Skip to content

Flag Day

December 7, 2006

கொடி நாள்

டிசம்பர் 7. இன்று இந்திய கொடி நாள். 1949ஆம் ஆண்டு முதல் இந்த கொடி நாள் கடைபிடிக்கப்படிகின்றது.இன்று இந்திய படை வீரர்களின் நலனுக்காக நிதிதிரட்டும் நாளாக கடைபிடிக்கப்படுகின்றது.பொது மக்களிடம் இருந்து பணம் வசூலித்து படைவீரர்களுக்காக கொடுக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் இப்படி கடைபிடிக்கப்பட்ட நாள், தற்போது இன்னுயிர் துறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாகவும் கடைபிடிக்கப்படுகின்றது. கப்பல் படை,விமானப்படை, தரைப்படை ஆகிய மூன்று படைவீரர்களுக்கும் சேர்த்து தான் கொடி நாள்.

கொடி நாளில் அரசாங்கம் சின்ன அளவில் கொடிகளை மக்களிடம் விநியோகித்து அதற்கு பதிலாக பொது மக்களால் முடிந்த பொருளுதவியினை படைவீரர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டப்படும் என 1949ஆம் ஆண்டு ஜவர்ஹர்லால் நேரு அறிவித்தார். ஆனால் இந்த வழக்கம் தற்போது நடைமுறையில் இருக்கின்றதா என தெரியவில்லை. அரசாங்க அலுவலர்களுக்கு இது தெரியுமா என்றும் தெரியவில்லை. பள்ளி பருவத்தில் கொடி நாளன்று அனைவரும் கொடியினை வாங்கியதாக லேசான நினைவு உள்ளது.ஆனால் எந்த நிறுவனம் இதை வசூலித்தது என தெரியவில்லை. எது எப்படி போனாலும் நம்மை காக்க பனியிலும்,வெயிலிலும் போராடும் வீரர்களின் குடும்பங்களுக்கு உதவுவது நம் கடமையாகும்.

சரி இன்னைக்கு நாம என்ன செய்ய முடியும் என்ற உங்கள் கேள்வி நியாயமானது. எங்கே பணத்தை கொடுப்பது என்ற விவரம் கிடைக்கவில்லை. கிடைத்தால் உடனடியாக யாரேனும் தாருங்கள்.உடனடியாக ஒன்றை செய்யலாம். எல்லோர் அலுவலகத்திலும் நிச்சயம் Security Guards இருப்பார்கள். அவர்களில் பாதி பேர் Ex-Servicemanஆக இருப்பார்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியினை இன்று செய்யுங்கள்.அவர்களுக்கு குழந்தை இருக்கின்றதா என கேட்டு அவர்களுக்கு ஏதேனும் வாங்கி தாருங்கள். அன்பாக நாலு வார்த்தைகள் பேசுங்கள். உங்களால் தான் நாங்கள் நேற்று நிம்மதியாக உறங்கினோம், உங்களை போன்றவர்களால் தான் இன்று நிம்மதியாக உறங்குகின்றோம்.நீங்கள் கண்விழித்து எங்களை உறங்க செய்கின்றீர்கள். உங்கள் பணி மகத்தானது என மனமாற நன்றி தெரிவியுங்கள்.

தங்கள் உயிரை துச்சமாக நினைத்து உயிர் துறந்த அனைத்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

ஜெய் ஹிந்த் !!!!

நன்றி

http://www.irfc-nausena.nic.in/modules.php?name=Content&pa=showpage&pid=99

விழியன்
https://vizhiyan.wordpress.com

Advertisements
8 Comments leave one →
 1. December 7, 2006 4:16 am

  நிச்சயமாக நல்ல தகவல் தான் தலைவா…

  எல்லையில்லாத உறுதியோடு
  எல்லையில் போராடும்
  எம் இனிய சகோதரர்கள் அனைவருக்கும்
  ஏற்றத்தோடு வைப்போம்
  நன்றி கலந்த வணக்கங்களை!!!

  நல்லதொரு தகவல் தரும் பதிவுக்கும் நன்றி விழியன்..

  வாழ்த்துக்கள்..

 2. December 7, 2006 4:17 am

  வந்தே மாதரம்!!

  ஜெய்ஹிந்த்!!!!

 3. December 7, 2006 4:20 am

  Anna ithu kudave nama suthanthira thinathukaaga create panna blog address um kuduthu athula contribute panna sollen

 4. Anand permalink
  December 7, 2006 4:23 am

  நம் பாரத மாதாவின் கற்பை காக்க தங்கள் இன்னுயிரை ஈந்த இம்மண்ணின் மைந்தர்களை இம்மண்ணைத் தொட்டு வணங்குவோம்…. ஜெய் ஹிந்த்…

 5. Parameswary permalink
  December 7, 2006 5:07 am

  We do have same kind of Flag day over here.. We call it as Hari Bendera. Hari – Day, Bendera – Flag.

 6. Mani permalink
  December 7, 2006 6:41 am

  இந்த நாடும்,நாட்டு மக்களும் நலமோடு வாழட்டும்….
  வந்தே மாதரம்…!!!
  ஜெய்ஹிந்த்…

 7. rangameena permalink
  December 7, 2006 1:05 pm

  நாடு நலம் பெற நாம் சுகம் பெற பாடு படும்
  அவர்களுக்காக என்றென்றும் தலை வணங்குவோம்
  எந்நாளும் அவர்கள் நலத்திற்கு பிரார்த்திப்போம்

  இவ்வேளை அனைவரும் அவர்களை நினைவுகூற வழிகாட்டிய
  உமாவிற்கு வாழ்த்துகள்!

 8. December 8, 2006 5:35 am

  பதிவுக்கும் நன்றி விழியன் …. கொடி நாள் வசூல் தற்பொழுது அரசாங்க அலுவலர்களால் நடத்தப்படுகிறது… அவர்களுக்கு ஒரு target வைத்து விடுகிறார்கள்… அதனால்தான் நீங்கள் தாசில்தார் , RTO (License) இவர்களிடம் நாம் எதாவ்து காரியத்திற்காக சென்றால் வசூல் செய்வார்கள் (நாம் கொடுக்கும் லஞ்சத்தில் ஒரு பகுதி)… ஒவ்வொரு வருடமும் ஒரு கிராம தலைவருக்கு ஒரு தொகை வசூல் செய்வார்கள் … அது எந்த அளவுக்கு வீரர்களுக்கு போய் சேர்கிறது எனத் தெரியவில்லை ..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: