Skip to content

வாரணம் ஆயிரம் – திரை விமர்சனம்

November 26, 2008

வாரணம் ஆயிரம் – திரை விமர்சனம்:

வாரணம் ஆயிரம்னா என்னங்க? என்றபடி இரண்டாம் முறையாக தியேட்டர் வாசலை அடைந்தோம் நானும் மனைவியும். முதல் முறை சென்றபோது டிக்கெட் கிடைக்காமல் திட்டு வாங்கியதை மறந்து , மறக்க முயற்சித்து முன்னரே பதிவு செய்துவிட்டு தான் இந்த முறை சென்றோம்.

கிருஷ்ணனின் சுயசரிதம் தான் வாரணம் ஆயிரம். கதை சொல்வது அவர் மகன் சூர்யா. ஆரம்பக்காட்சிகளிலேயே இறக்கும் தந்தை, அதை தொடர்ந்து அவரின் காதலிலில் இருந்து ஆரம்பிக்கின்றது கதை. ஒவ்வொரு காட்சியிலும் மிளிர்கின்றார் சூர்யா. தந்தை மகன் என்கின்ற இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் என அவர் நடிப்பு திறமையை குறைத்து கூற முடியாது. படத்திற்கு படம் வித்யாசம் காட்ட முடியாத சக நடிகர்கள் மத்தியில், காட்சிக்கு காட்சிக்கு வித்யாசம் காட்டி நடித்துள்ளளர்.

கதை படிக்கவேண்டும் என்றால் கீழே உள்ள !!!ல் உங்கள் Mouseஐ அழுத்தி கீழே தெரியும் !!! வரை இழுத்து செல்லவும்.
!!!

அப்பா சூர்யாவும் சிம்ரனும் காதல் கொள்கின்றார்கள். அவர்களுக்கு ஒரு மகன்(சூர்யா) மற்றும் ஒரு மகள். நடுத்தர குடும்பம். துள்ளி திரியும் சூர்யாவுக்கு தன் அப்பா அம்மா காதல் போல தனக்கும் துணையொன்று வேண்டும் என நினைக்கின்றார். கல்லூரியில் சாதாரண மாணவனாக சுற்றி கடைசி நாள் வீடு திரும்பும்போது இரயிலில் சமீராவை சந்திக்கின்றார். பார்த்த நொடியிலியே காதலை தெரிவிக்கின்றார். சமீரா அமெரிக்கா சென்று விட மகன் சூர்யா துரிதமாக செயல்பட்டு அப்பாவின் கடன்களை அடைத்து மீண்டும் தன் காதலியினை தேடி அமெரிக்கா செல்கின்றார். இருவரும் காதல் வயப்படுகின்றனர். விபத்தொன்றில் சமீரா இறக்க, சூர்யா சோகத்தின் உச்சிக்கு செல்கின்றார். தவறான பழக்கங்கள். மாற்றம் காண காஷ்மீர் செல்ல அங்கே நண்பர் ஒருவனின் மகன் கடத்தப்பட்டதை அறிந்து அவனை காப்பாற்றுகின்றார். மீண்டும் நல்லபடி திரும்பி பட்டாளத்தில் சேர்கின்றார். இடையே தன் தங்கையின் தோழி சூர்யாவிடன் காதலை சொல்ல இருவரும் இணைகின்றனர். தொண்டையில் கோளாறு ஏற்பட்டு இறக்கின்றார் கிருஷ்ணன். அவரின் நினைவாக வாழ்கின்றது அவரது குடும்பம். திடீர் திருப்பங்கள் என கதையில் ஏதும் இல்லை. மெல்ல நகர்கின்றது.

!!!
நேருக்கு நேரில் தொடங்கிய சூர்யாவா இது என ஆச்சரியப்பட வைக்கின்றார். பல படங்களுக்கு தேவையான உழைப்பினை ஒரே படத்தில் செலுத்தியிருக்கின்றார்,அபாரம். ஒரு காட்சியில் பள்ளி மாணவனாகவும், தந்தையாகவும் வரும் சூர்யாக்கள் அட என்று சொல்ல வைக்கின்றார். ஏகப்பட்ட முகங்கள். ஒவ்வொரு காட்சிகளிலும் சூர்யா வயதாகி வருவதை அழகாக நுணுக்கமாக காட்டி இருக்கின்றார் இயக்குனர்.

ரசிக்க வைத்த காட்சிகள்

இரயிலில் எதிர் இருக்கையில் ஒரு பெண் இருக்க கூடாது உடனே காதல் கத்தறிக்காய் என முகம் சுளிக்கவைக்காமல் காதல் கொப்பளிக்கின்றது முதல் முறை சூர்யாவும் சமீராவும் சந்திக்கும் காட்சி.
சமீரா காதலை சொன்னவுடன் சூர்யாவின் முகபாவனை
சமீரா இறந்தவுடன் இரண்டு சூர்யாக்களின் நடிப்பு
மழை நின்ற பின்னர் ரம்யா தெரிவிக்கும் காதல்

எதார்த்த சறுக்கல்கள் ஏராளம். சில இடத்தில் சற்று அதிகமாகவே தென்பட்டது. வீடுகட்ட பாடுபடும், தந்தை மகனை அமெரிக்கா அனுப்புவது, வெகு சில காலத்திலேயே உயர்ந்து மகன் வீடுகட்டுவது, அது எப்படி கல்லூரி முடித்து பல வருடங்கள் கழித்து பட்டாளத்தில் சேர்த்துக்கொள்கின்றார்களோ தெரியவில்லை. கிருஷ்ணனை மையப்படுத்தி கதை செல்லும் போது மகனின் சாகசக்காட்சிகள் எதற்கு என்று தெரியவில்லை. ஆனாலும் அந்த காட்சிகள் நேர்த்தி. இராணுவக்காட்சிகள் ரோஜா படத்தை நினைவூட்டியது. துப்பறியும் காட்சிகளை கையாளுவதில் கெளதமிற்கு நிகர் அவரே. அப்பாவை டாடி டாடி என்று அழைப்பதற்கு பதில் அப்பா அப்பா என அழைத்திருந்தால் இன்னும் மனதிற்குள் சென்றிருக்கும்.

பல இடத்திலும் இது கிருஷ்ணனின் கதை என்கின்ற நேர் பாதையிலிருந்து விலகி மகனின் கதைக்குள் சென்று மீண்டும் தந்தை கதையில் முடிகின்றது. சமீரா காதல் -கனவு -ஒரு இளையராஜா இசை போல.

கெளதம்-ஹாரிஸ் கூட்டணியில் மற்றும் ஒரு இசை மிரட்டல்.ஆனால் இருவருக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டு இப்படத்துடன் கூட்டணி முறிந்துவிட்டது என்பதை அறிகையில் வருத்தம். பாடல்களும் காட்சியமைப்பும் சுகம். படம் முழுதும் வரும் பின்னணி இசை வருடுகின்றது.

படத்திற்காக 22 நாட்களில் பத்து கிலோ குறைந்துள்ளாராம் சூர்யா. முட்டி மோதிப்ப்பார்த்தும் ஒரு கிலோ கூட குறைக்க முடியாத நிலையில் சூர்யா எனக்கு கதாநாயகன் தான் 🙂

Surya

– விழியன்

Advertisements
13 Comments leave one →
 1. SenthilK permalink
  November 26, 2008 9:15 am

  machi… gud review… padam nalla illai oru vaarthai solli irukkalaam.. 🙂 i hav seen the movie..

 2. November 26, 2008 9:53 am

  ohh.. appadiya..

 3. Manick permalink
  November 26, 2008 10:02 am

  Sappa padam nu evlo suthi valaikkanuma…!!! But we need to really appreciate the train meet…!!! Andddd, to reduce weight simply drink as much as chill water u can (try to increase the amount of water step by step and day by day) in early morning. Have very less breakfast before you starting to the office. Thats it. U can see the differénce in you from 10th day onwards. Just try, nothing harm in this i believe.

 4. November 26, 2008 10:05 am

  you didn’t give the final verdict of the movie?
  Its not a great I think.
  a modern autograph… very dramatic…. getting confused its a movie about father surya or son surya…. big negative “larger than life” happenings in delhi kidnap-rescue seens…
  haris music just reminds me of the songs from “kakka kakka” and “pachikili muthucharam”

  Greatest plus point in the movie. JUST SURYA. Great acting and effort from surya. Otherwise nothing

 5. November 26, 2008 11:34 am

  கதையை வெளிப்படுத்தாத விமர்சன உத்தி அழகு..!

 6. November 26, 2008 11:38 am

  A nice review. I am sure no one would tend to miss about sameera-surya romance which is very classical.

  You can read my contribution for the same here -> http://blogsofraghs.wordpress.com/2008/11/22/vaaranam-aayiram-review/.2

 7. November 26, 2008 11:39 am

  sorry, there was an eror in the link. Here you go -> http://blogsofraghs.wordpress.com/2008/11/22/vaaranam-aayiram-review/

 8. saraboji permalink
  November 26, 2008 12:07 pm

  Ithukku Goutaman naandukittu saagalam.

 9. December 5, 2008 8:38 am

  Well written and expressed very well 🙂

  Deepa

 10. December 5, 2008 4:45 pm

  Useless movie made by an idiot.

 11. December 5, 2008 4:46 pm

  The most useless film produced with so much of hype. Only a person with loose mentality can enjoy these type of cheap films.
  The overacting of Simran & Old Surya was unbearable. God Save “Tamil Cinema”

 12. December 5, 2008 4:51 pm

  Even an orphan or a person who had lost his parents immediately would have liked the film not to speak of other persons.
  Gowtham Menon thinks that he can fool people with any nonsense.
  useless story with useless acting.

 13. December 9, 2008 3:03 pm

  surya super

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: