Skip to content

வார்த்தை விழும் முன்..

February 21, 2008

இரயில் கிளம்பியது. கூட்டம் வழிந்தது. அனைத்து தரப்பட்ட வயதினரும் இருந்தனர். கல்லூரி மாணவர்கள். இளம் ஜோடிகள். வயதானவர்கள். குழந்தைகள். அங்கிருந்த அனைத்து கண்களும் இரண்டு நபர்களையே மாறி மாறி மொய்த்துக்கொண்டிருந்தது. வயதான முதியவரும் அவரின் மகனும். சன்னலுக்கு வெளியே வேடிக்கைபார்த்தபடி இருந்தான் அந்த இளைஞன்.

இரயில் சற்றே வேகம் கொண்டது. இரயிலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அந்த இளைஞனின் உற்சாகமும் அதிகரித்தது. வெளியே கடக்கும் காட்சிகளை கண்டு ஆனந்தம் கொண்டவனாய் இருந்தான்.

“அப்பா, அங்க மரங்கள பாருங்க.எவ்வளவு வேகமா பின்னாடி போகுது…”

அவனின் நடவடிக்கைகள் முப்பது வயது இளைஞனுக்கு உரியதாக இல்லை. வேடிக்கை பார்ப்பதை வேடிக்கையாய் பார்த்தனர். முனுமுனுப்புகள் அங்கும் இங்கும். புதிதாய் திருமணமான சரவணனும் அவன் மனைவியும் அந்த இளைஞனுக்கு எதிரே அமர்ந்திருந்தனர். தன் மனைவியிடம் அவன் பைத்தியமாக இருப்பான் என சைகை செய்தான். இருவரும் புன்னகையினை பரிமாறிக்கொண்டனர்.

திடீரென மண் மீது நேசம் கொண்ட மழை, வானிலிருந்து பூமியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது, சன்னல் திறந்து வைத்திருந்த எல்லா இடங்களிலும் தூறல் உட்புகுந்தது. அந்த இளைஞன் மேலும் உற்சாகம் கொண்டான். ” அப்பா..மழை எவ்வளவு அழகா இருக்கு பாருங்கப்பா..அய்யோ…”

சன்னல் திறந்தே இருந்ததால், சரவணன் மனைவி ஆடை நனைந்துவிட்டது. எரிச்சலுற்றாள். புது மனைவிக்கு எரிச்சல் என்றால் கணவன் என்ன செய்வான்?

“யோவ் மழை வரது தெரியல…இவ்வளவு வயசாச்சு, உன் பையனுக்கு புத்தி சரியில்லைன்னா எங்காச்சும் பைத்தியக்கார ஆஸ்பத்திரில விட வேண்டியது தான. ஏன் இப்படி எல்லார் உயிரையும் வாங்குற…”

இரயிலின் தடக் தடக் சத்தமும், மழையின் தாளம் மட்டும் கேட்டது. உள் இருந்தவர்கள் அனைவரின் கவனமும் அந்த பெரியவர் மீதே.

பெரியவர் தயங்கியபடி தாழ்வான குரலில்…”நாங்க ஆஸ்பத்திரியில இருந்து தான் வரோம் சார். காலையில தான் டிஸ்சார்ஜ் பண்ணாங்க. சின்ன வயசுல உடம்புக்கு முடியாம போனப்ப பார்வையும் போயிடுச்சு, போன வாரம் தான் ஒரு புண்ணியவான் தயவால பார்வை கிடச்சுது என் புள்ளைக்கு. இந்த மழையும் உலகமும் அவனுக்கு புதுசா இருக்கு…”

அனைவரிடமும் கை கூப்பி “உங்களுக்கு ஏதாச்சும் சிரமம் ஏற்படுத்தி இருந்தா மன்னிச்சிக்கோங்க…”

இளைஞன் தூறலுடன் நட்பு கொண்டு உறவாடிக்கொண்டிருந்தான்…

உண்மை உணரும் வரை நாம் பார்ப்பது மட்டுமே சரி என நினைத்திருப்போம். எது உண்மை என புரிந்த உடன் நம் எண்ணமே நம்மை சுட்டுவிடும். ஆத்திரம் கொண்ட வார்த்தைகள் கொட்டுவதற்கு முன்னால் சற்றே சந்திப்போம்.

(தமிழாக்கம் மட்டும்)
-விழியன்

Advertisements
14 Comments leave one →
 1. February 21, 2008 2:29 pm

  ஆத்திரம் கொண்ட வார்த்தைகள் என்றுமட்டுமல்ல

  வார்த்தைகள் கொட்டுவதற்கு முன்னால் சற்றே சந்திப்போம்.

  மிக நல்ல பதிவு.

 2. மீனா permalink
  February 21, 2008 2:31 pm

  மனம் நெகிழவைத்த பதிவு

  \\ ஆத்திரம் கொண்ட வார்த்தைகள் கொட்டுவதற்கு முன்னால் சற்றே சிந்திப்போம் \\

  எங்கே சிந்திப்பது.. இந்த அவசர உலகத்தில் பொறுமை என்பதுதான் யாருக்குமே இல்லையே

 3. February 21, 2008 2:31 pm

  அண்ணா அருமையா இருக்கு. தமிழாக்கம்னாலும் உயிரோட்டம் குறையாமல் எழுதியிருக்கீங்க.

 4. February 21, 2008 6:33 pm

  மிக நல்ல கதை! 🙂
  மூலம் எந்த கதை ??

  எந்த மொழியில் இருந்து தமிழாக்கப்பட்டது?

 5. February 22, 2008 3:14 am

  மூலம் ஓர் ஆங்கில மடல். நமக்கு ஆங்கிலம் விட்டா வேற மொழி தெரியும் CVR. 🙂

 6. February 22, 2008 4:58 am

  நல்ல பதிவு…

 7. February 22, 2008 6:26 am

  என்னதான் கோபமாக இருந்தாலும் ஒருமுறையாவது அதாவது முதல்முறையாவது பணிவாய் வேண்டுவது நல்லது.. அது வெளியிலாகட்டும் அல்லது வீட்டிலாகட்டும். வீட்டிலிருந்து தொடங்குவது நல்லது, என்பதையும் இலைமறை காயாய் உணர்த்தியது உங்கள் பதிவு. நல்ல கதை. நல்ல பதிவு.
  -கவிப்ரியன்.

 8. பாலாஜி இராமு permalink
  February 22, 2008 1:55 pm

  கண்னால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.

  இதற்கு ஏற்ற உதாரணம்.

  வாழ்த்துக்கள்.

 9. February 23, 2008 5:22 am

  நல்ல கதை ரசிச்சுப் படித்தேன்

 10. Naveen permalink
  February 25, 2008 9:25 am

  migavum azhagana,aazhamaana,arumaiyana
  srrikadhai.

  aathirathil arivizhapporkku, idhu nallathoru paadam.

  VAZGHA VIZHIYAN!!

  Natpudan,
  -V.Naveen.

 11. March 4, 2008 3:41 pm

  Very True!!
  க‌தை ந‌ல்லாயிருக்கு.. உங்க‌ள் ர‌ச‌னையையும், முய‌ற்சியையும் பாராட்டுகிறேன்..

 12. Abee permalink
  March 5, 2008 4:05 am

  Uma, Its really touching. Actutally i read the english source of this but still this has put the anchor in the heart.

  Kudos for your remarkable work.

 13. March 12, 2008 1:08 pm

  nice one.

  (read as tamil)
  Unmai sudum yenpathu ithu thaanoo..

Trackbacks

 1. கில்லி - Gilli » Blog Archive » வார்த்தை விழும் முன்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: