Skip to content

ஆ.வி வெளியிட்ட செல்வேந்திரன் கவிதை விமர்சனம்.

April 9, 2009

கற்றதனால் ஆன பயன்…

ங்களது சம்பளம்
உங்கள் கண்களை உறுத்திற்று
வாழ்க்கை முறை கண்டு
வயிறு எரிந்தீர்கள்
கலாசாரத்தைக் கெடுத்தோம்
என்றொரு புகாரும் உண்டு
பப்புகளில் புகுந்து உதைத்தீர்கள்
சினிமா எடுத்தீர்கள்
பத்திரிகைகளில் கிழித்தீர்கள்
பெண் கொடுக்க மறுத்தீர்கள்
எங்களது சம்பாத்தியத்தின்
பெரும் பகுதியை
வரியெனப் பிடுங்கினீர்கள்
நாங்கள் அந்நிய தேசங்களிலிருந்து
ஈட்டி வந்த பணத்தில்
பாலங்கள் கட்டினீர்கள்
‘இந்தியா ஒளிர்கிறது’ என
விளம்பரங்கள் செய்தீர்கள்
இதோ கும்பல் கும்பலாக
நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்
சந்தோஷம்தானா
சகோதரர்களே?
உங்கள் சட்டைகளைப் பற்றிக்
கேட்கிறோம்…
‘கணினிமொழி கற்றதன்றி
வேறென்ன பிழை செய்தோம்?’

-செல்வேந்திரன்.

_____________________________________________________

ஆனந்தவிகடனில் இருந்த வாரம் என்ன கவிதை வந்திருக்கின்றது என தேடி முதலில் தேடி இந்த கவிதையினை கண்டேன். நேற்று தான் செல்வேந்திரன்னின் சமீபத்திய பதிவுகள் அனைத்தையும் ஒரே மூச்சாக படித்து முடித்தேன். செல்வேந்திரனை இணைய குழுமங்களில் சிலமுறை கண்டதுண்டு. அவரின் எழுத்துக்கள் மீது தனி மரியாதையுண்டு. செல்வேந்திரன் பெயரினை பார்த்ததும் முகத்தின் சொன்ன புன்னனை. கவிதையை படிக்க துவங்கினேன். கவிதையின் இடையிலேயே கவிதைக்குள் நுழைய முடியாமல் என்னடா இது இப்படி எதை எதையோ முடிச்சி போடுறார்னு தோனுச்சு. அந்த கவிதை பற்றி அலசல் தான் இந்த பதிவு.

ங்களது சம்பளம்
உங்கள் கண்களை உறுத்திற்று
வாழ்க்கை முறை கண்டு
வயிறு எரிந்தீர்கள்
கலாசாரத்தைக் கெடுத்தோம்
என்றொரு புகாரும் உண்டு
பப்புகளில் புகுந்து உதைத்தீர்கள்
சினிமா எடுத்தீர்கள்
பத்திரிகைகளில் கிழித்தீர்கள்”
இது வரை சரியாக போய்க்கொண்டிருந்தது(இதிலும் மாற்றுக்கருத்து இருப்பினும்). அதற்கு மேல் என்னவானது என்று தெரியவில்லை.

பெண் கொடுக்க மறுத்தீர்கள்” – இந்த ரிசஷன் வரும் வரையில் மார்கெட்டில் கணினிமொழி கற்றவருக்கே முதல் மரியாதை.மாப்பு சாப்ட்வேர் இஞ்சினியரா ஓகே ஓகே. ஆனா இப்ப தான் விழுந்தது ஆப்பு. வெளிப்படையாகவே சாப்வேட் இஞ்சினியர்கள் மன்னிக்கவும் என பல இடங்களில் காணலாம்.

எங்களது சம்பாத்தியத்தின்
பெரும் பகுதியை
வரியெனப் பிடுங்கினீர்கள்
” – மற்றவர்கள் சம்பாதிக்கும் பணத்தை வருமானவரி துறைக்கு காட்டாமல் கறுப்பு பணமாக வைத்திருக்கும் நிலையில் அனேகமாக அனைத்து கணினிமொழி தெரிந்தவனும் வரிகளை சரியாக கட்டுகின்றான் என்று பெருமை கொள்ளுங்கள். இது வருத்தப்பட வேண்டிய விஷயமே அல்ல. மற்றவன் தப்பு செய்யறான்னு நீ ஒழுக்கமற்று இருக்கலாமா? எல்லா நாட்டிலும் வரி இருக்க தானே செய்கின்றது. அந்த வரிப்பணத்தில் தானே நாட்டின் நிர்வாக நடக்கும். வரி செலுத்துவது நமது கடமை, அதை சுமையென கருதிவிட வேண்டாம்.

‘வரிக்கு’ அடுத்த வரியே அதற்கு எடக்குமுடக்கா வந்து இருக்கு.

நாங்கள் அந்நிய தேசங்களிலிருந்து
ஈட்டி வந்த பணத்தில்
பாலங்கள் கட்டினீர்கள்
‘இந்தியா ஒளிர்கிறது’ என
விளம்பரங்கள் செய்தீர்கள்”

அந்நிய நாட்டில் ஈட்டிய பணத்தில் (அமெரிக்காவில் 33% சதவிகிதம் வருமானத்தில் வட்டி என நினைக்கின்றேன்) எப்படி நம்ம நாட்டில் பாலம் கட்டமுடியும் என்று தெரியவில்லை.

இதோ கும்பல் கும்பலாக
நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்
சந்தோஷம்தானா
சகோதரர்களே?
உங்கள் சட்டைகளைப் பற்றிக்
கேட்கிறோம்…
‘கணினிமொழி கற்றதன்றி
வேறென்ன பிழை செய்தோம்?”

 

இங்கே கவிதை மேலும் தடம்புரண்டுவிட்டது. உலக அளவில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டு இருக்கின்றது.அதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. அதை அனைத்தையும் விட்டுவிட்டு ஏதோ மக்களில் புலம்பலாலும் துவேஷத்தாலும் தான் நடுதெருவிற்கு வந்துவிட்டது போல கவிதை முடிகின்றது. நிச்சயம் நம் சகோதரர்கள் வேலையிழந்து தவிக்கும் நிலையினை காணும் போது நெஞ்சம் பதறுகின்றது, வலிக்கின்றது. ஏதும் செய்ய முடியாமல் தவிப்பில் அலைகிழிகின்றது.அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் கணினிமொழியாளனுக்கு நடந்த/நடக்கும் கதிக்கு மக்கள் சந்தோஷப்படுவார்களா என்ன? மக்களையும் சகோதரர்களையும் எப்பொழுதும் அப்படி எண்ண வேண்டாம். கணினியுகம் சமுதாயத்தில் நிறைய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. எந்த ஒரு திடீர் மாற்றத்திற்கும் நம் மனநிலையினை சரி செய்து கொள்ள சில நேரம் பிடிக்கும். அதே போல திடீர் மாற்றங்கள் நிரந்தர மாற்றங்கள் என்றும் நாம் எண்ணுவது தவறு. சென்ற தலைமுறையினர் தன் கடைசியாக வாங்கிய சம்பளத்தை நம் முதல் மாதம் வாங்கும் போது, அதனை எப்படி செலவழிப்பது, எப்படி சேமிப்பது, எப்படி திட்டமிடுவது என புரிந்துகொள்ள கணினிமொழியாளனுக்கு சில காலம் எடுக்கும். அந்த இடைப்பட்ட காலத்தில் அவனது ஆட்டம் தாங்காது மக்கள் பொங்குகின்றது. மக்கள் இப்படி பொதுப்படையாக கணினிமொழியாளன் மீது கருத்துக்களை நாம் உடைத்தே தீரவேண்டும். பெங்களூரில் நானும் வாஸ்ந்தி அவர்களும் சந்தித்து பேசியதை கட்டுரையாக கொடுந்திருந்தார். இந்த இடத்தில் அதனை சுட்டுவது சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

 

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 2

 

பொருளாதார பின்னடைவு மாற்றம் கண்டு முன்னேற வேண்டும் என நினைப்போம். சமீபத்தில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றது. நிலைமை மாறும். கலங்க வேண்டாம்.

 

செல்வேந்திரன் மேலும் பல படைப்புகளை படைக்க வாழ்த்துக்கள்.

 

நன்றி

விழியன்

Advertisements
4 Comments leave one →
 1. kanth permalink
  April 9, 2009 1:30 pm

  yarum yara parthum vairu eriyala …..
  neega la tha aduninga….
  velai kedaicha udane rs.5000/- jeans eduthu alapara kooduthatu yaru..?
  mathavanga la chenai la vala vidama rent evlo nalum parava ella … advance 5lak tharom sonnathu yaru..?
  ECR road sunday la naradicha thu yaru..?
  epdi nariya kekalam….
  athu epadi nalla erukum pothu engala thirumbi koda parka thonala… konjan atam konada udane kavitha varutha…..

  adi adungum valkai yada …. aradi nilame sontha mada ?

  sonthosatla solla lapa …. varu tha thula tan solern…

  neenga ellatha pothum india la polam katnanga …. budjet pottanga …
  satarana shop vachu naduravan kooda tax katuna … enamo neenga tax katna mari…
  po pa po …..

 2. April 19, 2009 6:54 am

  யார் பா இந்த காந்து??? விஜய்காந்துக்கு ஒன்னு விட்ட தம்பியா??

  அது எப்படி வாய் கூசாம உங்களால பொய்களா அடுக்க முடியுது? உங்க கற்பனை சக்தி நல்லா இருக்கு. ஆனா அத நல்ல முறையில் பயன்படுத்தலாமே… எதுக்கு இப்படி புரளி பேசிக்கிட்டு?

 3. April 20, 2009 2:11 pm

  good one.. i too have thought of writing an anti-poem soon after reading this as a forward email.. will soon do it !!

  Cheers!

Trackbacks

 1. ஆ.வி.யின் அடுத்த சறுக்கல் « விழியன் பக்கம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: