Skip to content

Kavithai – 26

December 13, 2006

 எவற்றையும் சுவாசிக்காமல்

உற்சாகத்தை வீதியெங்கும் தூவியபடி
நடந்து செல்லும் முதிர்ந்த இளைஞர்கள்

கீச்சு கீச்சு குரலில் இசையை
பரப்பி பறக்கும் பறவைகள்

அடுத்த வீட்டு அம்மாவின்

நடனமிடும் வாசற் கோலங்கள்..

புன்சிரிப்போடு மலரும் மலர்கள்

வாழ்வின் மற்றொரு பரிமாணத்திற்கு இழுக்கும்
புத்தகங்களின் புரட்டாத பக்கங்கள்

உலக அழகை காண வேகமாய்
உள்ளிருந்து எழும் சூரியன்

இப்படி எவற்றையும் சுவாசிக்காமல்
இழுத்து போர்த்தி உறங்குகின்றேன்
அதிகாலையில் நான்.


விழியன்

Advertisements
10 Comments leave one →
 1. December 13, 2006 4:55 am

  நல்லா இருக்கு விழி. அருமையா சொல்லியிருக்கீங்க‌ !(ஆனா என்ன சொன்னாலும் நாங்க கேட்கமாட்டோம். மொரட்டுதனமா தூங்குவோம். ஹி ஹி ஹி)

 2. Prakash A permalink
  December 13, 2006 5:10 am

  Hi Umanatah,
  I am very happy to see you with your Re-Entry in the Poetric world.
  All the things in this poem are true in the villages only. Here (Bangalore) it is possible to enjoy all these things?… If we wake up early then also it is waste na, thats why we are sleeping. If we go to our native, then we will enjoy all these things each and every day. But what can we do.. Now we are the guest in our Native.

 3. December 13, 2006 5:45 am

  அன்பு பிரகாஷ்,

  நானும் பெங்களூரில் தான் இருக்கேன். இன்று காலை கண்ட காட்சியினையே கவிதையாக வடிக்க முயற்சித்தேன். மனமிருந்தால் மார்க்கம் உண்டு 🙂

 4. December 13, 2006 7:57 am

  நல்ல கவிதை தலை…

  ஆனாலும் அதிகாலை உறக்கம் என்பது நேற்றைய இரவின் தூக்கத்தையும் தூக்கத்திற்குச் செல்லும் நேரத்தையும் பொறுத்ததே… எனவே.. தூங்கும் நபர்கள் தூங்கட்டும் ஆனால் எல்லா நாட்களிலும் அல்ல..

  உமாவின் கவிதையைப் படித்தாவது சீக்கிரம் எந்திரிச்சுப் பழகுங்கப்பா…

  யாரும் உடனடியா எங்கிட்ட வந்து “யோவ் நாட்டாமை.. தீர்ப்பை மாத்து”.. ன்னு பழைய டயலாக்கை சொல்லாதீங்க.. எனக்குக் கெட்ட கோபம் வரும்.. என்ன இது சின்னப்புள்ளத்தனமா ராஸ்கல்………

 5. December 13, 2006 7:41 pm

  நூற்றுக்கு நூறு உண்மை … விழியன் …

  காலைப் பொழுதை தூங்ங்கியே வீணடிக்கிறோம்…

  சரி மாலையிலாவது சரியான நேரத்திற்கு வீட்டிற்கு வந்து இயற்கையை ரசிக்கலாம் … அதையும் அலுவலகத்திலேயே வீணடிக்கிறோம்… என்னைப் பொருத்தவரை .. நாம் சுவாசிப்பது ஆக்சிஜன் இல்லை .. வெரும் கார்பண்டை ஆக்சைடு தான் 😉
  நானும் இதே போல்தான் … வீட்டிற்கு 2 நிமிட தூரத்தில் கடற்கரை இருந்தும் வாரம் ஒரு முறை கோட போவதில்லை ;(

 6. December 14, 2006 6:56 am

  அன்பு விழியா

  நீண்ட நாட்களுக்கு பிறகு உன்னுடைய வித்தியாசமான கவிதை முயற்சி. நீ அடுத்த கட்டத்திற்கு போய்விட்டாய் என்பதை உனது கவிதைவரிகள் சொல்லாமல் சொல்கின்றன. எழுத்துப்பிழைகள் மிகவும் குறைந்துவிட்டது மகிழ்ச்சியளிக்க கூடிய ஒரு விசயம். கவிதையிலும் வித்தியாசம் தெரிகிறது. அன்றாட வாழ்க்கையில் நடக்கும் பல சம்பவங்களை மாறுப்பட்ட கோணத்திலிருந்து பார்க்கையில் உன்னை போன்ற வளரும் படைப்பாளிக்கு கண்டிப்பாக வித்தியாசமான ஒரு படைப்பை உருவாக்க தோன்றும். அதை நீ நிச்சயம் மிக நல்லமுறையில் செய்வாய் என்ற நம்பிக்கை இருக்கிறது.

  வாழ்த்துக்கள்.

 7. December 14, 2006 12:05 pm

  gud 1 sir :))))))

 8. January 7, 2007 5:27 am

  அதிகாலை உறக்கம் சுகமானது…

  அதிகாலை உலகம் அழகானது…

  சுகத்தை சுகிப்பதா, அழகை ரசிப்பதா? :))

 9. December 20, 2007 4:29 am

  Hai Vizhiyan Sar………………..

 10. February 24, 2009 10:58 am

  Exceland!It is very fine

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: