Skip to content

சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் – ஏப்ரல் 2

April 2, 2007

சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் – ஏப்ரல் 2

ஏப்ரல்-2. சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது.1967 ஆம் ஆண்டு முதல் டானிஷ் குழந்தை எழுத்தாளர் ஹான்ஸ் கிருஸ்டியன் ஆண்டர்சன் பிறந்த தினத்தை சர்வதேச குழந்தைகள் புத்தக தினமாக கொண்டாடுகின்றனர்.(சர்வதேச புத்தக தினம் ஏப்ரல் – 23 என்பது கூடுதல் தகவல்)

வருடாவருடம் IBBY (International Board on Books For Young People) என்னும் நிறுவனத்தில் இணைக்கப்பட்டுள்ள 70 நாடுகளில், ஏதேனும் ஒரு நாட்டில் சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் கொண்டாடப்படும். சிறுவர் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டுள்ள இந்தியாவும் இதில் முக்கிய அங்கத்தினர். இந்த வருடம் நியூசிலாந்து நாட்டிற்கு இந்த விழா நடத்தும் பெருமை வந்து சேர்ந்துள்ளது.

புத்தகம் என்பது பள்ளிக்கூடத்திற்கு பொதி சுமப்பதை போல பிஞ்சுகள் எடுத்து செல்லும் புத்தகங்களை மட்டும் குறிப்பதில்லை. பாடதிட்டத்தினை தாண்டி ஏராளமான விடயங்கள் மொட்டுகள் கற்றுக்கொள்ள வேண்டும்.புத்தங்களின் பயன்களை ஊர் அறியும். அறிந்தும் செயல்படுத்த முடியாமல் இருப்பது மாபெரும் தவறு. சின்ன வயதிலேயே படிக்கும் ஆர்வத்தினை ஏற்படுத்தினால், குழந்தைகள் வளர வளர ஆர்வமும் பெருகும். புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற போது, அவர்களை புத்தக புழுவாகவும் மாற்றிவிடக்கூடாது.

தற்போது தமிழில் குழந்தைகளுக்கான தரமான புத்தகங்கள் நிறைய வரத் துவங்கியுள்ளது.(பாரதி புத்தகாலயம், Prodigy புத்தகங்கள், நேஷ்னல் புக் டிரஸ்ட்) ஆனாலும் இந்த புத்தகங்கள் போதவே போதாது. மேலும் மேலும் நிறைய குழந்தை எழுத்தாளர்கள் உருவாக  வேண்டும். வாழ்வை செம்மைப்படுத்தும், ரசிக்க தூண்டும், அறிவை விஸ்தரிக்க உதவும், நம்பிக்கை தரும் புத்தகங்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு நாளில் எதுவும் நடந்துவிடப்போவதில்லை, ஆனால் அதற்கான துவக்கம் எந்த ஒரு நாளாகவும் அமைந்துவிடலாம்.

வளர்ந்து வரும் ஊடகத்தின் தாக்கம் ஏராளம். குழந்தைகள் தொலைக்காட்சிகள் முன்னே அமர்ந்து நேரங்களை தொலைத்து வருகின்றனர். கார்ட்டூன்கள் சிறார்களின் கற்பனை வளத்தை பெருக்குவதாக இருந்தாலும், வேகமாக மாறும் காட்சிகளாலும் நிறங்களாலும், கண்கள் சீர்குலைந்து போகின்றது.இதனை தாண்டி புத்தகங்களோடு பழக்கம் கொள்ள நாம் ஊக்க கொடுக்க வேண்டும். நாம் என்ன செய்கின்றோமே அதனை நிச்சயம் குழந்தைகளும் செய்வார்கள். புத்தகம் ஒன்றினை எடுத்து நீங்கள் படித்து பாருங்கள், குழந்தையும் படிக்க துவங்கிவிடும்.

இன்று என்ன செய்யலாம்?

உங்களை சுற்றி இருக்கும் குழந்தைகளைக்கு உங்களால் முடிந்த புத்தகம் ஒன்றினை பரிசாக வழங்குங்கள். நாமும் சர்வதேச குழந்தைகள் புத்தக தினத்தை கொண்டாடுவோம்.

புத்தகங்களை சுமையாக நினைக்கும் நிலையினை மாற்றி புத்தகங்களை சுவையாக நினைக்கும் காலத்திற்கு நாம் நம்மால் முடிந்த பங்கினை புரிவோம். 

சுட்டிகள்

ஹான்ஸ் கிருஸ்டியன் ஆண்டர்சன் http://hca.gilead.org.il/www.html

IBBY – India – http://www.ibby.org/index.php?id=427


விழியன்

Advertisements
13 Comments leave one →
 1. பரஞ்சோதி permalink
  April 2, 2007 6:15 am

  வாழ்த்துகள் தம்பி.

  அருமையான மற்றும் மிக அவசியமான கட்டுரை.

  இன்று நான் குறைந்தது 3 புத்தகங்கள் குழந்தைகளுக்கு பரிசாக கொடுக்க இருக்கிறேன்.

 2. Sathish permalink
  April 2, 2007 6:27 am

  Very Nice thought Uma
  I will surely gift some today ..
  Thanks for this very useful info..

 3. thanmathi permalink
  April 2, 2007 6:31 am

  hello paranjothi non koooda koyanthai thann(manasu alavula)… enaku kodunka. 🙂

 4. rafee permalink
  April 2, 2007 6:38 am

  People celebrate lot of days…
  viz…sister day, brother day, mom day, dad dad, grandmother day, grandfather day…and many…:-)

  i consider this as the best “Children Book Day”, this will expand,florish the tree called Knowledge.

 5. April 2, 2007 6:43 am

  A very useful information, Umanath. I must get a book for my son this evening! I have already told him that no more toys from next year – only books! 🙂

  Regards
  kanthi

 6. April 2, 2007 6:43 am

  பரஞ்சோதி அண்ணா, சக்திக்கு நிறைய புத்தகங்கள் வாங்கி தாருங்கள்..

  சதீஷ், உங்க மகளை சீக்கிரம் பார்க்கனும்..

 7. April 2, 2007 6:44 am

  ஒவ்வொரு நாளுக்கும் ஒரு மதிப்பு உண்டு, நாம் எதையும் குறைத்து மதிப்பிடலாகாது.

 8. Shanv permalink
  April 2, 2007 6:44 am

  thanks for the info. very good article…

 9. April 2, 2007 6:47 am

  ஷிபுவுக்கு இன்று கொண்டாட்டம் என்று சொல்லுங்க காந்தியக்கா..:-)

 10. மாணிக்கம் permalink
  April 2, 2007 7:18 am

  மிகவும் உபயோகமான தகவல் அண்ணே… நன்றி…

 11. selva permalink
  April 2, 2007 7:27 am

  Good & Thanks… like this u can give daily atleast one information….

 12. April 2, 2007 8:52 am

  இன்று நான் என்ன நாள் என்று
  தெரியாமலே இந்த பதிவை எழுதி
  இருக்கிறேன். அறியத் தந்தமைக்கு நன்றி.
  http://sirumuyarchi.blogspot.com/2007/04/blog-post.html

 13. April 3, 2007 6:15 am

  நல்லதொரு தகவல் பதிவுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி தலை….

  அருமையான விடயம்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: