Skip to content

கேளுங்கள் தரப்படும் – 32 கேள்விகள் தொடர் பதிவு

June 9, 2009

என்னை தொடர் பதிவிற்கு அழைத்த சகபதிவர்,நண்பன் நிலாரசிகனுக்கு நன்றி.

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
விழியன் – அம்மா வைத்த புனைப்பெயர். ரொம்பவே பிடிக்கும்.பற்பல அனுபவங்களை கற்றுத்தந்த பெயர்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
ஜூன் 7, பாட்டியின் இறுதி ஊர்வலத்தின் போது

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்ப பிடிக்கும். தமிழ் கையெழுத்து பிடிக்கும். ஆங்கில கையெழுத்து சில சமயம் மட்டும்.

4.பிடித்த மதிய உணவு என்ன?
புளிக்கொழம்பு + அப்பளம்
ரசம் சாதம் + ஆம்லெட்
தக்காளி சாதம்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நிச்சயம். எல்லோரிடத்திலும் ஏதாவது ரசிக்கக்கூடிய விஷயம் கண்டிப்பாக இருக்கும் என்பது எனது ஆழ்நம்பிக்கை.

6.கடலில் குளிக்க பிடிக்குமா….அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவியில தான். கடலை தூரத்தில் இருந்து ரசிக்கப்பிடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
உள்ளத்தால் பேசுகின்றாரா உதட்டால் பேசுகின்றாரா?

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடிச்சது : நான் ரொம்ப நல்லவன் தெரியுமா
பிடிக்காதது: சோம்பேறித்தனம்..

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது – அவளின் அன்பு ; பிடிக்காதது – அவளுடனே இருக்க வேண்டும் என நினைப்பது 🙂

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
எங்க பெரியம்மா. சின்ன வயசில என் மீது அளவு கடந்த அன்பு.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
பச்சை

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
‘அனல் மேலே ‘ – வாரணம் ஆயிரம்

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
சிகப்பு

14.பிடித்த மணம்?
திருமணம். 🙂

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
ரிஷான் ஷரீஃப். சக பதிவர்.அனைவரிடத்திலும் அவன் காட்டும் அன்பு அபாரம். இதுவரையில் அவனிடம் தனிமடலிலோ சேட்டிலோ பேசியது கிடையாது, ஆனால் அவனிடத்தில் நிறைய அன்பு உண்டு.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
கவிதையில் அறிமுகமானாலும் நிலாவின் சிறுகதைகள் தான் எனக்கு பிடிக்கும். நிறைய புதிய முயற்சிகள்.

17. பிடித்த விளையாட்டு?
சுடோகு

18.கண்ணாடி அணிபவரா?
அணியாவிடில் செய்தித்தாளையும் வெள்ளைத்தாள் என்பேன்.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
மெல்ல நகரும் படங்கள். சிறுவர் படங்கள்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
பொம்மலாட்டம்

21.பிடித்த பருவ காலம் எது?
குளிர்காலம்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
‘சக்கரவர்த்தி திருமகன்’ – இராஜாஜி

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
நேர காலமெல்லாம் கிடையாது. இப்ப ‘குழலியின்’ புகைப்படம் அலங்கரிக்கின்றது.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது: குழலியின் அழுகுரல்
பிடிக்காதது: வறுமையின் ‘அம்மா…தாயே..’

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அ.லண்டன்
ஆ. அதையும் தாண்டி கனவில் எங்கெங்கோ சென்றேன்.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
கொஞ்சம் படம் பிடிப்பேன்,அவ்வப்பொழுது எழுதுவேன். பரதம் பயின்றவன்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
சிந்திக்க தவறும் மக்களின் நிலை.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கொஞ்சமா நஞ்சமா. ஓட ஓட வெரட்டினாலும் எப்படியோ வந்துடுது.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அந்தமான்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
அன்புள்ளங்களுக்கு மத்தியில் ஆனந்தமாக.

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?
யோசித்து பார்த்தேன், அப்படி எதுவும் மனசுக்கு வரல.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
கடலில் ஒரு குடம்

-விழியன்

Advertisements
8 Comments leave one →
 1. June 9, 2009 4:10 pm

  //32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
  கடலில் ஒரு குடம்///

  Mudiyala da 🙂

 2. June 10, 2009 1:41 am

  /18.கண்ணாடி அணிபவரா?
  அணியாவிடில் செய்தித்தாளையும் வெள்ளைத்தாள் என்பேன்./

  :)))))))))))))))))))

 3. June 10, 2009 9:43 am

  \\பிடித்த மணம்?
  திருமணம். \\

  சூப்பரு 😉

 4. muthalib permalink
  June 10, 2009 4:26 pm

  தல…. பின்ர போ…

  //மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?
  யோசித்து பார்த்தேன், அப்படி எதுவும் மனசுக்கு வரல.//

  லண்டன்ல பண்ண விசயத்த சொல்லிருக்கலாமே…ச்ச…மோசம்னா நீங்க…

  • June 11, 2009 4:06 am

   நல்ல குழப்புறீங்க சாமி..

Trackbacks

 1. நான் – 32 கேள்விகளுக்குள் ! « தமிழ் நிருபர்
 2. நான் – 32 கேள்விகளுக்குள் ! « SEASONSNIDUR
 3. தமிழி » Archives » நான் – 32 கேள்விகளுக்குள் !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: