசியில் என்ன நடந்தது என்பதை திரையில் காண்க. (ரொம்ப அவசரம்னா எனக்கு மடல் போடுங்க 🙂

விவாதங்கள்…

படத்தில் முக்கிய விஷயம். ஒருவனுக்கு ஒருமுறை தான் சுந்தரகாண்டம் வருமா என்பது. நிச்சயம் வரும் என்பதை அழகாக சொல்லி இருக்கும் இயக்குனருக்கு ஒரு ஓ போடுவோம். ஏதாவது காட்சி ஒன்றில் இதனை குறிப்பிட்டு இருக்கலாம். காலம் நல்ல மருந்து.

இறுதிக்காட்சியில் சூர்யா “எங்கே என் பழைய காதலை சொன்னால் உன்னால தாங்க முடியாதுன்னு சொல்லவில்லை” என்பது போல கூறுவார். இதில் ஏதோ பெண்கள் பலவீனமானவர்கள் போல சித்தரிக்கப்படுகின்றது. உண்மை அதுவா? எத்தனை ஆண்களுக்கு தன் மனைவியின் பழைய சோகங்களை கேட்டப்பிறகு பொறுமையும் மன தைரியமும் இருக்கும்? பெண்கள் சில காலத்தில் ஜீரணித்து விடுவார்கள். ஆண்களால் முடியுமா?

“சில்லுன்னு ஒரு காதல்” – இடையிடையே நல்ல காட்சிகள் இருந்தாலும் மொத்தத்தில் “சப்புன்னு ஒரு காதல்”

-விழியன்

Advertisements
5 Comments leave one →
 1. September 12, 2006 12:15 pm

  sir makkal innum surya jothika kalyana matterilirundhe meelalai indha nerathil vimarasanamaa?

 2. September 13, 2006 6:47 am

  this is too much comment. The movie was really really nice 🙂

 3. September 13, 2006 7:03 am

  >

  அட நிஜமா எனக்கு பிடிக்கவில்லைங்கோ.

 4. vaani permalink
  January 17, 2008 12:55 am

  சூர்யா-பூம்ஸ் காதலுக்கு வலுவான காரணங்கள் ஏதும் இல்லை.சும்மா இரண்டு முறை பார்ப்பாங்களாம், காதல் பிறந்துவிடுமாம் (இந்தியப் படங்களின் சாபக்கேடு) என்னங்கப்பா? ஒரு வலுவான காட்சியாவது இருந்து இருக்கலாம்.

  Is that really true Umanath… so LOVE AT FIRST SIGHT IS NOT POSSIBLE? isnt it?

 5. September 5, 2013 3:23 am

  padamparkala so na criticise pannala

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: