Skip to content

காரைக்குடியில் ஓர் நாள்

June 11, 2007

காரைக்குடியில் ஓர் நாள்

காரைக்குடி மண்ணை முதல் முதலாய் தொட்டு பார்த்தது அன்று தான். பேருந்தில் இருந்து இறங்கியதும் தெரிந்தது கவிஞர் கண்ணதாசனின் மணி மண்டபம் தான். சுவரில் “அகவிலாசம்” கவிதை புத்தக வெளியிடு என்ற போஸ்டரை படித்து கொண்டிருந்தேன். வளநாடனின் புத்தக வெளியிடு. இணையம் மூலமே சினேகம் கொண்டவர். அவரின் புத்தக வெளியீட்டிற்கு காரைக்குடி வரை பயணித்து இருந்தேன்.வைரம் ஓட்டலுக்கு நான் செல்ல வேண்டும். அங்கு தான் அறை போட்டிருந்தார் வளநாடன்.

சுற்றும் முற்றும் ஏதும் கட்டிடங்கள் காணவில்லை. எங்கு செல்வது என தெரியாமல் காலை 9 மணிக்கு முச்சந்தியில் நின்றிருந்தேன். பெரியவர் ஒருவர் வண்டியில் வருகின்றார். “ஐயா வைரம் காம்ளெக்ஸ்” எங்கு இருக்கின்றது என்கிறேன். வண்டியை நிறுத்துகிறார். “ஊருக்கு புதுசா?..இருங்க” என்கிறார்.வண்டியை விட்டு இறங்கி அருகே எங்கோ செல்கிறார். “தம்பி அதோ பச்சை நிறத்தில் பஸ் இருக்கு பாருங்க அதற்கு எதுக்க தான் வைரம் காம்ளெக்ஸ் இருக்கு…”. தான் வேறு வழியில் செல்ல வேண்டும் இல்லை என்றால் அங்கே இறக்கிவிட்டிருப்பேன் என்று வண்டியில் சென்றுவிட்டார். நான் அப்படியே சில விநாடிகள் ஸ்தம்பித்து நிற்கிறேன். இதே நிலைமை வேலூரில் நடந்தால் நடப்பதே வேறு. காரைக்குடி தன் முதல் சில நிமிடங்களிலேயே கவர்ந்துவிட்டது.

அறைக்கு சென்று தயாராகி மீண்டும் கவிஞர் கண்ணதாசன் மணி மண்டபத்திற்கு வருகிறேன். வளநாடனை முதன்முதலாக சந்திக்கிறேன். கொஞ்ச நேரத்தில் மற்றொரு முகம்காணா நண்பர் அழைக்கிறார். ஆர்குட்டில் சந்தித்து உரையாடி நண்பர்களாகி காரைக்குடியில் சந்திப்போம் என்று சிங்கப்பூரில் இருந்து வந்திருந்தார். பெயர் இளங்குமரன். தமிழ் ஆசிரியர். மர நிழலில் நானும் இளங்குமரனும் அமர்கின்றோம். “பள்ளி துவங்க வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது” என்கிறேன். தான் கடந்து வந்த பாதை, தமிழகம் முழுக்க சுற்றியது, கல்வி அவலங்களை சந்திக்க நேர்ந்தது, தமிழக பள்ளிகளில் பணி புரிந்தது, விதையாய் இருந்து கனவு விருட்சமாக வளர்ந்தது, சிங்கையில் வேலைக்கு அழைப்பு வந்தது, பத்து வருடம் சம்பாத்தியம் வீணாய் போனது, தன் அனுபவங்களை கொட்டுகிறார். நான் மெளனத்தை மட்டுமே பேசுகின்றேன். அத்தனை இழந்தும் “நான் எழுந்து வருவேன்…” என்று முழங்குகின்றார்.”பணம் முடங்கிக்கிடப்பது எனக்கு பிடிக்காத ஒன்று யார் என்ன எங்கு கேட்டாலும் கொடுத்துவிடுவேன்” என்கிறார். நிமிடத்திற்கு நிமிடம் அவரின் ஆளுமை என்னை ஆட்கொள்கின்றது. பேசியபடியே கரும்புச்சாறு பருகுகின்றோம்.

விழா தாமதமாக துவங்குகின்றது. வளநாடன் அப்பா அம்மா குத்துவிளக்கு ஏற்றுகின்றார்கள். பள்ளி மாணவர்களின் நடனம். வளநாடன் கல்வி அறக்கட்டளை துவக்கம். வரவேற்புரை. விழாவினை நடத்துபவர் “மக்கள் கவிஞர்” அரு.நாகப்பன். தொலைக்காட்சியின் காலை வணக்கத்தில் ஒரு முறை இவர் பேட்டியை பார்த்திருக்கிறேன். நூலினை வெளியிடுகின்றனர். வெளியிடுபவர் பாவேந்தர் பாரதிதாசனின் சீடர்களில் ஒருவரரான “பொன்னடி” அவர்கள். பெற்றுக்கொண்டவர் இளையராஜாவிற்கு மிகவும் பிடித்த பாடலாசிரியரும், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால் தமிழ் திரையுலகிற்கு அறிமுக செய்யப்பட்ட “முத்துலிங்கம்” அவர்கள்.புத்தகத்தினை அறிமுகம் செய்கின்றார் கவிஞர் யாழ்நதி.உள்ளூர் பிரமுகர்கள் வாழ்த்துக்கின்றனர். துரைகருணாநிதி வாழ்த்துகின்றார். டாக்டர் ரவிபாரதி வாழ்த்துகின்றார். மேடைக்கு வருகின்றனர் அனைவரும் சுவையான அனுபவங்களை பகிர்கின்றனர். கடைசியில் பதினைந்து நிமிடம் பேசும் பொன்னடி அவர்கள் கவர்கின்றார். அந்த வயதிலும் அத்துனை இளமை, உரைவீச்சு. இனிய இலக்கிய விழா முடிகின்றது. நண்பர்கள் சுந்தர், சித்தார்த், செளரி ராஜன் பெயர்களை புத்தகத்தின் நன்றி பக்கத்தில் பார்த்த்தும் கூடுதல் சந்தோஷம்.ஏதோ என் பெயர் பார்த்தது போலவே.

மதிய வேளையில்,அவர்க்ள் மூவர் (பொன்னடி,முத்துலிங்கம், டாக்டர் ரவிபாரதி) தங்கிய அறையில் பேச ஆரம்பிக்கிறோம்.அடுத்தடுத்த அறையில் தான் தங்கி இருக்கிறோம். அனைவரும் தத்தம் அனுபவங்களை கொட்டுகின்றார்கள். பாவேந்தரோடு நெருங்கி பழகியவர்கள் பாவேந்தரின் அனுபவங்களை சொன்னால் கசக்குமா என்ன? நா.பாவுடன் நடந்த சச்சரவு, கடற்கரையில் நடக்கும் கூட்டம்,பாவேந்தருடன் நடந்த சுவையான நிகழ்ச்சிகள், புத்தகங்கள், கவிதைகள், மனிதர்கள் இப்படியே தொடர்கின்றது.அவர்கள் மூவரை தூங்கவிட்டுவிட்டு நானும் யாழ்நதியும் மற்றொரு அறையில் பேசுகின்றோம். முதன் முறையாக சந்திக்கிறோம். பேச்சின் இடையில் அவர் மறித்து “அப்பா பேரு செந்தமிழா?” என்கிறார். அட. ஏற்கனவே என்னன சின்ன வயதில் பார்த்திருக்கிறார். அறிவொளி இயக்கத்தின் போது ஆம்பூரில் தொண்டாற்றி இருக்கின்றார். நான் அப்போது சிறுவன் 1990களில். பயணக்களைப்பில் உறங்குகின்றோம்.

மாலை நல்ல மழை.பலத்த இடிகேட்டு எழுகின்றேன். அவர்கள் மூவர் கிளம்ப தயாராக இருக்கின்றார்கள். விடை பெறுகின்றோம்.”நிறைய எழுதணும்..” என்கிறார் பொன்னடியான் வண்டியில் கிளம்பும் போதும் .சென்னைக்கு செல்கிறார்கள். அரு.நாகப்பன் தன் பங்கிற்கும் அனுபவங்களை கொட்டுகின்றார்.காயங்கள், வலிகள் ஏராளமாய் புதைந்து கிடைக்கிறது. சூடான காபி அருந்தியபடி பல பகிர்வுகளை பகிர்ந்தபடி கலைந்து செல்கிறோம்.

ஒரு நாளில் இத்தனை மனிதர்கள், ஆளுமைகள், அனுபவங்களா என்று எண்ணியபடி பேருந்தில் பயணிக்கிறேன். செட்டிநாட்டுஅறுசுவையை சுவைக்கவேண்டும், படங்களில் பார்த்த கட்டிடங்களை புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆவலில் வந்த எனக்கு வேறு வகையான சுவையும், ஆழ் மனதில் பதிந்த நினைவுகளோடு ஆழந்த உறக்கத்தில் குலுங்கியபடி செல்கின்றேன்.36 மணி நேரத்தில் 24 மணி நேரம் பயணித்தும், பயணத்தினால் ஏற்பட்ட பயணகளைப்பு அனுபவங்களை நினைக்கையில் கலைந்தே போகின்றது.

-விழியன்

Advertisements
15 Comments leave one →
 1. மாணிக்கம் permalink
  June 11, 2007 7:07 am

  “நிமிடத்திற்கு நிமிடம் அவரின் ஆளுமை என்னை ஆட்கொள்கின்றது…” உண்மைதான் உங்களின் எழுத்தும், பயணமும்… எங்களையும் உங்களோடு… பகிர்வுக்கு நன்றி…

 2. Anand permalink
  June 11, 2007 7:08 am

  தமிழ் மீது தங்களுக்குள்ள பற்றைக் கண்டு வியப்படைகிறேன். உங்கள் பணி தொடரட்டும்.

 3. June 11, 2007 7:15 am

  அருமையான சந்திப்பை பற்றி மிகைப்படாமல் எழுதியிருக்கிறீர்கள். புகைப்படங்களையும் போடலாமே.

 4. June 11, 2007 7:22 am

  Thats really nice to hear the news boss.. Feel happy and proud of being a Karaikudi-an!!

  Hope you enjoyed the stay as you wished…

  Let the journey continue…

 5. June 11, 2007 7:28 am

  நீங்க கூறியது அந்த ஊர் மக்கள் அருமையான மக்கள் தான்… காரைக்குடி மட்டும் அல்ல அதன் சுற்று வட்டாரங்கள் கூட…. பாசக்கார கூட்டம் அது….

  நல்ல உணவை மிஸ் பண்ணிட்டீங்கனு சொல்லாம் என்று வந்தேன்… ஆனால் அனுபவங்கள் என்று புல் மீல்ஸ் சாப்பிட்டுட்டு தான் வந்து இருக்கீங்க…

  நல்ல குறிப்புகள்….

 6. June 11, 2007 8:35 am

  mmmmmm…….karaikudi.
  It is different city.
  oru 4 varusham ennoda irupidam.
  kavali maranthu vaanampaadiya suthuna oor.
  after reading ur article i feel like am in kkdi.

 7. June 11, 2007 10:22 am

  புகைப்படங்களை நாளை இடுகிறேன். கருவியில் ஏதோ கோளாறு மஞ்சூர் ராசா.

 8. June 11, 2007 10:22 am

  ராகவன் அடுத்தது உன் திருமணத்திற்கு தான் காரைக்குடி பயணம்..:-)

 9. June 11, 2007 10:25 am

  தங்கள் வருகைக்கு நன்றி பாஷா.

  சிவா, சீக்கிரம் ஒரு முறை சென்று unlimited மீல்ஸ் சாப்பிட்டு வரனும். 🙂

 10. June 12, 2007 1:07 am

  உங்கள் இலக்கியப்பணிக்கு நன்றி..

  இது போல பல செய்திகளை உங்கள் மூலமாகத்தான் தெரிந்து கொள்ள முடிகிறது.. 😉

 11. June 12, 2007 8:02 am

  if u happen to go just try visit pallathoor…….kaalangalal sithaikapadatha pazaikaaluthu veedugala paakalam

 12. June 14, 2007 10:46 am

  நன்றி தலைவா…

  கண்டிப்பாக பல முழுச் சாப்பாடுகள் உங்களுக்கு உண்டு! (Full Meals!!) 😉

 13. June 18, 2007 8:42 am

  மிக நல்ல பதிவு. நானும் காரைக்குடி மக்களிடம் இனிய உபசரிப்பினையும், hospitality யையும் உணர்ந்திருக்கிறேன்.

 14. June 19, 2007 9:26 am

  நான் மெளனத்தை மட்டுமே பேசுகின்றேன்..

  adhudhaan theriyume…eppo parthaalum…hmmm..hm…hhhmmm..hmmmm..
  idhudhaan ungal vaayil irundhu varum..ada pongappa…

 15. August 3, 2011 9:26 am

  நம்மூருகார பசங்கல்லாம் ரொம்ப வெள்ளேந்தி ஆளுங்க, நிறைய இருக்கு விழியன்,சொந்த ஊரை பற்றி பிறர் நல்லவிதமாக எழுதுவதை வாசிப்பது ஒரு போதை தான்:)
  மறுபடியும் ரெண்டுநாள் தங்குற மாதிரி வரணும் :)வீட்டோட:)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: