Vallavan – Film Review
வல்லவன் – திரைப்பட விமர்சனம்
படம் ஆரம்பிக்க 10 நிமிடம் தாமதம் என்று அரங்க காப்பாளர் சொன்னப் போது ஏதோ தடங்கல் என அந்த சமயத்தில் தெரியவில்லை. பட்டால் தானே நமக்கு எல்லாம் புரியும்..
நயனும் சிம்புவும் பிரியும் காட்சிகளில் ஏகப்பட்ட வசனம்.. மன்னிக்கவும் கத்தல்..வழக்கமா அய்யய்யோ காதலர்கள் பிரிஞ்சிடுவாங்களே என்ற சோகம் வரும், இவர்கள் இருவரும் கத்தின கத்துக்கு இந்த காட்சி எப்படா முடியும்னு தோன்றியது என்னவோ உண்மை.
ஆரம்பம் முதல் பல அருகாமை (க்ளோஸ்அப்) காட்சிகள் பயமுறுத்துகின்றது. குறிப்பாக ரீமா சென்னுடைய முகமும் சிம்புவின் முகமும். பக்கத்தில உட்கார்ந்து இருந்து படம் பார்த்த என் தம்பி பயப்படும் அளவிற்கு அந்த மூஞ்சிகள் இருந்தன. இதுல வேறெ இவங்க எல்லாம் பள்ளிக்கூட பசங்களாம்!. எல்லாம் நம்ம கஸ்ட காலம்? சந்தியா மட்டும் தான் பள்ளி மாணவி போலவும் கல்லூரி மாணவி போலவும் காட்சி தருகின்றார். ஆனால் சந்தியாவை என்ன சொல்லி ஏமாற்றி சிம்பு நடிக்க வைத்தார் என தெரியவில்லை. மிக சின்ன கதாபாத்திரம்…
சில லொள்ளுகள் சிரிக்க வைக்கின்றது. குறிப்பாக எம்.எல்.ஏ எஸ்.வி. சேகரின் நச்சென்ற நகைச்சுவையும், சந்தானத்தின் சில லூட்டிகளும். பல்லன் பாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார் சிம்பு..அது இன்னான்னு தெரியல நைநா, சிம்பு ஆவூன்னா அழ ஆரம்பிச்சு ஒரே ரப்சர் செய்துவிடுகின்றார். தாங்கலடா சாமி.நிறைய கிளசரின் எங்காச்சும் கிடைச்சிடுச்சா? இல்லை மெகா சீரியல் நிறைய பார்த்தாரா தெரியவில்லை. கடைசி காட்சிகளில் இவர் அழும்போது அரங்கமே சிரிக்கின்றது. சத்தத்தை குறைப்பது நலம்.
படத்தைப் பார்க்கும் போது நாற்பது ஐம்பது காட்சிகள் ஒன்றாக பார்த்தா எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. சில படங்களைப் பார்க்கும் போது இடைவேளை வருகையில் அட அதுக்குள்ள இடைவேளையான்னு யோசிக்க வைக்கும் சில படங்களை பார்க்கும் போது எப்படா இடைவேளை வரும், எப்படா நொறுக்கு தீனி சாப்பிட போகலாம்னு இருக்கும்.ஆனா இந்தப் படத்தை பார்க்கும் போது இடைவேளையிலெயே படம் முடிஞ்சிருந்தா சீக்கிரம் வீட்டுக்கு போயிருக்கலாமேன்னு நினைக்க வைக்கிறது. இதிலெ வேறெ கடைசியில் “To be Continued”னு போட்டாங்க. தாங்க முடியலெ….. போதுமடா சாமி……
பாடல்கள்..
பாடல்கள் பரவாயில்லை ரகம். லூசு பெண்ணே பாடல் காட்சி படுத்துதலில பயங்கர சறுக்கல். பெருத்த ஏமாற்றம். “எம்மாடி..ஆத்தாடி” பாட்டுக்கு செம ஆட்டம். சிம்பு நடனத்தில் கலக்குகிறார். முதல் பாடலில் குழந்தைகளை நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். பள்ளி பாடல் “மாரோ மாரோ” பாடலை நினைவு படுத்துகின்றது…சில பாடல்களில் படு வேகமா எடிட்டிங் செய்து ஒண்ணுமே புரியாம பண்ணிட்டாங்க.ரஷ்ய நடன கலைஞர்களை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம்.
முதல் பாதியிலாவது கொஞ்சம் பசுமையாக இருந்தது. இரண்டாம் பாதியில் அதுவும் காணாமல் போய்விட்டது. பள்ளி நினைவுகள் மிக இம்சை. சில காட்சிகள் முகம் சுளிக்க வைக்கின்றது. காதலில் குறைந்தபட்ச அடிப்படை காரணம் கூட காணவில்லை.
என்னமோ விமர்சனம் எழுதறெயே, கதையெ பத்தி ஒண்ணும் காணொமேன்னு நீங்க கேக்கறது புரியுது. அந்த மாதிரி எதுனா இருந்தா தானே சொல்லறதுக்கு? ஆனா ஒண்ணே ஒண்ணு சொல்ல ஆசைபடுறேன். அதாவது உங்களால முடிஞ்ச சமூக சேவையாக நினைத்து இந்த படத்தை கண், காது, மூக்கு, இதயம் உள்ள எவரும் பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொல் மன்னிகவும் கேட்டுக்கொள்கிறேன்.
பின்குறிப்பு: இந்த படத்தில் வரும் பாடல் லூசு பெண்ணேக்கு பதிலா லூசு பைய்யான்னு தயாரிப்பாளருக்கும் சேர்த்து ஒரு பாடல் போட்டிருக்கலாம். (ஓ அது தான் இரண்டாவது வரியில் வருதேன்னு சொல்றீங்களா? அப்ப சரி)
—
விழியன்
https://vizhiyan.wordpress.com
watch varalaru… ajith is back with some good acting
Ya… it is true.. first of Ok… second of as he said…. I think we can watch Varalaru (God father)… it is Ajith as well as K S RaviKumar movie.
m… Nadathunga nadathunga…
thanx for the social service 🙂
Sariya soneenga…
சீக்கிரமா பாக்கனும் வரலாறு…
வல்லவன் பாக்கல…. நல்லவேலையா அறிவுரை சொன்னிங்க……..வரலாறு பாத்தேன் அஜித்தா…னு கேக்க வெக்கறாரு……..சும்மாவா K.S.ரவிகுமார்ல்ல புழிஞ்சி வேலைவாங்கிட்டாரு………..
yennoda ambathu rubaa michaam………..
Hi Hi,adutha thirai vimarsanam yeppo??? yenna padam??
நான் 120 செலவு பண்ணி பார்த்தேன்..
அடுத்த படம்..காத்திருக்கவும்..அடுத்த பொங்கலுக்கு…
I will see the movie first, then you can see my comments!!!
godfather paarungappa
Over expectations and over delay always fail…
Anyway thanks for the social service.