Skip to content

Oct 2

October 3, 2006

வணக்கம்,

நேற்று காந்தியடிகள், லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாள். மேலும் காமராஜரின் நினைவு நாள். அதனையொட்டி எல்லா தொல்லைகாட்சிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள்.

காலையில் எழுந்தவுடன் சிறப்பான ஒரு காலை வணக்கம். காந்தியவாதி, இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டான ஒரு கடுமையான போராளி, எத்தனை படம் நடித்தும் குத்து வாங்கியும் நானும் ஒரு நடிகன் என மார்தட்டும் நடிகர் ஸ்ரீகாந்த்தின் பேட்டி. அட அட என்ன ஒரு செய்தி, அதுவும் காந்தி ஜெயந்தி அன்று காலையில் ரம்மியமான ஒரு பேட்டி. புல்லரித்தது. சரி வேற எங்காச்சும் நல்ல நிகழ்ச்சி இருக்கான்னு பார்த்தா அங்க பிதாமகன் நாயகி சங்கீதாவின் பேட்டி. வாவ்.எவ்வளவு போராடி இருக்காங்கப்பா. ச்சா..இத்தனை நாள் தெரியாம போச்சே..ரொம்ப உற்சாகம் வந்தது. இவங்கள் இளைய சமுதாயத்தின் எடுத்துக்காட்டு.

நான் பார்த்த போதெல்லாம் எல்லா தொலைக்காட்சிகளிலும் மசாலா திரைப்படங்கள் மட்டுமே சென்றது. ஒரு வேளை நல்ல நிகழ்ச்சிகளை தவரவிட்டுவிட்டேனோ?

மாலை கலைஞரின் பேட்டியாவது சுவாரஸ்யமாக இருக்கும் என்றால் அதுவும் … கேள்விகளுக்கு தக்க பதிலடி தருவதில் வல்லவர் நம் முதல்வர். ஆனால் ஏனோ எந்த கேள்விக்கும் இனிப்பான பதில்கள் ஏதும் இல்லை.அவரின் நினைவாற்றலை பாராட்டியே தீர வேண்டும். பாதி வினாக்களுக்கு மழுப்பலான பதில்களே வந்தது.

அது என்னமோ காந்தி பிறந்த நாள் மட்டும் அறிக்கை மேல அறிக்கையா வரும். “காந்திய வழியில் தீவிரவாதத்தை ஒழிப்போம்..” “காந்திய வழியே சிறந்தது…”. ஏன்யா இத்தனை நாள் அது மறந்து போச்சா? இல்லை காந்தி பிறந்த நாள் மட்டும் தான் அவரும் அவரின் கொள்கைகளும் நினைவுக்கு வருமா? அன்று மட்டும் கதராடை அணிவார்களாம். ஒரு வகையில் இது வேஷமாக கூட தோன்றுகின்றது.

ஐம்பது காரில் ஆர்பாட்டமா, ஆடம்பரமா சென்று அடக்கமாக சாதாரணமா வாழ்ந்த காந்தி சிலைக்கு மாலை மட்டும் போடுங்கப்பா…

விழியன்

2 Comments leave one →
  1. October 3, 2006 4:47 am

    Hi Mr Cynic

    Why were nt you singing the national anthem and spinning your charka in the morning? You were also just watching TV right? Stop cribbing and first look at your own mistakes before blaming others!

    I think both Shrikanth and Sangeetha have suffered a lot in life before they got to this stage. Some people just know to find faults!

  2. Chairma permalink
    October 26, 2006 11:18 am

    சிலர்(வெளியில்):
    ஸ்ரீகாந்த் & சங்கீதா கஷ்டப்பட்டர்கள் சரி.
    சுதந்திர போராட்ட வீரர்கள் ஒருவர் கூடவா இல்லாமல் போனார்கள்….
    அவர்கள் பேட்டி போட்டால் என்னவாம்??

    மக்கள் (பலர்):

    நாங்கள் channel-அ மாத்தி படம் பார்ப்போம்..

    மக்களின் நிலை இப்படி ஆகி விட்டது…

    என்ன உலகம்டா சாமியோவ்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: