Skip to content

டம்டம் – குழந்தைகள் கதை

May 4, 2007

டம்டம் – குழந்தைகள் கதை

யானிகா பள்ளியில் இருந்து வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தாள். அவள் யோசனை எல்லாம் வகுப்பில் ஆசிரியை கூறியதையே சுற்றியபடியே இருந்தது. “திங்கள் கிழமை வரும் போது எல்லோரும் உங்க Insect Box தயார் செய்து வர வேண்டும். ஒரு மேஜைக்கு ஒரு பெட்டி போதும்”. இவர்கள் மேஜையில் யானிகா, திவ்யா, ராகவி உட்கார்ந்து இருந்தனர். ஒவ்வொருவரும் சில பூச்சி பிடித்து வரவேண்டும் என பிரித்ததில் யானிகாவிற்கு வந்தது பட்டாம்பூச்சி. பட்டாம்பூச்சிக்கு எங்கு போவது? அம்மா அப்பா கிட்ட பிடிச்சி தர சொல்லலாமா? இன்னும் இரண்டு நாள் தான் இருக்கு. முதலில் அம்மா கிட்ட கேட்கலாம் என நினைத்து வீட்டிற்கு விரைந்தாள்..

“அம்மா..அம்மா…”

“அம்மா இங்க சமையலறையில் இருக்கேன். ட்ரஸ் கழற்றி வெச்சிட்டு, முகம் கழுவிட்டு வா பாக்கலாம்”..

எல்லாம் முடித்து சமையலறைக்கு சென்றாள்.இரண்டு தோசை அம்மா கொடுத்தாள்.ஒன்றை மட்டும் சாப்பிட்டுவிட்டு..”அம்மா பட்டாம்பூச்சி எங்கம்மா கிடைக்கும்?” என்று பள்ளியில் தான் செய்யவேண்டிய வேலையை அம்மாவிடம் சொன்னாள். நிறைய பட்டாம்பூச்சிகள் பாட்டி வீட்டின் தோட்டத்தில் இருக்கும்.மறுநாள் சுப்பு மாமாவை அழைத்து சொல்வதாக சொன்னாள் அம்மா. தோட்டத்தில் ஏராளமான பூச்சிகள் இருக்கும்,கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அம்மா சொன்னாள். பட்டாம்பூச்சி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை வந்த பிறகே வீதியில் சென்று நண்பர்களுடன் விளையாட ஆரம்பித்தாள்.

மறுநாள் சுப்பு மாமா,யானிகாவை வண்டியில் பாட்டிவீட்டிற்கு அழைத்து சென்றார். “யானி குட்டி இப்ப தான் பாட்டி நியாபகம் வந்ததா?”
“பாட்டி என்னை தோட்டத்துக்கு கூட்டிட்டு போங்களேன்..”
“வாடா கண்ணா..”
தோட்டத்தில் நிறைய மலர்கள். வண்ண வண்ணமாக. செடிகளும் இருந்தது. பாட்டி மெதுவாக அழைத்து சென்றாள்.”பார்த்து வா யானி”. இது வரை இந்த தோட்டத்திற்கு ஏன் அழைத்துவரவில்லை என்று பாட்டியை கோபித்துக்கொண்டாள்.

மஞ்சள், நீலம், சிகப்பு என அனைத்து வண்ணங்கள் கலந்த ஒரு பட்டாம்பூச்சியை சுப்பு மாமா பிடித்து கொடுத்தார். ஒரு கவரில் போட்டுக்கொடுத்தார். தோட்டத்தைவிட்டு வரவே மனமில்லை யானிகாவிற்கு. சுப்பு மாமா எங்கோ போகவேண்டும் என்பதால் அவசரமாக வீட்டில் விட்டுவிட்டார்.

இரவு அப்பாவிடம் காட்டிய போது பட்டாம்பூச்சி இறந்து இருந்தது. அழகாக இருக்கு என்று அப்பா கூறினார்.யானிகாவிற்கு மனசே சரியில்லை.பட்டாம்பூச்சியை பார்க்க ஆசையாக இருந்தது, ஆனால் அது உயிர் போன நிலையில் இருப்பதை அவளால் தாங்கமுடியவில்லை.படுக்கைக்கு சென்றாள் யானிகா…

“யானிகா..யானிகா…”
யாரது தன்னை இந்த நேரத்தில் அழைப்பது என விழித்து பார்த்தாள். சுற்றிலும் யாரும் காணவில்லை.

“யாரது..?” பயந்தாள்…”பயப்பட வேண்டாம் யானிகா..நான் தான் பட்டாம்பூச்சி, இங்க மேஜைமேல பாரு…”

மேஜை மேல், பட்டாம்பூச்சி படபடத்துக் கொண்டிருந்தது.

“ஏய்..நீ தான் இறந்துவிட்டாயே எப்படி உயிர் வந்தது…”

“என்னை ஏன்பா கவருக்குள்ள போட்ட?பாவம் இல்லையா நான்..”

“ஆமாம் எனக்கே கஷ்டமா தான் இருந்துச்சு பா”
நண்பர்கள் போல இருவரும் பேசிக்கொண்டனர். பட்டாம்பூச்சி தான் பிறந்த கதை, வளர்ந்த போது எப்படி உருமாறியது எல்லாவற்றையும் யானிகாவிடம் சொல்லியது..

“சரி நீ தூங்கு யானிகா..காலையில லேட்டா எழுந்தா அம்மா திட்டுவாங்க இல்ல…”

“சரி பட்டாம்பூச்சி..ஆமா உன் பேரு என்ன?”

“டம்டம்”

“குட் நைட் டம்டம்”

காலையில் எழுந்த போது யானிகாவிற்கு நடந்தது கனவா இல்லை நினைவா என தெரியவில்லை..கவரை தேடிப்பார்த்த போது பட்டாம்பூச்சி இறந்த நிலையிலே தான் இருந்தது..”டம்டம் இறந்து போச்சு…” அழத்துவங்கினாள் யானிகா.


விழியன்

KeyWords: Vizhiyan Kids Stories Children Story

Advertisements
11 Comments leave one →
 1. மாணிக்கம் permalink
  May 4, 2007 8:31 am

  🙂 கற்பணை குதிரைய தட்டி விட்டீங்க போல… நல்லா இருக்கு…

 2. May 4, 2007 8:34 am

  சிறுவர்களுக்கான குட்டிக்கதைகள் எழுதி வரும் அருமை நண்பர் திரு. உமனாத் @ விழியன் அவர்களுக்கு எனது குழந்தைகளின் சார்பாக நன்றிகளும் – வாழ்த்துக்களும்

  இப்படிக்கு

  ஷாரா

 3. ஆனந்த் permalink
  May 4, 2007 9:20 am

  சிறுவர் கதை நன்றாக இருக்கிறது.

 4. Mrs.RajaSingh permalink
  May 4, 2007 9:58 am

  Kadhai super.Antha battampoochi in peyar kutties easy aaga solla koodiya oru peyar.Thanks for ur story.

 5. May 5, 2007 1:06 am

  சிறுவர் கதை அருமை !! 😉

  சீக்கிறம் ஒரு நல்ல சிறுவர் இதழ் ஆரம்பியுங்கள்!!!

  அன்புடன்
  தனசேகர்

 6. shanv permalink
  May 7, 2007 5:46 am

  Romba nalla irukku…
  kuzhandhaigalukkaga ipdi oru article… very thoughtful… 🙂

 7. paransothi permalink
  May 9, 2007 4:34 am

  அட்டகாசமான கதை.

  நம்மையும் குழந்தைகள் காலத்திற்கு கொண்டு சென்று விட்டீர்கள். எளிமையாக நீங்க சொல்லும் பாணி அருமையாக இருக்குது.

  தொடர்ந்து உங்கள் கற்பனை குதிரையை அவிழ்த்து விட்டு, பல கதைகள் படைக்க வாழ்த்துகள்.

  அன்புடன்
  பரஞ்சோதி

 8. Bhuvaneswari permalink
  May 9, 2007 4:45 am

  நல்லா இருக்கு.

 9. May 9, 2007 4:50 am

  உங்கள் ஊக்கம் உற்சாகப்படுத்துகின்றது

 10. Balaganesh permalink
  May 9, 2007 4:53 am

  Romba nalla irukku…:-)

 11. சில்வியா permalink
  May 30, 2009 1:46 am

  கதை நன்றாக இருந்தது. யவனிகாவை போல எனக்கும் மனசு சரியில்லை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: