Skip to content

நானே என்னைப் பற்றி . . .

June 22, 2007

நானே என்னைப் பற்றி . . .

தோழி ப்ரியாவின் அழைப்பின் பெயரில் என்னைப்பற்றிய எட்டு தகவல்கள்..

1. விளையாட்டாய் நண்பர்கள் சேர்ந்து, சின்னதாக நிறுவனம் ஒன்று தொடங்கலாம் என்று நினைத்து “LawnDecken Solutions” என்று பெயரிட்டுக்கொண்டு கல்லூரி இறுதியாண்டில் இருக்கும் மாணவர்களுக்கு “Attending Interviews” என்று ஒரு பட்டறை வகுப்பு இரண்டு நாட்கள் நடத்தினோம். அதற்கு “சினேகமுடன் சில வரிகள்” என்ற தலைப்பில் இரண்டு பக்க கட்டுரை எழுதி இருந்தேன். அனேகமாக எழுதிய முதல் கட்டுரை இது தான். அதனை முகில் அவர்களிடம் (மேலாளர், BHEL) காட்டிய அடுத்த வாரத்தில் அந்த கட்டுரையை விமர்சித்து அதனைவிட பெரிய மடல் ஒன்று. அதை போன்ற ஊக்கங்கள் இல்லாமல் போயிருந்தால் எழுதாமல் கூட போயிருக்க கூடும்.

2. பரபரப்பு பெங்களூரில் இதுவரையில் ஒரே ஒரு முறை கீழ்விழுந்து கால் உடைத்துக்கொண்டது.பெருநகரங்களில் வண்டி ஓட்டுபவர்கள் அனைவரும் சாதனையாளர்களே.

3. மனிதர்களின் சந்திப்பு: புதிய மனிதர்களை சந்திப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எந்த ஒரு ஆளுமையிடம் பேசும் போதும் எண்ணங்கள் விரியும். புதிய விடயங்கள் புலப்படும். இயற்கையாகவே புதுப்புது மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு தானாக கிடைக்கிறது.

4. “தோழியே உன்னை தேடுகிறேன்” புத்தக வெளியீடு. நான் படித்த கல்லூரியின் முதல்வரே வந்து வெளியிட்டது. அம்மா அப்பாவை விழா மேடையில் சிறப்பித்தது.

5. எனது குடும்பம். மிகப்பெரிய சொத்து. அப்பா அம்மா மற்றும் தங்கை.எல்லாவற்றிர்கும் ஒரு Inspiration அப்பா தான். எழுத்து, சிந்தனை, சமூகம் பற்றி எல்லா சன்னல்களையும் திறந்துவிட்டவர். அம்மா.அந்த சொல்லே போதுமே.எனது தங்கை.இப்போது கூட நானும் அவளும் எலியும் பூனையும் தான். அவள் சாதனைகளை உலகம் பாராட்டும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

6. நண்பர்கள். பள்ளி காலங்களில் ஏற்பட்ட காயங்களோ என்னவோ, கல்லூரி காலங்களில் ஏராளமான நல்ல நண்பர்களை ஈன்று கொடுத்தது. நான் நினைக்கும் மிகப்பெருமையான விடயங்களில் இதுவும் மிக முக்கியமான ஒன்று.

7. சாப்பாடு: எது கிடைச்சாலும் சாப்பிட்டுவிடுவேன். இது வேண்டும், அது வேண்டாம் என்று இல்லை.பல சமயங்களில் இது கை கொடுத்து இருக்கின்றது. ஆனா சுவையான சாப்பாட்டு கிடைச்சா ஒரு வெட்டு வெட்டிடுவேன்.

8.தூக்கம்: தூக்கத்தில இரண்டு விஷயம். எப்ப படுத்தாலும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் தூங்கிடுவேன். அதே போல ஐந்து அல்லது ஆறு மணி நேரம் மேல தூங்க மாட்டேன். இப்படி கிடைக்கின்ற சில மணி நேரங்கள் தான் முக்கிய முதலீடு.

தொடு மரக்கட்டை ..அதாங்க TocuhWood…

நான் அழைக்கு எட்டு வலைப்பதிவர்கள்.

1. நாகை சிவா

2. அனிதா

3. வா.மணிகண்டன்

4. நிலாரசிகன்

5. ப்ரியன்

6. ரசிகவ் ஞானியார்

7. செல்வன்

8. சித்தார்த்

விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

– விழியன்

Advertisements
4 Comments leave one →
 1. பிரியா permalink
  June 22, 2007 6:40 am

  நன்றி

  //தூக்கம்: தூக்கத்தில இரண்டு விஷயம். எப்ப படுத்தாலும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் தூங்கிடுவேன். அதே போல ஐந்து அல்லது ஆறு மணி நேரம் மேல தூங்க மாட்டேன். இப்படி கிடைக்கின்ற சில மணி நேரங்கள் தான் முக்கிய முதலீடு.//

  நல்ல பழக்கம்

 2. June 22, 2007 7:13 am

  இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே மக்கா..சரி முயல்கின்றேன்..

 3. June 22, 2007 11:09 am

  எட்டு எட்டுக்கு பெயரை கூப்பிட்டு அதை ஒரு எட்டு எட்டி வந்து சொல்லிட்டி போனீங்க பாருங்க… அதான் நானும் உடனே போட்டுட்டேன்.

  உங்க எட்டுக்கு நான் என்ன சொல்ல.. அருமை.

  எட்டியது பத்தாது, எட்ட வேண்டியது இன்னும் பல இருக்கு. அனைத்தையும் எட்ட வாழ்த்துக்கள்

 4. June 23, 2007 1:35 am

  புத்தகம் எழுதியதை சொல்லாமல் விட்டு விட்டீர்களே? அருமையான சாதனை அல்லவா அது?

  எட்டு அழைப்புக்கு நன்றி. விரைவில் பதிவிடுகிறேன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: