Skip to content

நிரலாடல் – ஒரு நிரலாளரின் விளையாடல்

April 11, 2007

நிரலாடல் –  ஒரு நிரலாளரின் விளையாடல் (A Programmer’s Vilaiyadal)

உலகின் மிக பிரபலமான கணினி நிறுவனம். காலை ஒன்பது மணி. “என்னையா காலையில சுண்டல் இல்லை , ஒரு கொழுக்கட்டை இல்லை? என்ன சாப்பாடோ…” சலித்துக்கொண்டே கணபதி உணவகத்தில் இருந்து தன் இருக்கைக்கு வந்து கொண்டிருந்தார். ஓ கணபதி யார் என்று உங்களுக்கு தெரியாது அல்லவா? இவர் பெயர் கணபதி. மென்பொருள் வல்லுனர். அதனை விட வன்பொருளான எலிப்பானை கண்டுபிடித்தது இவரே. மிகுந்த திறமைசாலி. பொறியார்களுடன் உரையாடுவது பொறி கொறிப்பதும் இவருக்கு பிடித்த விடயம். திருமணமே வேண்டாம் என்று கட்டை பிரம்மச்சாரியாக வாழ்பவர்..

வேக வேகமாக படியேறி வந்தார் சரவணன். கணபதியை விட சிறியவர் சரவணன். கடும் உழைப்பாளி. அட இவர் கண்டுபிடித்தது தான் நாம் தினமும் பயன்படுத்தும் மெயில்(மயில் இல்லை மெயில்..சொன்னா புரியாதே !!!). இவருக்கு கீழே இந்த நிறுவனத்தில் ஏராளமான பொறியாளர்கள் வேலை செய்கின்றார்கள். திருமணம் முடிந்து விட்டது என பரவலான செய்தி பரவுகின்றது. வெடுக் வெடுக் என்று கோபம் வந்துவிடும்.

பரமேஷ் இந்த நிறுவனத்தில் தலை. அவருக்கு துணையாக அவரின் மனைவி உமா. பரமேஷும் உமாவும் கிராபிக்ஸ் செய்வது வல்லவர்கள்.இவர்களது கிராபிக்ஸ் காட்சிகளை காண அந்த நிறுவனத்தாரும் சுற்று இருக்கும் மற்ற நிறுவனத்தாரும் காத்துக்கொண்டு இருப்பார்கள்.  இவர்களுடையது நிறுவனம் மாயா ஜால வேலைப்பாடுகளுக்கு பெயர் போனது. தானியங்கி இயந்தரத்தில் இருந்து வந்த சூடாக காப்பி அருந்தியவாரே சரவணன், கணபதி இருக்கை அருகே சென்றனர் இருவரும்..

“இருவரும் நலம் தானே?”

“தாங்கள் இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை?” – சரவணன்..

“ஒரு முக்கிய செய்தி. பேரிக்காவில் இருந்து ஒரு மார்கெட்டிங் நபர் அழைத்து இருந்தார். ஒரு புது கருவித்தொகுதி (Toolkit Software) தன்னிடம் உள்ளது என தெரிவித்தார். அதனை பற்றி மேலும் அறிய கான்பரன்ஸ் கால் போடச்சொன்னார். வாருங்கள் இப்போதே ஆலோசனை கூடத்திற்கு சென்று அவரிடம் பேசுவோம்”

ஆலோசனை கூடத்தில் கணபதி, சரவணன், பரமேஷ், உமா ஆகியோர் உட்கார்ந்து இருக்க, பேரிக்காவில் இருந்தபடி PPTயில் நாரேந்தர் அந்த புதிய கருவித்தொகுதியை பற்றி விளக்கினார். ஆச்சர்யமான நிரல் தான். அவர் விளக்கி முடித்தது நால்வரும் கை தட்டி பாராட்டினர்.

“அட இவ்வளவு நல்ல நிரலா? ஆச்சர்யமாக உள்ளதே” – கணபதி ஆனந்தமாக பேசினார்.

“என்ன எந்த தவறும் இதுவரை கண்டுபிடிக்கவில்லையா? இதை எழுதியது எந்த வல்லுனர்…” – ஆர்வத்தில் சரவணன்.

“எங்க நால்வருடைய கணினியிலும் இந்த நிரலை நிறுவிடுங்க நரேந்தர்.” – உமா.

“இங்கு தான் ஒரு சின்ன பிரச்சனை இருக்கு.” குண்டை தூக்கி போட்டார் நரேந்தர். பெரிய பெரிய விளம்பரத்தின் ஓரமாக * போட்டு கீழே Conditions Apply என்று போட்டு இருக்குமே அது போல.

“இதற்கு ஒரே ஒரு உரிமம் தான் இருக்கு. அதனால் ஒரே ஒரு கணினியில் மட்டும் தான் இதை நிறுவ முடியும். அது மட்டும் அல்ல இதற்கான ஆதண்டிகேசன்(Authentication)  செயல் பட சமீபத்திய மொழியான “காவா”வில் இருந்து ஒரு சின்ன Security Script எழுத வேண்டும். அப்போது தான் இது வேலை செய்யும்”

நால்வருக்கும் ஒரே கவலை. யார் இதை பயன்படுத்துவது என்று. பரமேஷ் பேசினார்

” கணபதியாரே, சரவணரே எனக்கும் உமாவிற்கு ஏற்கெனவே நிறைய கருவிகள் இருக்கின்றது. ஆதலால் உங்களில் யார் முதலில் அந்த நிரலை முதலில் எழுதுகின்றீர்களோ அவர்களுக்கே அந்த  கருவித்தொகுதி..விரைவில் செயல்படுங்கள்…”

நரேந்தர் வந்த வேலை முடிந்தது என வணக்கம் தெரிவித்து அழைப்பில் இருந்து விலகிக்கொண்டார்.

சரவணனுக்கு வேகம். தனக்கு தான் அந்த கருவி என உறுதியாக நினைத்தார். உடனே தன் நண்பர்கள் அனைவருக்கும் மடலிட்டு(மெயிலிட்டு) “காவா” பற்றிய மின்புத்தகங்களை பெற்றார். போததற்கு அருகே இருந்த புத்தக கடைக்கு சென்று “காவா – துவக்கம்” “காவா – முழுத்தொகுதி ” “எளிமையான காவா” “அ முதல் ஃ வரை – காவா” என்ற புத்தகங்கள் வாங்கி படிக்க துவங்கினார்.

கணபதி ஆர்குட்டை திறந்தார். பெயர் தெரியாதவர்களுக்கு எல்லாம் குப்பை(scrap) அடித்தார். “நலமா?” “நீ அந்த பையன் தானே” இப்படி ஆனந்தமாக காலத்தை போக்கினார். ஜீமெயில் திறந்து நண்பர்களுடன் பேசினார். “சாப்பிட்டாயா? ” “காலை வணக்கம்”. புதிது புதிதாக நிலைமை அறிவிப்பில்(status message) செய்தி தந்தார்.

சரவணன் சின்ன சின்ன நிரல்களை போட துவங்கிவிட்டார். “வணக்கம் உலகம்” (Hello World) என்ற நிரலை போட்டு ஆனந்தப்பட்டார் கணபதி அது வரை எதுவும் செய்யவில்லை. சரவணன் வெட்டியாக நடந்த குழு சந்திப்பில் (team meeting) ‘நாளை அனேகமாக முடிந்து விடுவேன். அந்த கருவி எனக்கே’ என்று ஆவேசமாக பேசினார். அன்று மாலை 6.00 மணி, கணபதி சரி ஏதாவது செய்யலாம் என்று கணினியை திறந்தார். www.google.co.in தட்டி “காவா – நம்பகத்தைன்மை நிரல்கள்’ என தட்டினார். 500 சுட்டிகள் வந்தது. இரண்டு மூன்றில் இருந்து குறிமுறை(code) வெட்டி ஒட்டி (Cut, copy, paste)  வேண்டிய நிரலை 6.30 முடிந்தார். பரமேஷிடமும் உமாவிடமும் ஒரு டெமோ செய்து நரேந்தர் அளித்த மாம்பழத்தை ..ச்சே…கருவியினை தட்டிச்சென்றார்.

“We Want Smart Workers than Hard Workers ”

விடயம் கேள்விப்பட்டு கடுப்பாகி சரவணன் அன்று மாலையே விலகல் கடிதத்தை போட்டார். வேறு நிறுவனத்திற்கு சென்ற கதையெல்லாம் நமக்கு எதற்கு?

(முன் குறிப்பு : இதற்கு திருவிளையாடலுக்கும் எந்த தொடர்பும் இல்லை..டமாசுக்கு மட்டும்..)

விழியன்

Advertisements
14 Comments leave one →
 1. மாணிக்கம் permalink
  April 11, 2007 4:32 am

  ஹி ஹி ஹீ… என்னென்னவோ பன்றேள் போங்கோ…!!! ஸ்மார்ட் ஒர்க் பத்தி ஸ்மார்டா சொல்லி முடிச்சிட்டேளே…!!!

 2. April 11, 2007 4:40 am

  கற்பனை அருமை !!!!

  இந்த மாதிரி நிறைய கதைகள் எழுதுங்கள் 😉

 3. Balaganesh permalink
  April 11, 2007 4:57 am

  Nice Thinking 🙂

 4. April 11, 2007 5:18 am

  ஆக என்ன சொல்ல வர்றீங்க நீங்க..

  ஏனுங்க இந்த வலையாடலும் அதில் அடங்குமா? 😉

  நல்லாயிருக்கு போங்க… கலக்கறீங்க…

 5. இளங்குமரன் permalink
  April 11, 2007 5:23 am

  பிற துறை வல்லுநர்களே தமிழுக்கு அதிக பங்களிப்பு செய்கின்றனர் என்பதற்கு இதோ மற்றுமொரு எடுத்துக்காட்டு.

  வாழ்க விழியன்

 6. Loveish permalink
  April 11, 2007 5:36 am

  Fantastic short story……… i like the way you play with my MOTHER TONGUE…. which i can’t do!
  Hearty wishes.

 7. sivakumar permalink
  April 11, 2007 5:40 am

  Hi Macha,
  is this saravana is BISL saravana or your Room mate saravanan.

 8. April 11, 2007 7:06 am

  சிவா,
  விட்டா இந்த கம்பெனி எங்க இருக்குன்னு பேட்பீங்க போல இருக்கே..

 9. Mythili permalink
  April 11, 2007 8:42 am

  Nice one

 10. m r natarajan permalink
  April 11, 2007 11:29 am

  நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.

  கணனி பரிச்சயம் இல்லாதவர்களுக்கு புரியும் படி கொஞ்சம் மாற்றி எழுதினால் நல்லது.

  மெலட்டூர் இரா நடராஜன்

 11. Rajesh Chellappa permalink
  April 11, 2007 12:40 pm

  arumai…pramadham…rombo nalla karpanai.

 12. April 12, 2007 3:23 pm

  விழியன், உங்களை அழகுச்சங்கிலியில் இணைத்துள்ளேன்! உங்கள் அழகுகளைத் தெரிந்து கொள்ள ஆர்வமாயிருக்கிறேன்!

 13. Sashidharan V permalink
  September 27, 2012 3:52 am

  Nice narration 🙂

 14. pepsi1 permalink
  September 28, 2012 5:34 am

  Suprerrrrrr 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: