Skip to content

மரணத்தோடு சில நொடிகள்..

July 3, 2007

மரணத்தோடு சில நொடிகள்..

அன்று வழக்கம் போல தான் பயணத்தை துவங்கினோம். பெங்களூரில் இருந்து வேலூருக்கு காரில் பயணிப்பது வழக்கம். வார இறுதியை வீட்டில் கழிக்க வெள்ளி (22-06-07) இரவு 8 மணிக்கு அலுவலகத்தை விட்டு கிளம்பினோம்.முன்னிருக்கையில் நானும், வண்டி ஓட்டியபடி மணியும்.பின்னிருக்கையில் பிரகதீஷும் செந்திலும். வண்டி ஏறியதில் இருந்து அலைபேசியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டே வருகின்றேன். அடுத்த ஒரு சந்திப்பிற்கு நண்பர்களை ஒருங்கிணைத்தபடி வருகிறேன். அந்த திங்கட்கிழமை திருமணமாகப்போகும் மாப்பிளையிடம் எப்படி வருகிறோம் என்பதை தெரிவித்து,அழைப்பை அணைக்கிறேன்.

கார் ஓசூரை கடக்கிறது.செல்பேசி கர்நாடக எல்லையை தாண்டியதால் ரோமிங்கில் செல்கின்றது. பேசுவதை நிறுத்தி..”சொல்லுங்கடா..ஏதாச்சும் பேசுங்க…செந்தில் உன் காதல் கதைய சொல்லுடா…” “நமக்கு பலது இருக்கு உமாநாத்..” “பிரக் நீ சொல்லு”. “அதுவாடா..அது ஒன்னாங் கிளாஸ்ல ஆரம்பிச்சுதுடா….ஷீபா மிஸ்டா..” ஹா ஹா என்ற சிரிப்பொலிக்கு நடுவில் கிரீரீச்ச் என்ற ப்ரேக் சத்தம். பின்னால் திரும்பியிருந்த நான் முன் பக்கம் பார்க்க, எங்கள் வண்டி ஒரு பொலிரோவை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.ஒரு நொடிதான் எல்லாம்.ஏகப்பட்ட எண்ணங்கள் அந்த ஒரே நொடியில்.முகத்தை மட்டும் காத்துக்கொள்ள வலக்கையை முன்வைத்து சாய்ந்துகொண்டேன். “டப்”.

லேசாக முழித்து பார்த்த போது பேனட் திறந்தபடி இருந்தது. மணி வண்டியை ஓரம் கட்ட முயற்சித்துக்கொண்டிருந்தான். பிரகதீஷும் செந்திலும் அமைதியில்லாமல் இருந்தார்கள். திடீரென செலுத்தப்பட்ட ப்ரேக்கால் முழு உடலும் முன்னே சென்று மோதியது. முழு எடையையும் இடக்கால் முட்டி தாங்கியது. மூன்றாம் முறையாக பலத்தை அடி அங்கே ஏற்படுகின்றது. ஓரங்கட்டிய வண்டியின் முன்னால் இருந்து புகை வந்தது. அனைவரும் வெளியேறி பேனட்டை திறக்க முயற்சித்தோம். முடியவில்லை.

நடந்தது என்னவென்றால், ஒரு ஆட்டோ அந்த இடத்தில் இரண்டு நிமிடம் முன்னர் செல்கின்றது, பின்னால் வந்த பொலிரோ ஆட்டோவை இடிக்கின்றது. ஆட்டோகாரர் பொலிரோவை ஓரம் கட்ட வைக்கிறார். பொலிரோவை ஓரம்கட்டுவதை போல அதன் ஓட்டுனர் ஆட்டோகாரருக்கு போக்கு காட்டி தப்பிக்க முயற்சிக்கிறார்., ஆனாலும் ஆட்டோக்காரர் விடவில்லை. இடப்பக்கம் ஆட்டோ நிற்கின்றது, ரோட்டின் நடுவே பொலிரோ எந்த சிக்னலும் போடாமல், எந்த விளக்கும் இல்லாமல் நடுரோட்டில் நிற்கின்றது. இது நடப்பது மேட்டில் இருந்து இறங்கும் பாதையில். ஒசூர் கிருஷ்ணகிரி பாதை மலைப்பாதை போன்றே இருக்கும். பின்னால் வந்த நாங்கள், முன்னால் செல்லும் வண்டி போய்கொண்டிருக்கின்றது என எண்ணி வேகமாக வந்தோம். நின்று கொண்டிருந்ததற்கான அடையாளம் ஐம்பது அடிக்கும் குறைவாக வந்த போது தான் தெரிந்தது. முட்டிக்கொண்டது.நல்ல வேளையாக பின்னால் ஏதும் வண்டிகள் வரவில்லை. அனைவரும் வருவது சுமார் 100- 140 கி.மீ. வேகத்தில் தான்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் மஹாரஷ்டிரத்தில் இருந்து வந்த அந்த புத்தம் புதிய பொலிரோ வண்டி இன்னும் ஒரு கி.மீ தூரத்தில் ஷோரூமை அடைந்து இருக்கும். அருகே இருந்த மெக்கானிக் கடையின் முதலாளி உடனே ஸ்பாட்டிற்கு வந்துவிட்டார். எங்கள் வண்டிக்கு தான் அதிக இழப்பு.படங்களில் பார்ப்பது போல ஒரு கட்டபஞ்சாயத்துக்காரர் வந்தார். பேசினார். யோசனைகளை சொன்னார். அதற்குள் சுமார் இரண்டு மணி நேரமாகிவிட்டது.லேசான தூறல் வேறு.கால் வலி மெல்ல மெல்ல அதிகமானது.அலைபேசியில் இங்கும் அங்கும் அழைப்புகள் பறக்கின்றது. இன்ஸ்பெக்டர் வருகிறார் என்கிறார்கள். இன்ஸ்பெக்டர் தம்பி வருகிறார் என்கிறார்கள். நெடுஞ்சாலை காவல்துறையிடம் தான் போகும் இந்த கேஸ் என்கிறார்கள். நடுவே அந்த மெக்கானிக் கடை முதலாளி, “நீங்க பயப்படாதீங்க, இதெல்லாம் ஒண்ணும் இல்லை தம்பி.” அவர் கதை எங்களை கலவரப்படுத்தியது. ஒரு வழியாக வண்டியை அந்த மெக்கானிக் கடையில் விட்டு வேலூரில் இருந்து கிளம்பிய மற்றொரு வண்டிக்கு காத்திருந்தோம்.

அப்போது தான் நினைவிற்கு வந்தது, இன்னும் சாப்பிடவில்லை என்று. இரவு வீட்டிற்கு சென்று சாப்பிடலாம் என்பது அனைவரின் திட்டம். மறுநாள் மணிக்கு பிறந்தநாள். வேலூர் அருகே செல்லும் போது வண்டியை நிறுத்து அவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று யாருக்கும் தெரியாமல் பையில் கேக் வாங்கி வைத்து இருந்தேன். பசி தாங்க முடியவில்லை…கேக்கை 11.30 மணிக்கே எடுத்து வெட்ட வைத்தோம். கார் ஷெட்டில், யாரோ ஒருவரின் கார் மீது கேக்வைத்து வெட்டிய அனுபவம் புதுமையாகவும் மணிக்கு மறக்க முடியாததாகவும் இருந்திருக்கும். அதிர்ச்சி லேசாக விலகி, அனைவரின் வண்டி மோதல் கதைகளை சொல்ல ஆரம்பித்தோம். மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும், ஆனால் எங்களுக்கு காதலில் ஆரம்பித்து மோதலில் முடிந்துள்ளது 🙂

ஒன்றரை மணிக்கு மணியின் நண்பன் மற்றொரு வண்டியை வேலூரில் இருந்து எடுத்து வந்தான், அழைத்துச்செல்ல.ஏறி உட்காரும் முன்னே சில சொட்டைகள் இருந்ததை பார்த்து..”என்னாச்சு?”..”வாணியம்பாடி கிட்ட வண்டி காத்துல சுத்துச்சு…!!!…”

பயணங்களை பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்.பயணிக்க இன்னும் நெடுந்தூரம் இருக்கின்றது.

-விழியன்

Advertisements
14 Comments leave one →
 1. July 3, 2007 7:07 am

  வர வர உன் பஞ்ச் டயலாக்குகளின் அட்டகாசம் தாங்கல 🙂 ஆனா, அருமையான வரி, பயணங்களை பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள், பயணிக்க இன்னும் நெடுந்தூரம் இருக்கின்றது, நச் வரி…அசத்தல் உமா, பத்திரம்
  ஸ்ரீஷிவ்…

 2. July 3, 2007 7:16 am

  நான் வந்த போது இருந்த நண்பர் தானே, கண்ணடி அணிந்து இருப்பர்…

  பிறந்த நாள் வாழ்த்துக்கள்…

  விபத்த பத்தி என்ன சொல்ல… இனிமேல் சற்றே எச்சரிக்கையாக இருக்கவும்..

 3. மாணிக்கம் permalink
  July 3, 2007 7:30 am

  ”வாணியம்பாடி கிட்ட வண்டி காத்துல சுத்துச்சு…!!!…” — எழுத்து அனுபவம் நல்லா முதிர்ச்சியாயிருக்கு… உங்களுக்கு-அடிக்கடி நெடுஞ்சாலை பயணம், கவனித்து செல்லுங்கள்…

 4. July 3, 2007 7:56 am

  கால் வலி + விபத்து அதிர்ச்சி + பசி எல்லாம் இருந்தும், போட்டோ எடுத்திருக்கீங்க பாத்தீங்களா….

  (நேர்ல சொன்னப்ப போட்டோ எடுத்ததை சொல்லவேயில்ல)

 5. July 3, 2007 8:14 am

  ரொம்ப விருவிருப்பான சஸ்பென்ஸ் மர்மக்கதை போல நடந்திருக்கும் நிகழ்வுகளை நேரடியாக பார்த்த அனுபவத்தை உங்கள் நடையில் தந்திருக்கிறீர்கள்.

  கட்டுரையை நேரடியான நடையில் தந்திருப்பது உங்கள் தமிழறிவின் வளர்ச்சியையும், முதிர்ச்சியையும் காட்டுகிறது.

  வாழ்த்துக்கள்.

  ஷாரா

 6. July 3, 2007 8:24 am

  Glad to hear that no one injured..

 7. selvaraj permalink
  July 3, 2007 8:25 am

  Last line “Punch dialog” is very good.

 8. July 3, 2007 5:24 pm

  same..punch dialog அசத்தல்..
  கவனம்.

 9. July 4, 2007 2:27 am

  நிஜ மோதலை விறுவிறுப்பாக சொல்கிறீர்கள் ..

  இனிமேல் கவணமாக இருங்கள் …

  >பயணங்களை பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்.பயணிக்க இன்னும் நெடுந்தூரம் இருக்கின்றது.

  சரியான வரிகள் … 😉

 10. July 4, 2007 5:57 am

  அய்யோடா
  தப்பிச்சீங்களே அது போதும்
  நல்ல நிகழ்வு
  நல்ல அனுபவம்
  நல்ல புகைப்படம்
  ஜாக்கிரதையா போயிட்டுவாங்க விழியன்

 11. Raja permalink
  July 4, 2007 11:06 am

  Be Careful while travelling…..

 12. July 5, 2007 1:30 pm

  //அய்யோடா
  தப்பிச்சீங்களே அது போதும்
  நல்ல நிகழ்வு
  நல்ல அனுபவம்
  நல்ல புகைப்படம்
  ஜாக்கிரதையா போயிட்டுவாங்க விழியன்//

  //>பயணங்களை பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்.பயணிக்க இன்னும் நெடுந்தூரம் இருக்கின்றது.

  சரியான வரிகள் … ;)//
  ரிப்பீட்டு தலைவா…. ஜாக்கிரதையாக இருங்கள்..

  //கார் ஷெட்டில், யாரோ ஒருவரின் கார் மீது கேக்வைத்து வெட்டிய அனுபவம் புதுமையாகவும் மணிக்கு மறக்க முடியாததாகவும் இருந்திருக்கும். //
  இருக்காதா பின்னே?

  காதல் மோதலும் அருமை!!

 13. sinegithi permalink
  July 6, 2007 1:12 am

  பயணங்களைப் பத்திரப்படுத்துங்கள்…பயணிக்க இன்னும் நெடுந்தூரம் இருக்கின்றது…அருமை. ஆனாலும் இவ்வளவு பதட்டத்திலும் படம் எடுக்க மறக்கவில்லை…ரொம்பத் தான்….

 14. Manickam permalink
  August 23, 2007 1:53 pm

  🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: