Skip to content

முங்காரு மலே – கன்னட பட விமர்சனம்

April 20, 2007

முங்காரு மலே – கன்னட பட விமர்சனம்

திரைக்கதை/இயக்கம் – யோகராஜ் பட்

தயாரிப்பாளர் – கிருட்டினப்பா

கேமரா – கிருஷ்ணா

நடனம் – ஹர்சா

நடிகர்கள் – கணேஷ்,சஞ்சனா காந்தி,அனந்த் நாக்

இசை – மனோ மூர்த்தி

கர்நாடக பேருந்துகளில் என்றேனும் பயணிக்கும் போது, கன்னட படத்தினை பார்த்ததுண்டு.ராஜ்குமார் படங்கள் ஓடும்.ஐந்து நிமிடத்திலே தூங்கவைத்துவிடும். வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு கன்னட திரைப்படத்தினை திரையரங்கில் பார்க்க நேரிட்டது. முங்காரு மலே.

அலுவலகத்தில் இருந்து படம் பார்க்க கிளம்பும் போது நல்ல மழை பெய்ந்து ஓய்ந்தது.லேசான தூறல்.”முங்காரு மலே”- அதற்கான அர்த்தம் கேட்ட போது, “இதோ இந்த மழை தான் – கோடை காலத்தின் முதல் மழை, இது தான் முங்காரு மலே” என்றார்கள்.

கணேஷின் ஆரம்பம்

பெங்களூரில் கதை ஆரம்பிக்கின்றது. படத்தின் நாயகன் கணேஷ். இவர் நம்மூரில் காமெடி டைம் நிகழ்ச்சியை போல கன்னட உதயா தொலைக்காட்சியில் நிகழ்ச்சி செய்து பிரபலமாகி இருக்கிறார். “காமெடி டைம்” கணேஷ் என்று அழைப்பார்களாம். இது இவருக்கு இரண்டாவது படம் என்பது நம்பமுடியாத செய்தி.நல்ல முயற்சி.எல்லா காட்சிகளிலும் சிரமம் எடுத்து மிக எளிதாக நடித்துள்ளார். முக பாவங்களை அனாசியமாக கையாண்டு இருக்கிறார்.நடனம் செய்ய முயற்சித்துள்ளார்.

திரைக்கதைக்கு சபாஷ்

கதை நமக்கு பழக்கப்பட்ட கதை தான்.பணக்காரன இளைஞனான கணேஷ் நந்தினி என்ற பெண்ணிடம் மனதை பரிகொடுக்கின்றார்.பெங்களூரில் ஆரம்பிக்கும் இவர்கள் சந்திப்பு, மடிக்கேரி வரை தொடர்கின்றது.பின்னர் தான் அந்த பெண் அவனுடைய அம்மாவின் நெருங்கிய தோழியின் மகள் என தெரியவருகின்றது.நந்தினியன் தந்தை ஒய்வுபெற்ற ராணுவ அதிகாரி.இன்னும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கின்றது. கணேஷும் அவனது தாயும் மடிக்கேரி வந்திருப்பது நந்தினியின் திருமணத்திற்கு என தெரியவருகின்றது.அதன் பின்னர் நான்கு நாளில் நடக்கும் சம்பவங்கள் நந்தினியின் மனதில் மாற்றத்தை உருவாக்கின்றது.காதலித்தவள் கிடைத்ததுவுடன் அவள் தாய் தந்தை இவனிடம் காட்டும் நம்பிக்கை அந்த காதலை மறக்கடிக்க செய்கின்றது. நந்தினியின் தந்தை ஏற்கனவே பார்த்து வைத்த மாப்பிள்ளையை மணக்கின்றாள்.வலுவான கதை இல்லை என்றாலும் எங்கும் தோய்வில்லாத திரைக்கதை.நகைச்சுவையாக நகர்கின்றது.

வசனங்கள் முக்கிய அம்சம் வகிக்கின்றது. மொழி தெரியாதவனாலும் ரசிக்க முடிந்தது.தேவதாசாக தோன்றும் முயல் கதையில் முக்கிய கதாப்பாத்திரம். கடைசி காட்சிகள் உருக்கம்.பழம்பெரும் நடிகர் அனந்த் நாக், தன் நடிப்பால் பல காட்சிகளில் கைதட்டு பெருகின்றார்.

பாடல்கள் சில முனுமுனுக்க வைக்கின்றது. மற்றபடி சுமார் தான். எங்கோ கேட்டது போலவே உள்ளது. ஆனால் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாம்.

எப்போய்..என்னாமா படம் புடிச்சிருக்காரு..

கேமராவை வைத்து விளையாடி இருக்கின்றார் கிருஷ்ணா.கிருஷ்ணாவிற்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கின்றது. ஜோக் நீர்வீழ்ச்சியை படம் பிடித்துள்ளது அற்புதத்திலும் அற்புதம். வழுவழுப்பான நீர்வீழ்ச்சியில் எப்படி அந்த இடத்தில் படம்பிடித்தார் என்பதற்கான விடை இன்னும் கிடைக்கவில்லை.படம் முழுக்க அவர் வேலைப்பாடு தெரிகின்றது. மொழி புரியாவிடிலும் அந்த பத்து நிமிட காட்சிகளுக்காகவே படம் பிடிக்கலாம். பெரிய திரையில் பார்த்தால் அதனை இன்னும் ரசிக்கலாம்.தூரல் காட்சிகள் அழகு.

“காதல் இனியது, தியாகம் அதனினும் இனியது” என மலைப்பாறைகளில் செதுக்கிவைத்து, நாயகன் நீர்வீழ்ச்சியை பார்ப்பது போல படம் முடிகின்றது.கன்னட ரசிகர்களால் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த படம், தமிழ்,தெலுங்கு,கன்னடம், மலையாளத்தில் வரப்போகின்றது.மலையாளத்தில் பாசில் இயக்க கூடும் என்பது கூடுதல் தகவல். தமிழில் இந்த கதைக்கு புதுமுகமே சரியாக பொருந்தும்.காத்திருந்து பார்ப்போம்.

ஆனாலும் கன்னட படங்கள் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்.


விழியன்

K eyWords: Mungaru Male, Kannada Film Review

Advertisements
14 Comments leave one →
 1. மாணிக்கம் permalink
  April 20, 2007 4:57 am

  தோடா வந்ட்டாரு நாட்டாம காரு… கன்னடத்துல வேர எறங்கிட்டேளாக்கும்… கலக்குங் சாரேய்… நல்ல முயற்சி…

 2. selva permalink
  April 20, 2007 5:07 am

  No language for Art – as you said Umanath. Because writting review is also an art.

 3. Prakash.A permalink
  April 20, 2007 5:13 am

  Hi,
  I also want to see the movie,
  Thanks for the Review.
  With luv
  Prakash.A

 4. April 20, 2007 5:19 am

  நல்ல விமர்சனம் தலை..

  நானும் பார்க்கவேண்டும் என்றிருந்தேன் என் நண்பனின் வற்புறுத்தலின் பேரில்… அதற்கு முன் உங்கள் விமர்சனம் நல்ல உதவியாக் இருக்கும்!

  //அந்த பத்து நிமிட காட்சிகளுக்காகவே படம் பிடிக்கலாம்//

  படம் பார்க்கலாம் என்றிருக்க வேண்டுமோ?

  நன்றி உங்கள் தொண்டுக்கு!

 5. April 20, 2007 5:20 am

  சொல்ல மறந்துட்டேன்..

  அது ‘மலே’ இல்லை.. ‘மழே’ என்று என்று என் அலுவலக நண்பன் அகவினான். அவன் பெங்களூரைச் சேர்ந்தவன்.

  ஆங்கிலத்தில் ‘male’ என்றிருப்பதால் இந்தக் குளறுபடியோ? ‘mazhe’ என்றிருந்திருப்பின் நலம்!

 6. April 20, 2007 5:39 am

  நன்றி ராகவன்.

  படம் பிடிக்கலாம் என்று சொன்னது உங்களுக்கு படம் பிடிக்கலாம். 🙂

  Mazhe தான் சரி 😦

 7. shanmuga priya R permalink
  April 20, 2007 6:02 am

  Even i saw tht movi, its good……. especially hero’s acting. Many of my frns watched it more than 5 times… If u ppl get a chance, go watch it. you will understand the language. All normal words only.

 8. sasi permalink
  April 20, 2007 6:37 am

  கன்னடத்துல நல்ல படம்லா வருதா?????????

 9. April 20, 2007 6:56 am

  மளே என்பது தான் சரி. கன்னடத்தில் ‘ழ’ எல்லாம் கிடையாது!

  அப்படியே நம்ம பதிவையும் பார்த்துடுங்க 😉

  http://puthupunal.blogspot.com/2007/03/blog-post_07.html

 10. April 20, 2007 9:27 am

  மக்கா,

  இம்புட்டு சொல்லுறீங்க… சந்தர்ப்பம் கிடைத்தால் பாப்போம். நீங்க சொல்லுற மாதிரி கன்னட சினிமா இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் ரொம்ப உள்ளது.

  இந்த கதை எல்லாம் நம்ம ஊரில பல வருடங்களுக்கு முன்பே வந்து சக்க போடு போட்டுட்டு போயிடுச்சே, மறுபடியும் வந்தா தேறுமா?

  ஒருவேளை ஜெயம் ரவி பண்ணினாலும் பண்ணுவார்.

 11. April 20, 2007 12:18 pm

  மற்ற மொழி படங்களில் நடித்தே காலத்தை ஓட்டுகின்றார்கள் சிலர். என்ன செய்ய சிவா..?

 12. April 21, 2007 2:15 am

  தல .. என்ன கன்னடத்துலயும் கலக்குறீங்க ??

  விமர்சனம் அருமை 😉

  தமிழ் படத்துக்கு கதானாயகன் ஆயிடுங்க;)

 13. இளங்குமரன் permalink
  April 24, 2007 4:27 am

  இதுக்கெல்லாம் உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கின்றது என நான் விழித்துக் கொண்டிருக்கின்றேன்.

 14. May 23, 2007 7:31 pm

  intha vari puriyalai.

  நந்தினியின் தந்தை ஏற்கனவே பார்த்து வைத்த மாப்பிள்ளையை மணக்கின்றாள்

  thiruthi ezhuthalaame ?

  apram “manathai parikodukkindrar” la, pa”ri” kku mattroru “ri” varanum.
  ippo irukkum “pari” kku kuthirai nu artham.:)

  -Sadish

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: