Skip to content

நினைவ‌லைக‌ள்

March 9, 2009

நினைவலைகள்

காலையில் அம்மா “மகளீர் தினம் வருகின்றது, நம்ம அப்பார்ட்மெண்ட்ல‌ இருப்பவர்களுக்கு ஏதாச்சும் வாங்கிட்டு வா..சந்தோஷப்படுவாங்க.” என்றார்கள். ஒரு கவிதை எழுதி அதை படத்தில் புதைத்து, பிரிண்ட் எடுத்து எல்லோருக்கும் கொடுக்கலாம் என மனதிற்குள் தோன்றியது. வருடாவருடம் தவறாமல் எனக்கு தெரிந்த தோழிகளுக்கும்,அம்மாக்களுக்கும், பாட்டிகளுக்கும், தங்கைகளுக்கும் வாழ்த்து சொல்வது வழக்கம்.

அப்படி யோசித்துகொண்டிருக்கும் போது தான் சென்ற வருடத்தின் நினைவுகள் நெஞ்சை பாரமாக்கியது. சென்ற வருடமும் பலருக்கு வாழ்த்து அட்டைகளை மடலில் அனுப்பினேன். அதில் ஓர் அலுவலகத்தோழி மட்டும் உடனே பதில் அனுப்பி இருந்தார். என்னை கிண்டல் செய்து, ஏதாச்சும் உருப்படி அனுப்பு என்று பதில் போட்டிருந்தார். எனக்கு என்ன பதில் போடுவது என்றே தெரியவில்லை. சிரிப்புக்குறி போட்டுவிட்டு மீண்டும் மடலிட்டேன். “Thanks Uma. You made my day with those word. Was just kidding.Thanks again” . என மீண்டும் பதில் வந்தது.மறந்தும்விட்டேன்.

மார்ச் 20ஆம் தேதி. மாலை நாலு மணி இருக்கும், என் அருகே இருந்த என் மேனேஜருக்கு அலைபேசி அழைப்பு வந்தது. வந்தது அவரின் முகம் வெளிறிவிட்டது.நான் அப்போது இருந்தது பெங்களூரில்.ஒசூரில் இருந்து ட்ஸ்ப் அழைத்தார். விபத்து ஒன்று நடந்துவிட்டதாம். “கார் விபத்தில் நால்வர் பலி,ஆனால் யார் என எந்த தகவலும் இல்லை. அனைத்தும் சேதாரமாகிவிட்டது. காரை ஓட்டியவர் அம்ருதா கல்லூரி என அவர் அடையாள அட்டை தெரிவிக்கின்றது. ஆனால் பெயர் தெரியவில்லை. அவருடைய அலைபேசியில் உங்கள் நம்பரை பார்த்தோம். உங்களுக்கு தெரிந்த நண்பரா? விசாரிக்கவும்” என்று அதிகாரி போனை வைத்துவிட்டார்.

மேனேஜ‌ரும் நானும் உரையாடி, அது யார் என‌ க‌ண்டுபிடித்துவிட்டோம்.காரை ஓட்டிய‌வ‌ர் எங்க‌ளுட‌ன் முன்ன‌ள் ப‌ணி புரிந்த‌ தோழியின் க‌ண‌வ‌ர். காரில் இருந்த‌து தோழி, அவ‌ள் க‌ண‌வ‌ர், அவ‌ள் அம்மா ம‌ற்றும் இர‌ண்டு வ‌ய‌து குழ‌ந்தை.இத‌ற்கிடையில் அந்த‌ DSPயிட‌ம் நிறைய‌ அலைபேசி உரையாட‌ல்.அவர் தோழி பணிபுரியும் அலுவலத்திற்கு தகவல் சொல்லிவிடுங்கள், மேலும் அவர்கள் உறவினர்கள் எண் /முகவரி தாருங்கள் என்றார்.

அந்த‌ தோழி எங்க‌ளுட‌ம் மூன்று வ‌ருட‌ம் முன்ன‌ர் பணிபுரிந்திருந்தார். வேறு நிறுவ‌ன‌த்திற்கு மாறிவிட்டார். ஒரே நிறுவ‌ன‌த்தில் இருந்த‌ போது மூன்று அல்ல‌து நான்கு முறை பேசி இருப்போம்.க‌டைசி நாள‌ன்று த‌ன் முக‌வ‌ரி த‌ந்தார். அன்றில் இருந்து ம‌ட‌லில் பேசிக்கொள்வோம்.அவ‌ர்க‌ளுக்கு இர‌ட்டை குழ‌ந்தை என்றே அன்று வ‌ரை நினைத்திருந்தேன். ந‌ண்ப‌ர்க‌ளை ஏமாற்ற‌ குழ‌ந்தைக்கு பெண் வேட‌ம் போட்டு இர‌ண்டையும் ஒட்டி “இர‌ட்டைய‌ர்க‌ள்” என‌ ம‌ட‌லிட்டு இருந்தார்.அந்த‌ தோழியில் விலாச‌ம் எப்ப‌டியேனும் கிடைக்குமா என‌ என் ம‌ட‌ல்பெட்டியில் தேடினேன். முத‌ல் ம‌ட‌லே “”Thanks Uம்” என‌ இருந்த‌து. ஆம் அதே தோழி தான் அவ‌ர்.எந்த‌ உருப்ப‌டியான‌ த‌க‌வ‌லும் கிடைக்க‌வில்லை. உட‌னே எங்க‌ள் அலுவ‌ல‌க HR க்கு த‌க‌வ‌ல் தெரிவித்து க‌டையசியாக‌ சென்ற‌போது கொடுத்த‌ விலாச‌த்தை வாங்கினோம். தொலைபேசி எண் மாறிவிட்டு இருந்த‌து. கோவை ப‌க்க‌ம் அவ‌ருடைய‌ வீடு. த‌ன் த‌ங்கை செய்யும் ஆராய்ச்சிக்கு உத‌வ‌வும் என‌ ஒரு ம‌ட‌ல் இருந்த‌து. ஆக‌ அவ‌ருக்கு த‌ங்கை இருக்கின்றார்.

மேனேஜ‌ர் இத‌னிடையே தோழியின் புதிய‌ அலுவ‌ல‌த்திற்கு த‌க‌வ‌ல் தெரிவித்தார்.அத்த‌னையும் ப‌ர‌ப‌ர‌ப்பாக‌ இர‌ண்டு ம‌ணி நேர‌த்தில் ந‌ட‌ந்த‌து.

புதிய‌ நிறுவ‌ன‌த்தில் இருந்து ஒரு ந‌ண்ப‌ர் அழைத்தார். அவ‌ர் ஏற்க‌னவே எங்க‌ளுட‌ம் ப‌ணிபுரிந்த‌வ‌ரே. யாரும் இல்லை நீ வ‌ருகின்ற‌யா உமா ஒசூருக்கு? என‌க்கு பாஷை தெரியாது என‌ கேட்டார். கோவையில் இருந்து வீட்டார் வ‌ர‌ காலையாகி விடும். நாங்க‌ள் தான் முத‌ன் முத‌லாக் சென்று அடையாள‌ம் காட்ட‌வேண்டும். ஆறு ம‌ணிக்கு அவ‌ர் காரில் கிள‌ம்பினோம். ஊரெங்கும் ம‌ழை. கிள‌ம்பும் முன்ன‌ர் முத்த‌மிழ் குழும‌த்தில் ப‌ச்சைபுள்ள‌ என்னும் மூர்த்திக்கும் ஒரு செய்தி அனுப்பி என்னை தொட‌ர்பு கொள்ள‌ சொன்னேன்.

ஒசூரை அடையும் போது மூர்த்தி அங்கே எங்க‌ளுக்காக‌ காத்திருந்தார்.எங்க‌ளை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னைக்கு அழைத்து சென்றார். இர‌வு 8.00 ம‌ணியை க‌ட‌ந்திருந்தும்.ம‌ழை + மின்சார‌ம் இல்லை. அங்கு சென்ற‌தும் டிஎஸ்பிக்கு போன் செய்தோம். அவ‌ர் நிதான‌மாக‌ “இப்ப‌ ரொம்ப‌ லேட் ஆகிடுச்சு, நாளைக்கு காலையில‌ வாங்க‌.நீங்க‌ கொடுத்த‌ முக‌வ‌ரி வைத்து அவ‌ங்க‌ வீட்டுக்கு போலிஸ் மூல‌ம் த‌க‌வ‌ல் சொல்லியாச்சு. அவ‌ங்க‌ளும் கிள‌ம்பி வ‌ராங்க‌லாம் த‌ம்பி. பாடி எல்லாம் மார்சுவ‌ரியில‌ இருக்கு. ந‌ன்றி”ன்னு போனை வெச்சிட்டார்.தோழியின் க‌ணவ‌ர் க‌ல்லூரியில் இருந்து எப்ப‌டியோ சில‌ ந‌ண்ப‌ர்க‌ள் வ‌ந்திருந்தார்க‌ள். அவ‌ர்க‌ளும் பிண‌ங்க‌ளை பார்க்க‌முடிய‌வில்லை என‌ தெரிவித்த‌ன‌ர்.

அனிமேஷ்க்கு ஒரே ஒரு முறை பார்த்துவிட்டு அவ‌ர்க‌ள் தானா என‌ ஊர்ஜித‌ம் செய்ய‌ வேண்டும் என்கின்ற‌ ஆவ‌ல். ஆனால் அலுவ‌ல‌ர்க‌ள் முடியாது என‌ கைவிரித்துவிட்ட‌ன‌ர். “க‌ர‌ண்ட் வேற‌ இல்லைங்க‌. ரொம்ப‌ க‌ஷ்ட‌மா இருக்கும். க‌ர‌ண்ட் வ‌ந்த‌தும் பார்க்க‌லாம்” என்று சொல்லிவிட்டார். அத‌ற்கு மூர்த்தியின் ந‌ண்பர்( முத்த‌மிழின் அமைதி ப‌டை ந‌ப‌ர்) எங்க‌ளுட‌ன் க‌ல‌ந்துகொண்டார்.ச‌ரி கொஞ்ச‌ நேர‌ம் மின்சார‌ம் வ‌ருகின்ற‌தா என‌ பார்ப்போம். பிற‌கு முடிவு எடுக்க‌லாம் என‌ சாப்பிட‌ சென்றோம்.

பேச்சுக்க‌ள் எல்லாம் விப‌த்து குறித்தே இருந்த‌து. சின்ன‌ வ‌ய‌தில் பார்த்த‌ விப‌த்து, கேட்ட‌ விப‌த்து,அனுப‌வித்த‌ விப‌த்து என‌ விப‌த்தை சுற்றியே ச‌ம்பாஷைனைக‌ள் இருந்த‌து. உண‌வு முடிந்தும் அதே பேச்சுக்க‌ள் தான். மீண்டும் ம‌ருத்துவ‌ம‌னைக்கு வ‌ந்தோம். தோழியின் நிறுவ‌ன‌த்தில் இருந்து சில‌ர் வ‌ந்த‌ன‌ர்.இர‌ண்டு பெண்க‌ள் மூன்று ஆண்க‌ள்.அதுவ‌ரை க‌ட்டுப்ப‌டுத்தி இருந்த‌ நான், அந்த‌ பெண்ம‌னியின் க‌ண்ணீரில் க‌ல‌க்கம்   கொண்ட‌து.

“ம‌திய‌ம் தான் என்கிட்ட‌ ஊருக்கு போயிட்டு வ‌ரேன், வெள்ளிக்கிழ‌மை லீவு, திங்க‌ட்கிழ‌மை லீவு. செவ்வாய் பாக்க‌லாம்னு சொன்னாங்க‌.ப்சே…இப்ப‌ தான் சார் வீடு வாங்கினாங்க‌ ஆபிஸ் ப‌க்க‌த்திலேயே..தின‌மும்      ம‌திய‌ம் வீட்டுக்கு போய் பைய‌ன‌ பார்த்துட்டு வ‌ருவாங்க‌..”

காரில் தோழி,அவ‌ள் க‌ண‌வ‌ர், அவ‌ள் அம்மா, குழ‌ந்தை கிள‌ம்பி இருக்கின்றார்க‌ள். ஒசூரில் இருந்து த‌ரும‌புரி செல்ல‌ இர‌ண்டு பாதைக‌ள்.ஒன்று கிருஷ்ண‌கிரி வ‌ழி, கொஞ்ச‌ம் நீண்ட‌ பாதை, ம‌ற்றொன்று சுமாரான‌ பாதை. இவ‌ர்க‌ள் மாருதி 800 சுமாரான‌ பாதையினை தேர்தெடுத்து சென்றிருக்கின்றார்க‌ள். ஒரு திருப்ப‌த்தில் லாரி ஒன்றினை ஓவ‌ர்டேக் செய்ய‌ முய‌ற்சித்து வேக‌மாக‌ திருப்பி இருக்கின்றார். அந்த‌ ச‌ம‌யம் பார்த்து எதிரே ப‌ஸ். ப‌ஸ்ஸின் அடிக்குள் புகுந்துவிட்ட‌து கார். அந்த‌ இட‌த்திலேயே நால்வ‌ரும் இற‌ந்துவிட்ட‌ன‌ர்.

“ரொம்ப‌ ந‌ல்ல‌ பொண்ணுங்க‌.. ”

இர‌வு 11.00 ம‌ணி. அங்கிருந்த‌ டாக்ட‌ரிட‌ம் ச‌ண்டையிட்ட‌ன‌ர் அந்த‌ பெண்க‌ள்.இத்த‌னை தூர‌த்தில் இருந்து வ‌ருகின்றோம் க‌டைசியாக‌ அவ‌ர்க‌ள் முக‌த்தையாவ‌து காட்டுங்க‌. “வேண்டாம்மா. என‌க்கு அதிகார‌மும் கிடையாது. 8 ம‌ணிக்கு மேல‌ மார்சுவ‌ரி திற‌க்க‌ கூடாது. இப்ப‌ க‌ர‌ண்ட‌ வேற‌ இல்லை. மார்சுவ‌ரி உள் அறையில‌ தான் பாடி எல்லாம் இருக்கு. வேண்டாம். உங்க‌ளுக்கும் பிர‌ச்ச‌னை என‌க்கு பிர‌ச்ச‌னை. நிறைய‌ பொண‌ங்க‌ இருக்கும் தாருமாறா. இந்த‌ நேர‌த்தில‌ உங்க‌ளால‌ தாங்க‌ முடியாது. அப்ப‌டி உங்க‌ளுக்கு நெருக்க‌மாக‌ பிர‌ண்டுன்னா காலையில‌ வாங்க‌. ப்ளீஸ் அண்ட‌ர்ஸ்டேன்ட் மை பொசிச‌ன்”. அவ‌ர் சொல்வ‌து நியாய‌மாக‌ இருந்த‌து.

யாரும‌ற்ற‌ சாலையில் வேக‌மாக‌ பெங்க‌ளூர் வ‌ந்தோம். “உமா நாளை நானே எல்லா ஏற்பாடும் பார்த்துக்கொள்கின்றேன், ம‌றுநாள் உன‌க்கு நிச்ச‌ய‌தார்த்த‌ம், ந‌ல்ல‌ காரிய‌த்துக்கு போகும் போது இங்க‌ வ‌ந்துட்டு போக‌ வேண்டாம்” என‌ அனிமேஷ் சொல்லி வீட்டில் இற‌க்கிவிட்டார்.

ொஞ்ச‌ நாளைக்கு அந்த‌ கார் மோதும் காட்சி அடிக்க‌டி இர‌வின் உற‌க்க‌த்தின் ந‌டுவே வ‌ந்து போன‌து.அவ்வ‌ப்பொழுது தோழியின் பெயரினை போட்டு அவ‌ரின் க‌டைசி ம‌ட‌லை பார்த்துக்கொள்வ‌துண்டு.அவ‌ர் பெய‌ர் ஹேம‌மாலினி

– விழியன்

Advertisements
No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: