Skip to content

பயணம் : கர்நாடகத்தில் திபத்

March 6, 2007

பயணம் : கர்நாடகத்தில் திபத்

நாங்கள் காவேரி பூங்காவில்(குஷால் நகர்) உலவும் போது ஏராளமான புத்த பிச்சு்கள் வந்துகொண்டிருந்தனர். வந்து நிற்கும் ஒவ்வொரு ஆட்டோவிலும் புத்த பிச்சுகள் தான். Monk என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். பத்து வயது முதல் இருபது வயது வரை இருந்தார்கள். எங்கிருந்து இவ்வளவு கூட்டம் வருகின்றது என ஆச்சரியமாக இருந்தது. பூங்காவில் இருந்து மாலை பெங்களூர் கிளம்பினோம். வழியில் தங்க கோவில்(Golden Temple of Tibet) ஒன்று இருக்கின்றது என்றனர்.

நெடுஞ்சாலையில் இருந்து கோவிலுக்கு போகும் வழியில் திரும்பிய போது ஆவல் அதிகரித்தது. இந்தியாவை விட்டு வெளி நாட்டிற்கு வந்த ஒரு உணர்வு. சாலையில் காணும் மக்கள் யாவரும் இந்தியர் போல இல்லை. அனைவரும் மஞ்சள் சட்டை, உடலை சுற்றி சிகப்பு நிறத்தில் ஆடை.திருப்பதிக்கு சென்று மொட்டை அடிச்சிருப்பவர்களை பார்த்த மாதிரி இருந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இதே ஆடை தான். எங்கு பார்த்தாலும் பெரிய கொடிகள். வீட்டின் முகப்புகளிலும் நல்ல வித்தியாசம் தெரிந்தது. பெரிய பெரிய பள்ளிகள் விடுதிகளை கடந்தோம். “SOS” என்று நிறைய இடத்தில் எழுதி இருந்ததை வைத்து ஏதோ அகதிகள் முகாம் என்று நன்றாக புரிந்தது. பெண்களை காண்பது அரிதாக இருந்தது.

கோவிலுக்கு சுமார் ஒரு கி.மீட்டர் முன்னரே கோவிலின் பிரம்மாண்டம் தெரிந்தது. இது வரை திரைப்படங்களில் மட்டுமே கண்ட ஒரு கட்டிட அமைப்பு.வாசலே பிரம்மிக்க வைத்தது. இந்தியாவில் இப்படி ஒரு இடமா என அனைவருக்கும் வியப்பு தலை தூக்கியது. கோவிலுக்கு உள்ளே செல்லும் பாதையில் தரையில் ஓவியங்கள் நிறைந்து இருந்தது. மனிதர்கள் அதன் மீது நடந்து நடந்து ஓவியங்கள் மங்கலாக தென்பட்டது.

நடுவில் இருந்த பெரிய அரங்கத்தின் உள்ளே மிகப்பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது. உள்ளே மூன்று பெரிய சிலைகள்.தங்க முலாம் பூசிய பெரிய சிலைகள்.அறுபது அடி உயரத்தில் புத்தர் சிலை. ஐம்பத்து எட்டு அடியில் குரு பத்மசம்பாவா மற்றும் அமித்தயஸ்(Amitayus) இடப்பக்கமும் வலப்பக்கமும் வீற்றிருந்தது. சிலைகளின் முன்னே ஏராளமான இருக்கைகள் தரையில் இருந்தது. அனைவரும் ஒன்றாக பூஜை செய்ய இருக்கலாம். உள்ளே சுற்றி பார்த்துக்கொண்டிருந்த போது வினோதமான சத்தங்கள் கேட்டன.கோவில் மணி போலவும் இல்லை. ஏதோ ஒன்றை சுற்றுவது போல ஒலி.

அரங்கின் உள்ளே சுற்றிலும் ஓவியங்கள்.மூன்றாம் மாடியின் சுவர்களில் புத்தரின் வாழ்க்கை வரலாறும்,டோஜன் என்னும் முறையை பயிற்றுவித்த பன்னிரெண்டு குருமார்களின் வாழ்க்கை வரலாறும் ஓவியமாக இருக்கின்றது. மேலும் பல படங்கள் சுவர்களை அழகுபடுத்தின. இரண்டு பெரிய மேளங்கள் உள்ளே இருந்தது எதற்கென தெரியவில்லை.

1995ஆம் ஆண்டு துவங்கி 1999ஆம் ஆண்டு இதனை கட்டி முடித்துள்ளனர்.முழுதும் திபத்திய பாரம்பரியத்தில் கட்டப்பட்டுள்ளது. உள்ளே இருக்கும் சிற்பங்களும் ஓவியங்களும் புதிய ரசனையை உருவாக்கும். ஆனால் அவர்கள் பாரம்பரியமும் கலாச்சாரமும் தெரியாததால் ஆழ்ந்து கவனிக்கமுடியவில்லை. அங்கு நடமாடிய யாருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை. சிலர் ஹிந்தியில் பேசினார்கள். அதனால் குறைந்த செய்திகளை மட்டுமே சேகரிக்க முடிந்தது.

கிழக்கு வாசல் வழியில் இருந்து கோவிலை சுற்றி 1300 சின்ன வளையங்களும் 19 பெரிய வளையங்களும் இருந்தது. இந்த வளையங்களை இடமிருந்து வலமாக சுற்றினால் உடலில் இருக்கும் நோய் நீங்கி ஆயுள் பெருகும் என்பது இவர்கள் நம்பிக்கை. ஆயிரக்கணக்கான மந்திரங்களும் தரணிகளும்(மந்திரம் போல ஒன்று என நினைக்கிறேன்) வளையங்களில் செதுக்கப்பட்டுள்ளது. பெரியவர்கள் சிலர் வாயில் மந்திரம் சொன்னபடி சுற்றிவந்தனர்.

கோவிலை சுற்று வரும்போது பின்னால் இருந்த வளாகத்திற்கும் சென்றோம். முதியவர்கள் சிலர் புல்வெளிகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். சிறுவர்கள் கட்டி புரண்டு அடித்து பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். இது ஒரு பல்கலைக்கழகமாம், ஒன்பது வருடம் படிப்பு. பின்னர் மூன்று வருடம் இங்கே தங்கி மந்திரங்களை கற்பார்களாம். அதன் பிறகு உலகின் பல்வேறு இடங்களுக்கு சென்று புத்தரின் கருத்துக்களை பரப்புவார்கள்.

மற்ற புனித இடங்கள் போல் அல்லாமல் புகைப்படம் எடுக்க எந்த தடையும் இல்லை. இது சரியா தவறா என்று தெரியவில்லை. இல்லையெனில் இந்த அழகிய புகைப்படங்கள் சிக்கி இருக்காது.

எப்படி செல்வது : பெங்களூரில் இருந்து 220 கி.மீ

மைசூரில் இருந்து 80 கி.மீ

காலையில் நேராக குஷால் நகரில் இருக்கும் பூங்காவிற்கு சென்று (யானை சவாரி, படகு, காவேரி குளியல், மூங்கில் காடு , மான் பூங்கா) மாலை இந்த கோவிலுக்கு சென்று இரவு திரும்பிவிடலாம். பயணங்கள் தொடரும்.


விழியன்

(Key Words: Golden Temple Karnataka , Tibet )

Advertisements
7 Comments leave one →
 1. மாணிக்கம் permalink
  March 6, 2007 6:39 am

  ஹோ… இப்டிபட்ட இடங்கள்லாம் இங்ககூட இருக்கா…? ஒரு சமயம் இமாச்சல் பிரதேசத்துல(Gompa) இதே அமைப்புள்ள பிரமாண்ட கோயிலை பாத்து பிரமித்துள்ளேன்… விவரங்களுக்கு நன்றி…

 2. bala permalink
  March 6, 2007 10:12 am

  Useful Info…well done

 3. meena permalink
  March 6, 2007 10:14 am

  அதிசயமா இருக்கு!

  பெங்களூரின் பக்கம் இப்படி இருக்கா? எப்படி இவ்வளவு நாட்கள் வெளியில் தெரியவில்லை? இல்லை எனக்குத்தான் தெரிய்யவில்லையா!

  திபெத் போக இயலாதவர்கள் இனி இங்கு போகலாம்!

 4. rafee permalink
  March 6, 2007 10:19 am

  When i went through the article i felt, i was also traveling with you… 🙂

  Good stuff.

 5. March 6, 2007 11:40 am

  இங்கு நண்பன் ஒருவன். தமிழ் தெரியாது… பக்கத்தை என் பின்னாலிருந்து பார்த்துவிட்டு, புகைப்படங்களின் அழகை புகழ்ந்து தள்ளினான்…

  உமா… கலக்குடா …

 6. March 6, 2007 1:34 pm

  நல்லதொரு உபயோகமான தகவல்களைக் கொண்ட பதிவு தலை..

  சூப்பர்.. நிச்சயம் நீங்கள் ஒரு வித்தியாசமான அநுபவத்தைப் பெற்றிருப்பீர்கள் என்பது உங்கள் பதிவிலிருந்தே விளங்குகிறது..

  தொடரட்டும் உமது பயணம்…

 7. March 7, 2007 12:00 am

  அருமையான கோவில்.. எனக்கும் ஒரு முறை செல்ல வாய்ப்பு கிடைத்தது… பெங்களூரில் இருந்து வார விடுமுறைக்கு ஒரு பயணம் செல்லலாம் 😉

  படங்கள் அருமை 😉

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: