Skip to content

Discussions on Parenting – 1

December 18, 2006

குழந்தைகளை வளர்ப்பு விவாதம் – 1

வேறு எப்போது இல்லாத அளவிற்கு குழந்தை வளர்ப்பில் கவனம் தற்போது தேவைப்படுகின்றது. காரணம் பெருகிவிட்ட ஊடகங்கள்.ஊடகங்கள் பெருகியது தவறு என்றில்லை, இதன் பெருக்கத்தால்,ஆதிக்கத்தால் பெற்றோருக்கு பெருத்த பொறுப்பு கூடிவிட்டது. குழந்தை வளர்ப்பினை பற்றி விவாதங்கள் துவங்கினால் மிக நல்லது. ஆனால் எல்லா தீர்வுகளும் எல்லா குழந்தைகளுக்கு ஏற்பாக இருக்காது, அவரவர் சூழலுக்கு ஏற்ப மாற்றித்தான் தீர்வுகளை தரவேண்டும். யாருக்கும் காத்திராமல் அதனை பற்றி விவாதங்களை இன்றே துவங்குவோம்.

சினிமா பாடல்களை குழந்தைகள் பாடலமா?

சமீபத்தில் இரண்டு வயது குழந்தையுடன் விளையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது.நாங்கள் இருவரும் ஏதேதோ விளையாடும் போது, இடையே வந்த பாட்டி “மாமாக்கு பாட்டு பாடி காட்டு” என்றார். குழந்தை உடனே கையாட்டியபடி “அம்மாடி ஆத்தாடி..உன்னை எனக்கு…” என்ற பாடலை பாடியது.பாட்டி பூரிப்படைந்தார்கள். தாத்தாவுக்கு பெருமை கொள்ளவில்லை. குழந்தைக்கு வார்த்தைகள் கூட முழுதாக வரவில்லை.நான் “அம்மா இங்கே வா வா..” பாடலை சொல்லிக்கொடுத்தேன். குழந்தை அம்மாடி ஆத்தாடி பாட்டை தான் திருப்பி பாடியது.சில மாதம் முன்னர் இன்னொரு குழந்தை “எங்கம்மா உங்கம்மா என்னை சேர்த்து வைப்பாளா…” என்ற பாடலை பாடியது நினைவுக்கு வந்தது.

குழந்தைகளை பாட வைப்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் தரம் குறைந்து வரும் சினிமா பாடல்களை பாட வைத்து ரசிப்பது சரியா என தெரியவில்லை. இதனால் குழந்தையின் மனோநிலை ஏதேனும் பாதிக்கப்படுமா என தெரியவில்லை. பாடல்கள் மூலம் நிச்சயம் குழந்தைகளுக்கு நிறைய வார்த்தைகள் பரிச்சியமாகின்றது.அவர்களின் சொல் வங்கி(Word Bank) வளர்கின்றது. ஆனால் என்ன மாதிரியான சொற்கள் நுழைகின்றது என்பதினை கவனமாக கண்கானிக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகின்றது.

இதனை பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிய போது, “குழந்தைகளுக்கு அவர்கள் பாடும் பாடலின் அர்த்தம் தெரியாதவரையில் எங்க தப்பும் இல்லை. பாடும் போது உற்சாகம் அடைகின்றார்கள். உடலில் அசைவுகள் ஏற்படுகின்றது. சிரிக்கின்றார்கள். மற்றவர்கள் தன்னை கவனிக்கின்றார்கள் என்ற பெருமை மேலோங்குகின்றது” என்றார். அவர் சொன்னதில் பிற்பாதி விடயங்களில் முழுதும் ஒத்துபோகிறேன்.அதே சமயம் பாடல்களில் தேர்ச்சி இருப்பது நலமாக கருதுகின்றேன்.

உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள் நண்பர்களே.

பாடலாம்/பாட வேண்டாம் என உங்களின் கருத்தினை சொல்லும் போது ஏன் என்றும் சொல்லுவது நலம்.

விழியன்

Advertisements
26 Comments leave one →
 1. makkaaa permalink
  December 18, 2006 9:22 am

  koothum kummalamumaaga….kulanthaigal kulanthaigalagavey irukattumey…!

  athu avarkalin ulagam… naam thevai indri thadai poda koodathu…

  kaala ootathil ellam thaanaai vilangum avargalukku…!!!

 2. December 18, 2006 9:27 am

  நிச்சயமாக, குழந்தைகள் குழந்தைகளா இருக்க வேண்டும். அதற்காக தான் இந்த விவாதமே.

  சினிமா பாடல்களால் ஏதாவது தீங்கு இருக்கின்றதா இல்லையா?

  ஏதும் இல்லை என்றால் தாராளமாக பாடலாம் மாக்கா..

 3. shanmuga priya R permalink
  December 18, 2006 9:34 am

  For sure, children ll not know d meaning of the words. Its jus dey wanted to b noticed. the ans given by ur frn s more or less correct. but if u tell a child not to sing tht particular song, the child ll tend to do/sing d same song. so i think its better not to force a child to sing this song, n not to sing this song….. since they are very innocent, u need not worry abt this

 4. Prakash A permalink
  December 18, 2006 9:35 am

  Hi Umanath,
  The age 1-6 –>consider as child
  7-16 –> consider as Slaves or Enemy
  above 17 –> they are friends to their Parents.
  The childern are singing the songs at the age of 1-6 only. On that time only their parents and relatives will be happy regarding this. But if they sing the same song between 7-16 they will wont like that.
  So we can encourage till 6.. And after that we can restrict not to do such kind of things.

 5. December 18, 2006 9:56 am

  சண்முக ப்ரியா அவர்களுக்கு,

  அர்த்தம் தெரியாது என்பதற்காக தவறான சொற்களை சொல்ல நாம் அனுமதிக்கலாமா?

  பாடாதே என்பதை சொல்வதனை விட மற்ற பாடல்களை பாட ஊக்கப்படுத்துவது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

 6. December 18, 2006 9:56 am

  பிரகாஷ்,
  7-16 –> consider as Slaves or Enemy

  இந்த வரியை சற்றே விளக்குங்களேன்..

 7. Loveish permalink
  December 18, 2006 10:03 am

  Hi Uma,

  My vote is for the kids, who sings well!!

  May be astonishing for you, or u may think that am spoiling their future.

  But my strong opinion is, when these kids, who haven’t crossed the age of 5, are doing great when they are requested to sing a song for others.

  And it obviously increase the memory (RAM), and listening power.

  Yes i do agree that the words used in cine songs, may be a bit criss cross now a days, but we cannot expect our kids to sing a song from Sankarabaranam – jus kidding!

  I feel that they can start with any kind of songs, which may lead them to be interested in music, dance or even an instrumental attraction, where the parents got their valid attention to keep the child upto their track, by diverting there interests towards classics or either, by sending them for a Vocal/Instrmental/dance training, which now a days in a nook and corner of any city.

  Hope i have given a lecture, If anything wrong in my words – Pls Apologize.

  Loveish.

 8. December 18, 2006 10:07 am

  சினிமா பாடல்களால் எந்த குழந்தையும் கெட்டுப்போவதில்லை. அர்த்தம் புரியாமல் பாடி மகிழும் குழந்தைகளை விட்டுவிடுங்கள் , புரிந்து தறுதலையாக்கும் பெற்றோர்க்கு கூறுங்கள் உங்கள் அறிவுரைகளையும் கட்டுப்பாடுகளையும்…

 9. Loveish permalink
  December 18, 2006 10:10 am

  Hi Uma,

  My opinion is to strongly support the kids, who all singing – any songs.

  It will develop there memory and listening skills as well. As u say the current cine songs may go criss cross, but its good for the kids to catch those wording and know the rythm of it.

  So i encourage those character in our kids, whereas its the parents responsibility to divert those talents to be fruitful, by sending them to a training for Vocal/instrument/dance etc., depending on their capability and capacity.

  Now a days we can find such institutions in every nook and corner in any city.

  If you feel that its contradicting, and anything wrong in my words – My apologise.

  Loveish.

 10. December 18, 2006 10:11 am

  பிரகாஷ் சொல்வது போல்
  1 முதல் 6 வயது வரை இளவரசு(சி)யை போலவும், 7 முதல் 16 வரை அடித்தும், 17 முதல் நண்பனை போலவும் நடத்துவது சிறந்தது என்று குழ‌ந்தை ம‌ருத்துவ‌ர்க‌ளே சொல்கிறார்க‌ள்

  இந்த பாடலை பாடாதே என்று சொல்வதை விடவும், யாருக்காவது பாடிக்காட்ட சொல்லும் போது, நாமே குழந்தையிடம் ‘அந்த சுவாமி பாட்டை பாடு, இந்த பாரதியார் பாடலை பாடு’ என்று சொல்லலாமே. இவ்வ‌கையில் குழ‌ந்தைக்கே எப்பாட‌லை எங்கு பாட‌ வேண்டும் என்று ந‌ன்றாக‌ தெரிந்துவிடும் (சினிமா பாட‌ல்க‌ளை க‌ண்டிப்பாக‌ சில கால‌த்திலேயே ம‌ற‌ந்துவிடுவார்கள். அது என்னமோ உறுதி )

  (முதல்ல அவுங்களுக்கு கத்துக்கொடுக்க நமக்கு அந்தப் பாடல் தெரிந்திருக்க வேண்டும்.. ஹி ஹி)

 11. December 18, 2006 10:15 am

  அன்பு கென்,

  யாருக்கும் யாரும் கட்டுப்பாடு விதிக்க முடியாது. இங்கு விவாதம் தேனே செய்கின்றோம்.?

 12. SaravananB permalink
  December 18, 2006 10:15 am

  Kid singing movie songs are not ok to me, as most of the movie songs are either meaningless or not advisable to explain to kids. You can’t say that they will not understand the meaning. If they ask you for meaning, are we in a position to explain. At the same time, take any of the Bharathi or Auvaiyar songs. It teaches them good habits. It teaches them moral. We can guide them with the meaning.

  B’coz we are not unable to spend time to teach them, we are just allowing them to listen to TV and these kids are learning from it.

 13. Silvandu permalink
  December 18, 2006 10:32 am

  உமா
  என் கருத்து என்னவென்றால், குழந்தைகள் பாடுவதோடு விடுவதில்லை. அதற்கு பொருளும் கேட்க விழைகின்றனர். ஏன்,எதற்கு என்று ஆராயும் பருவம் குழந்தை பருவம். அத்தகைய பருவத்தில் நல்ல பாடல்களை பாட தூண்டுவதே சிறப்பு. மோசமான அர்த்தம் என்று குழந்தைக்கு தானே தெரியாது. அதை அறிந்த பெரியவர்கள் ஏன் அதை பாட தூண்ட வேண்டும். மோசமான சினிமா பாடல்கள் பாடுவதை ஆதரிப்பது சரியில்லை என்று நான் நினைக்கிறேன்.
  சில்வண்டு..

 14. December 18, 2006 10:33 am

  ப்ரேம்,

  எந்த வயதிலும் அடிப்பது ஒரு தீர்வாகாது என்பது அடியேனின் கருத்து.

 15. December 18, 2006 10:48 am

  உங்கள் கருத்துக்களை பதித்தமைக்கு மிக்க நன்றி சரவணன்,சொல்வண்டு.

 16. December 18, 2006 11:08 am

  குழந்தைகளுக்கு முடிந்தவரை இது உனக்கான பாட்டு இல்லை என்று புரியவைக்கலாம்..இல்லையென்றால்.அந்த பாடலை மற்றவர் முன்னில் பாடுவதை தடுக்கலாம்.நாம்அத்தகைய பாடல்களை பார்ப்பதையும் கேட்பதையும் தவிர்த்தால் அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.

  நல்ல பாடல்களை பாடும்போது அதிகம் பாராட்டுவதும்
  அவர்களை தேர்ந்தெடுக்க செய்யும்..

  நல்லவை அல்லாதவை என்று சொல்லி வளர்ப்பதில் எந்த தவறும் இல்லை..அதற்கு தானே இருக்கிறோம் பெற்றோர்.
  தீயில் கைவைத்து புரிந்து கொள்ளும் முன் அது சுடும் என்று சொல்வதே நல்லது.

 17. December 18, 2006 11:32 am

  வணக்கம் விழி,

  மிகவும் தேவையான ஒரு தலைப்பைத்தான் எடுத்து இருக்கீங்க.

  குழந்தைகள் பாடுதலும் ஆடுதலும் அவர்களின் இயல்பு பாடுவதில் ஆடுவதில் கட்டுப்பாடுகள் கூடாதுதான்.எந்தப்பாட்டுக்கு ஆடுகிறார்கள் அல்லது பாடுகிறார்கள் என்பதிலும் கட்டுப்பாட்டு தேவையில்லைதான் அதன் அர்த்தம் அவர்களுக்கு பின் நாட்களில் தெரியப்போவதில்லை என்றால்,ஆனால் அவர்கள் வாழ்வுமுழுதும் குழந்தைகாளாகவே இருக்கப்போவதில்லையே.

  குழந்தைகள் நாம் எதைச் செய்கிறோமோ எதைசெய்யும்போது ஊக்கப்படுத்துக்கிறோமோ அதைத்தான் திரும்பச் செய்யும்.இது உண்மை.அக்குழந்தை சுற்றி உள்ள சமூகத்தைப் பொறுத்தே அக்குழந்தையின் குணமும் அமையும்.அதனால் குழந்தைகளுக்கு அல்ல அறிவுரைகள் தேவை வளர்ப்பவர்களுக்குத்தான்.

  நீங்கள் குத்துப்பாட்டு பார்த்தால் குழந்தையும் பார்க்கும் நீங்கள் அப்பாடல் பாட ஊக்கப்படுத்தினால் அதைத்தான் குழந்தையும் பாடும்.குழந்தைக்கு எது கொடுத்தால் நல்லது என உணவில் மட்டுமல்ல இதிலும் கவனம் செலுத்துதல் வேண்டும்.

  குழந்தைகளிடமிருந்து தள்ளி நிறுத்தவேண்டிய விசயங்கள் என ஒரு பெரியபட்டியலே போடலாம்.அது எது என எல்லோருக்கும் தெரியும் என்ற நம்புகிறேன்.

 18. December 18, 2006 11:50 am

  இது எங்கேயோ எப்போதோ படித்தது முழுதாய் ஞாபகம் இல்லை.

  குழந்தை தன் தகப்பனைப் பற்றி நினைப்பவை

  1-7 அப்பாக்கு எல்லாம் தெரியும்
  8-14 அப்பாக்கு தெரியாததும் சிலது இருக்கு
  15-21 அப்பாக்கு நிரைய தெரிய
  22-28 ச்சே அப்பாக்கு ஒண்ணுமே தெரியல
  29-35 ம்ம்ம் அப்பாக்கு கூட சிலது தெரியுது
  36-42 அப்பாக்கு நிரைய தெரியுது
  43-50 அப்பாக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு அவரிடம் கேட்டு எல்லாம் செஞ்சிருக்கலாம்.

  அதனால் ஒரு குழந்தை தன் தகப்பனின் சொல் கேட்கும் வயது 1-7 வரை மட்டுமே அதனால் அவ்வயதில் நீங்கள் என்னவாக வளர்க்கிறீர்களோ அதுவாகவே வளர்கிறது.

 19. December 18, 2006 12:21 pm

  இது சென்ற அவள்விகடன் இதழில் படித்தது

  /*ஏடிஎச்டி(கவன சிதறல் & துறுதுறுப்பு) குறைபாடு குழந்தைகளை*/

  டி.வி பார்க்க அனுமதிக்காதீர்கள். அது ‘ஒன்வே கம்யூனிகேஷன்’. டி.வி&யை தொடர்ந்து பார்ப்பதால், நாம் பேசும்போதும்.. பார்த்துக்கொண்டே மட்டும் இருக்க குழந்தை பழக்கப்பட்டுவிடும்.

  என்று சொல்லி இருந்தார் மருத்துவர்.அக்குறைபாடு இருக்கும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல.ஊடகம் எல்லாருக்கும் ஒரு வழி தொடர்புதான்.அது குழந்தைகளை திரும்ப பேச அதன் எண்ணத்தை சொல்ல அனுமதிப்பதில்லை.அதனால் முடிந்தமட்டும் குழந்தைகளை ஊடகங்களிடமிருந்து தள்ளியே வையுங்கள்.அவர்கள் ஓரளவாவது வளரும் வரையாவது.

 20. December 18, 2006 12:23 pm

  தேடி தேடி புது விடயங்கள் அளிக்கும் விக்கிக்கு நன்றி. உங்கள் கருத்துக்களும் தேடலும் தொடரட்டும்.

 21. Nims permalink
  December 18, 2006 1:34 pm

  குழந்தைகள் திரைப்பட பாடல்களை பாடுவதில் தவறு இல்லை என்பது தான் என் கருத்து….. குழந்தை பருவத்தில் அதன் உச்சரிப்பை வளர்ப்பதில் தான் ஆர்வமாக இருக்க வேண்டும்… குழந்தைகள் எது நல்ல பாடல், தீய பாடல் என்று உணர்ந்து பாடுவதில்லை…. எது தன் காதில் படிகிறதோ அதை அப்படியே உச்சரிக்க பழகும்… எங்கும் ஒலிக்கும் பாடல்களை குழந்தை காதில் மட்டும் விழாமல் நம்மால் வளர்க்க முடியாது…

  மேலும் தீயது எது என்றே தெரியாமலும் வளர்க்க கூடாது… அது கிணற்று தவளையாக வளர ஆரம்பித்து விடும்… புரியாத வயதில் புரியாமலே பாடட்டும்… புரிந்துகொள்ள ஆசைப்பட்டால் அதன் பக்குவத்திற்க்கேற்றார்போல் புரிய வையுங்கள்….

 22. படிக்காதவன் permalink
  December 19, 2006 4:37 am

  இதுல என்ன சொல்றது!!

  எங்கப்பாரு அடிக்கடி சொல்வாரு

  அடிச்சி வளக்காத புள்ளையும்.. ஒடிச்சி வளக்காத முருங்கையும் உருப்படாதுன்னு

  என்னமோ போங்க

 23. Hema Jaipal permalink
  December 20, 2006 6:31 am

  Well i got to the read the above comments. And I would like to share an embarrassing moment i had sometime back. I had been to our community meeting which is usually held every year here in Bangalore. After the meeting, there will be some events like dance & music. There was this cute little girl who was studying 3rd or 4th std., was dressed up in a small shorts and t-shirt and she was running here and there with a turkey towel. we were wondering why shes been dressed up like that and what she would be performing. On stage, her father announced that she is going to dance for a song. We were all eagerly waiting for that little one to dance for some rhyme or a song taught in the school. But believe me, to my shock, she danced for “Malai malai marudhamalai” song (movie : “Chocolate”) and she ate up Mumtaz in her dance movements (with that turkey towel). Most of them were whistling and encouraging the girl to dance. they were praising her parents for her wonderful performance. FYI, we all went with our families. I was not able to stand the situation. and after sometime her father went upon stage and announced that due to the audience’s applause, his daughter is going to perform for an other song, no wonder she would have eaten up even Rahasiya in that song. I felt ashamed and just walked out from that place. Now whom to blame ???

 24. December 22, 2006 5:31 am

  It is the responsibility of the parents on kids to draw a clear distinction between good meaningful songs and cine songs.
  But does that mean that we should restrict kids from listening to cine songs?
  Many develop interest or passion for music only after listening to cine songs…
  So my opinion is…lets not be too strict in saying no to cine songs…
  Let’s give them a leeway to listen to cine songs also…but we can limit them watch tv for less time…
  We can emphasise them to sing more of meaningful songs…but not totally restrict from cine songs.

 25. K.Balaji permalink
  December 22, 2006 4:46 pm

  My dear Vizhiyan, happy that you have set THIS ball run. A very constructive debate! coming to the point, children do learn only from parents. If they do certain things it is only because of the fact that the parents encourage the same. Singing or dancing for cheap quality songs, i feel, defenitely is not a healthy habit to be encouraged. A child, when he/she sings a song would defenitely ask the meaning for nasty lines and parents wont be able to answer. This will instigate the child to get to know the meaning through some other ways, which wont prove fruitful. So I strongly feel that this should not be allowed and at the same time they must be encouraged to get to know good songs.

 26. Mangai permalink
  June 27, 2007 12:50 pm

  Children sing a cinema songs. irtel Super Singer Program is broadcasting in Vijay TV nowadays.
  In this program children sing all type(Melodies,Kana,Classical) of songs with face expressions.
  They sing with very good singers(Anuradha Sriram, Srinivas) also.
  But they know song is only for singing.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: