Skip to content

மொழிபெயர்ப்பு பட்டறை – அனுபவம்

February 15, 2007

மொழிபெயர்ப்பு பட்டறை – அனுபவம்ஞாயிறு காலை 9.30 மணிக்கு எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தின் எதிரே இருக்கும் ஜீவன் ஜோதி இல்லத்தில் தமிழ்நாடு மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் சார்பில் மொழிபெயர்ப்பு பட்டறை நிகழ இருப்பதாக சித்தார்த் தகவல் தெரிவித்தான். சொன்னபடியே சரியாக 10.15 மணிக்கு அருங்காட்சியகம் வாசலில் இருந்தேன். இத்தனை வருடம் சென்னைக்கு அடிக்கடி வந்து சென்றாலும் இது தான் முதல் முறையாக எழும்பூர் அருங்காட்சியகத்தில் நுழைவது. பிறகு தான் தெரிந்தது நிகழ்ச்சி நடப்பது அருங்காட்சியகத்திற்கு வெளியே என்று. சித்தாத்தும் சில நிமிடங்களில் வந்து சேர்ந்தான். “தமிழ்நாடு மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தின்” இரண்டாவது ஆண்டு கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு நிகழ்வாக கல்லூரி மாணவர்களுக்கு எழுத்து பட்டறை நடைபெற்றது. நாங்கள் சென்ற சமயம் நிகழ்ச்சி ஆரம்பித்துவிட்டது. கட்டணமாக 100 ரூபாய் செலுத்தி லில்கோ புத்தகம் கிடைத்தது. இரண்டும் மூன்று மூத்த மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தார்கள்.

“Das Capital” புத்தகத்தை மொழிபெயர்த்த தியாகு அவர்கள் உரைநிகழ்த்தினார். மிக சுவாரஸ்யமாக இருந்தது. எங்கே மொழிபெயர்ப்பில் மக்கள் இடறிவிடுகின்றனர் என்பதை பற்றி சில உதாரணங்களை சொல்லி விளக்கினார். சுவையான சின்ன உரை. பின்னர் சங்கத்தின் பொருளாளர் லதா ராமகிருஷ்ணன் பட்டறை அனுபவங்களை பகிர்ந்தார். ஏற்கனவே சில கல்லூரிகளில் பட்டறைகளை நிகழ்த்தி இருக்கின்றார்கள் போலும். மொழிபெயர்ப்புகள் இரண்டாம் தர படைப்புகள் ஆகாது என பேசினார். இவரை 30வது புத்தக கண்காட்சியில் ஏற்கனவே சந்தித்து பேசியுள்ளேன். கவிஞர் தேவதேவவையும் இவரையும் ஒரு கடையில் வைத்து உரையாடினேன். நம்ம பெருந்த உடலில் ஒரு நன்மையாக என்னை உடனே இன்றும் அடையாளம் கண்டு கொண்டார். “அங்க பார்த்தோம் இல்ல…”. அப்பாடி நம்மள நியாபகம் இருக்கு.

பட்டறை துவங்கியது. சின்ன ஒரு அறையில் சுமார் முப்பது மாணவர்கள மத்தியில் நானும் சித்துவும் அமர்ந்திருந்தோம்.அடைக்கப்பட்ட நீர் வியாபாரம் என்ற ஆங்கில கட்டுரை ஒன்றினை கொடுத்து மொழிபெயர்க்க சொன்னார்கள். இரண்டு பக்கம் இரண்டு மணி நேரம் இரண்டுபேர். அட நாங்கெல்லாம் அரை மணி நேரத்தில் முடிப்போம் பாருங்க.எடுத்துக்கொண்டது என்னமோ இரண்டரை மணி நேரம். :-(. ஒவ்வொரு வரிக்கும் இரண்டு மூன்று முறையாவது அகராதியை புரட்டும் நிலை வந்தது. ஆரம்பத்தில் இருவரும் ஒன்றாக மொழிபெயர்க்க துவங்கி, பின்னர் தனித்தனியாக செய்யலாம் என செய்தோம்.அருகிலே 17 வயது மாணவன் கையெழுத்தை பார்த்து நான் எழுதியதை மறைத்துக்கொண்டேன்.சித்து நான் எழுதியதை பார்த்து மறைத்துக்கொண்டான். அங்கே ஆர்.சிவக்குமார்(மூத்த மொழிபெயர ்ப்பாளர், பேராசிரியர்) அவர்களை சந்திக்க நேர்ந்தது. அவரோடு கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். ஒரு வழியாக பேர்த்து ச்ச மொழி பெயர்த்து முடித்தோம். நிறையவே அனுபவம். இரண்டு வருடம் முன்னர் சாய்நாத் கட்டுரை மொழிபெயர்க்க ஆரம்பித்து அரை பக்கத்திலேயே மூடிய நினைவு வந்தது.

மதிய உணவிற்கு பின்னர் மாணவர்கள் அனுபவ பகிர்வு நிகழ்ந்தது, பின்னர் நாங்கள் எழுதிய கட்டுரைகளை திருந்த்தி அதிகமாக செய்யப்பட்ட தவறுகளை சுட்டி காட்டினர். மொழிபெயர்ப்பின் போது செய்ய வேண்டிய சில ஆலோசனைகள்

1. மொழியின் மரபுகளை அறிந்துகொள்ளுங்கள்.(இரண்டு மொழிகள்)

2. மொழியின் தன்மைகளை அறிய முயலுங்கள்

3. மொழிபெயர்ப்பினை படித்து முடித்தது மொழியின் இன்பமும் அதில் இருக்க வேண்டும்.

4. சொற்களை தேடுங்கள்

5. எழுதிய பின்னர் வாய்விட்டு படிக்க வேண்டும்

6. நிறைய நூல்களை படிக்கவேண்டும்

7. நம் எண்ணத்தை இதில் புகுத்த கூடாது

8. இடங்களை நிரப்ப வேண்டாம்.

9. மூல ஆசிரியருக்கு நாம் மரியாதை செய்ய வேண்டும்.

10. நகலின் நகலாக இருக்க கூடாது

11. புதிய மொழிகளை கற்றுக்கொள்ளுங்கள்

அங்கே சில புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. அவற்றில் வாங்க கூடாது என நினைத்தும் வாங்கிய புத்தகங்கள்

புது எழுத்து – 2006 ஜூலை இதழ்

வடக்கு வாசல் – பிப்ரவரி 2007 இதழ்

சொல் வழக்கு கையேடு – மொழி அறக்கட்டளை வெளியீடு

தமிழ் நடைக் கையேடு

புதிய பூங்குயில் – ஜனவரி 2007

விழா முடிவில் சான்றிதழும் ஒரு புத்தகமும் பரிசாக கொடுத்தனர்.

யானை (போலந்துக் கதைகள்) – தமிழில் பூமணி.

மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆசைக்கு நல்ல பாதையினை வழிவகுத்தது இந்த பட்டறை.
விழியன்
https://vizhiyan.wordpress.com

Advertisements
3 Comments leave one →
 1. மாணிக்கம் permalink
  February 15, 2007 5:53 am

  ஹோ… இப்டிலாம் கூட நிகழ்ச்சிகள் நடக்குதாங்ணே…? ரொம்பவே நல்லாருக்கு…! நமக்கும் அப்பப்ப இப்டிபட்ட நிகழ்வுகளை முன்னரே தெரியப்டுத்துங்கள்…! முடிந்தால் கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்…!

 2. February 15, 2007 6:17 am

  Good Approach 🙂 Keep it up!

 3. February 16, 2007 2:18 am

  வாரா வாராம் … சென்னையில் தமிழ் மொழி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறீகள்!! பாராட்டுக்கள்!!!

  நான் சென்னையில் இருந்த வரை .. இவற்றை தவற விட்டுவிட்டேன் ….

  உங்களால்தான் பல நிகழ்ச்சிகளைப் பற்றித்தெரிந்துகொள்கிறேன் … நன்றிகள்…;)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: