Skip to content

உலக குழந்தைத்தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்

June 12, 2007

இன்று ஜூன் 12 , உலகம் முழுவது உலக குழந்தைத்தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகின்றது. இப்படி ஏராளமான தினங்களை அனுசரிப்பதால் என்ன பயன் என்ற கேள்வி எழுவது நியாயமே. இப்படிப்பட்ட தினங்கள் நம்மில் நிலவும் அவலங்களை நினைவுறுத்தி நமக்கு இந்த சமுதாயத்தில் செய்ய வேண்டிய கடன்கள் இருக்கின்றது என்பதனை நினைவுறுத்தவே.

 

சென்ற வருடம் 2006 கணக்கின் படி உலகில் சுமார் 218 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் இருக்கின்றார்கள்.இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண் குழந்தைகள்.

இந்த வருடத்தின் நோக்கம் குழந்தை தொழிலாளர்களை விவசாயத்துறையில் இருந்து மீட்க வேண்டும் என்பதே. குழந்தை தொழிலாளர்கள் அதிகம் இருப்பது விவசாயத்துறையில் தான். இந்தியாவில் சுமார் 15 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வாழ்கின்றனர்.தங்கள் எஜமானர்களுக்கு விசுவாசமாக விவசாயத்தில் துணை புரிகின்றனர். ஆடு மாடுகளை மேய்த்தும்,பயிர்களை பராமரித்தும், இன்னபிற வேலைகளை கல்வி பெறும் நேரத்தில் செய்து வருகின்றனர். நம் வீட்டு குழந்தை எப்படி நன்றாக இருக்க ஆசைப்படுகின்றோமோ அதே போல அனைத்து குழந்தைகளும் இருக்கவேண்டும் என்று ஆசை கொள்வோம்

 

குழந்தை தொழிலாளர்களற்ற ஒரு சமூகத்திற்காக கனவு காண்போம். அதற்காக நம்மால் முடிந்த உதவிகள் புரிவோம்.இயன்ற அளவு மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். வலுவான உலகளாவிய இயக்கம் துவங்கப்பட்டு  உலகில் குழந்தை தொழிலாளர்களே இல்லல என்ற நிலை வரவேண்டும்.

13 Comments leave one →
  1. SenthilKumar permalink
    June 13, 2007 4:47 am

    மிக நல்ல பதிவு விழியன்…

  2. June 13, 2007 9:27 am

    //உலகில் குழந்தை தொழிலாளர்களே இல்லல என்ற நிலை வரவேண்டும்//

    கண்டிப்பாக…. துள்ளி திரிய வேண்டிய காலத்தில் துவண்டு கிடப்பது வேதனை..

  3. June 13, 2007 9:42 am

    நல்ல பதிவு தம்பி.

    உங்க கதையை கூட முத்தமிழ் மன்றத்தில் பதிந்தேன். அனைவரும் குழந்தை தொழிளாளர் முறையை எதிர்த்து கருத்து கூறினார்கள்.

  4. N Suresh permalink
    June 13, 2007 9:45 am

    dear thambi,

    please give a detailed study on this. this type of essay can be given by any one but from you a detailed study… hope you can understand..

    best of luck

    nsuresh

  5. June 13, 2007 11:21 am

    அருமையான பதிவு விழியன்! குழந்தை தொழிலாளர்கள் பற்றி நானும் பதிவிட்டிருக்கிறேன்.

  6. Harish permalink
    June 13, 2007 2:03 pm

    its not ‘kuzhanthai thozhilalar ethirppu thinam’. its ‘kuzhanthai thozhilalar murai ethirppu thinam’. we are not opposing child labourers. we are opposing only child labour.

  7. June 13, 2007 4:34 pm

    மிக்க நன்றி ஹரிஷ். மாற்றிவிட்டேன்.

  8. June 13, 2007 11:48 pm

    //குழந்தை தொழிலாளர்கள் அதிகம் இருப்பது விவசாயத்துறையில் தான்//

    இது ஒரு மிகப்பெரிய அவலம்.. விவசாயத்தில் தற்போது நிலமை மாறிவிட்டதாகவே எண்ணுகிறேன்… எனக்குத் தெரிந்தவரை (எங்கள் கிராமத்திலாவது) விவசாயத்தில் குழந்தைத் தொழிளாளர் இருப்பதில்லை பெரும்பாலும்.

    சில வருடங்களுக்கு முன் வரை வெளி மாவட்டங்களில் இருந்துதானத்து அதிகப்படியான குழந்தைகள் ஆடு மேய்க்க . விவசாய வேலை பார்க்க வந்தனர். நூல் ஆலைகள் , பனியன் கம்பனிகள் போன்றவற்றில் 14 வயதிற்கு மேற்பட்டோரே பெரும்பாலும் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.

    டீ கடை , ஓட்டல் , மளிகைக்கடை முதலியவ்ற்றில் தான் தற்பொழுதும் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பதே என் தாழ்மையான கருத்து.

    அன்புடன்
    தனசேகர்

  9. Loveish permalink
    June 14, 2007 1:38 am

    Hearty Wishes to continue !!

  10. SENTHIL permalink
    June 6, 2015 4:20 am

    NALLA VELLI SEITHINGA

  11. July 23, 2015 8:00 am

    pls help me sir…….santhitan age 11…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: