Skip to content

E – Film Review

October 30, 2006

ஈ – திரைப்பட விமர்சனம்

பயோ வார் (Bio War) – என்று மிரட்டலுடன் படம். தமிழ் சினிமா அனேகமாக தொடாத ஒரு கரு. அதற்காக முதல் பாராட்டு இயக்குனருக்கும் அவர் குழுவிற்கும்.இயற்கை என்ற அமைதியான படத்தை எடுத்து விட்டு சர்வதேச பிரச்சனையை கையாண்டு இருப்பது நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் திரு.ஜனநாதன்்.

சென்னையின் ஒதுக்குபுறத்தில் படம் துவங்குகின்றது. ஈஸ்வரன் என்ற ஈ சின்ன சின்ன திருட்டுகளையும் ரவுடி தொழிலையும் செய்துவரும் கதாநாயகன். விரைவில் பெரிய தவறு ஏதேனும் செய்து பெரிய ஆளாக ரவுடியாக வரவேண்டும் என்பதே அவரின் ஆவல். நயன் தாரா ‘ஈ’ வீட்டிற்கு எதிர் வீட்டில் இருக்கும் ஓட்டல் டான்சர்.இருவருக்கும் காதல். வீட்டை விட தெருக்களிலும் காவல் நிலையத்திலும் அதிகம் இருக்கும் நாயகனை திருத்த முயற்சிக்கும் நாயகி. நாயகனின் நண்பர் டோனி(கருணாஸ்). நகைச்சுவை + குணச்சித்திர வேடத்தில் பளிச்சிடுகின்றார். தடை செய்யப்பட்ட கிருமிகளை ஏழை மக்களிடம் பரிசோதித்து பணம் மட்டுமே குறிக்கோளாக வாழும் மருத்துவராக ஆசிஷ் வித்யார்த்தி. இவரை கொல்ல துடிக்கும் நெல்லைமணி (பசுபதி). இவர்களுக்குள்ளே நடக்கும் போராட்டம் தான் கதை.

நேர காலம் பாராமல் மக்களுக்கு உழைக்கும் மருத்துவர்கள் மீது இந்த படம் ஒரு வெறுப்பை ஏற்படுத்தலாம் என்பது நினைக்கும் போது வருத்தமாக இருக்கின்றது. எல்லா மருத்துவர்களும் அப்படி இல்லை என்பதை மக்கள் உணர்வார்கள்.

படத்தின் நாயகன் ஜீவா. தன் முந்தைய படத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த வித்தியாசமும் காட்டவில்லை. நிச்சயம் திறமை இருக்கின்றது. கறை படிந்த பற்கள் படம் முழுக்க சீராக இல்லை.
நகை கடைக்காரரிடம் சால்ஜாப்பு செய்வது பழைய யோசனை என்றாலும் ரசிக்க வைக்கின்றது.நர்ஸ் பாத்திரம் தேவையற்றது. திகில் படல் இல்லை என்றாலும் சில காட்சிகள் இருக்கையின் முனைக்கு கொண்டு செல்கின்றது.

பாராட்ட வேண்டியவை:

* விறு விறு காட்சிகள். சமீப படங்களில் திரைக்கதைக்கு அதிக மதிப்பெண் பெறும் படம் ஈ.

* நாயகனும் நாயகியும் சேர்ந்து அயல்நாடுகள், செட்டுகள், வயல்வெளிகள் சென்று நடனமாடும் பாடல் எதுவும் இல்லாதது மிகுந்த பாராட்டுக்குரியது

* நாயகனும் நாயகியும் வழக்கமாக ஒன்று சேர்வது போல காட்டாமல் இருந்தது..

* காக்கா கோட்டை செட் போட்ட கலை இயக்குனர்.

* ஓட்டல் டான்சர் என்ற போதும் நாயகிக்கு பெரும்பாலான காட்சிகளில் முழு ஆடை கொடுத்து இருப்பது நலம். ஓட்டல் நடனத்தை தவர்த்து இருக்கலாம். நயன் உடலை குறைத்துள்ளார்.

* கிராபிக் காட்சிகளில் வித்தியாசம். கிருமிகள் ரத்தத்தில் கலப்பது நல்ல கற்பனை.

* நெல்லை மணியாக வரும் பசுபதி கம்பீரம்.

கவனிக்க வேண்டியவை:

* காதலின் ஆழம் – கதையின் ஓட்டத்தில் இது ஒட்டவில்லை. நண்பர்களாக காட்சி படுத்தி இருந்தால் இன்னும் புதுமையாக இருந்திருக்கும்.

* பாடல்கள் மிகவும் சுமார் ரகம். பிண்ணனி இசை – பாஸ் மார்க். காக்கா கோட்டை காட்சிகளில் மட்டும் முழு மதிப்பெண். அப்பா பாணியில் இருந்து மாற முயற்சிக்க வேண்டும் ஸ்ரீகாந்த் தேவா.

* ஒரு கட்டத்தில் குழப்பமான கதாபாத்திரமாக காட்சி தருகின்றார் நயன்.பாத்திர செதுக்கலில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

* வசனங்கள் கோர்வையாக வந்துவிழவில்லை என்பது பெரிய குறை.

தீவிரவாதம் தான் முடிவு என்ற படத்தின் இறுதியில் காட்டியிருப்பது நெருடலாக இருக்கின்றது. மக்களுக்காக போராடுவதில் எந்த மாற்று கருத்தும் இல்லை,ஆனால் போராடும் விதம் தான் கேள்விக்குறியது. இப்படியே ஒவ்வொரு துறையிலும் நடக்கும் அநியாயங்களுக்கு துப்பாக்கி தூக்கினால் நாடு என்னவாகும்? அதற்கு பதில் மக்களை விழிப்புணர செய்தால்? கேள்வி கேட்க வைத்தால்….??

மக்கள் முதலில் எவை எவை தடை செய்யப்பட்ட மருந்து என்பதை அறிந்து இருக்க வேண்டும்.தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும்.

ஈ – இயற்கையின் உச்சத்திற்கு பறக்கவில்லை என்றாலும் ஈ பறக்கும் அளவிற்கு உயர பறக்கின்றது. ஒரு முறை தாராளமாக பார்க்கலாம்.

விழியன்
https://vizhiyan.wordpress.com

Advertisements
11 Comments leave one →
 1. Selva permalink
  October 30, 2006 5:54 am

  So … E – Pudikalam… sorry Parkalam

 2. Manickam permalink
  October 30, 2006 6:02 am

  Instead giveing the conventional review method… You can try somthing different…

 3. Loveish permalink
  October 30, 2006 6:10 am

  Nalla Vimarsagar Neeerrrrr………..!

  But u never tell me who is the Hero?

 4. October 30, 2006 6:52 am

  Vimarsanam nalla irukku

 5. கோபு permalink
  October 30, 2006 7:03 am

  e-book, e-quiz, e-commerce மாதிரி e-film நம் தமிழர்களுக்கு புதியதுதான்….
  குடும்ப தொலைக்காட்சி விமர்சனம் போல் இல்லாமல் தனித்துவமாக அமைந்தது தங்களுடய விமர்சனம்……

  கோபு

 6. October 30, 2006 10:12 am

  சொல்லிடிவ்வேன் சரவணன்..இரண்டு வரிகள் தவறிவிட்டது.

 7. sudhagar permalink
  October 30, 2006 4:46 pm

  Ha ha….
  bass bass…
  oh oh…
  kathai nalla irrukku

 8. tamil permalink
  November 25, 2006 6:04 pm

  நண்பர் விழியன் அவர்களுக்கு…ஈ. படத்தின் இயக்குனர் திரு.ஜனநாதன் நீங்கள் ஜனார்தனன் என்று குறிப்பிட்டுள்ளீர். இவருடைய முதல் படம் இயற்கை நேஷ்னல் அவார்டு வாங்கியுள்ளது. இவர் திருமணமாகதவர், சமூக ஆர்வலர், நல்ல மனிதர். இன்றைய காலகட்டத்தில் இவ்வாறான படங்கள் தேவையான ஒன்றாகும்.ஆகவே சமூகநோக்குள்ள இவர் மாதிரியானவர்களை ஊக்குவிப்போம்…

 9. November 29, 2006 5:16 am

  நன்றி தமிழ்.

 10. Guptha permalink
  December 6, 2006 8:47 am

  For Nellaimani you mentioned it as Nollaimani

 11. December 6, 2006 9:30 am

  நன்றி குப்பா..மாற்றிவிட்டேன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: