Skip to content

எண்ணங்களை கொல்ல முடியாது – பிடல் கேஸ்ட்ரோ

June 1, 2007

எண்ணங்களை கொல்ல முடியாது – பிடல் கேஸ்ட்ரோ

சில தினங்களுக்கு முன்னர், நீர்மூழ்கி கப்பல்களில் செலவுகளை ஆய்விட்ட போது நான் சொன்னேன் ” சுமார் 75000 மருத்துவர்களுக்கு பயிற்சி கொடுத்து 150 மில்லியன் மக்களுக்கு சேவை புரியலாம். மருத்துவ பயிற்சிக்கு ஆகும் செலவு அமெரிக்காவை ஆகும் செலவில் மூன்றில் ஒரு பங்கு என்பதை கணக்கில் கொண்டு”. இப்படியே கணக்கிட்டால் அமெரிக்காவை நினைத்து ஆச்சரியப்படுகிறேன். ஒரு பில்லியன் டாலர்களை வைத்து புஷ், இராக் மற்றும் அமெரிக்க மக்களை அல்லோலப்படுத்தும் பணத்தில், 9,99,900 மருத்துவர் இரண்டு பில்லியன் மக்களின் மருத்துவத்திற்கு உதவலாம்.

அமெரிக்காவின் ஊடுறுவலுக்கு பிறகு இராக்கில் ஆறு லட்சம் மக்கள் இறந்துள்ளார்கள், சுமார் இருபது லட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் சுமார் 5 கோடி மக்கள் மருத்துவ காப்பீடு இல்லாமல் இருக்கின்றார்கள். குருட்டு சந்தை விதிமுறைகள் இந்த முக்கிய சேவைகளை நிர்வகிக்கின்றது. அது நிர்ணயிக்கும் விலை, வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களாலும் எட்டாக்கனியாக உள்ளது .மருத்துவ சேவை அமெரிக்காவின் (தேசிய சராசரி உற்பத்தி) GDPயில் பங்கு வகித்தும், எதற்கு இருக்கின்றது என்று கூட தெரியாமல்,சேவை சென்றடையும் மக்களை திருப்திபடுத்தாமல் இருக்கின்றது.

வளர்ச்சி பெறாத மற்றும் நோய்கள் மிகுதியாக உள்ள நாடுகளில் மருத்துவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. ஒரே மருத்துவர் 5000,10000,15000,20000 மற்றும் அதற்கு அதிகமான மக்களை கவனிக்க வேண்டி உள்ளது.பாலியல் நோய்கள் அதிகரிக்கும் நிலையில், (எய்ட்ஸ் போன்ற நோய்கள்) கடந்த இருபது ஆண்டுகளில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிர் இழந்துள்ளார்கள், கோடிக்கணக்காக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்,இதில் பெண்களும், குழந்தைகளும் அடக்கம். தேவையான அளவு நடவடிக்கை எடுத்தும் ஒரு நோயாளிக்கு மருத்துவத்திற்கு ஆகும் செலவு 5000,10000,15000 டாலர்கள் என்று அதிகரிக்கின்றது.இந்த கணக்குகள் எல்லாம் மூன்றாம் உலக நாடுகளுக்கு மாய எண்களே, இங்குள்ள குறைவான மருத்துவமனைகளில் நோய்களால் மக்கள் நிரம்பி வழிந்து , மிருகங்கங்கள் போல பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிஜங்களில் பிரதிபலிப்பு சில கோர உண்மைகளை புரியவைக்கும்.இது பணத்திற்காக விளம்பரப்படுத்த கூடிய விடயம் இல்லை. கோடிக்கணக்கான மக்களின் பசியினை ஒன்றாக சேருங்கள், அதில் உணவில் இருந்து எரிபொருளுக்கு மாற்றும் எண்ணத்தையும் சேருங்கள், அங்கு ஒரு உருவத்தை தேடினால் கிடைக்கும் விடை ஜார்ஜ் புஷ்.

அவரை சமீபத்தில் ஒரு பிரபலமானவர், கியூபாவின் பாலிசி பற்றி கேட்டபோது “நான் ஒரு திடமான அதிபர். நான் கேஸ்ட்ரோவின் மறைவிற்காக காத்திருக்கிறேன்” அந்த சக்திவாய்ந்த மனிதரின் ஆசைகளுக்கு அத்தனை சக்தி இல்லை.இவரை கொல்லுங்கள் என்று புஷ் சொன்ன பட்டியலில் நான் முதலாவதாகவும் இல்லை கடைசியாகவும் இல்லை.நான் மக்களை தனியாகவும் கூட்டாகவும் கொன்று குவிக்கும் ஆளும் இல்லை.

“எண்ணங்களை கொல்ல முடியாது” என்று சாரியா முழங்கினான்.சாரியா ஒரு கறுப்பு இராணுவ அதிகாரி. 1953ல் மெளன்கெடா கேரிசன்சை கைப்பற்றும் தாக்குதலில் தோல்வியுற்று நாங்கள் மூவரும் அந்த குன்றில் உள்ள குடிசையில், சக்தி தீர்ந்து போய் பலவீனமாக உறங்கி கொண்டிருந்த போது எங்களை சுற்றி வளைத்த அதிகாரி அவன்.இராணுவ வீரர்கள் எங்களை யார் என்று அடையாளம் காணும் முன்னரே எங்களை ஆயுதங்கள் முனையில் வைத்தனர்.கோபமும் வெறியும் நிரம்பி இருந்தது. “எண்ணங்களை கொல்ல முடியாது” என்று அந்த கருப்பு அதிகாரி திரும்ப திரும்ப, இடறின்றி குரல் தோயும் வரை சொல்லிக்கொண்டு இருந்தார்.

இந்த அற்புதமான வார்த்தைகளை நான் ஜார்ஜ் புஷ்-கு அர்பணிக்கிறேன்.

– பிடல் கேஸ்ட்ரோ

மே 28, 2007

(மொழிபெயர்ப்பு)
விழியன்
Keywords : Ideas Cannot Be Killed

Advertisements
12 Comments leave one →
 1. மாணிக்கம் permalink
  June 1, 2007 6:55 am

  நன்றாக மொழிபெயர்த்து எழுதியிருக்கிறீர்கள்… ஆனால் இன்னும் கொஞ்சம் தெளிவாக எழுதியிருக்கலாமோ என தோன்றுகிறது…

 2. Loveish permalink
  June 1, 2007 7:21 am

  Good Translation……..a bit confusing tamil….wishes to improve with courage!

 3. SenthilKumar permalink
  June 1, 2007 7:22 am

  என்னங்க விழியன்….!!!!!!
  வழக்கமான விழியன் பக்கங்களில் இருக்கும் தெளிவு குறைஞ்ச மாதிரி இருக்குது. நிரம்ப ஆர்வமா படிக்க ஆரம்பிச்சேன். பிடல் காஸ்ட்ரோ!!!

 4. June 1, 2007 8:34 am

  வாழ்த்துக்கள் விழியன்.

  சுடச்சுட… மொழி பெயர்த்துள்ளீர்கள். வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  சந்திப்பு
  கே. செல்வப்பெருமாள்

 5. June 1, 2007 8:57 am

  மாணிக்கம், செந்தில் உங்கள் நேர்மையான விமர்சனத்திற்கு நன்றி.

  இன்னும் எளிமையாக்க முயற்சிக்கிறேன். ஆனால் மொழிபெயர்ப்பில் மூலத்தில் இருந்து நிறைய மாறக்கூடாது என்பதில் முனைப்பாய் இருந்தேன்.

  நன்றி செல்வபெருமாள்.

 6. June 1, 2007 10:08 am

  பகிர்ந்தமைக்கு நன்றிகள்

 7. June 1, 2007 2:19 pm

  Great words …

 8. June 1, 2007 11:34 pm

  சிறப்பான முயற்சி விழியன் …

  மிக்க நன்றி 😉 பல உலக நிகழ்வுகளை அறிந்துகொள்ள முடிகிறது உங்கள் மூலம் 😉

 9. June 2, 2007 7:25 am

  பகிர்வுக்கு நன்றி!

  மொழி நடையை எளிமையாக்க முடிந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

 10. June 4, 2007 2:57 am

  தங்கள் வருகைக்கும் பதிலுக்கு மிக்க நன்றி

 11. June 7, 2007 6:04 am

  மூலத்தை அப்படியே தர வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாக ஒரு தொடர்வு இல்லாத மாதிரி தோன்றி விட்டது.

  நல்ல முயற்சி…

  Ideas cannot be killed – Never & Ever

 12. July 18, 2007 3:07 am

  🙂 nalla pathiv u

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: