Skip to content

டாலும் ழீயும் – சிறுவர் கதை

April 25, 2007


டாலும் ழீயும்

டர்ர்ர்ர்ர்…சத்தம் போட்டுட்டே போறாங்க டாலும் ழீயும்.முதல்ல டால் யாரு ழீ யாருன்னு தெரியுமில்லையா? ஓ தெரியாதா? டால் ஒரு அழகிய டால்பின். ழீ ஒரு தங்க மீன். இரண்டும் நண்பர்கள். இருவரும் ஒரே பாதையில் தான் பள்ளிக்கு செல்லவேண்டும். அப்படி செல்லும் போது தான் நண்பர்களாக மாறினார்கள். காலையும் மாலையும் ஒன்றாக பள்ளிக்கு சென்று ஒன்றாக திரும்பிவருவார்கள். வேறு வேறு பள்ளியில தான் படிக்கிறார்கள். விடுமுறை நாட்களில் வெகு தூரம் விளையாட செல்வார்கள். ரொம்ப தூரம் போகும் போது எல்லாம் ழீ, டாலுக்கு மேல் உட்கார்ந்து கொள்ளும். ழியால வேகமா நீந்த முடியாது இல்லையா?

அப்படி தான் ஒரு நாள் இருவரும் வெகு தூரம் சென்றுவிட்டார்கள். அவர்கள் ஊரில் இருந்து மீனூர், சுராபுரம், சிப்பிப்பாடி என எல்லா ஊர்களை தாண்டி கடற்கரை அருகில் வந்துவிட்டார்கள்.மற்ற இடத்தைவிட இந்த இடத்தில் தண்ணீர் நல்ல நிறத்தில் இருந்தது. நிறைய மீன்கள் ழீயின் நிறத்தை பார்த்து “எந்த ஊரில் இருந்து வரீங்க?” என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். ழீக்கு பெருமையாக போய்விட்டது.யாரும் இல்லாத இடத்திற்கு நீந்தி சென்றார்கள்.

டால் மேல் துவாரத்தால் தண்ணீர் விடுவது ழீக்கு ரொம்ப பிடிக்கும்.அப்படி தண்ணீர் விடச்சொல்லி ழீ ரசிக்கும். அப்போது திடீர் என்று ஒரு வலை ழீ மீது விழுந்தது. மேலே ஒரு மோட்டர் படகு இருந்தது. அதில் இருந்த சின்ன பையன் ஒருவன் தான் இந்த வலையை போட்டிருக்கான். அப்பா பெரிய வலை வைத்து வீசிக்கொண்டு மற்றொரு புறம் இருந்தார். ழீ சின்ன பையனின் சின்ன வலையில் மாட்டிக்கொண்டது. தங்க மீனை பார்த்ததும் அதிசயித்தான். ஆனந்தம் அடைந்தான்.

டாலுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தாத்தா அடிக்கடி சொல்வார்கள், வெகுதூரம் தனியே செல்லவேண்டாம், மனிதர்கள் பிடித்துக்கொள்வார்கள் என்று, அதெல்லாம் இப்போது தான் நினைவுக்கு வந்தது. சரி அந்த பையனிடம் கேட்கலாம் என்று தண்ணீருக்கு மேலே வந்து

“நண்பனே!!!” என்றது டால்

டால்பின்னை முதன்முதலாக பார்த்த பையன் முதலில் பய்ந்தான். பின்னர் அது டால்பின் என்று தெரிந்து கொண்டான். எப்பொழுதோ புத்தகத்தில் பார்த்த நியாபகம்.

“என்ன டால்பின்?” என்று கேட்டான்.

“என் நண்பன் ழீயை நீ விடுவித்துவிடேன்..”

“ழீ யா?”

“ஆமாம். உன் வலையில் மாட்டி இருக்க தங்க மீன் பேரு தான் ழீ”

“ஓகோ..முடியாது..தர முடியாது..”

என்ன இந்த பையன் இப்படி சொல்லிவிட்டான். இனி ழீயை பார்க்கவே முடியாதே என்று டாலுக்கு வருத்தமா போய்விட்டது.

“சரி நான் உன் நண்பனை விட்டுவிடுகின்றேன், ஆனா பதிலுக்கு நீ என்ன தருவ?”

டால் யோசித்தது. என்ன தருவது? ழீக்கு இணையா எதுவேண்டுமானாலும் தரலாம். தன் கை பையை துழாவியது. வாலை சீவிக்கொள்ள பயன்படுத்தும் சீப்பு இருந்தது,சில விளையாட்டு பொருட்கள் இருந்தது, ஒரு அழகிய முத்து இருந்தது, ஒரு கூழாங்கல் இருந்தது.

முத்தையும், கூழாங்கல்லையும் எடுத்து

“இது தான் இருக்கு…”

சிறுவன் அந்த கூழாங்கல்லை எடுத்துக்கொண்டு..”ஐ..நல்லா இருக்கு…” என்றான்.

“ழீயை விட்டுவிடேன்…”

என்று டால் கொஞ்சியது…

“ஓடி போ ழீ…உங்க நட்பை பத்தி எங்க ஊரில போய் சொல்றேன்….” என்று ழீயை கடலில் விட்டான்.

விட்டால் போதும் என்று டால் மீது ஏறி ழீ பறந்தது. ச்ச்ச..எப்படி பறக்க முடியும்? நீந்தி சென்றது…


விழியன்

KeyWords : Kids Story,Children Story in Tamil

Advertisements
18 Comments leave one →
 1. April 25, 2007 5:14 am

  hi.
  very nice story.

  for childern it is very very good story.

 2. மாணிக்கம் permalink
  April 25, 2007 5:15 am

  கலக்குடா தமிழா 🙂

 3. Parameswary permalink
  April 25, 2007 5:23 am

  The fishes name are so cute…
  Nice story for kids.. Short and sweet..
  Well done thozha… 🙂

 4. April 25, 2007 5:40 am

  நல்லாயிருக்கு தலை..

  ஒற்றுமை, நட்பு, விட்டுக்கொடுத்தல், மூத்தோர் சொல்பேச்சுக் கேட்டல் – போன்ற கருத்துக்களை வலியுறுத்தும் கதை.

  தொடரட்டும் உங்கள் கலைச்சேவை.
  வாழ்த்துக்கள்.

 5. bala permalink
  April 25, 2007 5:42 am

  Good one, Vizhiyan… definitely i will tell this story to my 1.5 year old kid as he is more keen on stories like this….

 6. shanv permalink
  April 25, 2007 5:43 am

  so cute.. 🙂 really a good piece of work… nice names for the fishes and for the places… 🙂

 7. Gayathri permalink
  April 25, 2007 6:51 am

  Very NICE STORY FOR KIDS

 8. April 25, 2007 7:39 am

  நல்ல கதை விழியன்.

  சிறுவன் கூழாங்கல்லை எடுக்க வைத்து அவன் பால் மனத்தை காட்டி வீட்டீர்கள்

 9. RajaSingh permalink
  April 25, 2007 7:41 am

  Story was very nice.Post more stories.It will be helpful for me to tell my 19 month kid.He s very interested in reading books & listening to stories

 10. Loveish permalink
  April 25, 2007 8:41 am

  A Big round of Applause to this number!

  What is the inspiration for those Names???

  Keep doing good in your pace.

 11. April 25, 2007 8:46 am

  பெரிய குழந்தைகளே மிக்க நன்றி..

  ராஜா, உங்க குழந்தைக்கு நிறைய கதைகள் தயாராகிட்டு இருக்கு..கவலை வேண்டாம்..

 12. இளங்குமரன் permalink
  April 25, 2007 12:59 pm

  என்னிடம் சின்னச் சின்ன உதவி கேட்ட சிலரிடம் என்வீட்டிலும்தான் நேரமில்லை வினாத்தாள் தயாரிக்க வேண்டும் எனக் கூறினேன். ஆனால் உங்கள் கதையைப் பார்த்ததும் எல்லாவற்றையும் மூடிவைத்துவிட்டு கதையைப் படித்து முடித்து விமர்சனங்களையும் படித்துவிட்டு எனது கருத்தையும் எழுதி முடித்துவிட்டு……. நேரமாகிவிட்டது வினாத்தாள் தயாரிக்க வேண்…..

 13. April 26, 2007 1:26 am

  கதை அருமை.. குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டிய பல நற்குணங்களை ஒரே கதையில் கொடுத்துவிட்டீர்கள் !!!

 14. Sundararaman permalink
  April 26, 2007 1:17 pm

  Nalla arumayana Sirukathai.Menmelum ezutha en vazthukal.

 15. Abinandan permalink
  April 27, 2007 5:52 am

  The place names are very nice ..
  Meenur,surapuram, sippipadi…
  beautiful names

 16. savitha permalink
  May 4, 2007 6:32 am

  nice one.keep it up.ungal thamizh sevai vallara vazhuthukal.

 17. Dev Anand permalink
  May 25, 2007 8:35 am

  Kadhaiyil ulla natpin azhaghu romba pidichirukku…

 18. S.NATARAJAN permalink
  September 3, 2007 1:39 pm

  fentasstic

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: