Skip to content

கூகுளின் வெப் கிளிப் வசதி

May 25, 2007

கூகுளின் வெப் கிளிப் வசதி

நீண்ட நாட்களாக கூகுளில் வெப் கிளிப் என்னும் வசதி இருந்து வருகின்றது. அஞ்சல் பெட்டியின் மேலே தேவையில்லாத செய்திகள், விளம்பரங்கள் வந்து கொண்டு இருக்கும். அது தான் வெப் கிளிப்(Web Clip). இந்த வெப் கிளிப்பினை நாம் நமக்கு ஏற்றார் போல மாற்றிக்கொள்ளலாம். கூகிள் வெப் கிளிப்பை எப்படி நமக்கு ஏற்றார் போல பயன்படுத்தலாம் என்பதே இந்த சிறிய பதிவின் நோக்கம்.

எப்படி பயன்பெறுவது?

1. கூகிள் பக்கத்தில் உள்ள Settings சுட்டியை சொடுக்கவும்

2. செட்டிங்க் பக்கத்திற்கு செல்லும்.அங்கே கடைசியாக இருக்கும் Web Clips தலைப்பை சொடுக்கவும்

3. தேர்வு பெட்டியை தேர்வு செய்யவும். சில சமயம் இது தேர்வு செய்யாமல் இருக்கும் போது எந்த வெப் கிளிப்பும் காணக்கிடைக்காது.

4. ஏற்கனவே ஏராளமான செய்தியோடைகளின் முகவரி அங்கே இருக்கும். உங்களுக்கு வேண்டியவற்றை வைத்து மற்றவைகளை நீக்கிவிடலாம்

5. நீங்கள் விரும்பிபடிக்கு வலைப்பூ / திரட்டிகள் ஆகியவற்றின் RSS Feed முகவரியை இங்கே அளிக்கவும்.வலப்பக்கம் இருக்கும் அந்த பெட்டியில் தேடு சொல்லை கொடுங்கள். உடனே கொடுத்த தேடு சொல்லிற்கு ஏற்ப RSS முகவரிகள் வரும். Add பொத்தனை அழுத்தி உங்கள் கிளிப்பில் சேர்த்து கொள்ளுங்கள். வலைப்பூவின் சமீபத்திய பதிவு, திரட்டியில் சமீபத்தில் திரட்டப்பட்ட செய்தி ஆகியவற்றை வெப் கிளிப்பில் கணலாம்.

* வலைப்பூவின் RSS எ.கா : https://vizhiyan.wordpress.com/feed (wordpress இவ்வாறு தருகின்றது).இந்த சுட்டியை அங்கே சேர்த்தால் விழியன் பக்கத்தின் சமீபத்திய பதிவு வெப் கிளிப்பில் காணலாம்.

* சில திரட்டிகளின் RSS முகவரிகள்

http://tamilblogs.com/rss.php

http://www.thenkoodu.com/rssfeed.php

http://www.thamizmanam.com/xml-rss2.php

* சில இணைய குழுமங்களின் RSS முகவரிகள்

http://groups.google.com/group/nambikkai/feed/rss_v2_0_msgs.xml

http://groups.google.com/group/muththamiz/feed/rss_v2_0_msgs.xml

இதன் பயன் என்ன?

நீங்கள் விரும்பி படிக்கும் வலைதளத்தில் (கண்டிப்பாக) RSS சேவை இருக்கும். RSS என்பது “Really Simple Syndication (RSS) is a lightweight XML format designed for sharing headlines and other Web content”. வலைப்பூவிலோ அல்லது வலைதளங்களின் தலைப்பு செய்திகள், சமீபத்திய பதிவுகளை RSS ல் எளிதாக காணலாம்.இது XML வடிவில் இருக்கும் தரவு.



விழியன்
https://vizhiyan.wordpress.com

6 Comments leave one →
  1. May 25, 2007 10:57 am

    wonderful info. for me..
    the good news is there is no extra cost to do this.

    vow

  2. May 25, 2007 10:59 am

    கூடுதல் செலவு ஏதும் இல்லை நண்பரே

  3. May 25, 2007 11:22 am

    நல்ல தகவல்… முயற்சி செய்து பார்க்கிறேன்….

  4. siddharth permalink
    May 25, 2007 11:28 am

    Very useful information. Thanks a lot Mr.Umanath. I’ll try.

  5. Loveish permalink
    May 28, 2007 12:34 am

    Keep Going my Man!

  6. September 5, 2008 11:49 pm

    can you tell me about the google adsense work in tamil language. because I have an account approval from google adsnse and I have a website to publish the website to the viisitors how can I use this via notepad and get it into the google groups and yahoo groups for get earn by cliking ad programe. Thanking you

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: