Skip to content

புத்தகத்தால் புத்தகத்தில் மிதக்கின்றேன் – கட்டுரை

February 26, 2009

புத்தகத்தால் புத்தகத்தில் மிதக்கின்றேன் – விழியன்
(32வது சென்னை புத்தக கண்காட்சி – அனுபவம்)

(நன்றி – வெற்றிநடை. இந்த கட்டுரை வெற்றிநடை என்னும் பத்திரிக்கையில் வெளியாகி உள்ளது)

புத்தகம் என்பது ஓர் கனவுக் கூடாரம். புத்தகம் என்பது அனுபவப் பெட்டகம். புத்தகம் உற்ற தோழன், புத்தகம் இன்ப உலகத்தின் துவாரம். இப்படி புத்தகத்தினை பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம். வருடாவருடம் சென்னையில் புத்தக பிரியர்களுக்கு ஓர் திருவிழா நடைபெறுகின்றது. அது “சென்னை புத்தக கண்காட்சி” என்கின்ற பெயரில் BAPSI என்னும் நிறுவனத்தால் வருடாவருடம் நடத்தப்படுகின்றது. ஏராளமான புத்தக விற்பனையாளர்கள் ஒன்றிணைந்து ஒரே கலவையாக இந்த நிகழ்வினை நடத்துகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையிலுள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் (பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில்) நடைபெறுகின்றது. ஒவ்வொரு வருடமும் மக்களின் கூட்டமும், புத்தக விற்பனையும் வளர்ந்துகொண்டே தான் போகின்றது. புதிய எழுத்தாளர்கள், புதிய எழுத்துக்கள், புதிய வாசனைகள், புதிய எண்ணங்கள் என வேறு வேறு வண்ணங்களுடன் கலை கட்டுகின்றது.

இந்த வருடம் இரண்டுமுறை தரிசனம் கிடைத்தது. ஒரே நாளின் அனைத்து புத்தக கடைகளையும் அலசி ஆராய்வது மிக கடினமான செயல்.ஏனெனில் அத்தனை      கடைகள். முதல் சுற்றில் எந்த எந்த இடத்தில் என்ன கடைகள் இருக்கின்றன, என்ன புத்தகங்கள் வாங்கலாம், ஏற்கனவே என்ன புத்தகங்கள் வாங்கவேண்டும் என்ற  பட்டியலின்படி எங்கே புத்தகம் கிடைக்கும் என்ற விவரங்கள் அனைத்தும் முதல் சுற்றில் முடிந்தது. இரண்டாம் சுற்றில் புத்தக வேட்டை ஆரம்பனானது.

சிறுவர்களுக்கான புத்தகம், அவர்களின் மனநிலை, இளம்பருவத்தினரின் எண்ண ஓட்டங்கள், அவர்களை எப்படி சமாளிப்பது, சிறுவர்களுக்கான கதைகள், எப்படி குழந்தைகளை சமாளிப்பது போன்ற விஷயங்கள் நிறைந்த புத்தகங்களை இம்முறை தேடினேன். தூரன் எழுதிய பல புத்தகங்கள் அற்புதமாக இருந்தது. அவர் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே எவ்வளவு அருமையாக குழந்தைகள்
மனோநிலையினை பற்றி எழுதியுள்ளார். படக்கதைகள் நிறைந்த புத்தகங்கள் குறைவாக தான் காணப்பட்டது. இம்முறை குழந்தைகளுக்கான கடைகள் வழக்கம் போலவே நிறைய தென்பட்டது. சில பள்ளிகளும் தங்கள் பள்ளியினை பற்றி மக்களிடம் எடுத்து சொல்ல கடைகள் போட்டிருந்தார்கள்.

ஆங்காங்கே எழுத்தாளர்களையும் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றது. ஆனாலும் இந்த கூச்சம் தான் பெரும் தடை. என்ன நினைப்பார்களோ, எப்படி பேசுவார்களோ, இவர்களின் எழுத்தினை பற்றி பெரிதாக நமக்கு தெரியாதே போன்ற எண்ணங்களால் பலரின் முகங்கள் தெரிந்தும் பேச முற்படவில்லை. இந்த தயக்கம் தான் நமக்கு முதல் எதிரி, இந்த பயம் நம்மை அடுத்தகட்ட பயணத்திற்கு எடுத்து செல்லாது. முடக்கிவிடும். அட என்ன தான் நடந்துவிடும், என்ன நினைத்தால் என்ன? நீங்க நன்றாக எழுதுகின்றீர்கள், மேலும் எழுதுங்கள் என்ற வார்த்தைகள் எழுத்தாளனுக்கு மிகப்பெரிய ஆறுதல் தரும். அது தான் பெரிய விருது. மெல்ல மெல்ல தைரியங்கள் வரவழைத்து நானும் பேச துவங்குகின்றேன். அது எனக்கு இன்பம் அளிக்கின்றது. நண்பர்கள் சிலரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இணையத்தின் மூலம் கிடைத்த புதிய உறவுகள் அவை. சில  கடைகளுக்கு அவர்களும் அலைந்தார்கள். ஒத்த எண்ணங்களுடைய நண்பர்களை சந்திப்பதில் தான் எத்தனை ஆனந்தம்.

மீண்டும் தனிமையில் புத்தகங்கள் மத்தியில் மிதக்கின்றேன். புத்தகங்கள் இலக்கியத்தின் ரசனைக்கு மட்டுமல்ல, வியாபாரத்தில் வெற்றி பெற நுனுக்கங்களையும், என்ன தொழில் துவங்குவது என்ற செய்திகளையும், விவசாயத்தில் எப்படி வெற்றி பெருவது, வேளாண்மை துறையில் என்ன வளர்ச்சி, நாட்டின்  வளர்ச்சி, வாழ்வின் அனுபவங்கள், பயணக்களிப்புகள், வரலாற்று கதைகள், சாமிகளின்       கதைகள், மனிதர்களின் மனோநிலைகள், மனிதர்களின் பண்புகள், ஆரோக்கியம், ஆன்மீகம் என எல்லாத் தளங்களிலும் எல்லோருக்குமான விஷயம். அதில் திளைத்துக் கிடப்பது பேரின்பம் என்பது அனுபவிப்பவர்களுக்கேத் தெரியும், புரியும். வாசிக்கத் துவங்குக்கள்.

உலகம் எத்தனை பறந்துவிரிந்தது, அதில் எத்தனை அற்புதம் இருக்கின்றது,நாம்   கடக்கவேண்டியது எவ்வளது தூரம், நாம் என்ன செய்யலாம் என்று வாழ்வின் மீது நாம் காலம் காலமாக கொண்டிருக்கும் பார்வையினை கூட மாற்றிவிடலாம். ஆனால் நிச்சயம் புத்தகங்கள் நம்மை செதுக்கிவிடும். இந்த வருட வேட்டையின் மூலம் என்னை நானே செதுக்கிக்கொள்ள தயாராகிவிட்டேன். சின்ன வயது
முதலே என்னை புத்தகத்தின்பால் இழுத்த அறிவியல் இயக்க பாடலின் சில
வரிகளை இங்கே உங்களுக்கு அளிக்கின்றேன்.

புத்தகம் பேசுது
புத்தகம் பேசுது
புத்தகம் பேசுது

கடந்த காலத்தை
நிகழ் காலத்தை
எதிர் காலத்தை
ஒவ்வொரு நொடிப்பொழுதை
(புத்தகம் பேசுது)

உலகை…
மனிதரை…
இன்பத்தை…
துன்பத்தை…
அழகிய மலரை…
அனுகுண்டை..
வெற்றியை தோல்வியை
நேசத்தை நாசத்தை..
(புத்தகம் பேசுது)

புத்தகம் பேசும் பேச்சுக்கள் யாவும்
உன் காதினில் கேட்கலையா
உன் காதினில் கேட்கலையா
புத்தகம் ஏதோ சொல்ல துடிக்குது
உன்னிடம் வந்து இருக்க தவிக்குது

புத்தகம் உன்னை மடியில் கிடத்தி
ராஜா ராணி கதைகள் பேசும்
புத்தகங்களில் அறிவியலின் குரல்
ஓங்கி ஒலிக்கும் ஞானம் சுரக்கும்..

வாசியுங்கள் வாசியுங்கள். வாசிப்பு அதன் கடமையினை செய்துவிடும். நன்றி.

– விழியன்

Advertisements
2 Comments leave one →
  1. March 5, 2009 6:21 am

    good template!! nice article thalaiva!! kalakkunga..

    will surely get some books when I meet you next time..

  2. afras permalink
    November 13, 2009 1:39 pm

    good very nice !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: