Skip to content

866 Days

October 13, 2006

866 நாட்கள்

இது என்ன கணக்கு 866 நாட்கள். இன்றோடு 866 நாட்களாகின்றது அந்த வீட்டிற்கு சென்று. நாளைக்கு அந்த வீடு இருக்கும் நான் இருக்க மாட்டேன். புதிதாக வேறு வீட்டிற்கு செல்கின்றேன். வேலைக்கு சேர்ந்த 10வது நாள் இந்த வீட்டிற்கு போயாச்சு. இது தான் முதல் மாற்றம். வழக்கமா இத்தனை நாள் ஒரே வீட்ல திருமணமாகாத இளைஞர்கள் தங்குவது ரொம்ப அதிசயம் தான். அதுவும் இல்லாம அறைவாசிகள் மாறிட்டே இருப்பானுங்க. இந்த வீட்டில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

ம்ம்ம்..இரண்டு மூனு நாளா ஒரே பீலிங்ஸா இருக்கு. கண்ணா இதற்கெல்லாம் போய் சென்டி ஆகலாமான்னு புத்தி சொன்னாலும் மனசு கேக்க மாட்டேங்கிது. அப்படியே பழசெல்லாம் நினைவுக்கு வருது. ரீவைண்ட். இந்த வீடு நிச்சயமா ஒரு விஷயத்தில மறக்கவே முடியாதுங்க. எனக்கும் ஏதோ எழுத வரும்னு புரிய வெச்சது இந்த வீடு தான். ஒரு புத்தகம் எழுதி முடிச்சுட்டேன். பல்வேறு சிந்தனையை தூண்டிவிட்டது இதே வீடு தான். எம்புட்டு புத்தகம் படிச்சி இருப்பேன். தீவிர வாசகனாக உருவாக ஒரு களத்தை அமைதியை ஏற்படுத்தியது இதே வீடுதாங்க.

யாரும் இல்லாத சமயத்தில் சிலரு சாமிகிட்ட பேசுவேன்னு சொல்லுவாங்க. கொடுத்து வைச்சவங்க. நான் அறையில் மாட்டி இருக்கும் சே, பிடல் கேஸ்ட்ரோ, பாரதியார் கிட்ட பேசுவேன். கவிதைகளை படிச்சு காட்டுவேன்.கேள்வி கேட்பேன். லூஸாடா நீன்னு நினைக்கறீங்க. அப்படி தான் எனக்கும் தோனுது. ஆனா அவர்களிடம் பேசும் போது நிறைய சக்தி பிறக்கும், ஒரு உத்வேகம் வரும், நம்பிக்கை வரும். அவங்க வரலாறு பேச்சுகள் ,படிச்சு, என் கேள்விகளுக்கு அவர்கள் பதில் என்னவாக இருக்கும் என நானே பதிலும் செல்லிடுவேன். எப்படியும் இவங்களும் என்னோட புது வீட்டுக்கு வந்துவிடுவாங்க.. 🙂

மறக்க முடியாத கணம்னு சொன்னா…ஆங்..என் கல்லூரி தோழிக்கு (நேசித்த காரணத்தால்) திருமணம் நடந்தது. அன்று இரவு நான், நிலவு, இருட்டு மூவரும் வெகு நேரம் அமைதியா இருந்தோம். மாடி படிக்கட்டுகளில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுதேன். இப்ப நினைச்சா அட நானா அதுன்னு தோணுது. அது என்ன உணர்வுன்னு இன்னும் புரியவில்லை. ஆனா நல்லா இருந்தது. சரவணன் வந்து என்னடான்னு கேட்டான். அவன் தோள் ஆறுதல் கொடுத்தது. அதன் பிறகு என்னைக்கும் அதை நினைத்து வருத்தப்படவில்லை. வாழ்கையில் இன்னும் எத்தனையோ இருக்குன்னு இன்னும் வேகமா கிளம்பிட்டேன்..

எங்களோட சுமார் ஒரு வருடம் பூவண்ணன் என்ற நண்பனுடைய அத்தை வீட்டில் தங்கி சமைத்து கொடுத்து மற்றொரு அம்மாவா பாத்துகிட்டு இருந்தாங்க. சாப்பாட்டுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. வரவனுங்க போரவனுங்க எல்லாம் அடப்பாவிங்களா இப்படி ஒரு கொடுப்பினையான்னு கண்ணு வெச்சிட்டு போனாங்க. ஏழு மாதம் முன்னர் அத்தை வேறு ஒரு சொந்தக்கார வீட்டிற்கு சென்று விட்டார்கள். மீண்டும் சாப்பாட்டுக்கு அலையோ அலைன்னு அலைச்சல்.வார இறுதியில் சரவணா அல்லது சுரேன் பிரியாணி செய்வானுங்க பாருங்க..பேசாம கேட் அடிக்கிறது விட்டுட்டு பிரியாணி கடை ஆரம்பிச்சிடலாம். அருமையா இருக்கும்..

எங்க நட்பை பத்தி ஒரு வார்த்தை இரண்டு வார்த்தை எல்லாம் எழுத முடியாது. அது காவியம். கலாட்டாங்கள், கல்லூரி நாட்களை அசைபோடுவது, ஓட்டுவது, வெள்ளி இரவுகளில் சி.டி போட்டு படம் பார்த்தது, சின்ன சின்ன சண்டைகள், சனி மாலை டீ சமோசா, லீட்டர் லிட்டரா பாசம், அடிதடி, அதிசயமா காலை நேர வாக்கிங், பந்தங்களின் வருகை, திட்டுக்கள், அறிவுரை கொடுத்தது வாங்கியது, விளையாட்டு..இப்படியே….

வாழ்வின் எல்லா அங்கத்திலும் எல்லோருக்கும் மாற்றம் ஏற்படுத்திய நாட்கள் இந்த அறையில் நடந்தது. எனக்கு மட்டும் இல்லை. எல்லோருக்கும் தான். இப்ப லால்பகதூர் சாஸ்திரி நகரில் இருந்து மடிவாளாவிற்கு மீண்டும் வருகின்றேன். சரவணா அவன் கட்டிய வீட்டிற்கு தம்பியிடன் செல்கிறான். நேத்தாஜி தில்லி பறக்கிறான். நான் கே.பி மட்டும் தான்.புதிய வீடு, புதிய நட்பு வட்டாரங்கள், புதிய அனுபவங்கள்..

காலம் மாற்றத்தை கொடுத்துட்டே இருக்கு. மாறுதலை ரசிக்க கத்துக்கனுங்க.அடுத்த நொடியில் என்ன ரகசியம் இருக்குன்னு யாருக்கு தெரியும்…?

இதை எழுது முடிச்சிட்டு இன்னும் பீலிங்ஸ் ஆகிடுச்சு..

பீலிங்ஸ்சுடன்

விழியன்
https://vizhiyan.wordpress.com

Advertisements
15 Comments leave one →
 1. Madhavan permalink
  October 13, 2006 5:03 am

  I still remeber the day u cried on our farewell , despite the fact that we were u r seniors. Nee paasakkara paiyannu theriyum.. Aana enna maama panradhu.. Life’s like that .. Take care

  Love Maddy

 2. Madhavan permalink
  October 13, 2006 5:04 am

  I still remember the day u cried on our farewell , despite the fact that we were u r seniors. Nee paasakkara paiyannu theriyum.. Aana enna maama panradhu.. Life’s like that .. Take care

  Love Maddy

 3. Vimalprasath permalink
  October 13, 2006 5:36 am

  Nallaaruku pa

  Touching … Touching … pz 🙂

 4. saravana permalink
  October 13, 2006 6:22 am

  Touching da gunda !! do not worry we will buy this house + our dream house in VG ROA nagar [I hope Mango Raja will gift that house to us] ….

 5. October 13, 2006 6:31 am

  வாங்காலம் இல்லை. வாங்கி தர..சிங்கபூர் போய் பொட்டி பொட்டியா எடுத்துட்டு வந்து இருக்க இல்ல 🙂

 6. கோபு permalink
  October 13, 2006 7:49 am

  எனக்கு அழுகையா வருது இந்த கட்டுரைய படிச்சிட்டு…
  கடைசிவரைக்கும் வீட்டு நெம்பர சொல்லவேயில்லயே…….

 7. vijay permalink
  October 13, 2006 7:52 am

  really super na…. 🙂

 8. vijay (a) suren permalink
  October 13, 2006 7:53 am

  really super na…. 🙂

 9. October 13, 2006 8:38 am

  எனக்கு அழுகையா வருது இந்த கட்டுரைய படிச்சிட்டு…
  கடைசிவரைக்கும் வீட்டு நெம்பர சொல்லவேயில்லயே…….
  >>

  பரவாயில்லை விடுங்க.. 😦

 10. poovannan permalink
  October 13, 2006 8:47 am

  i read this in Duabi airport.. i felt very happy to read this with a lot and lot of tears feelings.

 11. October 13, 2006 8:47 am

  பூவண்ணா,

  முதலில் விமானத்தை பிடி ராசா…

 12. சுந்த‌ரராமன் permalink
  October 13, 2006 2:18 pm

  விழியனுக்கு ஒரு புதிய பாதை.புதிய நண்பர்கள் , எண்ணங்கள் மலர என் வாழ்த்துக்கள்.

 13. மக்கா permalink
  October 13, 2006 2:42 pm

  எப்பொழுதோ படித்தது, இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது!!!

  “மாற்றம் ஒன்று மட்டுமே உலகில் மாறாத ஒன்று”

 14. October 14, 2006 4:28 am

  பாசக்கார புள்ள விழியன்
  நானும் பீலிங்ஸ் ஆயிட்டேன்ம்மா

  நம்மளை மாதிரி எத்தனை லூசுங்களோன்னு சந்தோஷமா இருக்கு

 15. bagya permalink
  January 17, 2008 1:25 am

  really good one umanath.. u are able to bring out your feelings in writing.. good. keep moving

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: