Skip to content

சிவாஜி பாடல்கள் எப்படி திருடு போனது?

March 22, 2007

சிவாஜி பாடல்கள் எப்படி திருடு போனது?

சிவாஜி. நடிகர் ரஜினிக்கு ஒரு கூட்டம்.ஏ.ஆர்.ரகுமானுக்கு ஒரு பட்டாளம், டைரக்டர் சங்கருக்கு ஒரு திரள். இப்படி எல்லோரும் சிவாஜி படத்தின் பாடலுக்கு காத்திருக்க, எல்லோரையும் ஏமாற்றுவது போல இணையத்தில் சிவாஜி படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளிவந்து இருக்கின்றது.ஏப்ரல் 4ஆம் தேதி பாடல் வெளியிடுவது என அறிவித்து இருந்தார்கள்.ஆனால் வியாழன் காலை UK வலைதளம் ஒன்று, மூன்று பாடல்களை MP3 வடிவத்தில் வெளியிட்டு உள்ளது.

முதலில் பாடல்களை கேட்கும் போது இது சிவாஜி பாடல் தானா என்ற சந்தேகம் எழுந்தது. பின்னர் ரகுமானின் வேலைப்பாடு தெரிந்து உண்மை என முடிவிற்கு வரவைக்கின்றது. வெளியான மூன்று பாடல்களில் ஒன்று மெலடி”சஹானா சாரல் பூத்ததோ”- உதித் நாராயணன் குரலில் அருமையாக வந்துள்ளது.நல்ல தமிழ் குரல்கள் நாளெல்லாம் தொலைக்காட்சிகளில் கண்டெடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள், அதை விட்டு அதே குரலுக்கு ஏன் போகின்றார்கள் என தெரியவில்லை. மற்றொன்று “ஒரு குடை சன்லைட், ஒரு குடை மூன்லைட்” என்று பட்டையை கிளப்பும் பாடல் . வார்த்தைகளை கொஞ்சம் கஷ்டப்பட்டு கேட்க வேண்டும்.ராப் பாடல் வகை போல் தோன்றுகின்றது.சங்கர் காட்சியமைப்பில் விளையாடி இருப்பார் என்பது தெளிவாக தெரிகின்றது.வெளிநாடுகளில் படம் பிடித்த பாடல் இதுவாக தான் இருக்கும். அடுத்ததாக வாஜி வாஜி – சிவாஜி என்று துவங்கும் பாடல்.நிச்சம் ஹிட். ஹரிஹரன் – சாதனா சர்கம் பாடி இருக்கிறார்கள்.

மற்ற மூன்று பாடல் எப்படி இருக்கு என்று தெரியவில்லை.

முறையாக பாடல் வெளியிடாமலே இப்படி பாடல் திருட்டுபோவது எப்படி என்று தெரியவில்லை. பலருடைய உழைப்பு திருட்டுபோவதை தடுக்கப்பட வேண்டும். எப்படியும் ஏப்ரல் 4ஆம் தேதி ரகுமானுக்கு பயங்கர வசூல் காத்து இருக்கின்றது.

சிவாஜி பற்றி பேசும்போது சென்ற வாரம் என் அக்கா மகள் சொன்ன கதை நினைவிற்கு வருகின்றது. கிருபானந்த வாரியார் ஒரு கூட்டத்தில் பேசும் போது “என் அப்பன் முருகனின் தந்தை யார் என தெரியுமா?” என கேட்டிருக்கிறார். அதற்கு கூட்டத்தில் இருந்த ஒருவர், முந்தைய இரவு திருவிளையாடல் பார்த்துவிட்டு வந்திருந்தார் போல, “சிவாஜி” என சத்தமாக கூறி இருக்கிறார். அதற்கு கூட்டமே ஹோ வென சிரித்துவிட்டதாம். அதற்கு வாரியார் “எதற்கு சிரிக்கின்றீர்கள்?. அவர் சொன்னது சரியான பதில் தான். நீங்க காந்தியை காந்திஜி, நேருவை நேருஜி என்று ஜி போட்டு அழைப்பதை போல சிவாவை சிவாஜி என அழைத்துள்ளார்” என சொன்னாராம்.

அதனால தான் கேட்கிறேன் சிவாஜி பாடல் எப்படி திருடுபோனது?.:-)

விழியன்

(Keywords : Sivaji,Rajinikanth, Sivaji Songs Released,A.R.Rahman)

Advertisements
7 Comments leave one →
 1. March 22, 2007 6:12 pm

  அதானே, எப்படி திருட்டு போனது?

 2. Kamalesh permalink
  March 22, 2007 11:01 pm

  Even I heard the rap song. Its too good but I dont think it will suit Rajini. Lets wait and see.

 3. மாணிக்கம் permalink
  March 23, 2007 4:13 am

  நீங்க ரொம்பவே ஸ்பீடுனு நெனக்கிறேன்…! வெளிவராத பாட்டுக்கு விமர்சனம்…!!! சரி சரி… கலக்குங்க தலிவரே…

 4. March 23, 2007 8:06 am

  உமா.. நீங்க எப்ப துப்பறிய ஆரம்பிச்சீங்க? 😉

  தகவலைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தலிவா..

 5. meena permalink
  March 23, 2007 8:38 am

  வலத்தளத்தோட லிங்க் குடுத்தா (தப்புத்தான்) நாங்களும் கேப்போமில்ல? 🙂

 6. இளங்குமரன் permalink
  March 23, 2007 1:30 pm

  நண்பர் விழியன் தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்துவது இதுவரை எனக்குத் தெரியாது.

 7. dhevidasan permalink
  March 30, 2007 11:45 am

  unless otherwise the theif realise
  that he is doing sin it will not stop

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: