Skip to content

“அதோ இருக்கான் அவன்” – நிகழ்வு

August 29, 2007

“அதோ இருக்கான் அவன்”

சித்தூர் அருகே புத்தூர் என்கின்ற சின்ன நகரம். புத்தூர் கட்டு என்பது வட தமிழகத்தில் பிரபலம். கடந்த சனிக்கிழமை நடந்தேறியது ஓர் கொடூரம்.

திருவிழாவை ஒட்டி சனிக்கிழமை (25-08-07) ஊரில் பாட்டுக்கச்சேரி நடக்கின்றது. ஊரே கூடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது. கேட்கவே வேண்டாம், தண்ணீர் விநியோகம் பிரமாகதமாகவே தொடர்கின்றது. இளசுகளின் பட்டாளம் போதையில் மிதக்கின்றது. “அதோ இருக்கான் அவன்” என்று இரண்டு மூன்று நபர்கள் ஒருவனை காட்டி துரத்துகின்றார்கள். துரத்தப்படுபவன் ஓடுகின்றான். துரத்தப்படுபவனின் நண்பர்களும் விரைவில் அவனை வந்தடைகின்றார்கள்.மாங்காய் மண்டியில் அனைவரும் நிற்கிறார்கள்.

பேச்சு தீவிரமடைகின்றது. துரத்தி வந்தவர்களில் ஒருவன் துரத்தப்பட்டவனை அடிக்க வருகின்றான். அவன் தன் சட்டை பையில் இருந்த நேபாள கத்தி எடுத்து வயிற்றிலே குத்த, கதறியபடி விழுகின்றான் அடிக்க வந்தவன். அடுத்தவன் வருகின்றான் அவனுக்கு கழுத்திலே வெட்டு.சரமாரியாக குத்துகிறான். இரண்டு உயிர்கள் அங்கேயே பலியாகின்றது. மற்றொரு உயிர் மருத்துவமனையிலும், இன்னும் ஒருவர் நினனவிழுந்து கோமா நிலையில். நிற்க.

நடந்தேறிய நிகழ்விற்கு பின்னால் இருப்பது காதல். கத்தியை வீசியனுக்கும், கொல்லப்பட்ட சகோதரகளின் சகோதரிக்கும் காதல் மலர்ந்து இருந்தது. ஊருக்கு தெரியாமல் ரகசியமாக இருந்து வந்தது. திருவிழாவின் போது இவர்களின் காதல் வெளிச்சத்திற்கு வருகின்றது. விஷயம் கேள்விப்பட்ட சகோதரர்கள் கொதித்து எழுந்தார்கள். அவனை கூப்பிட்டு, விட்டுவிடு என மிரட்டுகிறார்கள். வேண்டாம், இதெல்லாம் நடக்காது,இனி பின்னால் வராதே. மீண்டும் சந்திக்கின்றனர். சனிக்கிழமை பாட்டுக்கச்சேரி வருகின்றது. சம்பவம் நடக்கின்றது.

சம்பவம் நடந்ததும், அவனின் மூன்று நண்பர்களும் காணவில்லை. ஊருக்கு விஷயம் தெரிகின்றது. சாரை சாரையாக கிளம்பி அவன் வீட்டிற்கு சென்று அவனது தாய் தந்தையை அடித்து நொருக்குகின்றார்கள்.அவனது தம்பியையும் காலி செய்கின்றார்கள். மேலும் கொடுமை, அவனது தந்தையை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றார்கள். வழி மறித்து அவர் தலையில் கல் போடப்படுகின்றது. கொல்லப்பட்ட மூன்று சடலங்களையும் சென்னை, திருப்பதி, சித்தூர் நெடுஞ்சாலையில் போடுகின்றார்கள். காவல்துறை கொன்றவனை எங்கோ வைத்திருக்கின்றது, அவனை உடனே மக்களிடம் கொடுத்தால் தான் சடலங்களை எடுப்போம் என்கின்றார்கள்.

முடிந்த கொடூரத்தின் ஆணி வேர் தான் என்ன? முதலில் பக்குவமில்லாத காதல். வெட்டியவனின் வயது 18. வெட்டப்பட்டவர்கள் இருவரும் புதிதாக திருமணமானவர்கள் 20-22 வயதுக்காரர்கள் என்பது இன்னும் வருத்தமளிக்கின்றது. அவர்களின் இளம் மனனவிகள் என்ன தவறிழைத்தார்கள்.  அடுத்ததாக அறிவை மறைக்கும் போதை. தன்னிலையை மறந்த இரண்டு நிமிடங்களில் எத்தனை மாற்றம். உயிர் சேதம்.உயிர் என்ன அத்தனை மலிந்துவிட்டதா நாட்டில்? அடுத்ததாக இனவெறி. என்றைக்கு நாம் நெறிப்பட போகின்றோம்?

மனிதர்கள் நாகரீகம் அடைந்துவிட்டார்கள் என்று யாரும் கூச்சல்கள் இனி போடவேண்டாம். நாம் கடக்க வேண்டியதும் செய்ய வேண்டியதும் ஏரளம் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது இந்த வெட்டுக்குத்து


விழியன்

Advertisements
5 Comments leave one →
 1. selva permalink
  August 29, 2007 7:24 am

  Really sad…..

  the way way u said is like that “Ramayanam” story. -Selva

 2. August 29, 2007 8:23 am

  என்னங்க சினிமால நடக்கிறது மாதிரி சொல்லுரீங்க. இதெல்லாம் உண்மையா? ஆனால் நடந்த சம்பவங்களுக்கெல்லாம் முக்கிய காரணம் சினிமா என்று தான் நான் கூறுவேன். சினிமாவில் நாயகிக்காக நாயகன் பலரைக் கொல்லுவான், அதை தவறில்லை என்று காட்டுவான். அதைப் பார்த்துக் கொண்டு நம் இளைஞர்கள் கெட்டுக் குட்டிச் சுவராகிறார்கள். நமது ஆட்கள் சினிமாவை நிஜமென்று நினைக்கிறார்கள். அவை அனைத்துக் நிஜமில்லை நிழல் என்று எப்போது புரிந்து கொள்கிறார்களோ அன்று தான் இவை போன்ற வற்றைத் தடுக்க முடியும்.

 3. செந்தில் permalink
  August 30, 2007 5:59 am

  மனதை கனக்க வைத்து விட்டது. இது போன்ற நிகழ்வுகள் எப்போது நிற்க போகின்றதோ??? இப்படியொரு சமூகத்தில் நாமும் வாழ்கிறோமே என்று கவல்லையாக இருக்கிறது…..

 4. August 30, 2007 6:02 am

  செந்தில் அழகு சொன்னதை நான் அப்படியே வழிமொழிகிறேன்.

  ஆனாலும் இன்றைய சினிமாவில் யார் ஒருவரையொருவர் முந்தியடித்துக் கொண்டு தத்தம் புலமை, திறமைகளை,கற்பனைகளை விதைக்கிறார்களோ (வித்தியாசமாகச் செய்தல் என்னும் செயல் நெருப்புக்கு நெய் ஊற்றுவது போல் ஆகிவிட்டது) அவர்களுக்கே முதலிடம் என்று நிறுவப்பட்டு விட்டது.. அதனால் வந்த விளைவுகளும் இதற்குக் காரணம்.

  “கடவுள் ஏன் கல்லானான்
  மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே”

  வருந்துகிறேன் இப்படிப்பட்ட சம்பவங்களையும் அதன் பின்விளைவுகள் மற்றும் பின்னணிகளையும் கண்டு, கேட்டறியும் போது!

  ஆழ்ந்த அனுதாபங்கள்.

 5. August 30, 2007 6:14 am

  //முதலில் பக்குவமில்லாத காதல்//

  அவரவர் எண்ணங்கள், சுற்றியுள்ள சூழ்நிலை, மனிதர்களும் இதற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ இதற்குக் காரணமாகிறார்கள் என்பது என் கருத்து.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: