Skip to content

Diwali Article in Sify

October 18, 2006

http://tamil.sify.com/fullstory.php?id=14313539

——————————————-
தீபங்களின் ஒளி..

தீபாவளின்னு கூறிய உடனே எனக்கு எங்கள் பெரியம்மா நினைவு வரும். சொந்த ஊரிலே (ஆரணி) தான் அதிகம் கொண்டாடியதாக நினைவு. தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாகவே அம்மா கூட்டிக்கொண்டு சென்று விடுவார்கள். தீபாவளி இரவு தூக்கமே வராது. மறுநாள் புத்தாடை கிடைக்கும். யாருக்கேனும் தலைதீபாவளியாக இருக்கும் சமயத்தில் பட்டாசுகளுக்கு குறையே இருக்காது. விடியற்காலை நரகாசூரனை வதை செய்யும் நிகழ்ச்சி நடைபெறுமாம்.இது வரை நேரில் பார்க்கவில்லை. காலை ஐந்து மணிக்கு எழுந்து உடல் முழுதும் எண்ணை தேய்த்து குளிப்பாட்டுவார்கள். உடனே பட்டாசு தான். எல்லா வகையான பட்டாசும் வெடிப்போம். ஏழு மணிக்கெல்லாம் வெடித்து வெடித்து அந்த வாசனை ஒரு வித குமட்டலை தந்துவிடும். பின்னர் பலகாரம்.மீண்டும் வெடிகள். இப்படியாக மிக சின்ன வயது நினைவுகள்.

ஆறாம் வகுப்பு படிக்கும் போது அப்பா தீபாவளிக்கு ஒரு யோசனை கூறினார். ஆரம்பம் முதலே அவருக்கு பட்டாசுகளில் பணம் கருகுவதில் மனம் இல்லை. சின்ன வயதில் சொன்னால் புரியாது என கருதியோ என்னவோ ஏதும் சொன்னதில்லை. இந்த தீபாவளிக்கு உனக்கு பட்டாசு வேண்டுமா அல்லது பெரிய அட்லஸ் புத்தகம் வேண்டும் என்று கேட்டார். ஒரு முறை புத்தக கண்காட்சிக்கு சென்று ஒரு அட்லஸ் புத்தகத்தில் மயங்கினேன். ஊர் ஊராய் சென்று பார்த்து வருவது போல ஒரு பிரமை வந்தது. எங்கு கடல் இருக்கின்றது, சீதோஷன நிலை, உலக வரைபடங்கள் என்று ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி இருந்தது. சரி எனக்கு ஒரே ஒரு பாக்கெட் பட்டாசு (ஊசி வெடிகள்) மற்றும் ஒரு அட்லஸ் புத்தகம் என கேட்டேன். கிடைத்தது. இப்படியாக படிப்படியாக பட்டாசுகள் தீபாவளியில் இருந்து மறைந்தது.

பட்டாசின் அறிவியல் ஆச்சரியத்தை கொடுத்தது. எப்படி சத்தம் வருகின்றது என தேடல் ஏற்பட்டது.ஒரு சமயம் சிவகாசியில் குழந்தை தொழிலாளர்கள் பட்டாசு தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். விபத்து என படிக்க நேரிட்டது. அப்போது தான் முதல் முதலாக குழந்தை தொழிலாளர்கள் இருப்பது, அவர்கள் பட்டாசு தொழிற்சாலையில் பணி புரிவதும் தெரியும். குழந்தையில் கல்வி எப்படி பறிக்கபடலாம்? அதுவும் தொழிற்சாலைகளில் எப்படி பணி புரியலாம் என்ற கேள்விகள்..ஒரு பக்கம் பட்டாசுகள் பயன்படுத்தினால் ஒரு வேளை உணவாவது கிடைக்கும் என்ற எண்ணம். ஆனால் நிலைமை இப்படியே நீடித்தால் என்னாகும்? அந்த குழந்தை தொழிலாளர்கள் நிலைமை அப்படியே தான் இருக்கும்…

தீபாவளியன்று ஒரே நாளில் எத்தனை மாசுபடுகின்றது ஊர் என்று யோசித்ததுண்டா? ஏற்கனவே வாகனங்களில் புகைமண்டலம் நாளுக்கு நாள் அதிகரித்து ஏராளமான நச்சுகளை காற்றில் கலந்துவிட்டது, சுவாசிக்கும் காற்று ஏற்கனவே அதிக அளவில் மாசுபட்டு உடல் நித்தம் கெடுகின்றது.

தீபங்களால் தீபாவளி.. ஒரு மாற்று யோசனை.

சரி இதற்கு மாற்று என்ன? தீபாவளி கொண்டாடக்கூடாதா? விழா என்பது எதற்கு? வருடத்தின் ஓயாத உழைப்பில் இருந்து சிறிது இளைப்பாறி, குடும்பம், குழந்தைகள், உற்றார் உறவினர், நண்பர்களுடன் சில நாட்கள் சிரித்து பேசி, கூடி, அன்பை பகிர்ந்து கொண்டாடுவதற்கே. அவை எந்த மதத்தில் விழாவானாலும் எந்த பண்டிகையானாலும் சரி.

தீபாளிக்கான காரணங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடுகின்றது. நம்மிடத்தில் நரகாசுரன் வதை செய்யப்பட்ட தினமாக, அயோத்தியில் காட்டில் இருந்து ராமர் வந்து நாட்டில் அரசனாக முடிசூடிய நாளாகவும், வங்காளத்தில் வேறு காரணத்திற்காகவும்…காரணங்கள் வேறுபட்டாலும்.ஆனால் நமக்கு ஒரு பண்டிகை அவ்வளவே.

தற்போதைய வேக உலக சூழ்நிலையில் உறவினர்களை சந்திப்பது அரிது தான்.குழந்தைகளுக்கு தன் உறவினர்கள் யார் யார் இருக்கின்றார்கள் என்று கூட தெரிவதில்லை. ஆங்கிலம் வசதியாகிவிட்டது. “அங்கிள் ,ஆண்டி” என்று எல்லா உறவுக்கும் பொதுவாக கூப்பிட்டு விடுகின்றது. விழாக்கள் சமயத்தில் முடிந்தால் உறவினர்கள், மூதாதையர் வீட்டிற்கு குடும்பத்துடன் போகலாம். அதனை விட இளைப்பாற என்ன இருக்கின்றது.

நண்பர்கள் தான் வாழ்க்கையில் உறவினர்களை விட ஆக்கிரமித்து விட்டனர். அது காலத்தின் கட்டாயமும் கூட. ஒரு குடும்பத்திற்கு உறவினர்களை விட நணபர்கள் வட்டமே அதிகமாக இருக்கின்றது. இது ஆரோக்கிய அறிகுறி. ஊருக்கு போக முடியாத நேரங்களில் இப்படி நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடலாம். பேசி மகிழலாம். ஏன் ஒரே தெருவில் அனைவரும் ஒன்று கூடி சின்ன நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து குதுகலிக்கலாம்.அப்படி கூடும் சமயத்தில் சுமார் ஐம்பது பேர் ஒன்றாக பட்டாசுகளை வெடிக்கலாம்.நீங்கள் வெடித்தாலும் வெடி தான், நான் வெடித்தாலும் வெடி தான். அதே சத்தம் அதே காட்சி தான். இப்படி செய்தால் மாசுபடுவதை குறைக்கலாம். நாள்பட பட்டாசுகளை அழித்தும் விடலாம். மாசு மட்டுமல்ல எத்தனை காயங்கள் ஏற்படுகின்றது.

சிரித்து மகிழ்ந்து கொண்டாடலாம். முகத்தில் புன்னகையைவிட பிரகாசமான தீப ஒளி என்ன இருக்கின்றது

விழியன்

7 Comments leave one →
 1. Chairma permalink
  October 18, 2006 2:36 pm

  மகிழ்ச்சி பல குழந்தைகளுக்கும் தான்……

 2. Prakash A permalink
  October 18, 2006 2:42 pm

  Hi Umanath,
  Nice to hear your idea.நண்பர்கள் தான் வாழ்க்கையில் உறவினர்களை விட ஆக்கிரமித்து விட்டனர். Very true.

  Advance Happy Diwali..

  Sorry Umannath.. I like more to reveal my expression in Tamil only..But I dont know Tamil typing. Or else I can reply you via nice Tamil quotes and Poems.

 3. October 19, 2006 4:06 am

  அடுத்த தீபாவளி விழியனுக்கு தலைத் தீபாவளியாக வாழ்த்துக்கள்!

 4. October 19, 2006 5:40 am

  On Prakash,

  நன்றி பிரகாஷ். தமிழில் எழுத முயற்சியுங்கள்…

 5. October 19, 2006 5:44 am

  ராமா வாழ்க..!!!

 6. இளங்குமரன் permalink
  October 23, 2006 2:44 pm

  அன்புடன் விழியன். என் நினைவின் விழிகள் திறந்து கொண்டது. ஏறக்குறைய 16, 17 ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூர் தூய இருதய மகளிர் மேநிலைப் பள்ளியில் ஐகஃப் எனப்படும் இளைஞர் இயக்கக் கூட்டம் எனது தலைமையில் பல்வேறு விழிப்புணர்வுக் கருத்துகளை எடுத்துக்கூறிய பின்னர் கல்லூரி மாணவர்கள் தீபாவளிக்கு வெடி வெடிக்க மாட்டோம். வீட்டிலும் நண்பர்களிடமும் வெடி வாங்க மாட்டோம் என உறுதி எடுக்க வைப்போம் என்று முடிவு எடுத்தனர்.

  அதை நடைமுறைப்படுத்தினர். இதுபோல் பல… தொடர் நினைவாடல்களைத் தோற்றுவித்துவிட்டது உங்கள் எழுத்து. நன்றி விழியன்.

 7. jegan permalink
  October 29, 2006 7:01 pm

  Well said Vizhiyan.
  Keep it up

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: