Skip to content

யுவனுடன் ஒரு சந்திப்பு

May 21, 2007

யுவனுடன் ஒரு சந்திப்பு

மதுரையில் பாம்பாட்டி சித்தனை சந்தித்தபோது ஒரு முறை யுவன் சந்திரசேகரிடம் அலைபேசியில் பேசியுள்ளேன். பேசும் சித்தார்த்தும் ஹலோ தமிழரும் அவரை சந்தித்த போது என் பெயரும் அங்கே அடிபட என்னை நினைவில் வைத்து இருந்தார். சென்ற வார இறுதியில் சென்னைக்கு அலுவலக நிமித்தமாக செல்ல நேர்ந்தது. அக்னி உச்சத்தில் இருந்தது.நண்பனின் அறையில் இருந்து வெளியே கூட விருப்பமில்லாமல் முடங்கி கிடந்தேன். யுவனிடம் பேசலாம என்று அழைத்தேன். “நீங்க டயல் செய்த எண் பிசியாக உள்ளது” என்றது. ஒரு மணி நேரம் கழித்து ஒரு அழைப்பு “சந்திரசேகர் பேசுகிறேன்” என்றார். மாலை சந்திக்கலாமா என்றேன், வேறு இடத்திற்கு செல்வதாக தெரிவித்தார். இப்போது வெயில் அதிகமாக இருக்கிறது வரவில்லை என்றேன். உரையாடல் சுவாரஸ்யத்தில் உடனே கிளம்புகிறேன் என்று அலைபேசியை வைத்தேன்.

மாம்பலம் ரயில் நிலையத்தில் அத்தனை கூட்டம் இருக்கும் என்று நினைக்கவில்லை. அடித்து பிடித்து ஏறி ஜன்னலில் இடம்பிடித்தேன். அரைமணி நேரம் எதிரே இருந்த லத்திகாவிடம் விளையாடி வந்தேன். லத்திக்கா 2-3 வயது சிறுமி. சானடோரியம் ஸ்டேஷன் வந்தது. ஆட்டோவில் யுவன் வீடு சேர்ந்தேன். வாசலிலேயே காத்திருந்தார். ஏற்கனவே சில புத்தகங்களில் பார்த்த முகம். “இலக்கிய உரையாடல்கள்” புத்தகத்தின் முகப்பில் கடைசியாக பார்த்த நினைவு.

சென்னை பயணத்தை பற்றி துவங்கிய உரையாடல் பல தளத்தில் விரிந்தது.சமீபத்தில் வாசித்த புத்தகத்தில் ஆரம்பித்தோம்.

கவிதை பற்றி விவாதித்தோம். கவிதை பற்றிய பல கேள்விகளுக்கு விடையளித்தார். கவிதை வாசிப்பதிலும் கவிதை எழுதுவதில் நிலவும் தன்மைகள் பற்றி பேச்சு வளர்ந்தது. கவிதையை எங்கு துவங்க வேண்டும், எங்கு துவங்கி எங்கு பயணித்து,தொடர்ந்து வந்தால் எங்கு வந்து சேரலாம் என்றார்.

கதைகள் எழுதுவேன் என்றதும். கதைக்கு தேவையான மொழி வளத்தை வளர்க்க என்ன புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என பரிந்துரைத்தார்.சென்ற வாரத்தில் படித்து வந்த “இன்னும் சில ஆளுமைகள்” (வெங்கட சுவாமிநாதன்) புத்தகம் அறிமுக செய்து வைத்த ஆளுமைகளை பற்றிய கூடுதல் விவரங்களை கொடுத்தார். விரைவில் தன் அனைத்து கதைகளும் ஒரே புத்தகத்தில் வெளிவரும் என்றார்.

குழந்தை இலக்கியம் பற்றியும் ஆழமாக அளவாடினோம்.

இடையே சூடான காபி கிடைத்தது. இசையில் ஆர்வமுள்ள குடும்பம். வாத்திய இசையின் பிண்ணனியில் பேசிய அனைத்தும் வாழ்வின் அழகிய நிமிடங்கள். நான் சென்னை வந்த வேளை லேசான தூறல். யுவன் தன் அடுத்த கவிதை தொகுப்பின் கவிதைகள் சிலவற்றை படிக்க கொடுத்தார்.தன் அடுத்த எழுத்து முயற்சிகளை பற்றி தெரிவித்தார். முந்தைய புத்தகங்களை அலமாரியில் கண்டேன். அவர் வேறு எங்கோ வெளியே செல்ல இருந்ததால் இரண்டு மணி நேர சந்திப்பு நிறைவடைந்தது.

சந்திப்புகள் தித்திப்புகளாய் தொடரும்.

(எம். யுவன், சோழவந்தானில் பிறந்தவர். தற்போது சென்னையில் வங்கி ஒன்றில் பணியாற்றுகிறார். ஒற்றை உலகம் (1996), வேறோரு காலம் (1999), புகைச் சுவருக்கு அப்பால் (2002), பெயரற்ற யாத்ரீகன் – ஜென் கவிதைகள் மொழிபெயர்ப்பு (2003) ஆகிய கவிதை நூல்களும், ஒளிவிலகல் (2001), ஏற்கனவே (2003) ஆகிய சிறுகதை நூல்களும், குள்ளசித்தன் சரித்திரம் (2002) என்னும் நாவலும் வெளிவந்துள்ளன. யுவன் சந்திரசேகர் என்ற பெயரில் சிறுகதைகள், நாவல் ஆகியவையும், எம்.யுவன் என்ற பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறார்.)


விழியன்

5 Comments leave one →
  1. மாணிக்கம் permalink
    May 21, 2007 6:31 am

    🙂

  2. May 21, 2007 6:36 am

    ம் நல்லது.

  3. Brag permalink
    May 21, 2007 6:55 am

    சென்னைப் பயணம் ஒரு இனியப் பயணம் போல….

  4. May 22, 2007 6:44 am

    நல்ல அருமையான வர்ணனை.

  5. May 25, 2007 2:49 pm

    🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: