Skip to content

காக்கா ஏன் கறுப்பாச்சு? – குழந்தைகள் கதை

May 16, 2007

காக்கா ஏன் கறுப்பாச்சு?

(பர்மா நாட்டு நாடோடிக்கதை)

ரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சுசாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்ளை. அப்ப எல்லாம் காக்கா ரொம்ப தூரம் பறக்குமாம். சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம்.அப்படி இருந்த காக்கா எப்படி கருப்பாச்சு? ஊங் குட்டுங்க செல்றேன்..

சூரியபூர் நாட்டோட ராஜாவுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு அழகான இளவரசி பிறந்தாங்கலாம். கொள்ளை அழகு. குழந்தையில இருந்து வீட்டை விட்டே வெளிய வரலையாம்.நல்ல பெரியவங்களாகி கல்யாண வயசுல வெளிய விளையாட வந்தாங்கலாம். அவங்க பேரு அங்கிகா. அவங்க விளையாடறத பாத்த சூரியனுக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சாம். இளவரசிக்கும் சூரியனை பிடிச்சிடுச்சாம். தினமும் விடியற்காலையில எழுந்ததில இருந்து சூரியன் கிட்ட தான் பேசிட்டு இருப்பாங்கலாம். சூரியனும் பூமிய சுத்திக்கிட்டே இளவரசிகிட்ட பேசிட்டு இருந்ததாம். ரொம்ப நல்ல நண்பர்களா மாறிட்டாங்க. ஒரு நாள் சூரியன் இந்த இளவரசிக்கு பரிசு கொடுக்க நினைச்சுதாம்.

சூரியன் கிட்ட வரைக்கும் காக்கா பறந்துச்சு இல்லையா? அதனால சூரியன் ஒரு காக்காவ கூப்பிட்டு பையில சந்தனம்,வாசனை திரவியங்கள், முத்து மாலை எல்லாம் கொடுத்து இளவரசிகிட்ட கொடுத்துடுன்னு சொல்லிட்டு மறஞ்சி போச்சாம். சாய்ந்திரம் ஆகிடுச்சுன்னா சூரியன் தூங்க போயிடும் இல்லையா? காக்கா அந்த பைய தூக்கிகிட்டு இளவரசி இருந்த அரண்மனைய நோக்கி பறந்து போயிட்டு இருந்துச்சாம்.

வழியில திருமண ஊர்வலம் போயிட்டு இருந்திருக்கு. நிறைய பழங்கள்,உணவுப்பொருட்கள் எடுத்துட்டு போனாங்க போல.காக்காவுக்கு கொஞ்ச உணவாச்சும் கிடைக்குமேன்னு ஆசை. அரண்மனைக்கு போயிட்டு வந்தா தாமதமாகி போகும். சரின்னு அந்த பைய ஒரு மரத்தில மாட்டிட்டு திருமண ஊர்வலத்துக்கு போச்சாம். மரத்துக்கு கீழ இருந்த ஒருத்தன் இந்த காக்கா பைய வெச்சுட்டு போனதை பாத்துகிட்டே இருந்தானாம். நல்ல வாசனை வந்தது. அதனால மரத்தில ஏறி பைய திறந்து பாத்து இருக்கான். பைக்கு உள்ள சூரியன் கொடுத்து அனுப்பின எல்லா பொருளையும் பாத்து சொக்கி போயிட்டானாம்.உடனே எல்லாத்தையும் எடுத்துகிட்டு மரத்தில இருந்த குப்பை எல்லாம் பையில எடுத்து போட்டுட்டு கிளம்பிட்டான்.

காக்கா நல்லா சாப்பிட்டு வந்துச்சாம். பைய எடுத்துகிட்டு இளவரசி அரண்மனைக்கு போயிடுச்சாம்.அங்க இளவரசிகிட்ட சூரியன் கொடுத்த பைய கொடுத்துச்சாம். திறந்து பார்த்த இளவரசிக்கு அதிர்ச்சி. ச்ச..இந்த சூரியன் ஏன் இப்படி பண்ணிடுச்சு. என் மேல அன்பே இல்ல. எல்லாம் நடிப்பு. அவன் பேச்சு இனிமேல் டூன்னு சொல்லிட்டு பைய விசிரியடிச்சிடுச்சாம்.

மறுநாள் காலை,சந்தோஷமா இளவரசிய பார்க்கலாம்ன்னு வந்த சூரியனுக்கு தூக்கி வாரி போட்டுச்சாம். அந்த பை கீழ விழுந்திருந்தத பாத்தே ஏதோ தப்பு நடந்திருக்குதுன்னு புரிஞ்சிடுச்சாம்.பயங்கர கோபம் வந்துடுச்சாம். காக்காவை பார்த்து கோவமா பாத்த உடனே வெள்ளையா இருந்த காக்கா கறுப்பா மாறிடுச்சாம். அதனால தான் சூரியன் கிட்டகூட பறக்க முடியாம போச்சாம். கிட்ட இருந்த சூரியனும் பூமி மேல கோபம் வந்து தூரமா போயிடுச்சாம்.

இப்ப தெரிஞ்சதா காக்கா ஏன் காக்கா கறுப்பாச்சுன்னு?

விழியன்

12 Comments leave one →
  1. மாணிக்கம் permalink
    May 16, 2007 4:17 am

    🙂

  2. May 16, 2007 4:20 am

    ஆஹா!

    சுவையான கதையாக இருக்குதே.

    கொஞ்ச நாள் முன்னாடி தான் பட்டாணி, வெங்காயம் கதை ஒன்றை படித்தேன். இப்போ உங்க காக்கா கதையா?

    அருமையாக இருக்குது, இது போன்ற நாடோடி கதைகள் நிறைய கொடுங்கள்.

    அன்புடன்
    பரஞ்சோதி

  3. Parameswary permalink
    May 16, 2007 4:21 am

    பைக்கு உள்ள சூரியன் கொடுத்து அனுப்பின எல்லா பொருளையும் பாத்து சொக்கி போயிட்டானாம்.உடனே எல்லாத்தையும் எடுத்துகிட்டு மரத்தில இருந்த குப்பை எல்லாம் எடுத்து போட்டுட்டு கிளம்பிட்டான்.
    //எதில் எடுத்துப் போட்டான்? பையில்தானே? கொஞ்சம் விரிவா எழுதுங்க தோழா..
    கதை (ஹா ஹா) நல்ல இருந்தது..
    அடுத்தது, ஏன் அன்னம் வெள்ளையா இருக்குனு எழுதுங்க… 🙂

  4. May 16, 2007 5:48 am

    🙂

    ஆக நாம் காக்காவுக்கு நன்றி சொல்லனும் அப்படி தானே 😉

    இம்புட்டு தூரமா இருக்கும் போது அனல் மண்டய பிளக்குது. பக்கத்தில் இருந்தால் அம்மாடியோவ்…

  5. May 16, 2007 6:54 am

    நல்ல சுவையான கதை… 🙂

    சென்ஷி

  6. May 17, 2007 1:08 am

    கதை கலக்குது … விழியன் மாமா 😉

    (சின்ன குழந்தைகள் உங்கள uncle னு தான கூப்பிடுவாங்க .. அதான் மாமா 😉 )

    அன்புடன்
    தனசேகர்

  7. கோபு permalink
    May 21, 2007 7:10 am

    அநேகமா அந்த காக்கா தமிழ்நாட்டு காக்காவா இருக்கும்…… நாம தானே பசி வந்தா பத்தும் பறந்து போகும்ன்னு (எழுதி) (படிச்சி)ருக்கோம்…. இது எப்படியிருக்கு…..

  8. rani permalink
    July 3, 2008 4:44 am

    un kathai romba nalla irrukku.athai vida marumozhi romba interestinga irrukku

  9. raja permalink
    June 14, 2009 2:51 pm

    intha kathai romba nallaeruku

  10. ராம் permalink
    September 1, 2012 7:19 am

    அருமை புதுமை இனிமை

  11. ammu permalink
    June 1, 2013 4:28 am

    intha kathai romba nalla iruku

Leave a reply to நாகை சிவா Cancel reply