Skip to content

ஜுவால்கா என்ற பென்குயின் – கதை வடிவில் கட்டுரை

June 20, 2007

ஜுவால்கா என்ற பென்குயின் – கதை வடிவில் கட்டுரை

என்னை பற்றி முன்னாடியே கேட்டு இருக்கீங்களா? என் பெயர் ஜுவால்கா. நான் பென்குயின் இனத்தை சேர்ந்தவள். பென்குயின்கள் பறவை இனத்தை சேர்ந்தது என்பார்கள்.எங்களுக்கு சிறகுகள் இருக்கு ஆனால் எங்களால் பறக்க முடியாது தெரியுமா? நாங்க பறக்காத பறவை இனம். எங்க உடலுக்கு குளிர் பிரதேசம் தான் ஒத்து வரும். உங்க ஊருக்கு எல்லாம் நாங்க வந்தா…அய்யோ நினைச்சு பார்க்க கூட முடியல.

அண்டார்டிகான்னு ஒரு கண்டம் இருக்கு தெரியும் இல்லையா? அங்க தான் எங்க இனம் அதிகமாக வாழ்கின்றது.அண்டார்டிகா முழுவதும் எப்போதும் பனி படர்ந்து தான் இருக்கும். பென்குயினில் நிறைய வகை இருக்காம். நாங்க சக்கரவர்த்தி பென்குயின் இனத்தை சேர்ந்தவங்கன்னு அம்மா ஒரு முறை சொன்னாங்க. நாங்க 1.1 மீட்டர் உயரம் வரை வளர்வோம். எடை சுமார் 35 கிலோ வரையில் இருப்போம். நாங்க தான் நல்லா வளரக்கூடிய வகை அப்படின்னு எங்க அப்பா சொல்லுவார். எனக்கு சுகிமியான்னு ஒரு தோழி இருக்கா. அவளும் பென்குயின் இனம் தான். ஆனால் வேறு வகை. அவளுடைய வகையை தேவதை இனம்னு சொல்லுவாங்களாம்.அவள் ரொம்ப குட்டியா இருப்பா.குட்டின்னா எவ்வளவு குட்டி தெரியுமா? நாற்பது செ.மீட்டர் தான். மொத்தம் ஒரு கிலோ தான் இருப்பா. இருந்தாலும் நாங்க நண்பர்கள் தான்பா.ஒரு முறை தூரமா பயணம் செய்த போது நாங்க நண்பர்களாக மாறினோம்

எனக்கு நீச்சல் சர்வசாதாரணா வருமே.ஹைய்யா.உங்களுக்கு நீச்சல் தெரியுமா? நாங்க பாதி நேரம் கடலிலும் மீது நேரல் நிலத்திலும் இருப்போம். எங்களுக்கு சாப்பாடே கடலில் இருக்கும் சின்ன மீன்களும், கடல்வாழ் உயிரினங்களும் தான். எங்க சித்தப்பா, பெரியப்பா எல்லாம் வேகமாக கடலுக்கு அடியில் நீந்துவாங்க. நான் சின்னவள் இல்லையா, ரொம்ப தூரம் உள்ளே போக முடியாதுபா.

எங்களுக்கு மனிதர்கள் என்றால் பயம் எல்லாம் இல்லை. நன்றாக பழகுவோம். நான் இன்னும் ஒரு மனிதனை கூட பார்த்ததே இல்லை. எங்க தாத்தா பார்த்து இருக்காராம். ஆராய்ச்சி செய்ய மனிதர்கள் அண்டார்டிகா வருவாங்கன்னு சொல்லி இருக்காரு. ஆனா சிறுத்தை சீல் என்றால் பயம்பா. திடீர்னு வந்து எங்களை கொன்றுவிடும். நான் என்ன நிறம் தெரியுமா? முன்னாடி வெள்ளை நிறம், பின்புறம் கருமை நிறம். பனிகளில் நடந்து செல்லும் போது நடக்க மாட்டோம். கீழ குப்புற படுத்து வழுக்கிகிட்டே போய்விடுவோம்.மேட்டில் ஏறும் போது குதித்து கூட போவோம்.

எங்களுக்கு சிறுத்தை நீர்நாய் பயத்தை விட புவி சூடேற்றம் தான் பயமாக இருக்கின்றது.பாட்டி ஒரு முறை சொன்னார்கள். பூமி சூடாவதால் எங்கள் உயிர் இனத்திற்கு பாதிப்பு இருக்கின்றதாம். 1940ஆம் ஆண்டு 17 லட்சமா இருந்த எங்க ஜனத்தொகை, இப்ப ஒரு லட்சமாகிவிட்டது தெரியுமா.ம்ம்ம்..நீங்க என்ன பண்ண முடியும்னு கேட்கறீங்களா? ஊர் முழுக்க மரம் நட்டுவைங்க. அப்படி செய்தால் சூடு கொஞ்சம் குறையுமாம்பா. உங்க பெரியவங்க கிட்ட புவி சூடேற்றம்னா என்னன்னு கேளுங்க. சரி நண்பர்களே என்னை நீந்த கூப்பிடுகிறார்கள். போய் வருகிறேன்…டாட்டா..

Advertisements
10 Comments leave one →
 1. June 20, 2007 11:36 am

  >>

  pala pirassanaigal theera nalla vazi ithuthaan nanbaa

 2. June 20, 2007 11:36 am

  நல்ல கருத்துள்ள கதை

  ஒவ்வொருவரும் ஒரு மரம் என நட்டாலே போதும்.

 3. மாணிக்கம் permalink
  June 20, 2007 11:47 am

  🙂

 4. June 20, 2007 12:09 pm

  மாணிக்கம் ஒவ்வொரு பதிவுக்கும் வந்து 🙂 மட்டும் போட்டுட்டு போகிறார். அர்த்தம் தான் புரியல

 5. June 20, 2007 5:08 pm

  அன்பு விழியன் வெள்ளிபனிமலையின்
  மீதுலாவுவோம்,,,என்று பாரதியார் பாட்டை இந்தப்பறவை பாடுவதுபோல்
  இருக்கிறது நல்ல அறிவுப் பூர்வமான
  செய்தி ,,,,,அன்புடன் விசாலம்

 6. Gayathri permalink
  June 21, 2007 2:13 am

  Good thought!!! Lively presentation!!

 7. Saravanan permalink
  June 21, 2007 8:46 am

  Simply superb…..

 8. June 21, 2007 9:57 am

  நீ கலக்கு மாம்ஸ்.. நல்லா வந்திருக்கு பா… this is even better than ur previous works pa..

 9. abee permalink
  June 28, 2007 7:11 am

  a nice finishing touch …

  sathyama nan ethirparkatha ondru … neenga en film direction panna koodathu .. i think u can 🙂

 10. June 28, 2007 7:16 am

  நன்றி சித்து, சரவணன், காயத்ரி

  அபீ அவர்களே, என்னை வைத்து ஏதேனும் நகைச்சுவை செய்கின்றீர்களா?

  எடுப்போம் படத்தையும் எடுப்போம்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: