Skip to content

நந்தி மலை செலவு

October 9, 2007

நந்தி மலைக்கு இது மூன்றாவது முறை பயணம். மற்ற இரண்டு பயணத்தை விட இந்த பயணம் அழகாக அமைந்தது. முதல் முறை நான்கு நண்பர்கள் இரண்டு வண்டியில் சென்றோம். இரண்டாவது முறை குடும்பத்தோடு சுமார் 15 பேர் சென்றோம்.( சுனாமி தினத்தன்று). இந்த முறை ஆறு பேர். மூன்று வாகனங்கள்.நான், கே.பி, பிரகதீஷ், குப்தா, ஜிம்மி, சங்கர்.

ஆறு மணிக்கெல்லாம் மலையில் இருக்க வேண்டும் என்கின்ற ஆவலில் ஐந்து மணிக்கே கிளம்ப முடிவெடுத்தோம். நாம முடிவெடுத்தால் மட்டும் போதாது வீட்டு உரிமையாளரும் முடிவு எடுக்க வேண்டும் என்பது போல இரண்டு பேர் குளித்து முடிக்க தண்ணீர் காலியானது. அதனால் தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து எல்லாம் முடிக்க 5.30 மணியானது. அதற்குள் குப்தா, சங்கர், ஜிம்மி வந்துவிட்டனர். 5.35மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினோம்.

ஒரே ஒரு இடத்தில் மட்டும் பாதையை விட்டு விலகி சென்று மீண்டும் சரியான பாதைக்கு வந்தோம். எங்கள் வண்டி மட்டும் மெதுவாக சென்றது.காரணம் 1.நம்ம சைஸ், 2. அடிக்கடி நின்று படம் பிடித்து வந்ததால். ஹைதராபாத் செல்லும் பாதை என்பதால் சாலை நன்றாக இருந்தது. தேவனஹல்லியில் (புதிதாக உருவாகும் பெங்களூருக்கான விமான நிலையம்) இருந்து 2-3 கி.மீ தூரத்தில் இடப்புறம் சின்ன சாலையில் திரும்ப வேண்டும். எந்த ஒரு வழிகாட்டியும் இங்கே இருக்காது, அதனால் கவனமாக இங்கே திரும்ப வேண்டும். கிராமங்களுக்குள் செல்வதால் கொஞ்சம் மெதுவாக செல்வது நல்லது.

மலைப்பாதை ரொம்ப வளைவுகள் நிறைந்ததாக இருக்கவில்லை. எங்கே மேகங்கள் கடந்து போகும் காட்சியினை பார்க்காமல் போய்விடுவோமோ என்கின்ற கவலை கலைந்தது. மேகங்கள் எங்களை தொட்டு சந்தோஷப்பட்டு சந்தோஷப்படுத்திவிட்டு சென்றது. ஆஹா..

இந்த இடம் Tippu Drop.தலைவர் இங்கிருந்து தான் தவறு செய்தவர்களை தள்ளிவிடுவாராம். மலையில் எங்களோடு மரத்திற்கு அருக ேவேறு ஒருவரும் மலையை ரசிப்பது தெரிகின்றதா?

பனி பொழிந்து எங்கும் பரவசமான காட்சியாக இருந்தது. காட்டுக்குள் செல்வது போன்று வழக்கமான வழியில் செல்லாமல் ஒற்றையடி பாதையில் சென்றோம். பசிக்க ஆரம்பித்துவிட்டது. ஒரே ஒரு ஹோட்டல் இருந்தது. ஒருவரை ஒருவர் கலாய்த்தபடி பொறுமையாக உண்டு முடிந்தோம். பின்னர் அங்கே ஓர் பழமை வாய்ந்த கோவில் இருந்தது. அமைதியாக அமர்ந்திருந்தோம்.

நந்தி மலை:

நந்தி மலை இருப்பது கோலார் மாவட்டம் , கர்நாடகம். பெங்களூரில் இருந்து சுமார் 60 கி.மீ. நந்திதுர்கா மலையே பரவலாக நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது. நந்தி மலையே பென்னாறு, பாலாறு பொன்னையாறு ஆகிய ஆறுகளில் பிறப்பிடமாக கருதப்படுகின்றது. கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரத்தில் இருக்கின்றது.ஆயிரம் வருடத்து பழமை வாய்ந்த நந்தி கோவிலால் நந்தி மலை என்ற பெயர் பிறந்தது.

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து 60 கி.மீ என்பதால் இரு சக்கர வாகனங்களில் செல்லலாம். அல்லது ஏதேனும் வாகனங்களில் செல்லலாம். பெங்களூரில் இருந்து பேருந்துகள் செல்கின்றன. ஆனால் வழியில் நிறுத்தி ரசிக்க முடியாது.விடியற்காலை பயணம் மிகச்சிறந்தது. மேகங்கள் நடுவே செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

சங்கரும் குப்தாவும் மட்டும் கிளம்பினார்கள். குப்தாவிற்கு யாரோ வாழ்க்கை சக்கரத்தை (அதான்பா Treat) ஓட்டுகின்றார்களாம், சங்கர் குடும்ப இஸ்திரி :). மற்ற நால்வரும் மலை உச்சியில் படுத்து பாடத்துவங்கினோம். வெயில் அடித்தாலும் குளுகுளுவென காற்று. நிறைய்ய்ய ஜோடி புறாக்கள். ஒரு மணி நேரம் கடந்திருக்கும், சங்கரிடம் இருந்து அழைப்பு “பயப்பட்ற மாதிரி ஏதுமில்லை. குப்தாக்கு மட்டும் ஸ்டிச்சஸ் போட்றாங்க…”. வழியில் ஒரு வேகத்தடையை கவனிக்காமல் கடந்துள்ளனர். வண்டி கவிழ்ந்துவிட்டது. பக்கத்து கிராம மக்கள் முதலுதவி செய்துள்ளனர். கையிலும் காலிலும் அடி. தலைப்பான் இருந்ததால் தலை தப்பியது.

அதற்கு மேல் எங்களால் அங்கே இருக்க மனமில்லை. அரை மனதோடு கிளம்பினோம்.வழியில் ஒரு செம்பருத்தி தோட்டத்தில் நிறுத்தினோம். ஒரு ஏரியில் நிறுத்தினோம், மதிய உணவிற்கு ஒரு தாபாவில் நிறுத்தினோம். ஆனால் பயணங்கள் நிற்காது. தொடரும். இந்த வாரம் மைசூர். தசரா பண்டிகையை முன்னிட்டு… (யாராச்சும் coming? )

தருமமும் தலைப்பானும் ஒன்னு, எப்படி? இரண்டும் தலை காக்கும்.

பயணியுங்கள்..தலைப்பான் அணிந்து பயணியுங்கள். (இது தான் இந்த பயணத்தின் பாடம்).

-விழியன்

Advertisements
18 Comments leave one →
 1. selva...Salem...Selva permalink
  October 9, 2007 8:31 am

  Ayya… nanum varanga ayya.. yennaum konjam kudikittu ponga…

 2. sridhar permalink
  October 9, 2007 8:34 am

  nice one..carry on.

 3. October 9, 2007 8:35 am

  வாவ்.. அருமையான படம் (முதல் படம்).

  நல்ல அருமையான விவரிப்பும் கூட.

  நானும் ஒரு முறை சென்றிருக்கிறேன் தல..

  மைசூரா? கலக்குங்க.. என்னால வர முடியாத சூழ்நிலையில இருக்கேன்.

  என்ஜாய் மாடி..

 4. October 9, 2007 8:36 am

  படங்கள் அழகு

 5. October 9, 2007 8:58 am

  எப்பவும் போல நல்ல பயணக்கட்டுரை.
  ஆனால் என்ன பயணம் சோகமயமானது கொஞ்சம் வருத்தம் தான். முதல் புகைப்படம் அருமை. அதை விட அடுத்தப்படத்தில் உங்களுடன் சேர்ந்து ரசிக்கும் உருவம் அதைவிட அருமை.

 6. October 9, 2007 8:59 am

  hi, viziya photos supara irukku, nallavelai avargalukku periya kaayam ethuvum illai,

 7. October 9, 2007 9:13 am

  ஆமா..கேக்க மறந்துட்டேன்..

  குப்தா எப்படி இருக்கார் இப்ப?

 8. October 9, 2007 9:30 am

  நன்றாக இருப்பதாக தகவல்..

 9. October 9, 2007 10:52 am

  அந்த வேற ஒருவர் அருமையாக உள்ளது… நீங்க குறிப்பிடாமல் இருந்தால் மிஸ் பண்ணி இருப்பேன் 🙂

  மைசூர்க்கு சான்ஸ் இல்ல… பாண்டி டிரிப் க்கு பெயரை குறித்துக் கொள்ளவும். 🙂

 10. shanv permalink
  October 9, 2007 10:56 am

  article nalla irukku..
  ana padichapparam konjam kashtama irukku…
  unga friend ippo epdi irukkanga ?

 11. t.murali permalink
  October 9, 2007 11:14 am

  Good travel tips; continue the fun in mysore also; cheers

 12. Pandiaraj permalink
  October 9, 2007 1:05 pm

  Pictures are very good.

 13. shantamani permalink
  October 10, 2007 12:36 am

  hi,

  as usual good photography..

  whenur leaving for mysore…

  let me know…

  how is ur friend..
  god bless

 14. October 10, 2007 1:02 am

  கலக்குங்க விழியன் ….

  விவரிப்புகளும் .. படங்களும் .. அருமை .. மைசூர் பயண அனுபவத்தையும் அடுத்த பதிவில் எழுதுங்கள் …

  அன்புடன்
  தனசேகர்

 15. Loveish permalink
  October 10, 2007 2:47 am

  Good Narration…..Especially the Lessons Learnt – Helmet!

 16. October 10, 2007 4:22 am

  Thanks Pandi, Murali, Saran, Shantamani.

  Leaving to Mysore this Saturday.

 17. Pandiaraj permalink
  October 10, 2007 1:30 pm

  Happy journey. If going by two wheeler then do not forget the Helmet.
  Interested to know your experience and see the photos.

 18. January 12, 2016 5:27 am

  அருமை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: