Skip to content

மனிதனை நேசிக்கும் பூனைகள் –

March 17, 2009

மனிதனை நேசிக்கும் பூனைகள் – Vizhiyan

(நன்றி துளிர் குழந்தைகள் அறிவியல் மாத இதழ்)

 

 

பூனை என்‍ற‌தும் ந‌ம‌க்கு நினைவிற்கு வ‌ருவ‌து அந்த‌ கூரிய‌ க‌ண்க‌ளும் மெல்லிய‌ கால்க‌ளும் அழ‌கான‌ மீசைக‌ள் தானே. பூனைக‌ளுக்கும் ம‌னித‌ர்க‌ளுக்குமான‌ உற‌வு மிக‌ நீண்ட‌ வ‌ர‌லாற்றினை கொண்ட‌து. பூனைக‌ள் சில‌ நாடுக‌ளில் பூஜிக்க‌வும் செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌. பூனைக‌ள் எப்போதும் க‌லைஞ‌ர்க‌ளின் பார்வையில் இருந்து த‌ப்பிக்க‌வில்லை. எழுத்தாள‌ர்க‌ளாட‌க்க‌ட்டும், ஓவிய‌ர்க‌ளாக‌ட்டும் எங்கேனும் பூனை ஓர் அங்க‌ம் வ‌குத்துவிடும். ஆமாம் எல்லா வில‌ங்குக‌ளை விட‌ பூனைக‌ள் எப்ப‌டி  ந‌ம‌க்கு அன்னோன்னிய‌மான‌து. வ‌ர‌லாற்றினை கொஞ்ச‌ம் ஆய்வோமா?

 

முதல் வீட்டு விலங்கு


ஆதிகால‌த்தில் ம‌னித‌ன் க‌ற்க‌ளின் உர‌ச‌லின் நெருப்பினை க‌ண்டுபிடித்தான். அத‌ன்
பின்ன‌ரே இறைச்சிக‌ளை சுட‌ வைத்து உண்ண‌ ஆர‌ம்பித்தான். வேட்டையாடும் போது கொடிய‌ மிருக‌ங்க‌ளை கொன்றான். ஆனால் அப்ப‌டி கொன்றுவிட்டு அவ‌ர்க‌ள் த‌ங்கும் இட‌த்திற்கு அந்த‌ மிருக‌ங்க‌ளை எடுத்து வ‌ந்த‌தால் அந்த‌ மிருக‌ இறைச்சி விரைவிலேயே கெட்டுப்போனது.தீர்ந்தும் போன‌து. அத‌னால் முத‌ன்முத‌லாக‌ ந‌ரியின் குட்டியினை த‌ன் இருப்பிட‌த்திற்கு எடுத்து                   வ‌ந்தான்.அந்த‌ குட்டி வ‌ள‌ர‌ நாளாகும் அல்ல‌வா.அது வ‌ள‌ர்ந்த‌ பின்ன‌ர் அத‌னை கொன்று உண‌வாக‌ உட்கொள்ள‌லாம் என‌ யோசித்து உள்ளான்.

 

குட்டி ந‌ரி பய‌ம் அறியாம‌ல் ம‌னித‌னுட‌னும் அவ‌ன் இல்லாத்தாருட‌னும் விளையாடிய‌து. ம‌னித‌ன் அதனை விரும்பினான். அத‌னை கொல்லாம‌ல் சில‌ கால‌ம் விட்டான். வ‌ள‌ர்ந்த‌ ந‌ரி ம‌னித‌னுக்கு உண‌வினை வேட்டையாடுவ‌தில் உத‌வி புரிந்த‌து. எல்லா ம‌னித‌னும்   த‌னக்கும் ஒரு ந‌ரி வேண்டும் என‌ ஆசைப்ப‌ட்டான். இப்ப‌டியாக‌ ந‌ரிக‌ள் முத‌ன்முத‌லாக‌ வீட்டு வில‌ங்காக‌ மாறிய‌து.இந்த‌             ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌ ந‌ரிக‌ளே ப‌ல‌ ஆண்டுக‌ள் க‌ழித்து இப்போது நாய்க‌ள் என்று அழைப்ப‌டுகின்ற‌து.
 

வ‌ள‌ர்ந்த‌ ந‌ரி ம‌னித‌னுக்கு உண‌வினை வேட்டையாடுவ‌தில் உத‌வி புரிந்த‌து. எல்லா ம‌னித‌னும்         த‌னக்கும் ஒரு ந‌ரி வேண்டும் என‌ ஆசைப்ப‌ட்டான். இப்ப‌டியாக‌ ந‌ரிக‌ள் முத‌ன்முத‌லாக‌ வீட்டு      வில‌ங்காக‌ மாறிய‌து.இந்த‌  ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌ ந‌ரிக‌ளே ப‌ல‌ ஆண்டுக‌ள் க‌ழித்து இப்போது நாய்க‌ள் என்று அழைப்ப‌டுகின்ற‌து.

 

ச‌ரி பூனைக‌ள் எப்ப‌டி ம‌னித‌ர்க‌ளின் செல்ல‌பபிராணியாக‌ மாறிய‌து? மீண்டும் பின்னால் செல்வோம்.வேட்டையாடி வ‌ந்த‌ ம‌னித‌ன் மெதுவாக‌ உழ‌வ‌த‌ற்கு முற்ப‌டுகின்றான். அதில் வெற்றியும் பெறுகின்றான்.குழுவாக‌ கூடி வாழ்கின்றான். வருடத்திற்கு இருமுறை மட்டுமே விளைசல் கிடைக்கின்றது. நில‌த்தில் உழுத‌ நெற்ப‌யிர்க‌ளை இருப்பிட‌த்தில் கொட்டி வைக்கின்றான். பெரிய கூடைகளில் நெற்பயிர்களை கொட்டி வைக்கின்றான். அப்போது காட்டு வில‌ங்குக‌ளிட‌ம் இருந்து வில‌கி இருக்கின்றான். ஆனால் இவ‌னை சுற்றி எலி வ‌கைக‌ளும், பூனைக‌ளும் வ‌ட்டமிடுகின்ற‌ன. இந்த இரண்டும் எளிதாக உணவினை ஏப்பம் விட்டது சீக்கிரத்தில் புரிந்தது.

 

என்ன‌ ந‌ட‌க்கின்ற‌து என‌ க‌வ‌னிக்க‌ வெகு கால‌ம் எடுக்க‌வில்லை. எலிக‌ள் நெற்ப‌யிர்க‌ளை உண்கின்ற‌து. இது ம‌னித‌னுக்கு பிடிக்க‌வில்லை, ஆனால் பூனைக‌ள் எலிக‌ளை உண்கின்ற‌து. இது ம‌னித‌னுக்கு பிடித்து இருந்த‌து. ம‌னித‌ன் பூனைக‌ளை ஆத‌ரித்தான். பூனைக‌ளுக்கு இந்த‌ இட‌ம் உக‌ர்ந்த‌தாக‌ இருந்த‌து. முத‌லில் எப்போதும் உணவு கிடைத்த‌து. அடுத்த‌து ம‌னித‌னிட‌ம் பாதுகாப்பு கிடைத்த‌து. மேலும் ம‌ற்ற‌ வில‌ங்குக‌ளிட‌ம் இருந்து தொல்லை இல்லை, ஏனெனில் ம‌ற்ற‌ மிருக‌ங்க‌ள் ம‌னித‌ர்களிட‌ன் வ‌ர‌ அஞ்சின‌.ம‌னித‌ன் முன்னேறி இருந்தான்.தொன்று தொட்டே பூனைகள் அமைதியான சுபாவத்தால் இருந்ததால் மனிதர்களுக்கு எந்த பயமும் ஏற்படவில்லை.

 

இந்த நிக்ழவுகள் நடந்து சுமார்  5000 முத‌ல் 7500 ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர் இருக்க‌லாம். ச‌மீப‌த்தில்                   க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ழ‌ங்கால‌ ச‌மாதியில் பூனையும் ம‌னுத‌னுட‌ன் புதைக்க‌ப்ப‌ட்டு இருந்த‌தாம். அன்றிலிருந்து பூனைக‌ள் வீட்டின் செல்ல‌ பிராணியாக‌ மாறிவிட்ட‌து.

 

பூனைக‌ள் பெரும்பாலும் குட்டி குட்டி தூக்க‌ம் போடும்.மனிதர்களை போலவும் நாயினை போலவும் நீண்ட‌ நேர‌ம் எப்பொழுதும் தூங்காது.இதனால் இர‌வினில் விழிப்புட‌ன் இருக்கும்.எப்பொழுதும் வேலைக்கு த‌யாராக‌ இருக்கும். இரவுக‌ளில் ஏதேனும் பிராணிக‌ள் வ‌ந்தால் நாயினை உஷார் ப‌டுத்தும். நாயினை காட்டிலும் பூனைக‌ள் சுத்த‌மாக‌ இருக்கும். அதும‌ட்டும் அல்லாம‌ல் த‌ன் க‌ழிவுக‌ளை வெளியே சென்று யாரும‌ற்ற‌ இட‌த்தில் க‌ழித்து வ‌ரும். இந்த‌ ப‌ழ‌க்க‌த்தால் எந்த‌ மிருக‌த்தையும் வீட்டுக்குள் வ‌ர‌வேற்காது.

 

உங்க‌ளுக்கு பூனைக‌ள் ப‌ற்றிய‌ ப‌ய‌ம் இருந்தால் விட்டுத‌ள்ளுங்க‌ள் அவை ந‌ல்ல‌ பிராணிக‌ள். உங்க‌ளுடைய‌ பாலினை அது குடித்துவிட்டால் அத‌ற்கு நாங்க‌ள் பொறுப்ப‌ல்ல‌ :))

Advertisements
One Comment leave one →
  1. thambi permalink
    March 18, 2009 8:06 am

    cats might love human. But not hen. I had 7 chickens as my pet. One stupid cat from my next house ate all the seven. I HATE CATS TO THE CORE.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: