Skip to content

நீலம் – குறும்படம்

January 19, 2007

 நீலம் – குறும்படம்

ஆழிப்பேரலையால் அள்ளிச்செல்லப்பட்ட அனைத்து உயிர்களுக்கு என குறும்படம் துவங்குகின்றது. தனியாய் நிற்கும் பனைமரம். அப்படியே கடலலைக்கு நகர்கின்றது.சிறுவன் ஒருவன் கடலை நோக்கி விரக்தியோடு நடந்து வருகின்றான். கடலைப் பார்த்து ஏக்கத்துடன் பார்க்கின்றான். தூரத்தில் நண்டுகள் கடலில் இருந்து கரையைத் தேடி ஓடுகின்றது. எதையோ கண்டவன் போல் சிறுவன் ஓடுகின்றான்.நண்டுகள் மணலுக்கடியில் சென்றுவிடுகின்றது. அலைகளுக்கு நடுவே குழி தோன்றி நண்டு ஒன்றினை பிடிக்கின்றான். “பாத்தியா?அம்மாவை பார்த்தாயா? நீ தான் தினமும் கடலுக்கு போய் வர இல்ல.சொல்லு..” என அழுகின்றான். நம் தொண்டையில் ஏதோ செய்கின்றது.நண்டு பிழைத்து போகட்டும் என விடுகின்றான்.உடைகிறான்.”அம்மா நீ வராம நான் இந்த எடத்த விட்டு போக மாட்டேன் என தரையில் புரண்டு அழுகின்றான். மண்ணை வாரி அனைத்துக் கொள்கின்றான். கடலின் பிரம்மாண்டத்தை பார்த்து நமக்கே ஒரு பயம் வந்து, கோபம் வந்து அமைதியாக முடிகின்றது.

சிறுவனாக நடித்திருப்பது தங்கர்பச்சானின் மகன் அரவிந்த் பச்சான் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார். தங்கர்பச்சன் ஒளிஓவியம் செய்துள்ளார். குறும்பட இயக்குனர் லெலின் படத்தொகுப்பை தன் பங்கிற்கு முடித்திருக்கின்றார். கதையை உருவாக்கி அதனை இயக்கி இருப்பவர் கவிஞர் அறிவுமதி.மேலும் மேலும் குறும்படங்களை இயக்கி உலக தரத்திற்கு தரவேண்டும். நிருவின் இசை கடலுக்கு அருகாமையில் கொண்டு செல்கின்றது.குறும்படத்தை தயார்த்த தர்மசீலம் செந்தூரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.நல்ல முயற்சிக்கு உறுதுணையாய் நிற்பதே பெரிய விடயம் தான்.

சுனாமியின் கோர தாண்டம் நடந்தேறி இரண்டு வருடங்களாகியும் இன்னும் அதன் சுவடு அழியாமல் இருக்கின்றது. உயிர் நீத்த அனைவருக்கும் மீண்டும் உங்கள் அனைவரின் சார்பாகவும் அஞ்சலி செலுத்துகிறேன்.

வெளியீடு/ கிழக்கு சாரல்,189, அபிபுல்லா சாலை, சென்னை – 17, தொடர்புக்கு – 9840848148


விழியன்

Advertisements
4 Comments leave one →
 1. Loveish permalink
  January 20, 2007 4:25 am

  Sometimes i feel that we should banned such good stories – making as a film.

  The reason of movies are entertainment – not to come out with heart full of pain and eyes full of tears.(eg. Nenjirukkm varai)

  This is just my opinion.

 2. January 20, 2007 5:55 am

  தலை… நல்ல விமர்சனம்… படிக்கும்போதே படம் பார்த்த உணர்வு வந்து விடுகிறது..

  அறிவுமதியின் மீதான அபிமானமும் கூட அதற்குத் துணைபுரிகிறது..

  இந்தக் குறும்படம் எங்கே கிடைக்கும்? நான் இதுவரை குறும்படம் எதுவும் பார்த்ததில்லை…

 3. hello.thamizha permalink
  January 20, 2007 1:03 pm

  ஆம் நல்ல விமர்சனம் விழியா

 4. January 30, 2007 4:38 pm

  aahaa..

  intha kurumpadaththai paththi 1 varushaththukku munpu naan padiththirukkiRen. tsunamiyai parriya intha kurumpadam.

  aanaal innum paarkka chance kidaikkavillai. ungalidam intha kurumpadam irukkiratha?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: