Skip to content

சைக்கிள் பழகிய நாட்கள்..

January 19, 2007

சைக்கிள் பழகிய நாட்கள்..

வீதியில் சின்னஞ்சிறுவன் சைக்கிள் ஓட்ட பழகிக்கொண்டுருந்தான். அவன் சைக்கிளின் சக்கரம் சுத்த சுத்த சினிமாக்களிள் வருவது போல என் எண்ணங்களும்  டொய்ங்…டொய்ங் என பின்னே  சென்றது. எங்கள் தெருவிலேயே நான் தான் கடைசியாக சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தேன்.கோடை விடுமுறையின் போதும், சேர்ந்தது போல் மூன்று நாட்கள் விடுமுறை வந்தால் ஊரில் இருந்து பெரியம்மா வந்து நிற்பார்கள். என்னையும் என் தங்கையையும் அவர்களோடு ஊருக்கு அழைத்து செல்வதற்கு. அம்மாவிற்கு இணையாக ஒருவர் பாசம் வைக்கமுடியும் என்பதனினை இவர்களிடத்தில் நான் கண்டேன்.(11 வருடங்களுக்கு முன்னர் தவறி விட்டார்கள்).

சைக்கிள் ஓட்ட பழகியது எல்லாம் ஆரணியில் தான். சின்ன தெரு. அம்மா வளர்ந்தது இந்த தெருவில் தான். சைக்கிள் ஓட்டுவது என தீர்மானித்தது இரண்டாம் வகுப்பு முடியும் தருவாயில்  இருக்கும் என நினைக்கிறேன்.சைக்கிள் ஓட்டுவதற்கு முன்னர் முதலில் சைக்கிளை தள்ளிச்செல்ல வேண்டும். இது தான் முதல் பாடம் என சைக்கிளில் வித்தை காட்டும் அண்ணன்மார்கள் சொல்லித்தந்தனர். தெருவின் ஒரு கோடியில் இருந்து மறுகோடிக்கு சைக்கிளை தள்ளி செல்வோம். மெதுவாகவும் வேகமாகவும். பள்ளிக்கதைகளை பேசியபடி. பெரியப்பா வெளியே சென்று வந்தவுடன் சைக்கிளை யார் தள்ளுவது  என சண்டை நடக்கும். காலையில் ஏரிக்கு பெரியப்பா போகும் போது நானும் கூட செல்வேன். எங்காவது சைக்கிள் தள்ள வாய்ப்பு கிடைக்காதா என்றெண்ணி.

என்னுடன் சைக்கிள் தள்ள ஆரம்பித்தவர்கள் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டனர். அடுத்த கட்டம் குரங்கு பெடல்.குரங்கு பெடலில் முதல் படி அரை பெடல். பெடலை முழு சுற்றும் மிதிக்காமல் அரை சுற்று முன்னே அழுத்தி மீண்டும் பின்னே வந்துவிடும். இந்த நிலையில் ஓரளவு பேலன்ஸ் கிடைத்து விடும். பார் வைத்த சைக்கிள்கள் தான் அந்த நேரத்தில் எங்கும் காணலாம். ஹெர்குலஸ் அட்லஸ் சைக்கிள்கள் தான் பிரபலம். லேடீஸ் சைக்கிள் அப்ப தான் மார்கெட்டுக்கு வருகின்றது.

தெருவின் முனையில் சைக்கிள் கடை ஒன்றில் ஒரு மணி நேரத்திற்கு 25 பைசாவோ (அதற்கும் குறைவாகவோ) சின்ன சைக்கிள் கிடைக்கும்.ஒரு நாள் முழுவதற்கும் 2 ரூபாய். பெரியம்மாவிடம் அடம்பிடித்து என்றாவது இந்த சைக்கிளை வாங்குவதுண்டு. மாமாவோ, பெரியப்பாவோ, அண்ணானோ யாராவது வந்து சைக்கிளை பிடித்து விடுவார்கள். “முதுகு நேரா இருக்கணும்” என்று முதுகில் அடி விழும். ஏனோ முதுகில் அடித்த உடன் சுரீல் என்று கோபம் பொத்துக்கொண்டு வரும். அண்ணனை அடித்துவிட்டு ஓடி விடுவேன். நிறைய காயம் படும் என்பார்கள். எனக்கு ஒரு முறையோ இரண்டு முறையோ அடி பட்டது, இருந்தும் சைக்கிள் ஓட்ட பழகவில்லை.

என் தங்கை சைக்கிள் ஓட்ட பழகி அவளுக்கு என்று சின்ன சைக்கிள் கூட வாங்கி விட்டாள். என்னைவிட நான்கு வருடம் இளையவள். அப்போதும் கூட எந்த ரோஷமும் வரவில்லை. “சைக்கிள் ஓட்டாம ஒருத்தன் வாழக்க்கூடாதா?”..’சைக்கிள்ல போனாதான் எவ்வளவு அடி படுகின்றது?” “சைக்கிள்ல போகும் போது எதுவும் சாப்பிட்டுகிட்டே போக முடியாது”..இப்படியாக யோசிப்பதுண்டு.

அப்போது நான் ஆறாம் வகுப்பு வந்துவிட்டேன். வகுப்பில் அனேகமானோர் சைக்கிள் பழக ஆரம்பித்துவிட்டனர். எங்காவது வார இறுதியில் கிரிக்கெட் விளையாட கிளம்பிவிடுவார்கள். நான் மட்டும் நடந்து செல்வேன். எவனும் சைக்கிள்ல ஏத்த மாட்டானுங்க. “உன்னை வெச்சி பேலன்ஸ் பண்ண முடியாது..” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுவார்கள்..லொங்கு லொங்கு என்று நடந்து செல்வேன். அந்த சமயம் கூட எந்த ரோஷமும் வரவில்லை.

ஒரு நாள் ஊரில் இருந்து பெரியம்மா, உறவினர்கள் எல்லோரும் வந்திருந்தனர் வேலூருக்கு. தெருவில் இருந்த எல்லா சிறுவர்களும் எங்கள் வீட்டின் முன்னர் குழுமி விளையாடிக்கொண்டிருந்தோம். என்னை ரொம்பவே கிண்டல் செய்தார்கள் பெரியம்மா..”இவ்வளவு பெருசா வளர்ந்து இருக்க..இன்னும் சைக்கிள் ஓட்ட தெரியல…:”எல்லோருக்கும் முன்னிலையில் என்னை அவமானபடுத்துவது போல இருந்தது. கோபம் லாரி லாரியாக வந்தது. நாம் மிகவும் விரும்பும் ஒருவர் நம்மை சின்ன சொல் சொல்லிவிட்டாலும் தாங்க முடியாதது இயற்கையே..

“யாருக்கு ஓட்ட தெரியாது”..அப்பாவின் ஹெர்குலஸ் சைக்கிள் வெளியே தள்ளி வந்து , முதல் முறையாக காலை அந்த பாருக்கு மேலே போட்டு, ஒரு காலை தரையில் தாங்கி நின்றேன். எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தன்ர். இனி நம்ம ஓட்டவில்லை என்றால் கதை கந்தல் என்று விழுந்தாலும் பரவாயில்லை என்று காலை தரையில் இருந்து எடுத்தேன்.அட விழவில்லை, சைக்கிள் நகர்ந்தது. நான் சைக்கிள் ஓட்டுகிறேன். நான் சைக்கிள் ஓட்டுகிறேன் ஏதோ உலகத்தை வென்ற மகிழ்ச்சி. காற்றில் பறந்தேன்.விமானம் ஓட்டுவது போல எண்ணினேன். வி.ஜி.ராவ் நகரையே சுற்றி வந்தேன்.எல்லோரும் நான் சைக்கிள் ஓட்டுவதை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. தெரிந்தவர்களை பார்த்து சிரித்தேன்..இவன் என்ன லூசா? என்று நினைத்தபடி அவர்கள் சாதாரணமாக சென்றார்கள். திரும்ப எங்க தெருவை நெருங்கினேன். வலப்பக்கம் திரும்பவேண்டும். தெரு முனையில் காலியாக இருந்த மனையை ஊரே சாக்கடையாக மாற்றி வைத்து இருந்தது. அந்த பக்கம் நடந்தாலே எல்லோரும் கவனமாக நடப்பார்கள். நான் சைக்கிளை திருப்புகிறேன், சைக்கிள் திரும்பவில்லை. நேரே சாக்கடையை நோக்கி நகர்கின்றது சைக்கிள். அப்பா காலையில் சொன்னது நினைவிற்கு வந்தது “ப்ரேக் கட்டாகி இருக்கு. சரி பண்ணு..”. பிறகு பயத்தில் கண்னை மூடிக்கொண்டேன்.விழியன்
https://vizhiyan.wordpress.com

Advertisements
16 Comments leave one →
 1. Maddy permalink
  January 19, 2007 5:07 am

  adappaavi.. Saakadaila kulichavanaa neee.. Karumam..

 2. January 19, 2007 5:32 am

  when I was reading your experience…I went back to my childhood.Learning cycle was thrilling!!!
  Thanks for bringing back those fondest memories…

 3. January 19, 2007 5:36 am

  unga katuraiya padichitu fresh morning velaya parkama cycle kathukitadha nanachi parthutu irundhen oru 10 min..haha..
  nice to read

 4. ஓம் ஸ்ரீ ஜெய ஜெகதீஷ் permalink
  January 19, 2007 5:58 am

  இதை பார்த்துட்டு நாங்களும் 15 வருஷத்துகு முன்னாடி போய்ட்டு வந்தோம்

 5. Loveish permalink
  January 19, 2007 6:06 am

  Good…. U too end the story like an Hollywood Movies… Whats next… did u fell orrrrrrrrrrrr…

  Loveish

 6. அஜித் மல்லி சுப்ரமணியன் permalink
  January 19, 2007 7:09 am

  எனக்கு சைக்கிள் கற்றுக்கொடுத்த எதிர் வீட்டு சித்ரா அக்கா ஞாபகம் வந்து விட்டது. நல்ல படைப்பு.

 7. gnanavelu permalink
  January 19, 2007 7:19 am

  Where are you getting this topic… send me some topics i will try to support your writings

 8. January 19, 2007 8:12 am

  மாதவா, இதெல்லாம் வெளிய சொல்லக்கூடாது..

 9. January 19, 2007 8:22 am

  என்னுடைய வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி அபிதா அவர்களே.!!

 10. January 19, 2007 8:22 am

  On Gnanavel

  அதுவா வருது மாப்பு…நான் என்ன எழுதி வெச்சா எழுதறேன்..:-)

 11. மாணிக்கம் permalink
  January 19, 2007 8:35 am

  கலக்குங்ணோய்…!!! நீரும் நம்ம ஸ்டைல்லதான் கத்துகினதா… ஆனா நான் கொஞ்சம் சீக்கிரமாவே கத்துக்கிட்டேன்…

 12. January 19, 2007 12:15 pm

  ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..

  எனக்கும் சின்ன வயசுல கணக்குப் பாடம் சொல்லித்தந்த அக்கா ஞாபகம் வர்றாங்க.. அவங்க எங்க அம்மாக்கிட்ட ட்யூஷன் படிச்சாங்க.. ஆனா நான் அவங்களுக்குச் செல்லம்..அதனால சண்டைபோட்டு நாந்தான் சரவணாவுக்கு (வீட்டுல நமக்குப் பேரு சரவணாங்கோ)… சொல்லித்தருவேன்னு அம்மாகிட்ட சொல்லிட்டாங்க..

  நானும் என்னவோ ரொம்ப சின்சியரா நல்ல பிள்ளையா கை,கால், மூஞ்சி எல்லாம் கழுவி (பள்ளிக்கோடம் வுட்டு வந்தவொடன) ஒழுங்காப் படிச்சதால தான் இன்னிக்கு ஒழுங்கா எட்டுப் போடுறேன் மக்கா…..

  என்னவோ போங்க தலை..

  ஞாபகம் வருதே. ஞாபகம் வருதே முதல் முதலாக ஓட்டிய சைக்கிள்… கலக்குங்க..

  ஆனால நீங்க விவரிச்ச எல்லாமே நெசந்தேன் சாமி.. அவனவனுக்கு எப்போ ரோசம் பொத்துக்கிட்டு வருமுன்னு அவிங்களுக்கே தெரியாதுங்கேன்..

 13. January 19, 2007 12:59 pm

  பழைய ஞாபகங்களை மீண்டும் நினைக்க தூண்டுகிறது ……

  நானும் முதல் முறை சைக்கிள் ஓட்டும்போது .. கீழே இறங்க தெரியவில்லை ….. எதிரில் ஒரு டெம்போ வந்துகொண்டு இருந்தது ….(நாங்க பழகுறதே தார் ரோடில்தான் !! அவ்வளவு தைரியம்) எப்படியோ கொஞ்சம் சமாளிச்சு கீழே விழுந்து … … அப்புறம் என்ன பழகியாச்சு 😉

  தனசேகர்

 14. melattur r natarajan permalink
  January 19, 2007 1:27 pm

  //கோபம் லாரி லாரியாக வந்தது.//
  //தெரிந்தவர்களை பார்த்து சிரித்தேன்..இவன் என்ன லூசா? என்று நினைத்தபடி அவர்கள் சாதாரணமாக சென்றார்கள்.//

  ரசிக்கும் படியாக இருந்தது.

  மெலட்டூர்.இரா.நடராஜன்.

 15. ambikdevi permalink
  January 25, 2007 5:54 am

  hai

 16. ambikdevi permalink
  January 25, 2007 6:40 am

  Hai Viliyan,

  Naan unga æthivukalukku fan. But ennaku inga than commend panna chance kidaichuthu. ennaku inga tamil -a eppdi type pannanumnu theriyalai. unga pathivu ellathukum intha commend-a naan write pannren. next oru visaiyam….. maddy yaru. nejamalume actor madhvan ? ennaku email pannunga viliyan. pls.
  ok bye……….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: