Skip to content

அது என்ன?

June 21, 2009

 

இறுக்கமான  நேரங்களில் சின்ன சிரிப்பு, ஒரு தொடுதல், பழைய நினனவுகள், கடந்த உறவுகள் ஏதேனும் ஒன்று மனதை தளர்த்திவிடும். அது தளர்த்தலோடு நில்லாமல் சில நேரங்களில் கண்களில் மழைவர செய்துவிடும். இன்று காலை ஒரு குறும்படம் பார்க்க நேர்தது. ஐந்த நிமிடங்களுக்கு குறைவாக ஓடியது, ஆனால் மனதை பிசைந்துவிட்டது.

அது என்ன?

ஒரு காம்பெளண்டின் மீது கேமரா நகர்ந்து வீட்டின் வாசல் வழியே பூங்காவிற்குள் நுழைகின்றது. வயதான அப்பாவும் மகனும் அமர்ந்திருக்கின்றார்கள். மகன் தினசரி வாசித்துக்கொண்டிருக்க அப்பா அமைதியாக இருக்கின்றார். மகனிடம் ஏதாவது பேச வேண்டும் என்பது போல இருக்கின்றது அவர் முகம். ஒரு சிட்டுக்குருவி செடிகளின் மீது அமர்கின்றது. மெதுவாக அப்பா “அது என்ன?” என கேட்கின்றார். “சிட்டுக்குருவி” என்கின்றான் சற்றே எரிச்சலுடன் மகன். இன்னும் சிறிது நேரம் கழித்து “அது என்ன?” என வினவுகின்றார். “அது தான் சொன்னேனே சிட்டுக்குருவி” என அலுத்து தினசரியில் மூழ்கின்றான். அப்பா எழுகின்றார். “எங்க போறீங்க?”. அமைதியா இரு என கைகாட்டிவிட்டு மெல்ல வீட்டினுள் செல்கின்றார். மகன் படித்துக்கொண்டே
இருக்கின்றான். தந்தை மீண்டும் பூங்காவிற்கு வருகின்றார் கையில் ஒரு டையரியுடன். பக்கம் ஒன்றை எடுத்து படிக்க கொடுக்கின்றார். அதில் இவ்வாறு எழுதி இருக்கின்றது. “என் இளைய மகனுக்கு மூன்று வயது நிரம்பி சில நாட்களாகின்றது. இன்று நாங்கள் இருவரும் பூங்காவிற்கு சென்றோம். எங்கள் எதிரே சிட்டுக்குருவி அமர்ந்தது. இது என்ன இது என்ன என 21 முறை கேட்டான். நானும் சிட்டுக்குருவி என சொல்லி ஒவ்வொரு முறையும் அவனை கட்டியணைத்தேன். அவனுடைய வெகுளித்தனம் என்னை எரிச்சறுற செய்யவில்லை…”. படித்து முடித்ததும் மகன் மெளனமாக இருக்கின்றான். தன் தந்தையை கட்டியணைத்து உச்சந்தலையில் முத்தமிடுகின்றான். கேமரா அவர்கள் அமர்ந்திருக்கும் பெஞ்சிற்கு பின்னே சென்று மரத்தை காட்டி சிட்டுக்குருவி பறப்பதோடு முடிகின்றது.

இசை என்பது சிட்டுக்குருவியின் சத்தம் மட்டும் தான். கேமரா கையாடல் அற்புதம்.

இன்று தந்தையர் தினமாம். அப்பாவிடன் காட்டினேன், அவரின் பிறந்தநாள் வேறு. பூரித்தார். குழலி என்னிடம் 50 முறை கேட்டாலும் அதை முதல் முறை சொன்னது போல சொல்லும் பொறுமை வரவேண்டும், வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அனைத்து தந்தைக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.

http://www.youtube.com/watch?v=mNK6h1dfy2o

– விழியன்

Advertisements
6 Comments leave one →
 1. June 21, 2009 2:07 pm

  அப்பாவை நேசிக்கணும், அம்மாவை நேசிக்கனும்னு யாராவது வெளியில் இருந்து சொன்னாத் தான் தெரியற அளவுக்கு நாம எல்லாம் ரொம்ப ரொம்ப பிசி ஆயிட்டம் இல்லைங்களா, விழியன்?!

  அப்புறம், இதையெல்லாம், யூட்யூபில சொல்லிக் கொடுத்தாத்தான் உண்டு, இல்லையா?

  • June 22, 2009 5:02 am

   யூடியூப் சொல்லி தான் தெரியவேண்டும் என்றில்லை ஐயா. நமக்கே தெரிய தான் வேண்டும். பார்த்த ஒரு நல்ல குறும்படத்தை பகிர்ந்து கொண்டேன். நான் நெகிழ்ந்தேன் என்பது உண்மை.

 2. June 22, 2009 7:24 am

  வணக்கம் விழியன்,
  ஆமாம் உண்மையிலேயே மனதை கொள்ளை கொள்ளும் காணொளி.
  வாழ்த்துக்கள்

 3. Nagulan Joghee permalink
  June 25, 2009 4:45 am

  A befitting Father’s day gift..Probably such instances will teach our “U” tube ( Modern) sons hoe NOT to ve “TEST” tube ( Detachment) sons.

  Good presentation.. as usual. Keep this up Uma.

  Nagulan Joghee

 4. Mangai permalink
  June 25, 2009 6:29 am

  Wonderful story! Not only to fathers but also to mothers it teaches good moral.

 5. June 25, 2009 3:36 pm

  நானும் நெகிழ்ந்தேன் …

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: