Skip to content

Children Fest at V.G.Rao Nagar

November 27, 2006

வி.ஜி.ராவ் நகரில் குழந்தைகள் விழா

– கு.செந்தமிழ் செல்வன்

காலையில் நடப்பது தான் எவ்வளவு உற்சாகமானது.குளிர்ந்த காற்றை உள்வாங்கிக்கொண்டே,வேகமாக நடப்பதில் தான் எவ்வளவு ஆனந்தம். உடலுக்கு மட்டுமா? உள்ளத்திற்கும் தானே தெம்பை ஊட்டுகின்றது. இரவின் உறக்கத்திற்கு பின், காலை விழிப்பில், அமைதியாய் நேற்றைய நிகழ்ச்சிகளை பரிசீலித்துக்கொண்டே இன்றைய நிகழ்வுகளை பட்டியலிடப்படுமல்லவா.அந்த அமைதியான பரிசீலனையில் நேற்றைய அவரச செயல்களுக்கு வருத்தமுறுவதுண்டு.பல புதிய செயல்வடிவம் பெறுவதுண்டு. இருவர் நடந்து சென்றால் சொல்லவும் வேண்டுமா?

இப்படித்தான் குழந்தைகள் விழாவும் உருபெற்றது.அன்று காலை நானும் உமாநாத்தும் காலையில் சேர்ந்து நடந்தோம். வீட்டைவிட்டு வெளியேறிய கொஞ்ச நடைதூரத்தில் எங்கள் கண்ணில் பட்டது அந்த பிளாஸ்டிக் கழிவுகள் தான்.தெரு ஓரங்களில் நிரம்பி தெருவின் மத்தியிலேயே வந்துவிட்டது. எங்களுக்கு எதாவது வழி சொல்லிவிட்டு தாண்டி செல்லுங்கள் என மல்லுக்கு நிறப்து போன்று இருந்தது. “எதாவது செய்ய வேண்டும்” – இருவரின் பேச்சுக்களும் இதையே முன்மொழிந்தன.பல மாதமாய் செய்பாடுகள் ஏதும் செய்யாமல் இருந்த அறிவியல் இயக்க வி.ஜி.ராவ் நகர் கிளையின் மூலம் ஏதேனும் செய்ய வேண்டும் என யோசித்தோம். உமாநாத் இளைஞர்களையும் குழந்தைகளையும் ஈடுபடுத்தாமல் எதையும் செய்ய இயலாது, அப்படியே செய்தாலும் அது நீடிக்காது என்பதில் உறுதியாக இருந்தான்.

வீட்டிற்கு வந்ததும் விவாதம் தொடர்ந்தது.குணா, திவ்யா, ராஜா விவாதத்தில் இணைந்து கொண்டனர். அன்று மாலையே அறிவியல் இயக்க ஆர்வலர்களில் கூட்டம் நடைபெற்றது.நாம் பிளாஸ்டிக் ஒழிக்க திட்டம் கேட்டோம். ஆனால் நகரின் பிற பிரச்சனைகள் முன்னுக்கு வந்தன. சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலும் விவாதத்தில் நுழைந்துவிட்டது.படித்தவர்கள் பகுதியிலும் காசு, பொருளுக்கு ஓட்டு போடும் மக்களைப்பற்றி வருத்தம் தெரிவித்தது. நகரை தூய்மையாக வைத்திருக்க நகராட்சியும் முனைப்பு காட்ட வேண்டும் என கூட்டம் வலியுறுத்தியது.

இறுதியில், புதிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் நகர மன்ற தலைவருக்கு பாராட்டும், குழந்தைகள் தின விழாவும் இணைந்து நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. நம் மீது மதிப்பு கொண்டவர்களும் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். குழந்தைகளின் திறமைகளை கண்டெடுக்கவும் அதனஒ வளர்க்கவும் அறிவியல் இயக்கம் துணை புரிய வேண்டுமென கூறினர். குழந்தைகளுக்கான கட்டுரை போட்டி மட்டுமே எங்கள் எண்ணமாக இருந்தாலும், ஏன் கட்டுரை போட்டியோடு நிறுத்த வேண்டும், ஒரு நாள் நிகழ்ச்சியாக நடத்தலாம் என அனைவரும் தெரிவித்தனர். கட்டுரை போட்டியில் தலைப்பு “நான் காணும் வி.ஜி.ராவ் நகர்”. கட்டுரை வடித்தில் இல்லாமல் செயல்திட்ட வடிவில் இருப்பது நலம் என கருதினோம். ஏட்டில் எழுதுவது ஏட்டோடு போய்விடக்கூடாது.வி.ஜி.ராவ் நகர் எப்படி இருக்க வேண்டும் என பெரியவர்கள் கனவினை விட சிறார்களின் எண்ணம் எப்படி இருக்கின்றது,சற்றே திறந்த கண்களோடு வீதியில் நடப்பார்கள் என்ற எண்ணத்தில் இந்த தலைப்பு தெரிவு செய்யப்பட்டது.

நாம் எதிர்பார்த்ததை எல்லாம் தாண்டி மாணவர்கள் அவர்களின் கனவுகளை எழுதியிருந்தனர்.அவர்களின் பல கனவுகள் மெய்சிலிர்க்க வைத்தது. நகரின் நடுவே விளையாட பூங்கா, குழந்தைகள் புத்தகங்கள் நிறைந்த நூலகம், நீச்சல் குளம், குப்பைகளே இல்லாத நகரம்,தெருக்கள் தோரும் நிழல்கள் தரும் மரம், மாதம் தோறும் கருத்தரங்கங்கள், பயிற்சி கூடங்கள், சமுதாயக் கூடம், சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்குகள், கொசுக்களே இல்லாத நகரம், மாணவர்கள் அடிக்கடி கூடும் விழாக்கள்….என என்னென்னவோ…

இப்படி அவர்களின் கனவுகள் விரிந்து சென்றது.கட்டுரையில் முதல் பரிசு பெற்ற மாணவி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிப்பவள் என்பது குறிப்பிடத்தக்கது.வெறும் மதிப்பெண்கள் பெறுவதற்கான செயல்பாடுகள் குழந்தைகளின் சிந்தனைகளை தூண்டாது.இத்தகைய போட்டிகள் அவர்களின் சிந்தனையை தூண்டவும்,ஒரு நகரை மாற்ற திட்டம் தீட்ட, நாளைய செழுமையான சமூகத்தை உருவாக்க வழிவகுத்தும் என்பதி எள்ளவும் ஐயமில்லை.

பாட்டுப்போட்டி (கருத்துள்ள பாடல்கள் மட்டும்), நடனப்போட்டி (கிராமிய நடனங்களுக்கு அதிக முக்கியத்துவம்), வினாடிவினா, புதையல் வேட்டை என பல நிகழ்வுகள் நடைபெற்றது.வினாடி வினா, புதையல் வேட்டையில் சுவாரஸ்யம்,பெற்றோர்களும் ரசித்தனர்.

வினாடி வினாவில் வேலூர் மாவட்டத்தையும் வி.ஜி.ராவ் நகரை குறித்ததாகவே இருந்தது.ஊர் உலகத்தினை பற்றி தெரியும் முன்னர் நாம் வாழும் பகுதி, அதன் வரலாறு, பெருமை, சிறப்பு ஆகியனவற்றை அறியவேண்டுமல்லவா. பெரியவர்களும் ஆர்வமாக கலந்து கொண்டனர். மாவட்டத்தில் உள்ள ஆராய்ச்சி மையங்கள், விமான தளங்கள், எந்த கல்வி மாவட்டம், எந்த காவல் நிலையம், தபால் நிலையம், பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் தலைவர் பெயர், வேலூர் மாவட்டத்தின் முந்தைய பெயர், பேருந்து எந்த வட்டத்தில் வருகின்றது போன்று சுவாரஸ்யமாக இருந்தது. நிறைய மாணவர்கள் பங்குபெற்றதால்,முதலில் அனைவருக்கும் 35 கேள்விகள் கொடுத்து, அதற்கு விடையளித்த ஐந்து சிறந்த அணிகளை தேர்தெடுத்து இறுதி வினாடி வினா நடைபெற்றது.வினாடி வினா போட்டியிலும் புதுமையாக ஒரு அணி மற்ற அணிகளை கேள்வி கேட்கும் சுற்றுக்கள் இடம் பெற்றது. ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கெடுத்தனர். வினாடி வினாவை உமாநாத் ஒருங்கிணைத்தார்.

திவ்யா ஒருங்கிணைத்த புதையல் வேட்டை மாணவர்களை கவர்ந்த சிறந்த நிகழ்ச்சியாக இருந்தது. ஐந்து கட்டங்களை தாண்டி புதையல் இருக்கும் இடத்தை குறிப்புகள் வைத்து அடைய வேண்டும்.மாணவர்கள் தங்கள் மிதி வண்டிகளில் நகர் முழுவதும் புதையல் வேட்டையில் இறங்கினர்.பல புதிர்களையும் செயல்பாடுகளையும் செய்தால் அடுத்த குறிப்பு கிடைக்கும் இடம் தெரியும்.அந்த இடத்தில் அடுத்த இடத்திற்கான குறிப்பு.25 இலைகள், 10 பூக்கள் தேடல் என கலைகட்டியது.நகரின் முக்கிய இடங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என ஊராட்சி நூலகம்,பஞ்சாயத்து பள்ளி, தனியார் பள்ளிகள், கூடம், இரண்டு வீட்டில் விலாசங்கள், மாவு மில் என திசைக்கு ஒரு இடத்தில் குறிப்பு இருந்தது. மிக நேர்த்தியாக வடிவமைத்திருந்தாள் திவ்யா. மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும், அடுத்த போட்டி எப்பக்கா எப்பக்கா என்று திவ்யாவை நச்சரித்தனர் சிறார்கள்.

மாலை நடைபெற்ற ஊர்கூடும் திருவிழாவில் பொதுமக்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர். வார்டு உறுப்பினர்களும் சேர்மனும் கலந்து கொண்டு குழந்தைகளின் கனவுகளையும் எதிர்ப்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதாக தெரிவித்தனர். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டால் பதவிக்கு வந்தாலும் தலைமையை ஏற்குமளவிற்கு அவர்களை உருவாக்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வுகளில் கண்டோம். தனக்கு கிடைத்த தலைமையை பயன்படுத்தி பெண்களை முன்னேற்ற அவர்களால் செயல்படுத்த முடியும். இதற்கு அவர்கள் உறுதி ஏற்க வேண்டும்.

துணை காவல் கண்கானிப்பாளர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசிய கீதமும் சம்பிரதாயமாக கேசட் போடப்பட்டு எழுந்து நிற்பது மட்டுமே கடமையாக கருதுகின்றனர். உணர்ச்சிபூர்வமாக இவைகளை அனைவரும் பாடுவதிம் மூலம் மட்டுமே இப்பாடல்களின் நோக்கங்கள் நிறைவேற்ற முடியும்.

குழந்தைகளின் கனவை நிறைவேற்ற குழந்தைகள் நூலகம், நகராட்சியோடு இணைந்து குப்பைகளை அகற்றும் திட்டம், மாதந்தோறும் குழந்தைகளுக்கான நிகழ்வுகள் அறிவியல் இயக்கத்தில் திட்டமிடப்படுகிறது.

பொங்கல் திருநாளையோட்டி நமது பாரம்பரிய பொங்கல் விழாவினை வி.ஜி.ராவ் நகரில் நடத்த  திட்டமிடப்படுகிறது.
அதோடு குழந்தைகளின் படைப்பை ஊக்கப்படுத்தி, அதை சிற்றிதழாக கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது. பணிகளை நம் வீடு, தெரு, ஊரில் இருந்து துவங்குவோம்.

(கு.செந்தமிழ் செல்வன், மேலாளர், யூனின் பேங்க் ஆப் இந்தியா, ராணிப்பேட்டை.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர்..எனது நெருஙகிய நண்பர் மற்றும் நெருங்கிய உறவினர் – அப்பா 🙂


விழியன்

Advertisements
13 Comments leave one →
 1. Friend permalink
  November 28, 2006 10:17 am

  அப்பாவுக்கு புள்ள தப்பாம இருக்காங்கப்பா.. அருமையான குடும்பம் விழி.

 2. Prakash A permalink
  November 29, 2006 5:21 am

  Umanath, Neenga kavithai ezhuthurathu oru aacharyamaana visayame illa.

 3. மாணிக்கம் permalink
  November 29, 2006 5:25 am

  வாழ்த்துக்கள்-னு மட்டும் சொல்ல மனசு வரல… நெறய எழுதனும்னு நெனக்கிறேன்… ஆனால்…!!!

  ஒரு விழியனின் (வருங்)நிகழ்கால பாரத கணவு… ஊருக்கு ஒரு விழி வேண்டுமே…

 4. Sathish permalink
  November 29, 2006 5:35 am

  Dear Umanath
  Salute the great efforts of your father.
  Will be happy to meet you both soon. Will let you know my next visit plans to Vellore.
  Regards
  Sathish R

 5. Loveish permalink
  November 29, 2006 6:24 am

  Vizhiyan Kalakkureenga………Its a good thought and a good start, you recollect me my college days… i was General Secretary of Exnora – cleaning the roads, awareness of disease and lot of programs done by our team… But now.. No one to lead as well as no one in India!!!!!!!

  I appreciate your dad and family. Wish you to continue all over.

 6. November 29, 2006 6:59 am

  on Prakash,manikam,saravanan

  மிக்க நன்று.நீங்க சும்மா இருந்தா பத்தாதுங்க…:-)

 7. சேர்ம ராஜா permalink
  November 29, 2006 7:24 am

  வாழ்த்துக்கள் விழியன் & உங்கள் நட்பான அப்பாவிற்கும்…
  நல்ல காரியம் இணைந்து செய்தால் நலம் தானே!

 8. November 29, 2006 7:54 pm

  பாராட்டுக்கள் … இந்த விழிப்புணர்வு மிகவும் தேவையான ஒன்று … குப்பைகளை அரசாங்கம் சுத்தம் செய்யவில்லை என புகார் கூறுவதை விட … நம்மால் முடிந்த அளவு பாலீத்தீன் உபயோகப்படுத்தாமல் இருக்களாம் .. குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடலாம் …. ஓரு சாப்பாடு பார்சல் வாங்காமல் கடைக்கு சென்று சாபிட்டாலே … சுமார் 7 பாலீத்தீன் கவர்களை உபயோகிகாமல் தடுக்கலாம் … முயற்சி செய்வோம் ….

 9. Kamalesh permalink
  November 30, 2006 2:00 am

  Nice work da. I wish I could join hands with you some day. I am really proud of you and your family. Keep up the good work.

 10. November 30, 2006 3:39 am

  கம்மி,

  சீக்கிரம் இந்தியா வா..நிறைய செய்யலாம்…

 11. November 30, 2006 3:40 am

  தனசேகர், நீங்கள் செல்வது நிஜம்..

 12. November 30, 2006 9:27 am

  தொடரட்டும் உனது சேவை.

  தோள்கொடுக்க தயாராக இருக்கிறோம்.

  வாழ்த்துக்கள்.

 13. parthiban permalink
  December 9, 2006 8:49 am

  Hai anna ,

  Nallairukkeengala, unga mails ellam nallairukku

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: