Skip to content

சர்வதேச புத்தக தினம் – ஏப்ரல் 23

April 23, 2007

சர்வதேச புத்தக தினம் – ஏப்ரல் 23

இன்று சர்வதேச புத்தக தினம்.( ஏப்ரல் 23).

1616ஆம் ஆண்டு மறைந்த, உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர், நாடக ஆசிரியர் வில்லியம் சேக்ஸ்பியர், மற்றும் டான் குயிக்சாட் (Don Quixote) புத்தகம் எழுதிய கிரவாண்டிஸ் இருவரும் இறந்த தினம் இன்று. அவர்கள் இருவரின் நினைவாக யுனஸ்கோ நிறுவனம் 1995 ஆண்டு முதல் ஏப்ரல் 23ஆம் நாளை சர்வதேச புத்தகம் மற்றும் காப்புரிமை தினமாகக் கொண்டாட அறிவித்துள்ளது.இதன் மூலம் படிக்கும் ஆர்வத்தினை இளைஞர்கள், மாணவர்கள், முதியவர்கள் என அனைவருக்கும் உண்டு செய்யவும், அறிவுச்சொத்தினை (Intellectual Property) காக்கவும் வழி செய்யும் என கருதுகின்றனர்.

நீங்கள் ஏற்கனவே தீவிர புத்தக வாசகராக இருப்பின் உங்கள் நண்பர்களுக்கு புத்தகங்களை வாங்கி தாருங்கள். இன்னும் புத்தகங்கள் வாசிக்க துவங்காதவராக இருப்பின் இன்றே நல்ல நாள் என்று கருதி புத்தகங்களை வாங்கி படிக்க துவங்குங்கள்.

புத்தகங்கள் பற்றிய சிலரின் கருத்துக்கள்

* வாழும் மனிதர்களுக்கு அடுத்தபடி உலகில் மிகச் சிறந்தது புத்தகங்கள் தான் – சார்ல்ஸ் கிங்ஸ்லே

* நூலகம், மூளைக்கான மருத்துவமனை – யாரோ

* பிரதிபலிக்காத வாசிப்பு, ஜீரணிக்காத உணவினைப் போல – எட்மண்ட் ப்ரூக்

* புத்தகம் என்பது உங்கள் கையோடு பயணிக்கும் தோட்டம் – சீன பழமொழி

* சிறந்த புத்தகம் என்பது மந்திரக் கம்பளம் போல, அது நாம் நுழைய முடியாத உலகிற்கு அழைத்துச்செல்லும் – காட்ன்

* புத்தகங்கள் நாட்டின் மதிக்கமுடியாத சொத்து, அடுத்த தலைமுறைக்கு தரப்போகும் சிறந்த் சொத்து – ஹென்றி

* நாட்டின் கலாச்சாரத்தை ஒழிக்க புத்தகங்களை எரிக்க வேண்டாம், மக்கள் வாசிப்பதையே நிறுத்துங்கள்

இவை புத்தகங்கள் பற்றிய மிகச்சிறிய கருத்துக்கள். புத்தகங்கள் தங்கச் சுரங்கத்தினை விட விலைமதிப்பற்றது, வானத்தைவிட எல்லைகளற்றது, பூவை விட மென்மையானது, யுத்தத்தைவிட வலுவானது.

எழுத்தாளர் முகில் எழுதிய “காலம் நம் கையில் தானே” என்னும் பாடலில் வரும் வரிகளை அடிக்கடி நினைப்பதுண்டு

“சின்னஞ்சிறிய கருந்தீவில்
நாம் தன்னந்தனியே இருந்தாலும்
ஒரு புத்தகம் நம் கையில் கிடைத்தால்
நம் தனிமையும் தவிப்பும்
தானாக மறையும்..
தாதைய தாதைய தரிகிடதித்தோம் தரிகிடதித்தோம்…”

புத்தகங்களை கொண்டாடுவோம்…

புத்தகங்களை வாசியுங்கள்
வாழ்வினை நேசியுங்கள்..

இந்த நாள் தொடர்பான சில சுட்டிகள்

http://portal.unesco.org/culture/en/ev.php-URL_ID=33489&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201.html http://en.wikipedia.org/wiki/World_Book_and_Copyright_Day


விழியன்

(என் பங்கிற்கு 400 ரூபாய் மதிப்புள்ள புத்தங்களை விற்கப்போகிறேன்)

Key Words: World Books Day, International Books and Copyrights Day, உலக புத்தகங்கள் தினம்

9 Comments leave one →
  1. மாணிக்கம் permalink
    April 23, 2007 6:08 am

    நன்றி… தாங்கள் படித்த / கேள்விபட்ட புத்தகங்களின் முன்னுரைகளை பகிர்ந்து கொண்டாலும் நன்று… உதவியாக இருக்கும்…

  2. April 23, 2007 6:11 am

    செய்துவிடலாம் மாணிக்கம்.

  3. April 23, 2007 6:12 am

    புத்தகங்களி்ன் தோழனாக உன்னைபோல் நண்பர்கள் இருக்கும் வரையில் புத்தகதினம் சிறக்கும்.

    அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்ப்போம்.

  4. April 23, 2007 6:18 am

    //புத்தகங்கள் நாட்டின் மதிக்கமுடியாத சொத்து, அடுத்த தலைமுறைக்கு தரப்போகும் சிறந்த் சொத்து//

    உண்மை.

    பிறநாட்டவருக்கு தன் நாட்டின் பெருமையை உணர வைப்பது புத்தகங்கள் தான்.

  5. shanv permalink
    April 23, 2007 6:43 am

    Very good info 🙂 nice article…

  6. Loveish permalink
    April 23, 2007 6:44 am

    Thanks for the Good Info, I never no this.

    Wish to you, to enhance this further.

  7. April 23, 2007 6:49 am

    அருமையான தகவல்..

    பல்வேறு விஷயங்களைப் பயனுள்ள முறையில் பதிவு செய்கிறீர்கள்..

    நன்றி தலைவா.. புத்தகங்கள் பற்றிய பழமொழிகளின் தொகுப்பு – அருமை!

    //பிரதிபலிக்காத வாசிப்பு, ஜீரணிக்காத உணவினைப் போல – எட்மண்ட் ப்ரூக்//

    சூப்பர்ர்ர்ர்…..

  8. Rajarajan permalink
    April 23, 2007 9:17 am

    “Every day is special” – Made in vizhiyan pakkam.

    useful info for historical novel readers
    http://www.tamil.net/projectmadurai/pmfinish.html

  9. இளங்குமரன் permalink
    April 23, 2007 12:06 pm

    அருமையான பதிவுகள். தொடரட்டும் உங்கள் தொண்டு.

    உங்கள் இரசிகன்
    இளங்குமரன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: