Skip to content

ஆ.வி.யின் அடுத்த சறுக்கல்

April 17, 2009

சென்ற வாரம் செல்வேந்திரன் கவிதையிட்ட ஆ.வி இந்த வாரம் பி.ஜி.கதிரவன் கவிதையினை வெளியிட்டுள்ளது. செல்வேந்திரன் கவிதையினை காட்டமாக விமர்சனம் செய்யும் கவிதையாகவும், உண்மை நிலைக்கு சற்றும் பொருந்தாக விதமாக இருக்கின்றது கவிதை. முதலில் கவிதையினை பாருங்க.

பிற்பகலிலாவது உலகத்தின் மீது பிரியமாயிருங்கள்!
– பி.ஜி.கதிரவன், கவிதை

எல்லோரும்
வருமான மாமிசம் தின்கிறவர்களே..!
ஆனால், அதை மாலையாய்த் தோளில் போட்டு
தேசத்தை வீச்சச் செய்தது நீங்கள் மட்டுமே
ஜே.கே.ரித்தீஷூக்கே
செலவழிக்கக் கற்றுத் தந்தவர்கள்
நீங்களாகவே இருக்கக்கூடும்.

தவறு
கணினி மொழி கற்றதல்ல நண்பனே…
‘கசிந்த கண்’ உடன்பிறப்புகளின்
‘காய்ந்த வயிற்று’ பெற்றோரின்
கசங்கல் நிமிர்த்தாத தன் முனைப்பே.
வாங்கிய வருமானத்தைக்கொண்டு

வாடகைகளை ஏற்றினீர்கள்.
ஒண்டுக்குடித்தனங்கள்
வாகனங்கள் குறைந்த சாலைகளில்
வாழ வந்தன.
மனை விலை உயர்த்தினீர்கள்
பிணம் வைத்து அழவும் வீடின்றி
நடுத்தரச் சுமை தாங்கிகளுக்கு
நாக்குத் தள்ளி நாடி குறைந்தது
‘என்ன விலை அழகே’
உங்களின் விருப்பப் பாடலானபோது
‘பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்’
எங்களுக்கே எப்போதும் அர்ப்பணிக்கப்பட்டது.

கணினிகளைக் கையாண்ட கன்னிகளையே
கணினிகளாய்க் கையாண்டும்
அதை நண்பர்களுக்குப் பரிந்துரைக்கும் இறுமாந்த
கலாசாரக் காவலர்கள்
நீங்கள் அன்றி வேறு எவர்..?

வரி போகிறதே என்று உங்களுக்கும்
உயிர்போய் விடக் கூடாதே என்று
எங்களுக்கும்
கவலைகள் மாறுபட்டன.

உங்களைப் பற்றி
சினிமா எடுத்தோம்
பத்திரிகைகளில் எழுதினோம்
நிஜம்தான்,
வளர்ச்சிகளே வாழ்த்தப்படும்
வீக்கங்கள் எப்போதும்
விமர்சிக்கத்தானே படும் நண்பனே..?

உதிர்ந்த பிட்டைக் கூட
இந்த சொக்கர்களுக்குத் தராத
நீங்கள் பற்றிச் சண்டை போடக் கூட
எங்களிடம் சட்டை இல்லையே
யாது செய்வோம் நண்பனே..?
போகட்டும் நண்பனே…
மன்னிக்கத் தெரிந்ததால் தமிழனாய் இருப்பவர்கள்
வீதிக்கு வந்த உங்களுக்காக
பழைய சோற்றிலும்
பச்சை மிளகாயிலும் பாதி தருவோம்.
பாவி நண்பா!
பர்கருக்கும் பீட்ஸாவுக்கும் எங்கே போவோம்?
பெற்றவர்கள் இருப்பதை
பெரும்பாலும் மறந்தவர்களே…
நினைவிருக்கட்டும்,

உங்களின் கணினி யுகத்தில்
முற்பகல் செய்யின்
முற்பகலே விளையும்.
பிற்பகலிலாவது
உலகத்தின் மேல் பிரியமாயிருங்கள்!

நன்றி: விகடன்

————————————–

கவிதையில் ஏதோ கணினி வல்லுனர்கள் யாரும் தங்கள் சகோதரர்கள் / சகோதிரிகளை கவனிக்காது போலவும், தாய் தந்தையினை ஏரெடுத்துகூட பார்க்கவில்லை என்பது போல சொல்லப்பட்டிருக்கின்றது.  நான் இதுவரை சந்தித்த / கேள்விப்பட்ட எந்த ஒரு கணினி வல்லுனரும் அப்படி இருந்ததாக தெரியவில்லை. இது இத்துறை மீது காழ்புணர்ச்சி இருக்கும் சிலரால் ஏற்படுத்தப்பட்ட பிம்பம் தான். நிஜம் அதுவலல்ல. சிலர் அப்படி இருக்கலாம், அது எந்த துறையில் அவர்கள் இருந்தாலும் அப்படித்தான் இருப்பார்கள். இது துறை சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல, அது தனி நபர் பிரச்சனை.

கவிதையிலும் கவிதையின் சுவை எங்கும் காணக்கிடைக்கவில்லை, செல்வேந்திரனின் கவிதையில் குற்றம்மட்டும் கண்டுபிடிக்க வேண்டும் என்கின்ற நோக்கில் எழுதப்பட்டதாக தெரிகின்றது. கன்னிகள் பற்றிய கருத்து கண்டிக்கத்தக்கது. மேலும் கவிதையில் கேள்வி கேட்பது யார் என்றே தெரியவில்லை. அவர் சினிமா எடுப்பாறாம், பத்திரிக்கையில் விமர்சிப்பாராம், ஆனால் சட்டையில்லையாம்.

கவிதையின் தலைப்பு அழகாக இருக்கின்றது “உலகத்தின் மேல் பிரியமாயிருங்கள்!” இதை தவிர கவிதை பற்றி சொல்ல வேறெதுவும் இல்லை.

-விழியன்

Advertisements
12 Comments leave one →
 1. April 17, 2009 7:06 am

  எதிர் கவிதை என்ற பெயரில் ஒட்டுமொத்தமான குதறல்!

 2. April 17, 2009 7:13 am

  ஒரு அமெரிக்ககாரனுக்கு ஒரு மாசத்துக்கு 6000$ கொடுக்கிறார்கள் – குறைந்த பட்சம் சொல்கிறேன்

  அதே வேலையைப் போல 2 1/2 மடங்கு அதிகம் வேலைபார்க்கும் இந்தியனுக்கு வெறும் 600$. ஆனால் எந்த சலுகையும் இல்லை.

  அமெரிக்கனைப் பொறுத்தவரையில் இரவுப்பணி -extra overtime செய்தான் என்றால் – அதை mail போட்டு – நான் இன்று இரவுப்பணி செய்தேன். மிகுந்த களைப்பாக இருக்கிறது. bye என்கிறான்.

  நாம் இங்கே ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்தாலும், அடுத்த நாள் வெகு விரைவில் ஆஃபீஸ் திரும்பும் அளவுக்கு அடிமைகளாகவே இருக்கிறோம்.

  சொந்தத் தொழில் செய்பவர்கள், வீடும் கடையும் ஒன்றாக உள்ளவர்கள் – அதிக நேரம் வேலை செய்தாலும், அவர்களுக்கு என்றாவது ஒரு நாள் ஒரு ப்ரேக் கிடைக்கும்.அவர்கள் நினைத்தால் குடும்பத்துடன் ஒரு திருவிழாவிற்கு சென்று பொழுதைக் கழித்துவிட்டு வரலாம். ஒரு திருமண வைபவத்துக்கு குடும்பத்துடன் சென்று திரும்பலாம்.

  ஆனால் இந்த கணினி யுகத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கும் எண்ணற்ற இளைஞர்களும், யுவதிகளும் – mental stress எனப்படும் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு இளமையிலே கண்ணாடி போட்டு, 30 வயதிற்குள்ளாகவே முதுமையை அனுபவிக்க நேரிடுகிறது.

  12+ மணி நேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் என்ன? ஒரு புறம் இவர்கள் மேலும் தவறு இருக்கிறது.

  தனது தலையில் சரக்கு இருப்பவர்களுமே 12 மணி நேரம் வேலை செய்யும்போது, சரக்கு இல்லாத இளையவர்கள் என்ன செய்வார்கள்? வேலை செய்கிறார்களோ இல்லையோ – நீண்ட நேரம் நள்ளிரவு வரையில் அலுவலகத்தில் உள்ளனர்.

  பலரைப் பார்த்திருக்கிறேன். எல்லோரும் இப்படி பின்னிரவில் வீடு திரும்புகிறார்கள்.

  எல்லாம் ஒரு insecurity feeling தான்.

  அமெரிக்கனுக்கு insecurity feeling எல்லாம் கிடையாது. எல்லாவற்றையும் ஈசியாக எடுத்துக்கொள்வான். நம்மவர்களைப் பொறுத்தவரையில் வாங்கிய கடனை திரும்பச் செலுத்துவதில் முனைப்புடன் இருப்பார்கள். கடன்காரர்களாக இருந்தால் ஒரு insecurity feeling. ஆனால் அமெரிக்கனைப் பொறுத்தவரை அந்த feeling இருந்தால், இத்தனை வங்கிகள் இழுத்து மூடும் நிலைமைக்கு ஆளாகி இருக்குமா?

  அவன் வேலை பார்க்கும் நிறுவனமானது, அவனுக்கு டிரான்ஸ்பர் கொடுத்து அதிகச் சம்பளம் கொடுப்பதாக வைத்துக்கொள்வோம். அல்லது அதே நிறுவனம் அந்த இடத்தில் இருந்து இடம் மாறி, 50 கிலோமீட்டர் தொலைவில் வேறு ஒரு location க்கு மாறுவதாக வைத்துக்கொள்வோம்.

  எத்தனை அமெரிக்கர்கள் – தங்களது இருப்பிடத்தை விட்டு கம்பெனிக்காக வேறிடத்துக்கு நகர்வார்கள்?
  100க்கு 2 பேர் நகர்ந்தால் பெரிய விசயம். லண்டன் வாசிகளும் இப்படித்தான். எனது நண்பரின் நிறுவனம் லண்டனில் ஓரிடத்தில் இருந்து வேறிடத்திற்கு மாற்றப்பட்ட போது 98% ஊழியர்கள் தங்களது அருகில் இருக்கும் வேறு நிறுவனங்களில் வேலை தேடிக்கொண்டனரே தவிர இருப்பிடத்தை கம்பெனிக்காக மாற்றிக்கொள்ள முன்வரவில்லை.

  இதையே இந்தியாவில் என்றால் – கம்பெனிக்காக இருப்பிடத்தை மாற்றுபவர்கள்தான் அதிகம். காரணம் insecurity.

  600$ ஐ ஒரு மாதத்துக்குக் கொடுக்க முடியாமல் – வேலை செய்யும் பணியாள்ர்களை recession என்னும் பேரில் வேலையைக் காலி செய்கிறார்களே. இதைக் கேட்க ஆளில்லையா?

  மூன்று ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்த பிறகு, ஊதிய உயர்வு கேட்டால் – நாங்கள் எதிர்பார்க்கும் performance உன்னிடம் இல்லை என்கிறார்கள்.

  performance இல்லாத ஒருவனை எதற்காக 3 ஆண்டுகள் வைத்துக்கொள்ள வேண்டும்? 3 மாதம், அல்லது 6 மாதத்தில் விரட்டி இருக்கலாமே?

  recession வரும்போது ஆளைக் காலி செய்கிறார்களே – அப்போது மட்டும் performance என்கிற ஒரு வெற்றுக் காரணத்தை உபயோகிக்கிறார்களே!

  வருடத்தில் பாதி நாட்கள் bench programmer களாகவே வைத்து அறிவு விருத்தியைத் தடுத்துவிடுகின்றனர். மீதி நாட்களில் ஏதொ கொஞ்சம் கொஞ்சம் அதைச் செய், இதைச் செய் என்கின்றனர்.

  கூகிளின் துணையுடன் எதைக் கொடுத்தாலும் செய்யும் வல்லமையுடன் தான் இருக்கிறோம் – நாங்கள்.

  ஆனால் தொடர்ந்து வேலை செய்தால் தானே confident வரும். இப்படி பாதி நாட்கள் bench என்றால் எங்கிருந்து வரும் நம்பிக்கை?

  நம்மை சுரண்டியே பழகிப்போன வெளிநாட்டவர்களுக்கு இந்த சம்பளம் கொடுப்பதும் கூட கஷ்ட்டமாக இருக்கின்றது.

  24/7 நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு pickup – drop வசதி செய்து கொடுத்திருந்தனர். இப்போது அந்த வசதியும் நிறுத்தப்படுகிறது. நள்ளிரவில் எந்த ஆட்டோவைப் பிடித்து எப்படிப் பத்திரமாக வீடு திரும்புவது?

 3. kanth permalink
  April 17, 2009 7:37 am

  konjam jastiya eruku….
  but salary varuthu nu avanga jastiya pannatha compare pannum pothu,,, commie tha

 4. April 17, 2009 7:52 am

  நன்றி தமிழ் நெஞ்சம்………..உங்கள் அருமையான விளக்கங்களுக்கு…

  உஙகள் விவரிப்பு அருமை….தனி பதிவாகவே போடலாம்…

 5. April 17, 2009 8:02 am

  தாழ்வு மனப்பாங்கும் காழ்ப்புணர்சியும் தவிர கவிதை என்பதில் வேறெதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை….

  பாவம் பி.ஜி.கதிரவன், அவருக்கு என்ன சோகமோ…!

 6. April 17, 2009 8:23 am

  /நாம் இங்கே ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்தாலும், அடுத்த நாள் வெகு விரைவில் ஆஃபீஸ் திரும்பும் அளவுக்கு அடிமைகளாகவே இருக்கிறோம்./இது இந்தியாவில் வழக்கமான ஒன்று தான். U.T.I.Bank ல் பெண்களுக்கும் இதே நிலைதான்.

 7. April 17, 2009 8:28 am

  நீண்ட கருத்துக்கு நன்றி தமிழ்நெஞ்சம்.

 8. April 17, 2009 8:28 am

  நிஜம் தான் அன்பு, தற்போது வங்கி துறையில் நிறைய இன்னல்கள் இருக்கின்றது.

 9. April 17, 2009 2:52 pm

  இன்னிக்கி தான் இத பத்தி ஒரு பதிவு போட்டேன்….
  ஆவியில் எழுதுறது பெரிய மேட்டரே இல்லையோன்னு தோனுது
  “ஆவியில் கவிதை எழுதிய பாவி”
  http://premkumarpec.blogspot.com/2009/04/blog-post_17.html

 10. April 18, 2009 8:55 am

  i too disagree with kadhiravan’s kavithai. as if s/ware professional (men & women) dont take care of their family and non s/w only take care their families etc.

  This is mere inferiority complex.

  vikatan is just using these poems, politics to promote its sales, thats all.

 11. April 18, 2009 11:43 am

  ennamo ponga boss.. software engirneer ya irukkiradhu periya thappa pochu..

 12. selvaraj permalink
  April 18, 2009 2:03 pm

  எனக்கு என்னமோ நாங்க (software engineers) விட்டு வாடகையை எத்தன மாதிரி தெரியல…
  வாடகைன்ற பேர்ல மத்தவங்கதான் நிறைய பணம் பிடுங்கின மாதிரி தெயரியுது…

  Regards
  Selva

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: