Skip to content

வயநாடு செலவு

August 23, 2007

வயநாடு செலவு டெம்போ டிராவலர் வந்தாகிவிட்டது. பெட்டிகள் எல்லாம் எடுத்து வைத்தாகிவிட்டது. இன்னும் 2-3 நிமிடங்களில் துவங்க இருந்தோம். செந்திலுக்கு அலைபேசியில் அழைப்பு “மச்சி கிளம்பிட்டீங்களா?. நானும் வரேண்டா” என்று காட்பாடி என்கின்ற அருண் அந்தப்பக்கம். அவனும் வருவதாக தான் இருந்தது. கடைசி நேரத்தில் மட்டும் எப்போதும் “Bug” வருவது ஆச்சரியம் தான். அதனால் வரவில்லை என்று சொல்லி இருந்தான்.Bugகை நசுக்கிவிட்டதால் வருகிறேன் என்றான். காத்திருந்தோம். காத்திருந்தலின் பயனாக மற்றொருவனையும் ட்யூன் செய்து வயநாடு பயணத்திற்கு அழைத்து சென்றோம். ஆக மொத்தம் ஒன்பது நண்பர்கள்.

இந்த பயணத்தில் ஒரு சுவாரஸ்யமான விடயம், ஒன்பது பேரும் வெவ்வேறு காலகட்டங்களில் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். நானும் நேத்தாவும் 2001ல் BE முடித்தவர்கள், 2003ல் கேபியும், பிரகதீஷும் MSc முடிந்தவர்கள்,செந்தில்நாதன்,குமரன்,வசந்த்,அருண் ஆகியோர் 2004ல் BE முடித்தவர்கள்,மணி 2006ல் BTech முடித்தவன்.

இரவு சரியாக 12.00 மணிக்கு பெங்களூரை விட்டு கிளம்பினோம். நாங்கள் செல்லப்போகும் இடம் வயநாடு(Wayanad). இது கேரளாவில் உள்ள ஒரு மாவட்டம். சுல்தான் பத்தேரி, கல்பேட்டா போன்றவை இங்குள்ள சின்ன நகரங்கள். கேரளா, கர்நாடகம், தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களும் சந்திக்கும் இடம். பெங்களூரில் இருந்து சுமார் 290கி.மீ. கர்நாடக பேருந்துகள் நிறைய இருக்கின்றது. வயநாடு இயற்கை காதலர்களுக்கும், வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் உகுந்த இடம். ஆங்காங்கு நீர்வீழ்ச்சிகள், காட்டாறுகளை காணலாம்.வயநாட்டில் தான் கேரளாவின் பூர்வீக மக்கள் அதிகமாக வாழ்வதாக கேள்வி.பார்த்து ரசிப்பதற்கு ஏராளமான இடங்கள் இங்கு உள்ளது.

காலை சுமார் 5.30 மணிக்கு கேரளா சோதனை சாவடியில் வண்டி நின்றது. வழக்கமாக இங்கே போக்குவரத்து நெரிசல் அதிகமாம். சுமார் ஒரு மணி நேரம் வண்டி நகரவே இல்லை. மின்கம்பம் கீழே சாய்ந்து இருந்தது. தூங்கி வடிந்தவர்கள் ஒவ்வொருவராக எழுத்துவிட்டனர்.ஊர்ந்து சென்று நெரிசலை வண்டி கடந்தது. சுல்தான் பத்தேரியை அடைந்துவிட்டோம். அங்கே ஒரு வீட்டினை ஏற்கனவே தங்குவதற்கு பதிவு செய்திருந்தோம்.

ஹெர்பல் நெஸ்ட் என்கின்ற கூட்டில் தங்கினோம்.மேத்யூ என்கின்ற நபர் தான் அந்த வீட்டிற்கு சொந்தக்காரர்.வழக்கறிஞர்.தன் வீட்டில் ஒருபகுதியை வாடகைக்குவிட்டிருந்தார். மூன்று அறைகள்.ஒன்பது பேர். ஒவ்வொருத்தராக தயாராக நான் வீட்டை சுற்றி நோட்டம்விட்டேன்.நிறைய செடிகள். “அது தான் வெண்ணிலா செடி” என்றபடி வெளியே வந்தார் மேத்யூ. எல்லா செடிகளையும் அறிமுகம் செய்துவைத்தார். காபிக்கொட்டை , கார்டமம் செடி, பெப்பர் செடி என்று ஒவ்வொன்றாக காட்டினார். இரண்டு பெரிய நாய்கள் பயமுறுத்தியது.சில கிளிகள்.பனியால் நனைந்த இலைகள்.அங்கும் இங்கும் மரங்கள்.

எடக்கல் குகை:

சுமார் பத்து மணிக்கு தயாராகி, எதிரே இருந்த உணவகத்தில் இடியாப்பமும், ஆப்பமும் உண்டுவிட்டு, அப்படியே காலாற ஒரு நடை சென்று, கடைசியாக வண்டியில் ஏறி எடக்கல் குகைக்கு சென்றோம். எடக்கல் குகை சுத்தான் பத்தேரியில் இருந்து சுமார் 10 கி.மீ. பயணம் களைகட்டியது. ஒருவரை ஒருவர் கலாய்ப்பது கிண்டலடிப்பது, பாடல் கச்சேரியும் என்று குதுகலித்தது. எடக்கல் குகை பெரிய மலைமீது இருந்தது. கீழிருந்து மேலே நடந்து செல்லவேண்டும். பாதி தூரம் வரையில் வேறு ஜீப்பில் சென்றோம். அங்கிருந்து நடக்கதான் வேண்டும். ஏறும் பாதை எங்கும் புகைப்படங்கள் தான். ஏற ஏற வந்துகொண்டே இருந்தது மலையும், ஆனந்தமும், தென்றலும். மலை மீது ஏறிய பின்னர் அருமையான அற்புதமான காட்சிகள்.இந்த மலையின் பெயர் அம்புகுட்டி மலை. இரண்டு குகைகள் இங்கே உள்ளது.சுமார் 1000 அடி உயரத்தில் இருக்கின்றது.கற்காலத்தில் செதுக்கப்பட்டவை என்று கூறுகின்றனர். இது போன்ற செதுக்கல்கள் மிக அபூர்வம்.

இந்த மலையை பற்றி நிறைய கதைகள் கூறப்படுகின்றது. ராமனின் பிள்ளைகள் லவா குசா இருவரும் எய்த அம்பில் உருவானதே இந்த மலை என்கின்றனர் சிலர். ராமன் சூர்பனகையை கொன்றதும் இங்கு தான் என்கின்றனர் சிலர். 1890ல் ஆங்கில அதிகாரி பேசட் என்பவர் இந்த குகைகளை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். இது குரும்பர்கள் எனப்படும் பழங்குடி மக்களின் வேலைப்பாடுகளாக இருக்கும் என்கின்றார்.

ஒரு குகைக்கு மட்டுமே சென்றோம். இறங்கும் போது எங்க ஊர் மக்களை சந்தித்தோம். வேலூரை சார்ந்த ஐடா ஸ்கட்டர் பள்ளி ஆசிரியர்கள் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அங்கே வந்திருந்தனர். நம்ம ஊரு மக்களை எங்க பார்த்தாலும் சந்தோஷம் தானே. அருண் அந்த பள்ளியின் முன்னாள் மாணவன் என்பதால் எல்லா ஆசிரியர்களிடமும் இவனை தெரியுமா இவனை தெரியுமா என்று கேட்டபடி இறங்கினோம்.

சோச்சிப்பாரா நீர்வீழ்ச்சி

மதிய உணவிற்கு பிறகு சோச்சிப்பாரா நீர்வீழ்ச்சிக்கு சென்றோம். மதியம் 3.30 ஆகிவிட்டது. சுமார் 2.5 கி.மீ நடந்து செல்லவேண்டும். மலை நடுவிலே செல்ல நல்ல பாதை அமைத்து இருந்தார்கள்.மழை வந்துகொண்டிருப்பதால் சீக்கிரம் சென்று குளித்துவிட்டு வர சொன்னார்கள்.கல்பேட்டா நகரில் இருந்து சுமார் 20 கி.மீ. இந்த நீர்விழ்ச்சிக்கு செல்லும் பாதையில் இரண்டு பக்கமும் காபி தோட்டம் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. பாதையில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். நீர்வீழ்ச்சியில் நல்ல தண்ணீர். இரண்டு மூன்று நாட்கள் முன்னர் நல்ல மழை போலும். இறங்கும் வழியில் தசைபிடிப்பு ஏற்பட்டதால் நொண்டியபடியே நானும் நேத்தாவும் இறங்கினோம். இது போன்ற சமயங்களில் தான் உடல் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று மண்டையில் கொட்டுவதை போல இருக்கும். காலையில் எடக்கல் குகைக்கு செல்லும் பாதையில் நிறைய படிகள் ஏறியதால் தசைபிடித்திருக்க கூடும்.

நீர்வீழ்ச்சி எப்போதும் சுகம் தான். நண்பர்கள் உள்ளே சென்று குளிக்க, வெளியிருந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தேன்.அடுத்து எங்கு செல்வது என்று ஆலோசனை நடத்தியபடியே அன்றைய மாலை கழிந்தது. “தொட்டால் பூ மலரும்” என்கின்ற மொக்கை படத்தை பார்த்தபடி தங்கியிருந்த வீட்டினை அடைந்தோம். நேற்றைய இரவின் ஒரு மணி நேர தூக்கத்தாலும், இன்றை பொழுதின் அசதியாலும் விரைவிலேயே உறங்க சென்றுவிட்டோம்.

முத்துங்கா வனவிலங்கு சரணாலயம்

நான், கேபி, செந்தில்,அருண், பிரகதீஷ் மட்டும் அதிகாலையில் முத்துங்கா வனவிலங்கு சரணாலயத்திற்கு புறப்பட்டோம். ரம்மியமான காட்சிகள்.சரணாலயத்திற்குள் செல்ல அங்கிருந்த ஜீப் ஒன்றினை ஏற்பாடு செய்து உள்ளே சென்றோம். எப்போது என்ன விலங்கு வரும் என்று தெரியாதாம். சில மான்கள் கண்ணில் தென்பட்டது. காட்டுப்பன்றி ஆங்காங்கு இருந்தது. காட்டு நடுவே எந்த பாதுகாப்பு இல்லாமல் பயணிப்பது கொஞ்சம் பயமாக தான் இருந்தது. சாரதி தமிழும் மலையாளமும் கலந்த மொழியில் எங்களுடன் பேசிக்கொண்டு வந்தார். யானைகள் தண்ணீர் இல்லாத போது பந்திப்பூர் காட்டுபகுதியில் இருந்து இங்கே வருமாம்.யானை கூட்டமாக இருந்தால் ஏதும் செய்யாதாம், தனியாக இருந்தால் ஜீப்பை உதைக்க வரும் என்றார். பந்திப்பூர், முதுங்கா,முதுமலை ஆகிய மூன்று காடுகள் சந்திக்கும் இடத்தில் இறங்கினோம். மூன்று மாநிலங்களும் இங்கே சந்திக்கின்றது. சின்ன வயதில் ஒருமுறை புதுச்சேரியில் ஒரு வீட்டை காட்டினார்கள். முன்வாசல் தமிழகத்தை சார்ந்ததாகவும், பின்வாசல் புதுச்சேரியை சார்ந்ததாகவும். இன்னும் கூட எப்படி எல்லைகளை கணக்கிடுகிறார்கள் என்ற சந்தேகம் உள்ளது.

சமீபத்தில் பெய்த மழையால் காட்டுக்குள் ஜீப்பில் செல்வதே கடினமாக இருந்தது. எதிரே வந்த ஜீப்பில் இருந்தவர்கள் யானையை பார்த்ததாக சொன்னார்கள். நாங்கள் வேறுவழியே வெளியேறிக்கொண்டிருந்தோம். காட்டுப்பாதையில் இருந்து கோழிக்கோடு நெடுஞ்சாலையில் கிளம்பிய இடத்திற்கு புறப்பட்டோம். வழியில் ராமர் கோவிலில் பத்து நிமிடம் நின்றோம். கோவிலின் பின்புறம் காட்டாறு இருந்தது.

ஏமாற்றம்..

தங்கியிருந்த இடத்தை அடைந்து, மற்றவர்களை கிளப்பி கிளம்புவதற்கு மணி 11 ஆகிவிட்டது. குருவா தீவுகளுக்கு செல்வதாக திட்டம். குருவா தீவு நாலாப்பக்கமும் ஆறு கொண்ட தீவு. வேறு வேறு பாதைகளில் தீவை அடைய முற்பட்ட போதும், எந்த பக்கமும் வழி இல்லை. நிறைய தண்ணீர் பெருகிவிட்டதால் யாரையும் அனுமதிப்பதில்லை என்று சொல்லிவிட்டார்கள்.மீண்டும் எங்கே செல்வது என குழப்பம். திருநள்ளி என்கின்ற கோவிலுக்கு செல்லலாம் என்றால் அதற்கும் மணி 1.30 ஆகிவிட்டது. அப்படியே மற்றொரு காட்டுவழியே மைசூரை அடைந்துவிடலாம் என்றனர் சிலர். மீண்டும் காட்டுக்குள்ளே பயணம்.

முன்னர் சென்ற சரணாலயம் போல் இல்லாமல் இது மேலும் திகிலூட்டியது. நிறைய மான்கள், மயில்கள், காட்டு பன்றிகள், யானைகள் தென்பட்டது. சுமார் முப்பது கி.மீ வழி படு மோசம். சாரதிக்கு கை வலித்தது. மைசூரை சுமார் 4.30 மணிக்கு சென்று, மதிய உணவினை முடித்து பிருந்தாவன் சென்றோம். மீண்டும் மலர்கள். காட்டிலே பயணித்து நாட்டிலே பயணித்தது கொஞ்சம் கடுப்பாக தான் இருந்தது. புகை, கூட்ட நெரிசல்..நான்காம் வருடமாக தொடர்ந்து பிருந்தாவன் தோட்டத்திற்கு வருகின்றேன். சில மாதம் முன்னர் வரை தோட்டத்தை காவிரி பிரச்சனையால் மூடி இருந்தார்கள்.ஏராளமான மக்கள்.குழந்தைகள். மாலை தண்ணீர் நடனம். எல்லாம் முடித்து பெங்களூருக்கு திரும்ப இரவு மணி 1. வண்டிவிட்டு இறங்கும் போது .

“செப்டம்பர் 29,30, அக்டோபர் 1,2 வால்பாறை, கேரள டிரிப் போட்டுடலாமா? ”

“அடப்பாவிங்களா?…”

மேலும் சில தகவல்கள்:

* பெங்களூரில் இருந்து 290 கி.மீ

* இங்கிருந்து குடகு மலை 2 மணி நேரம் (80 கி.மீ)

* நம்ம ஊட்டி 115 கி.மீ

* பார்க்க சில வேண்டிய இடங்கள் : எடக்கல் குகைகள், பூகட் ஏரி, பானசுரா அணை, முத்துங்கா வனவிலங்கு சரணாலயம், சீயம்பம் நீர்வீழ்ச்சி,திருநள்ளி கோவில், தோல்பெட்டி வனவிலங்கு சரணாலயம்,சோச்சிப்பாரா நீர்வீழ்ச்சி

இயற்கை இயற்கை தான் செயற்கை செயற்கை தான்.முடிந்தவரையில் இயற்கையை இயற்கையாகவே வைக்க முயற்சிப்போம்.

– விழியன்

Advertisements
15 Comments leave one →
 1. Panneer Selvam permalink
  August 23, 2007 9:43 am

  Ennai koopidavae illa …naan unka kooda pesa maataen umanath ….!!!!

 2. Panneer Selvam permalink
  August 23, 2007 9:45 am

  Iyarkaiya neenga mattum enjoy pannanum munnu nenakaa koddathu ellarukkum kaamichi rasikkanum ..neenga panninathu ….suyanalam ..i hate ..next time kattayam inform to me ..iam here only ..

 3. Bragadesh permalink
  August 23, 2007 9:48 am

  Get ready for the next trip ..Top Slip,Pollachi,valparai,chalakudi,guruvayur and tiruchur and cochin…
  Sept 30 31 oct 1 and 2.
  Santhosamthangaaa Mukiyaam…

 4. August 23, 2007 9:53 am

  அட‌ப்பாவி ம‌க்கா,

  நான் அந்த‌ப்ப‌க்கம் ஊர‌ விட்டு கிள‌ம்பின‌ உட‌னே உல்லாச‌ ப‌ய‌ண‌மா போறீங்க‌ளா?

  உங்க‌ள வந்து க‌வ‌னிச்சுக்குறேன்

 5. PositiveRAMA permalink
  August 23, 2007 10:04 am

  ம் ம் நல்லா ஊர் சுத்துறீங்க .. கொடுத்து வச்சவங்க 🙂

 6. August 23, 2007 10:05 am

  அட, முன்னாடியே சொல்ல கூடாதா? நானும் வந்திருப்பேன்ல? என்னோட இரண்டு பால்ய சிநேகிதகள் அங்கேதான் இருக்காங்க! மோழி & வல்சம்மா. போன மாசம் கூட மோழி என்ன அங்க வரச்சொல்லி கட்டாயப் படுத்தினாங்களே! அடுத்த விடுமுறை அங்கேதான். ப்ரேம், நீங்களும் வரலாம் குடும்பத்தோட! 🙂

 7. August 23, 2007 10:06 am

  aaha

 8. August 23, 2007 10:13 am

  Paneer,
  அடுத்தது மீண்டும் கேரளா..வாங்க..வாங்க..

  ப்ரேம்,
  உன்னைய யார் வரவேண்டாம்னு சொன்னது?

 9. August 23, 2007 10:14 am

  ராமா,
  டாண்ட் புட் கண்ணு..!!!

  காந்தி,
  இது தெரிஞ்சிருந்தா அவங்க வீட்டிலேயே தங்கி இருப்போமே..!!!..

 10. Senthil permalink
  August 23, 2007 10:29 am

  romba naalachu vizhiyan kitta irunthu mail vanthunnu ninaichirunthen…. nallla irukkunga… unga selavum, katturaiyum…..

 11. August 23, 2007 10:59 am

  thalai…

  vazhakkam pola “oor suttrum vaaliban” neengal enbathai niroobithu vitteergal..

  vaazhthukkal..

  seekkiram padangalai podungappa..

 12. Gnanavelu permalink
  August 23, 2007 11:22 am

  You missed the Trecking to the top of the wayanad(Chembara peak)… it was amazing… but very difficult to go…

  we enjoyed that moments last year…

 13. Manickam permalink
  August 23, 2007 1:46 pm

  Wow…. Nice bro… I was in vellore on that day… You could have called me na…

 14. August 24, 2007 1:02 am

  விழியன் ,

  பசுமையான பயணம் 😉 சீக்கிரம் படங்களை பதிவிடுங்கள் !!

 15. August 24, 2007 8:26 am

  <<>>

  அதுக்குத்தான் கிளம்பறதுக்கு முன்னாடி பெரியவங்க (!) கிட்ட சொல்லிட்டு போனும்ங்கறது! சரியாங்க! 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: