Skip to content

ஓர் இரவின் பயமும் அதிகாலையின் நிம்மதியும் – அனுபவம்

June 10, 2009

திங்கள் இரவு. அந்த இரவு சற்று பயமாக தான் இருந்தது. வீட்டில்,வழக்கமாக எல்லா அறைகளிலும் யாரேனும் ஒருவரேனும் உறங்குவது வழக்கம். முந்திய நாள் நிகழ்வுகள் மனதில் தோன்றி சற்றே திகிலூட்டியது. ஞாயிறு காலை குழந்தையை பார்க்க ஊரிலிருந்து வேன் ஒன்றில் உறவினர்கள் வந்திருந்தனர். பிறந்த குழந்தையினை பார்க்க வந்தவர்களுக்கு பாட்டி உயிர் விடும் நிமிடங்களை காண நேரிட்டது. உடனே அனைவருக்கு தகவல் பறந்து அன்று மாலையே வேலூரில் கடைசி காரியங்களை முடித்தாகிவிட்டது.

அலுவலகத்தில் வேலை இருந்ததால் நான் மட்டும் திங்கள் மதியம் சென்னை திரும்பினேன். வீடு விரிச்சென இருந்தது. பாட்டி உயிர்விட்ட இடத்தை நோட்டம் விட்டு அலுவலகம் கிளம்பிவிட்டேன். இரவு வீடு திரும்பும் பொழுது எதிர்வீட்டு சிவா விவரங்களை கேட்டார். அப்படியே பேசிக்கொண்டிருந்த போது அவர் மனைவி மஹா அக்கா சொன்ன ஒரு விஷயம் மனதை ரொம்பவே கசக்கி பிழிந்துவிட்டது.

ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லை. புதிய வரவு வந்த சந்தோஷத்தில் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். காலை முதல் மாலை வரை வீட்டில் இருந்த தங்கை, அத்தையான சந்தோஷத்தில் எதிர்வீட்டு அக்காவிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். பாட்டி இருந்த அறையில் ஏதோ சத்தம் வரவே “என்ன பாட்டி என்ன வேணும்” என்று சன்னல் வழியே விசாரித்து இருக்கின்றார். பாட்டி “ஒன்னும் இல்லை, என் பையன் கூட பேசிட்டு இருக்கேன்” என்றாராம். வீட்டில் யாரும் இல்லை என்பது எதிர்வீட்டு அக்காவுக்கு தெரியும். ஹாலில் எட்டிப்பார்த்திருக்கின்றார் யாரும் இல்லை. அரை மணி நேரம் கழித்தே அப்பாவும் தங்கையும் வந்துள்ளார்கள். பாட்டிக்கு நினைவு படுத்திய பாடு கொஞ்சம் அலற வைத்தது. மகனிடம் பேசினார் என்றால் எந்த மகனிடம்? அப்பாவின் அண்ணன் இறந்து பலவருடம் ஆகிவிட்டது. ஒரு வேளை அவருடனா? எப்படி கழியப்போகின்றது இரவு என்றே உள் நுழைந்தேன்.

பாட்டி உயிர்விட்ட அறையில் எங்கிருந்தோ வெளிச்ச கீற்றுகள் வந்து கொண்டிருந்தன. மெளனம். தூரத்தில் சில நாய்களில் அலறல்.

மறுநாள் காலை அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தேன். விரலில் இருந்த மோதிரம் காணவில்லை. அது எங்கள் நிச்சயதார்த்த மோதிரம். தங்கமணி கண்டிப்பாக என்னை உண்டு இல்லை என செய்துவிடுவாள். ஏற்கனவே நேரமாகிவிட்டது. படுக்கையிலும் குளியல் அறையிலும் நோட்டம் விட்டுவிட்டு வேகமாக வண்டி எடுத்துவிட்டேன். வண்டியில் போகும் போது எங்கே விட்டிருப்பேன் என்ற யோசனைகள். பாட்டி ஆவியாக வந்து எடுத்துவிட்டார்களா? வருத்தமாக இருந்து. தங்கமே பிடிக்காத என்னிடம் பிடிக்கின்றதோ பிடிக்கலையோ எனக்காக இதை மட்டும் போட்டுக்கோங்க என்று வற்புறுத்தி போட வைத்திருந்தாள் தங்கமணி. விஷயம் கேட்டால் அம்பேல் தான். மாற்று மோதிரம் செய்துவிடலாம் என்று கூட யோசனை தோன்றியது.

அலுவலக வேலைகளில் மூழ்கியாகிவிட்டது. அப்போது ஓர் மடல். தங்க ஆபரணம் ஒன்று கிடைத்துள்ளது. அடையாளம் சொல்லி எடுத்துக்கொள்ளலாம். மின்னலென யோசனை. நம்ம மோதிரமா இருக்குமாவென ஒரு நப்பாசை. செக்யூரிட்டியிடம் சென்று நேற்று என்ன தங்க மோதிரம் கிடைத்ததா என கேட்டேன். ஆமாம் சார், இருங்க பெரிய செக்யூரிட்டியை கூப்பிடறேன் என கூப்பிட்டார். அவர் வந்து தலைமை அதிகாரியிடம் அழைத்து சென்றார். என்ன மோதிரம் எப்படி இருக்கும் எங்க விட்டீங்க என கேட்டார். நான் மோதிரம் தொலைந்தது மட்டும் தெரியும் எங்கே என்று தெரியாது என்றேன். அடையாளம் கேட்டார். அலைபேசியில் என் கைவிரலில் மோதிரமோடு இருந்த புகைப்படத்தை காட்டினேன் (அட எப்படி எல்லாம் உதவுது போட்டோ.. 🙂 ). ஆம் என் மோதிரம் அவர் கையில். இந்தாங்க சார் என்று கொடுத்தார். முந்தைய நாள் கழிவறையில் இருந்ததாக முனிசாமி என்றொரு துப்புரவு தொழிலாளி கொடுத்துள்ளார்.

நல்ல உள்ளம் மத்தியில் இருப்பது மகிழ்வாக இருந்தது.இருக்கின்றது.

-விழியன்

Advertisements
4 Comments leave one →
 1. muthalib permalink
  June 10, 2009 4:12 pm

  முனிசாமி என்றொரு துப்புரவு தொழிலாளி கொடுத்துள்ளார்…
  இவருக்கு என் சல்யூட்… யார் யார் சிவம்… நீ நான் சிவம்…

 2. June 10, 2009 4:14 pm

  பாட்டி மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  முனிசாமிக்கு நன்றி சொல்லீட்டீங்களா?…

 3. June 11, 2009 5:19 am

  ‘pattikku ninaivu paduththiya paadu’ – nekila vaithathu

 4. ravi permalink
  June 20, 2009 5:36 am

  32%

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: