Skip to content

Varuga! Varuga!! Varuga!!!

December 1, 2006

வணக்கம்,

weinvite.jpg

“அண்ணா இந்த வாரம் என்ன செய்யலாம்” என்று மணிகண்டன்(அறை வாசி) நேற்று ஆரம்பித்த நச்சரிப்பு, ஒரு இனிய நிகழ்விற்கு வழிவகுத்துவிட்டது. கார்த்திகை தீப நாளை எங்கள் பெங்களூர் வீட்டினில் இனிமையாக கொண்டாட முடிவெடுத்துள்ளோம்.

என்னங்கடா திருமணமாகாத இளைஞர்கள் என்னடா செய்யப்போறீங்க? என்ற கேள்விக்கு விடையை அன்று காணுங்கள்..என்று?

தேதி : கார்த்திகை 17, விய வருடம் (புரியலையா? டிசம்பர்,3, 2006), ஞாயிற்றுக்கிழமை

நேரம் : மாலை 4.29 மணி முதல் 7.29 மணி வரை.

வீடு முழுக்க தீபம், சுற்றிலும் நண்பர்கள், இனிப்பு வகைகள், கார வகைகள், அடுத்த மாநில சகோதரர்களுக்கு நம் கார்த்திகை தீபம் பற்றி கலந்துரையாடல், ஆனந்த சிரிப்பு, விளையாட்டு, கிண்டல்,நையாண்டி, கேலி, களிப்பு….இப்படி தான் கொண்டாட போகின்றோம் இந்த தீபம் திருநாளை.

நம்மில், கார்த்திகை தீபம் எதற்கு கொண்டாடுகின்றோம், என்ன செய்வார்கள் என பலருக்கு தெரியாது. வீட்டுக்கு அலைபேசியில் அழைத்து “அம்மா, தீபம் அன்னைக்கு என்ன செய்வாங்க? என்ன பலகாரம் ? ஏன்?…” என ஒவ்வொருவரும் கேள்விகள் கேட்க துவங்கிவிட்டோம்.

தீபம் ஒருபுறம் இருக்க, இந்த நாளில் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து பேசுவோம், அவர்களை மகிழ்விப்போம் என்பதே முதன்மையான நோக்கம்.

நான், மணி, ஆனந்த் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் இதைப்பற்றி முதலில் பேசினோம்.உற்சாகம் பிறந்தது. இரவு உணவின் போது கெளரவிடம் கூறினோம், “அண்ணா, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, நம்ம நண்பர்கள் தானே, தூள் கிளப்பலாம்..”…ஜூஸ் குடிக்கும் போது எதேர்சையாக நண்பர் ஒருவரை சந்தித்து, முதல் முதலில் அழைத்தோம், அவர் “அகல் விளக்குகள் அனைத்தும் நான் தருகிறேன்” என்றார்..உற்சாகம் பீறிட்டது.இரவு கே.பி, ரவி எல்லோரும் கலந்து யார் யாரை அழைப்பது, யார் யார் என்ன செய்ய போகிறோம், என்ன உணவு, எங்க வாங்கலாம்..என விவாதம் இரவு 12.30 வரை தொடர்ந்தது..”அண்ணா, எங்க அண்ணன் கல்யாணம் அடுத்த வாரம், அதுக்கு கூட நான் எதுமே செய்யல…” எனற கெளரவின் வார்த்தைகள், எல்லாரும் ஏதோ ஒன்றை தொலைத்துவிட்டு எதன் பின்னரோ ஓடுகின்றோமே என்ற எண்ணத்தை உருவாக்கியது…இந்த விழா துவக்கத்திலேயே வெற்றி கண்டுவிட்டது என்பது என் எண்ணம்.

எங்கள் வீட்டிற்கு பெயர் சூட்டும் சின்ன நிகழ்வும் இதில் அடக்கம். பெயர் பட்டில் நீண்டு கொண்டே போகின்றது, நீங்களும் பரிந்துரைக்கலாம். சிறந்த பெயருக்கு அழகான பரிசும் காத்திருக்கின்றதுங்கோ….

வருக!! வருக!! வருக!!!

கார்த்திகை தீப திருநாளில்

அகல் விளக்குகளில் தீபமேற்றி

அதன் வெதுவெதுப்பில் சூடு காய்ந்து

நட்புறவுகளை சந்தித்து

நாவிற்கு விருந்தளித்து

விளையாடி மகிழ்ந்து

பேசி சிரித்து ஆனந்து குதுலகிப்போமே….

வாருங்கள் புது புதுப் உறவுகளை நேசிப்போம்

புதிய அனுபவங்களில் குளிப்போம்

புதிய உணர்வுகளை சுவாசிப்போம்

மனிதத்தினை காப்போம்…

இங்கணம்

ஆனந்த் + மணி + கெளரவ் + ரவி + கே.பி + விழியன்

விழியன்
https://vizhiyan.wordpress.com

Advertisements
One Comment leave one →
  1. December 2, 2006 6:10 pm

    என்ன ஒற்றுமை !!!

    நாங்களும் கார்த்திகை தீபம் கொண்டாட முடிவு செய்து உள்ளோம் … ஆனால் பெரிய அளவில் அல்ல … வீட்டில் விளக்கு வைத்து அழகு படுத்த எண்ணியுள்ளோம் ….

    உங்கள் வீட்டிற்கு பெயர் சூட்டும் விழாவிற்கும் வாழ்த்துக்கள் …

    தனசேகர் ..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: